சிறுகதைகள் (Short Stories in Tamil)
தமிழ் சிறுகதை | Tamil Short Story | தமிழ் சிறுகதைகள்
சில பெண்கள்

 அது சென்னையின் ஒரு பிரபல ஐடி நிறுவனம். காலை பத்து மணி வாக்கில் ஹெச்.ஆர் ஜெனரல் மனேஜர் மயூர் பரத்வாஜின் இன்டர்காம் ஒலித்தது. “ஹலோ மயூர் ஹியர்…” “சார்.. நான் லோதிகா எராஸ்மஸ்.. ஐ வான்ட் டு மீட் யு நவ்” “ஷ்யூர் கம் ஆப்டர் த்ரீ மினிட்ஸ்.” மயூர் உடனே தன்னுடன் ஹெச்.ஆரில் மானேஜராக வேலை செய்யும் மஞ்சுளாவை இன்டர்காமில் அழைத்து உடனே அவளை தன் கேபினுக்கு வரச் சொன்னார். மயூர் பரத்வாஜ் தன்னுடன் வேலை

வேரிலைபட்டு…

 இதோ வந்து கொண்டிருக்கிறேன் பறந்து,உடனடியாகவோ இல்லை சற்று தாமதம் காட்டியோ,,,,,/ கோபப்பட்டுக்கொள்ள வேண்டாம் தயவு செய்து/ கோபம் இருபக்கமும் கூர் கொண்ட முள் முனை போன்றது. சமயத்தில் நம்மையே பதம் பார்த்து விடக்கூடும்,கூடும் என்ன கூடும் கண்டிப்பாக பதம் பார்த்து விடும்தான். பார்க்கிற பதம் கைகாலை கிழித்துவிட்டால் பரவாயில்லை, இதயத்தை கிழித் து விடுபையாக சமயத்தில்/ பக்கத்து பக்கத்து வீட்டில் இருக்கிற அக்கா தங்கை இருவரும் சின்னப் பையன்கள் பிரச்சனைக்கா கம்பைதூக்கிக்கொண்டு நின்றார்கள். போன அமாவாசைக்கு முன்

இவ்வளவு வைராக்கியமா…

 நான் கணக்கில் பெயில் ஆனதால் மறுபடியும் ‘ட்வெல்த்’ படிக்க அந்த பள்ளி கூடத்தி லேயே சேந்தேன். ஒரு நல்ல பணக்கார குடும்பத்தை நான் சேவந்தவனான இருந்ததாலே எங்க குடும்பத்துக்கு அது பாரமாக தொ¢யலே.அந்த வருஷம் என் பள்ளிகூடத்தில் ரவி என்கிற பையன் புதிசா சேந்தான்.நான் அவன் கிட்டேநெருங்கி விசாரிச்ச போது அவன் பததாவதிலே கணக்கில் நுத்துக்கு நுறு மார்க் வாங்கி,மாநிலத்திலேயே முதல் மாணவனாக ‘பாஸ்’ செஞ்சு விட்டு,எங்க பள்ளிக் கூட கணக்கு வாத்தியார் சிபாரிசிலும், அவர் பண

சின்ன விஷயம்!

 ரகசியங்கள்னா பெருசாத்தான் இருக்கணும்னு அர்த்தமில்லை! ஒரு அற்பத்தனமான விஷயம், அடுத்தவங்ககிட்ட சொன்னா எங்கே ரொம்பக் கேவலமா எண்ணிடுவாங்களோ என்ற எண்ணம்; மேலும் இதெல்லாம் ஒரு விஷயமான்னு கூடச் சொல்லிவிடுவார்களோ என்ற பயம்! சின்ன விஷயம்தான். நிறைய நிறைவேற்றப் படாத சின்னச் சின்ன விஷயங்களை இந்த மனம் என்ற பெட்டிக்குள் போட்டு வைக்க முடியலை. ரொம்பக் கஷ்டமா இருக்கு. அழுகை வருது. வெளியே சொன்னால், சரியான புலம்பல் பார்ட்டி அப்படின்னு ரொம்ப சுலபமாப் பட்டம் கட்டிடுவாங்க. அதனால்தான் சந்தியா

‘பலான’எந்திரம்

 “வளரு..வளரு..!”.. குழந்தைகளுக்கு சிக்கெடுத்து தலைவாரிக் கொண்டிருந்த வளர்மதிக்கு குழைந்து இழையோடும் அந்தக்குரல் யாருடையது என்பது தெரியாமல் இல்லை. அதிகாலையில் வீட்டை விட்டு கிளம்புபவன்,இரவு வீடு திரும்புகையில் …ஒருநாள் கூட இப்படி அன்பொழுக கூப்பிட்டதில்லை. யோசனையோடு தாழ்ப்பாளை விலக்கியவள் “என்ன மாமா.!..இந்நேரமே திரும்பிட்ட..பொழப்புக்கு போகலியா.?”என்றாள். “இல்ல..வளர்,பொழப்புக்குதான் போனேன்.தலைவரு தர்மலிங்கம் எதிர்தாப்ல வந்தாருன்னு ஒதுங்கி நின்னேன்.அவரு வண்டியை நிறுத்தி ‘ஆபிசுல குப்பைக் கூலமா கெடக்கு..சுத்தம் பண்ணிட்டு பின்னாடி கிளப்புல வெத்துபாட்டிலுங்க கெடக்கு…எடுத்து வித்து காசாக்கி கைச்செலவுக்கு வச்சுக்க..’ன்னு சொல்லிட்டு போயிட்டாரு..!”

