This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்: http://www.sirukathaigal.com/2018/10/18/

சில குறிப்புகள்:
செப்டம்பர் மாதம் பார்வையிட்டோர்:13,618
மொத்தம் பார்வையிட்டோர்: 16,45,405
செப்டம்பர் மாதம் படிக்கப்பட்ட கதைகள்: 72,625
மொத்தம் படிக்கப்பட்ட கதைகள்:68,82,373

முன்னையிட்ட தீ

 அடர்ந்த வனத்தின் ஊடாய் படர்ந்து பரவிச் செல்லும் அந்த ஆற்றின் கரையில் அவன் அமர்ந்திருந்தான். ஆர்ப்பாட்டமாய் பொங்கி ப்ராவாகிக்காமல் அமைதியாய் ஆழ்ந்து சுழித்து, ஆயிரம் இரகசியங்கள் தன் ஆழத்தில் பொதிந்திருப்பதை அழுத்திச் சொல்வதைப் போல. வனத்தின் இயல்புக்கு மிகவும் முரணாக கரையோரத்தில் ஆற்றின் வெள்ளம் உஷ்ணமாயிருந்தது ஏன் என்பது விளங்காமால் அவன் கைகளைக் கழுவிக் கொண்டிருக்கிறான். எவ்வளவு நேரமாக ? அவனுக்கே அது துலங்கவில்லை. நேரமா அல்லது நாட்களா அல்லது மாதங்களா அல்லது .. .. ?

.


Read More


அம்மா என்றால்…

 எல்லோருடைய கண்களும் குழைவாக வடிக்கப்பட்ட சாதம்,காய்கறிகள்,அப்பளம்,இனிப்புகள் இவற்றோடு பாலாடை மிதக்கும் காபி எல்லாம் சேர்த்து கலவையாக படைக்கப்பட்டிருந்த இலையிலும் எதிரே இருந்த வேப்பமரத்திலும் மாறி மாறி பதிந்து மீண்டன. மரணத்தின் காட்டமான நெடி சுவாசங்களில் நிறைந்திருக்க எல்லோருடைய முகங்களிலும் வியர்வை வழிந்து கொண்டிருந்தது. நிரம்பி ததும்பிக் கொண்டிருந்த அமைதியில் கனமாக விழுந்து அதிர்வுகளை உண்டாக்கியது ராமசாமி மாமாவின் குரல். யாராவது கூப்பிடுங்கப்பா கூப்ட்டாதானே வரும் காகா காகா எழுந்த குரலைத் தொடர்ந்தன குரல்கள். காகா காகா சற்றுத்

.


Read More


மரணத்தின் வாசலில்

 செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அவசரமாகக் கண்ணாடியை அணிந்துகொண்டு வந்த அழைப்பை ஏற்றான் செல்வம். மறு முனையில் அவனது நண்பர் கோவா சங்கர். “செல்வம் எனக்கு ஒண்ணுமே புரியல. நான் இப்ப ரொம்ப கஷ்டத்துல இருக்கேன் “என்றார் அவர். ” எங்க இருக்கீங்க ” என்று கேட்டான் செல்வம். நான் மணிப்பால் மருத்துவமனையில் இருக்கேன். மீனா உடல்நிலை மிகவும் கவலைக்கிடமா இருக்குதுன்னு டாக்டர்கள் சொல்றாங்க.” ” ஏன் என்னாச்சு , எதுக்கு மணிப்பால் போனீங்க? ” “செல்வம்,

.


Read More


ஐ ஃபோன் எக்ஸ்

 “நாராயண… நாராயண…” என்றவாரே நுழைந்த நாரதரை யாரும் கண்டுகொண்டதாய்த் தெரியவில்லை. சிவன் ஐஃபோன் 8-இல் பூலோகத்து அப்டேட்ஸ் பார்த்துக்கொண்டிருக்க, இன்னொரு ஐஃபோன் 8-இல் பார்வதி வாட்ஸ்ஆப்பில் எதையோ அவசர அவசரமாக அனுப்பிக்கொண்டிருக்க, வினாயகரும் முருகரும் ஆளுக்கொரு ஐஃபோன் 8-இல் ‘கிரிட்டிக்கல் ஆப்ஸ்’, ‘கிளாஷ் ரொயேல்’ விளையாடிக்கொண்டிருப்பதைக் கண்ட நாரதர் “மாம்பழத்திற்காக சண்டைவந்த குடும்பம் ஆப்பிளை வைத்துக்கொண்டு ஒற்றுமையாக இருக்கிறதே!” என்று எண்ணியவாரே மீண்டும் “நாராயண… நாராயண..” என்றார். “ஓ வந்துட்டியா.. வா வா” என்பதுபோல் சிவன் லேசாகத்

.


Read More


நாளையும் ஓர் புது வரவு

 அவன் பொட்டுப்பொட்டாய் நெற்றியில் துளிர்த்த வியர்வையை அழுத்தித் துடைத்தான். அடர்ந்த புதராய் வளர்ந்து செம்பட்டை பாரித்த மீசையில் வழிந்த வியர்வை,வெடித்து பிளவுபட்டிருந்த உதடுகள் வழியாக ஊடுருவி உப்புக்கரித்தது. அவனுக்கு அந்த சுவை புதிது…அந்த சூழ்நிலை புதிது..இப்போதும் கண்கள் இருட்டத்தான் செய்கிறது…ஆனால் அது நியாயமான பசி என்கிற நிறைவு அவனது கண்களில் மிளிர்கிறது.!. “யோவ்..இன்னும் என்னா..மவராசன் கிரீடம் தரிக்கலீயோ..?பல்லாக்கு பரிவாரங்களுக்காக காத்திருக்கீரோ..?”இரண்டாவது மாடியிலிருந்து அதட்டலாக சத்தம் கொடுத்தார் கொத்தனார். “இதோ வாரேனுங்க”என்றபடி தலைமுண்டாசுக்கு மேல் இருப்புச்சட்டியை வைத்து செங்கற்களை

.


