சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்
google-play-storeiOS-App-Store

view this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2022/06/15/

வெள்ளிக்கிழமை

 (1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘லுஹர்’ நேரம் ஆரம்பித்ததும் குஞ்சாலி மரக்காயர் சந்திலிருந்து மசூதியின் முஅத்தினார் மினாராவின் படிக ளில் ஏறத் தொடங்கினார். உச்சியை அடைந்து இரு கலிமா’ விரல்களைச் செவிகளின் பால் வைத்துக்கொண்டு மேற்குத் திசையை நோக்கி நின்று கொண்டு, ‘அல்லாஹு அக்பர் …. அல்லாஹு அக்பர்” என்று உரத்த குரலில் பாங்கொலியை எழுப்பி அன்றைய வெள்ளிக்கிழமை நமாஸை அறிவித்ததுதான் தாமதம், ஊரிலே ஓர் சலசலப்பு உண்டாயிற்று.

 

சாந்தி

 (1944 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு மாமியார். அந்த மாமியாருக்கு ஒரு மருமகள். மருமகளுக்குப் பதினான்கு வயது. புக்ககத்திற்கு வந்து ஐந்து நாளாயிற்று. “லக்ஷ்மீ , நான் நாலு குடம் இழுத்துப் போட்டிருக்கிறேன். நீ இன்னும் நாலு குடம் இழுத்து அண்டாவை ரொப்பி விடு. நான் அடுப்பங்கரைக்குப் போகிறேன்” என்று மாமியார் மருமகளைக் கூப்பிட்டுச் சொன்னாள். மருமகள் குடத்தைக் கிணற்றில் விட்டுக் கைநீட்

 

தளரா வளர் தெங்கு

 (1971 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கொழும்பிலிருந்து காலிவரை பெரும் பகுதியும் கடற்கரை ஓரமாகவே நீண்டு கிடக்கும் காலி வீதியில் வெள்ளவத்தை நகர எல்லைக்குள்ளாக காலி வீதியையும் கடற்கரை ரயில் பாதையையும் இணைக்கும் ஒரு குறுக்கு “லேன்” (சிற்றொழுங்கை) முகப்பில் இருப்புப் பாதை கடந்து அதற்கு அப்பால் நீண்டு கிடக்கும் கடற்கரையில் அலைகள் மோதும் கருங்கல் வரிசைக்குள் சிக்குண்டு நின்றது ஒரு தென்னை மரம். அதற்கு இரு பக்கமும் நெடுந்தூரம்

 

பணம் பந்தியிலே…

 (2007 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஐந்து நட்சத்திர ஹோட்டல்…தலை நகரிலே மிக விசாலமான மண்டபம்…அங்கே….ஜெப்பார் ஹாஜியாரின் மகளின் கல்யாணம். ஜெப்பார் ஹாஜியார்….எங்கள் ஊரில் பெரிய புள்ளி……. நாலைந்து ஃபெக்டரிகளுக்கு சொந்தக்காரர். – ஊருக்கு வெளியே பல விளை நிலங்களுக்கு அதிபதி. கணக்கில்லாத வாகனங்கள்… நிறைய எடுபிடி வேலையாட்கள், ஜனாதிபதியைச் சந்திக்கலாம்; அவரைச் சந்திப்பது மிகவும் கஷ்டம். இப்படியான ஒருவரின் மகளுக்கு திருமணம் என்றால் சொல்லவும் வேண்டுமா! SUTHE -மாப்பிள்ளையும்

ஒரு ஒட்டாத உறவாய்

 (1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இது நடந்து எவ்வளவோ காலமாகிவிட்டது. இல்லை; இது தொடங்கித்தான் எத்தனையோ காலமாயிற்று. இப்போதும் – அவ் அவ்போதுகளில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு ஒட்டாத உறவாய் இயைபில்லாத ஒட்டுறவாய்… அந்தக் காலங்களில் அவன் மிகவும் குதூகலமான வனாய் இருந்தான். சிட்டுக் குருவியைப்போல உற்சாகமாய் சுற்றிச்சுற்றி வந்தான். தனக்குள்ளேயும் நண்பர்களிடையேயும் ஓயாது தர்க்கித்துக் கொண்டே இருந்தான். முகத்தில் வசீகரமும் கண்களில் தீட்சணியமுமாய் உலகமே எனக்காக

 

அன்புள்ள முதலமைச்சருக்கு…

 அன்புள்ள மாண்புமிகு முதலமைச்சருக்கு … அன்றாட வாழ்க்கையில் அல்லல்படும், அவதிப்படும்….ஏன், சுத்தமாகச் சொல்லப்போனால் லோல்படும் ஆயிரக்கணக்கான மத்யவர்க்க மக்கள் (ஆலோசகர்கள் வைத்துக்கொண்டு வரி ஏய்ப்பதற்கு வசதி இல்லாத ஓரளவு வருமானம் வாங்குபவர்கள் ….) சார்பாக அடியேனின் தெண்டம் சமர்ப்பித்த விஞ்ஞாபனம். நலம். நலமறிய அவா – என்று வழக்கம் போல பொய்யாக ஆரம்பித்துக் கடிதத்தை ஆரம்பிக்க ஆசையாகத்தான் இருக்கிறது. மன்னிக்கவும். பொய் சொன்ன வாய்க்கு போஜனம் (சத்துணவு இல்லை…. சாதா உணவு) கிடையாது என்று பெரியவர்கள் கூறுவார்கள்.

