சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்
google-play-storeiOS-App-Store

view this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2022/05/06/

பயங்கர மனிதன்! – ஒரு பக்க கதை

“இந்தாருங்கோ, உங்களைத் தானே! இந்த க்ஷணமே பக்கத்து வீட்டுக்காரர் கிட்டே போய், அவர் சம்சாரம் பண்ற அக்கிரமத்தைப் பற்றிச் சொல்லிச் சண்டை போட்டுட்டு வாங்கோ! இல்லாத போனா இந்த வீட்டிலே என்னாலே அரை நிமிஷம்கூடக் குடித்தனம் பண்ண முடியாது!” என்று மங்களம் என்னிடம் கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள். “என்னடி நடந்தது? விவரமாத்தான் சொல்லேன்!” என்றேன். “தினம் எச்சக்கலையைக் கொண்டு வந்து இங்கே நம்மாத்திலே எறிகிறாள், அந்த மனுஷி! கேட்டாக்க, அப்படித்தான் எறிவாளாம்!” “அப்படியா சொல்கிறாள்! உம்..! இதோ, இப்பவே

பேயும் டேனியல் வெப்ஸ்டரும்

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)\ ஸ்டீபன் வின்செண்ட் பெனெட் ஸ்டீபன் வின்செண்ட் பெனெட் (1898-1943) பென் ஸில் வேனியாவைச் சேர்ந்த பெத்லஹேமில் இலக்கியரசனை யுள்ள குடும்பத்தில் பிறந்தவர். பிரான்சுக்கு அவர் சென்ற பொழுது மணம் புரிந்து கொண்டார். பிறகு இலக்கிய சேவையில் ஈடுபட்டார். அவர் எழுதிய ஜான் பிரௌனின் உடம்பு (John Browns Body) என்ற இலக்கியத்துக்கு 1929-ல் கவிதைக்காகப் புலிட்சர் பரிசு கிடைத்தது. அமெ ரிக்க முன்னேற்றம்பற்றி

மிட்டாய்க்காரன்

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வாசலில் உட்கார்ந்திருந்தாள் வேணி. அவளைப் போன்ற சிறுமிகளும், சிறுவர்களும் தெருவில் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் வேணிக்கு மட்டும் என்ன வந்தது? ஏன் எதையோ பறிகொடுத்தவள் போல் அப்படி அமர்ந்திருக்கிறாள்? சற்றைக்கொரு தரம் அவள் தெரு முனையை வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஏன்? யாருடைய வரவையோதான் அவள் அத்தனை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள் சிறிது நேரம் சென்றது. “மிட்டாய்! மிட்டாய்!” என்ற குரல்

கொக்கும் தவம்

“ஐயா, உங்க இருக்கிறியளோ?” குரல் கொடுத்துக் கொண்டு விறாந்தைக்கு வெளியே நின்று கொண்டிருந்தான் சின்னத்துரை. “என்னடாப்பா?” என்று கேட்டவாறு வெளியே வந்தார். ‘சக்கடத்தார்’ குருசுமுத்தர். “அவே, உங்களைத் தான் கூட்டியரட்டாம்” “ஆற்ராப்பா?” “மரியானண்ணையும் பாக்கியமப்பாவும்” மதியூகமில்லாதவன் தனது பலவீனத்தைக் காட்டிக் கொள்ளும் போது, அதில் கணை தொடுப்பது எளிது என்பதை அவர் அறிவார். சின்னத்துரையின் பேச்சிலிருந்து அவர்களை முற்றாகப் புரிந்து கொண்ட குருசுமுத்தர் அதை வாறாகப் பயன்படுத்திக்கொண்டார். ‘மொக்குக் கழுதை’ என்று பெயரெடுத்த சின்னத்துரையின் ‘திறமை’ யையும்

கற்றது ஒழுகு

“சாயாவனம்…சாயாவனம்…, உன்னை அய்யா கையோட இட்டாரச் சொன்னாரு…” ஓட்டமும் நடையுமாக வந்த செங்கரும்பின் அழைப்பில் அவசரம் தெரிந்தது. இன்றைக்கு மூன்றாம் நாள் சாயாவனத்தின் திருமணம். நாளை மறுநாள் அந்தியில் மணப்பெண்ணுக்கு பரிசம் போட்டுவிடுவார்கள். சாயாவனத்தின் கையில் காப்பு கட்டிவிடுவார்கள். வாடகைப் பந்தல் முனுசாமி, “நாளை காலைல வந்து பந்த போட்டுடறேன்..” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான். நாளை மதியம் பாரவண்டி அனுப்பினால் வாடகைச் சமையல் பாத்திரங்கள் வந்து சேர்ந்துவிடும். இன்று அந்தியில் மளிகை அனுப்பிவிடுவதாகச் செட்டியார் சொல்லி அனுப்பிவிட்டார்.