Read More


உயிர்களிடத்தில்…

 அந்த மலையின் சரிவில் இறங்கிக்கொண்டிருந்த ஜானுக்கும் ரவிக்கும் குளத்தில் தண்ணீரில் தத்தளித்துக்கொடிருந்த அந்தச் சின்ன நாய்க்குட்டியை பார்ப்பதற்கே பாவமாக இருந்தது. சரிவான குளத்தின் விளிம்பில் படிந்திருந்த பாசி வழுக்கியதால் அதனால் ஏறமுடியவில்லை. ஊட்டியின் கடும் குளிர் அதனை மேலும் வாட்டியது. “ஜான் எப்பவும் நீதான ஐடியா சொல்லுவ இப்போவும் எதாவது சொல்லேன்.” “ரவி நான் என் பெல்ட்டை கழட்டி ஒரு எண்டை பிடிச்சிக்கிறேன் இன்னொரு எண்டை பிடிச்சிட்டு நீ ஜாக்கிரதையா குளத்தில இறங்கி பப்பியை வெளிய எடுக்குறையா?.”

.


Read More


புத்தரும் சுந்தரனும்

 நோர்வேயின் கோடைக் காலத்தில் அத்தி பூத்தால் போல் வானம் முகில்களை விரட்டி, நிர்வாணமாகச் சூரியனை அமைதியோடு ஆட்சி செய்யவிட்ட அழகான நாள். காலை பதினொரு மணி இருக்கும். உடம்பு என்னும் இயந்திரம் சீராக இயங்க வேண்டும் என்றால் அதற்குக் கொடுக்க வேண்டிய அசைவுகளை ஏதோ ஒரு பயிற்சியாக அல்லது வேலையாகக் கட்டாயம் கொடுத்தாக வேண்டும். இல்லாது விட்டால் தனக்கு இனி இந்த உலகில் அலுவல் இல்லை என்பதாகத் தன்னைத் தானே சீரழித்துக் கொள்வதில் அது வேகம் காட்டும்

.


Read More


காக்கையின் அருமை

 ஒரு மரத்தில் ஆண் காகம் ஒன்றும் பெண் காகம் ஒன்றும் தன் குஞ்சுகளுடன் கூடு கட்டி வாழ்ந்து வந்தது.அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள நகரத்துக்கு வந்து, கிடைக்கும் உணவை உண்டு மாலை ஆனதும் தனது கூட்டுக்கு சென்றுவிடும் கூடவே குஞ்சுகளையும் கூட்டிக்கொண்டு போய் திரும்பி கூட்டில் விடும். தினம் தினம் மனிதர்கள் போடும் மிச்சம் மீதி உணவுகளை சாப்பிட்டு வாழ்ந்து வருவதை அந்த மரத்திலே வசிக்கும் மற்ற பறவைகள் கேலி செய்தன. எங்களை போல் காட்டுக்குள் சென்று

.


Read More


நுணுக்கம்…!

 பாலுவிற்குக் குழப்பமாக இருந்தது. எப்படி யோசித்தும் விடை கிடைக்கவில்லை. இதற்கு மேலும் சிந்தித்தால் மூளை சிதறிவிடும். சம்பந்தப்பட்ட ஆளையேக் கேட்டுத் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டியதுதான்.! தீர்மானித்து நண்பன் வீட்டுப் படியேறினான். ”வாடா.” வரவேற்றான். ”என்ன ?” விசாரித்தான். ”கையில உள்ள பணத்தை வைச்சி ஏழை மக்களுக்கு வட்டிக்கு விட்டு நீயே போய் வசூலிச்சு சம்பாதிக்கிறே…சரி. ஆனா…அதுல குதர்க்கமாய் வீட்டுல வயசுக்கு வந்த ஆம்பளைப் பசங்க இருக்கிற இடமாய்ப் பார்த்து எதுக்;குக் குடுக்கிறே ?” அவன் மௌனமாய் இருந்தான்.

.


Read More


மி டூ

 செய்தி வெளியானதும் தமிழகமே அலறியது. எதிர் கட்சித் தலைவரும், தேர்தலில் டெபாஸிட்கூட வாங்க முடியாத இன்னபிற லெட்டர் பேட் உதிரிக் கட்சிகளின் தலைவர்களும், தமிழக முதலமைச்சரை உடனடியாக ராஜினாமா செய்யச்சொல்லி கரடியாகக் கத்தினார்கள். தமிழகத்தில் பெண்கள் இனி பாதுகாப்பாக இருப்பது சாத்தியமில்லை என அறிக்கை விட்டனர். இது எப்படி எங்கே போய் முடியும் என்று தெரிந்துகொள்ள தமிழக மக்கள் மிகுந்த ஆர்வமாயினர். பத்திரிக்கைகளும், டிவி சேனல்களும் சுறு சுறுப்பாயின. ஆனால் தமிழக முதல்வர் எதைப்பற்றியும் அலட்டிக் கொள்ளாமல்

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2018]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content

To change your subscription, click here.