பீமாஸ்கப்

 இப்போது இருக்கும் ஐபிஎல் / ட்வென்டி ட்வென்டிக்கெல்லாம் முன்னோடி (மாட்ச் ஃபிக்சிங் உட்பட) எண்பதுகளில் காஞ்சீபுரத்தில் நடந்த கிரிக்கெட் லீக் போட்டிகள் தான் சுருக்கமாக கே சி எல் மே மாதம் பள்ளி, கல்லூரி விடுமுறை நாட்களில் மூன்று முதல் நான்கு வாரங்கள் நடக்கும் லீக் போட்டிகள் ஏறக்குறைய ஒரு கிரிக்கெட் திருவிழா போன்றிருக்கும். ஒவ்வொரு லீக் போட்டியிலும் சுமார் 12 டீம்கள் போட்டி மிக கடுமையாக இருக்கும். டீம்களுக்கென்று தனித்தனியாக ஸ்பான்ஸரர்கள். இதுதவிர ஃபைனல்சில் வெற்றி

வேதாளம்

 இந்தக் கதைக்குள் போவதற்கு முன்பு ஒரு குறிப்பு. சிவன் கோயில் ஒன்றின் கருவறையில் சிவபெருமான் பார்வதி தேவியிடம் கூறிய ரகசியங்களை அர்ச்சகர் ரகசியமாக ஒட்டுக் கேட்டமையால் அவரை வேதாளமாகப் போக இறைவன் சாபமிட்டார் என்றும், சாபவிமோசனமாக விக்கிரமாதித்த மன்னன் உதவுவான் என்றும், அதன் படியே முருங்கை மரத்தில் தொங்கி கொண்டிருக்கும் வேதாளத்தினை விக்கிரமாதித்த மன்னன் கொண்டு வருவதாகவும், அந்த வேதாளம் மிகவும் அறிவுக் கூர்மை உள்ள கதைகளை கூறி விக்கிரமாதித்தனிடம் இருந்து தப்பி மீண்டும் முருங்கை மரத்திலேயே

குட்டி யானை கணேசனுக்கு பிறந்த நாள்

 அன்று குட்டி யானை கணேசனுக்கு பிறந்த நாள்,அவனோட நண்பர்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று அப்பா, அம்மாவிடம் கேட்டுக்கொண்டிருந்தான். அப்பா யானை இரண்டு வாழைத்தார்களை பறித்து கொடுத்தது. குட்டி யானை கணேசனுக்கு ஒரே சந்தோசம், அவனுடைய நண்பர்களுக்கு வாழைப்பழம் என்றால் உயிர். அதனால் இரண்டு வாழைத்தார்களையும் தன் குட்டித்தும்பிக்கைகளில் கஷ்டப்பட்டு தூக்கிக்கொண்டு சென்றது. வழியில் நரியார் வழி மறித்து “குண்டு கணேசா” என்ன கொண்டு போகிறாய்? என்று கேட்டது. குட்டி யானை கணேசனும், என்னோட நண்பர்களுக்கு பழம்

வண்டவாளம்….!

 ரோட்டோர குழாயில் தண்ணீர் பிடித்து இடுப்பில் குடத்துடன் சென்ற வள்ளிக்குத் தன்னைத் தாண்டி சாலையோரம் மெல்ல நடந்து செல்லும் தம்பதிகளைப் பார்த்ததும் மனசுக்குள் குப்பென்று ஆத்திரம் அவமானம். சுள்ளென்று கோபம். வீட்டிற்குள் நுழைந்த அடுத்த விநாடி, ”என்னதான் காசு பணம் இருந்தாலும் மனுசாளுக்கு அடக்க ஒடுக்கம், மனசு கட்டுப்பாடு வேணும்….! ” சத்தமாக முணுமுணுத்துச் சென்றாள். நாற்காலியில் அமர்ந்து தினசரி படித்துக்கொண்டிருந்த கங்கதாரன் மனைவி குரல்; காதில் விழ… ”என்னடி ? ” கேட்டான். ”ம்ம்… என்

தனிக்குடித்தன ஆசை

 நித்யாவுக்கு மனதில் சந்தோஷ ரேகைகள் கீற்று விட்டன. பத்து வருட கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்குப் பிறகு – அவள் மாமனார், மாமியார் அவளின் தனிக்குடித்தனத்திற்கு சரியென்று சொன்னது… மிகவும் சந்தோஷமான தருணங்கள். கணவருக்கு ஒரு தங்கையும்; இரண்டு தம்பிகளும். நாத்தனாரின் புடுங்கல்தான் நித்யாவுக்கு வேதனை என்றால்; மாமனாரின் பிக்கல் புடுங்கல் அதைவிட மரணவேதனை. மாமியார் ரொம்பவும் அப்பாவி. கடந்த பத்து வருடங்களாக தனிக்குடித்தனத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தவளுக்கு, தற்போது கடைசி மச்சினரின் திருமணத்திற்குப் பிறகு விடுதலை கிடைத்துவிடும் என்றால்

This email was sent to {email} because you opted in on சிறுகதைகள் (Short Stories in Tamil) website.
Manage the subscription | Unsubscribe