அங்கிள்

 (1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவளுடைய பற்கள் அவர் புஜத்தில் ஆழப் பதிந்து பல் பதிந்த குழிகளில் ரத்தம் தளும்பி அரும்பிக் கொண்டு எரிச்சல்… அந்த சிங்கப்பூர் குளோஸ் கட்நெக், அந்த புது ரத்தம் ஊறிப் பரவ ஆரம்பித்தபோது… சாளிப்பிள்ளை வாசலைக் கடந்து லேசாகத் திறந்திருந்த கேட்டின் திறப்பின் வழியே போய் விட்ட அவளைக் கண்களால் துழாவினார். மிஷன் தெருவில் யாருமே இல்லை. வரவில்லை, போகவில்லை. சாளிப்பிள்ளை முற்றத்தில்

 

கனவுகள் வாழ்கின்றன

 வாழ்க்கை – 1 தென்றல்காற்று முகத்தில் பட்டுத்தெறித்தது. கண்ணில் பட்ட இடமெங்கும் வெட்டவெளியாக வயல்வெளி பரவிக்கிடந்தது. தென்றலின் இனிய வாசத்தை அள்ளிச் சுவைத்தபடி மூக்கின்வழியே இழுத்து ஆசைதீர வாய்வழியே விட்டு வெளியனுப்பி அனுபவித்தேன். இதமான காலைப்பொழுதில் குளக்கட்டின் வழியே பொங்கிப் பிரவாகிக்கும் வயற்காற்று மருதமர இலைகளை அசைத்து நடனம் பயிற்றிக்கொண்டிருந்தது. நிறைமாதமாய் தளதளத்து முட்டிமோதியது குளத்துநீர். வான் பாய்ந்து அடங்கியதற்கான ஆதாரங்கள் அங்குமிங்குமாக உருக்குலைந்திருந்தன. மூன்றாண்டுகளின்பின் என் சொந்த மண்ணில்… நான் பிறந்து ஓடியுலாவிய என் சொர்க்கபூமியில்

 

நீயின்றி நானில்லை

 ஒரு ஒரு மாலைப் பொழுதில் அடையாறு மேம்பாலத்தில் நின்று கீழே சலசலத்து ஓடும் நதியின் நீரைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சரளா. அவளைப் போல பலர் பார்த்துக் கொண்டிருந்தாலும் சற்று நேரத்தில் கிளம்பி விட்டார்கள். சரளா அசைவின்றி வெகு நேரமாக நின்று கொண்டு இருந்தாள். சமீபத்தில் பெய்த காற்று அழுத்த தாழ்வு மண்டலத்தினால் மழை வஞ்சனையின்றிப் பெய்திருந்தது. நுங்கும் நுரையுமாக வெள்ளம் கரை புரண்டு கடல் நோக்கி ஓடிக்கொண்டு இருந்தது. இதில் குதித்து விடவேண்டும். கொஞ்சம் இருட்டட்டும். ஆள்

 

இராமாயணச் சுருக்கம்

 (1967ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சான்றிதழ் பாலபோதினி உபபாட புத்தகம் IV – இராமாயணச் சுருக்கம் 1952 ம் ஆண்டு பெப்ருவரி மாதம் 29ந் திகதி வெளிவந்துள்ள இலங்கை அரசாங்க வர்த்தமானப் பத்திரிகையில் உதவி நன்கொடை பெறும் தன் மொழிப் பாடசாலைகளுக்கும், இரு பாஷைப் பாடசாலைகளுக்கும், ஆங்கில பாடசாலைகளுக்குமான ஒழுங்குச் சட்டத்தின் 19(A) -ம் பிரிவில் பிரசுரிக்கப் பட்டதற்கமைய இப்புத்தகம் ஒரு நூல் நிலையத்திற்குரிய புத்தகமாக உபcயோகித்தற்கு வித்தியாதிபதி

 
ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று ஜமீலா பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

கலைமகளின் வளர்ப்புப் பிள்ளைகளில் ஒருவராகச் சிறுகதை உலகில் பிரவேசித்த நன்னாளன்று அன்பும் ஆசிகளும் சொரிந்து அடியேனை வாழ்த்திய, தமிழ்த் தாயின் அருந்தவப் புதல்வரும் கவிஞரும் எழுத்தாளரும் பேராசிரியருமான ஸ்ரீ கி.வா.ஜகந்நாதையர் அவர்களுக்கு, இந்தச் சிறுகதைத் தொகுதியைத் தாழ்ந்த வணக்கத்துடன் நான் சமர்ப்பிக்கின்றேன்.

Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook Instagram
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2022]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.