தபாற்காரச் சாமியார்

(1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1 அன்று காலையிலிருந்து சந்திரனின் மனம் ஒரு நிலையி லில்லாது தத்தளித்த வண்ணம் இருந்தது. தனது தொழிலுக்கான காக்கிச் சட்டையை அணிந்து கொண்ட போது, நெஞ்சில் ஏதோ குடைச்சல் ஏற்படுவது போல அவன் உணர்ந்தான். காற்சட்டைப் பையிலிருந்து ஒரு பீடியை எடுத்துப் பற்ற வைத்து இரண்டு தம் இழுத்தான். அப்பொழுது கூட அவனைப் பற்றி நின்ற சோர்வுநிலை விட்டு நீங்கவில்லை. முற்றத்திலே இறங்கி

காட்டுக்குள் நுழைந்த மனிதர்கள்

கல்யாணம் சொர்க்கத்தில் மட்டுமல்ல.. காடுகளில் கூட நிச்சயக்கப்படுகிறது. நான் சொல்ல வந்தது யானையூர் காட்டப்பத்தி.. ஆமா.. யானைகள் மட்டுமே வாழற ஊருங்கறதால இதுக்கு யானையூருனு பேரு வந்துச்சு… அங்க தான் இப்ப சுப்பாண்டி யானைக்கும், செவ்வந்தி யானைக்கும் நிச்சயதார்த்தம் நடந்துகிட்டு இருக்கு.. வாங்க சத்தம் போடாம நாமும் கவனிப்போம்… செவ்வந்தி குடும்பத்து யானைகளெல்லாம் சுப்பாண்டி குடும்ப யானைகள விழுந்து விழுந்து கவனிச்சாங்க… (நிஜமாவே விழுந்தாங்கன்னா நில அதிர்ச்சி ஏற்படும்.. சோ.. புரிஞ்சுக்கோங்க‌) முன்னமே பேச்சுவார்த்தை நடந்து, செவ்வந்தி

குறி…

“ஏம்மா.. இத்தன பேரு வேல பாத்தும் ஒரு வேல கூட முழுசா நடக்கலயே. கையிலயா எழுதுறீங்க. ம்… ஒரு மிசினா ரெண்டு மிசினா, மொத்தம் பன்னெண்டு மிசினு இருக்கு. மிசின்ல என்ன நிகழ்வுனு கொடுத்தா அது செய்யப் போகுது. இல்ல…. எதும் புரியலனா என்கிட்ட கேட்டா நா சொல்ல மாட்டேனா. அது என்னாச்சு இது என்னாச்சுனு ஒருத்தர் மாத்தி ஒருத்தர் காலையிலிருந்து போன்ல கேட்டுக்கிட்டே இருக்காங்க. நா என்னத்த சொல்லி மழுப்புறது. எனக்குனு ஒரு மரியாதை இருக்கு

கவிதைகளைச் சுமந்து திரிபவள்

பெர்லினில் பத்துக்குமேற்பட்ட தரை அங்காடிகள் உள்ளன. அநேகமாக அவை வாரவிடுமுறைகளிலேயே கூடும், அவற்றின் சிறப்பு என்னவென்றால் ஜெர்மனியர்கள் சிறிதுகாலமே தாம்பாவித்த மிதியுந்து, தையலியந்திரம், விசிறி, கிறைன்டர்/மிக்ஸிபோன்ற வீட்டுமின்சார உபகரணங்களையும், சி.டி பிளேயர்கள், கணினிகளையும். கொண்டுவந்து அங்கே விற்பார்கள். சிலவேளைகளில் மிகமலிவாக அவற்றை வாங்கிக்கொண்டுவிடலாம். சில விலையுயர்ந்த வெண்கலம், Porceline இல் செய்யப்பட்ட கலைப்பொருட்கள் ஓவியங்களையும், கிராமபோன், நிறைவைப்பதால் இயங்கும் புராதன சுவர்க்கடிகாரங்கள்போன்ற Antique பொருட்களையும், கமராக்கள், தொலைநோக்கிகள், நிலைக்கண்ணாடிகள், வெள்ளியாபரணங்களையும், குளிராடைகளையும், பயணப்பொதியுறைகள் (Suitcases), இறகுவைத்த தொப்பிகளையுங்கூட

 

ஹலோ, போலீஸ் ஸ்டேஷனா?

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1 | அத்தியாயம் 2 மாம்பலத்தில் ஆராய்ச்சிசாலை வைத்திருக்கும் ஆதிகேசவன் திடீரென்று உடல் நலம் குன்றி இருக்கிறார். அடையாறிலிருக்கும் தில்லைநாயகம் இறந்துவிட்டார். இது என்ன விந்தை? துளசிங்கத்திற்கு வியப்பை விளைவித்தது. ஒன்றிற்கு ஒன்று தொடர்பு இருக்க வேண்டும் என்றே தோன்றியது. இந்த விஷயத்தை ஆதிகேசவனிடம் தெரிவிக்க வேண்டியது அத்தியாவசியம் என்று தீர்மானித்து டெலிபோனைக் கையில் எடுத்தார், மைலாப்பூரில் ஆதி கேசவன் வசித்து

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று எஸ்.கண்ணன்பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார்.

சிறுகதைகள்.காம் இணையதளத்தில் நூறு கதைகள் எழுதிய முதல் கதாசிரியர் என்பதில் இவருக்கு மிகுந்த பெருமை. இதுவரை 500இக்கும் மேற்பட்ட கதைகளை சிறுகதைகள்.காம் வெளியிட்டு உள்ளார். இதற்காக India Book of Records விருது வென்றார்.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook Instagram
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2022]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.