சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்
google-play-storeiOS-App-Store

view this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2022/05/03/

இவளும் அவளும்

 (1949ல் வெளியான சீர்திருத்த நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நாடகப் பாத்திரர் 1. மனோரமா-உத்தமபத்தினி, தேசபக்தை 2. சிகாமணி : அவள் தந்தை, சேவா நிலையத் தலைவர் 3. சட்டநாதன் : மனோரமாகணவன், சட்டப்புலி, டம்பாசாரி. மல்லப்பன் : இவன் தந்தை, கருமி பூதகிபாய் : தாய், கொடியள் ஜிலுஜிலுபாய் : சினிமா நடிகை தங்கராஜன் : சினிமா டிரக்டர் வெங்கு : சட்டநாதன் குமாஸ்தா சேவா நிலையத் தொண்டர் முதலியோர்

காதலும் போட்டியும்

 (1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இலுப்பூர்ப் பயில்வான் இடியப்ப பிள்ளையிடம் சிட்சை பெற்று, ‘சிறுத்தைப் புலி’ சிங்காரத்தின் முந்திரிப் பழ மூக்கை ஓர் உலுக்கு உலுக்கிவிட்ட தார்பாட்டா பரம் பரையைச் சேர்ந்த ஜாம்பஜார் ‘பாயின்டிங் பாக்ஸர்’ சுல்தானுக்கும், சண்டைச் சேவல்’ சர்தார் முனியப்ப பயில்வானின் ஆசீர்வாதம் பெற்று வீரமுத்துவின் விலா வெலும்பைப் பதம் பார்த்த நாக் அவுட் புகழ்க் காட்டுக் கரடி’ மைக்கேல் காளிமுத்துவுக்கும் ஏழு ரவுண்டு ‘பாக்ஸிங்

ஜுனியஸ் மல்ட்பி

 (1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஜான் ஸ்டீன்பெக் “Junius Multby” by John Steinbeck, published after obtaining the permission of the Author’s Agent. ஜான்ஸ்டீன்பெக் கலிபோர்னியாவிலுள்ள ஸாலினாஸ் என்ற இடத்தில் 1902ம் ஆண்டில் பிறந்தவர். அவருடைய புத்தகங்களில் எல்லாம் பெரும்பாலும் அவருடைய சொந்த ஜில்லாவினதும், மணமானபின் அவர் வாழ்க்கை நடத்திய மாண்ட்ரீ கடற்கரையினதுமான சூழ்நிலைகளுமே பிரதிபலிப்பதைக் காணலாம். அவர் ஸ்டான்போர்டு சர்வகலாசாலையில் நான்காண்டுகள் கல்வி

செப்புத் தூக்கி

 பகல் பதினொன்று இருக்கும். வீதியில் நடந்து செல்பவர்களை சிறியவர் பெரியவர் என்று வித்தியாசம் பார்க்காமல் தன் சுடுகதிர் வீச்சால் வறுத்தெடுக்கும் சூரியன், தன் வேலையில் சற்று முனைப்பைக் காட்டத் தொடங்கியிருந்த நேரம். வீட்டுப் பெரியவர்கள் மார்க்கெட் சென்று வந்த களைப்பில் அன்றைய நாளேட்டில் முகம் புதைந்து கிடைந்தார்கள். ‘சல்லிசாக’ ஆண்கள் வாங்கி வந்திருந்த மீனின் நாற்றத்தைத் தாங்க முடியாமல், மனதுக்குள் திட்டியபடி – வேறுவழியின்றிச் சலிப்புடன் அவன் பெண்கள் மீன்களை ஆய்ந்து கொண்டிருந்தார்கள், வக்திற்கு வக்த் மட்டுமே

நோன்பு பிறை!

மாலை நேர தொழுகைக்கு பின், கிராமத்திலிருக்கும் மசூதியின் வெளிப்புறத்தில் நின்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் வானத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். என்ன சுல்தான் பாய் பிறை தெரியுதா? என குரல் கொடுத்தவாறே வந்தார் உமர் பாய். வாங்க பாய்.. இன்னும் தெரியல என்றார் சுல்தான் பாய். இன்று பிறை தெரிந்தால் நாளை முதல் நோன்பு நோற்க வேண்டும். அந்த ஆர்வம் அனைவரின் முகத்திலும் தெரிந்தது. சிறிது நேரத்தில் அதோ அங்கே பிறை தெரியுது என சிறுவன்

பனிமலர்

(1940ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆழ்ந்துதுயின்று கொண்டிருக்கும் அவள் உண்மையிலேயே உறங்குகிறாளா அல்லது தன்னிலை நழுவியேங்கிக் கிடக்கிருறாளா என்பது அவனுக்குப் புரியவில்லை. அவளை ஏக்கத்துடன் உற்றுப் பார்த்துப் பெருமூச்செறிந்தான். பனியில் நனைந்து வெளுத்திருக்கும் மலரில் சிதறிக் கிடக்கம் பனித்துளிகள் போல் அவள் முகமெங்கும் வியர்வைத் துளிகள் அரும்பி இருந்தன. துவண்ட மேனியளாக ஒரு கையைத் தலைக்கு மேலாக மடித்துக் கொண்டு, மற்றொரு கையை மார்பின் மீது துவளவிட்டு அவளும்

மரணதண்டனை

முகவுரை அரிசுட்டாட்டில் சட்டத்தைப் பற்றி எழுதுகையில், தனிமனிதர்களின் ஆட்சியைவிட, சட்டத்தின் ஆட்சி மேலானது என்று குறிப்பிட்டார். அறிஞர் அண்ணா சட்டம் ஓர் இருட்டறை, அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு, அது ஏழைக்கு எட்டாத விளக்கு. என்று கூறியுள்ளார். அரசியல்வாதி நினைத்தால் நீதிபதிகளின் தீர்ப்பை மாற்றலாம். *** கருத்தக் கோட் , கை விரல்களில் மூன்று இரத்தினக் கற்கள் பதித் த மோதிரங்கள் . வலது கையில் செல் போன் . அவருக்குப் பின்னால் பைல்களை தூக்கிய

காலப்போக்கில்…

 ‘இதைச் சொல்லக்கூட தனக்கு உரிமை இல்லையா…?’ – என்று மனம் கேட்க அப்படியே இடிந்து போய் தன் அறையில் அமர்ந்தாள் செண்பகம். சிவா தன்னுடையத் துணிகளை சோப்புப் போட்டு கொல்லைக் கிணற்றடியில் மாங்கு மாங்கென்று துவைத்துக்கொண்டிருந்தான். ‘தன் துணி துவைக்கக்கூடாது, இஸ்திரி செய்யக்கூடாது, இரு சக்கர வாகனம் துடைக்கூடாது,…. இன்னும் சின்ன சின்னத் தேவை, சேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடாது. அவர் வேலைகளை அவரே செய்ய வேண்டும். எதற்காகத் தன்னைக் கட்டிக் கொள்ள வேண்டும்..?!’ – அவளுக்குள் துக்கம்

உயிரும், உரிமையும்!

 உக்ரெயின் நாட்டில் நள்ளிரவு கடந்து சுமார் மூன்று மணி இருக்கும். அந்த பழுப்பு நிற மோட்டார் கார்கதவுகளில் மூன்று மங்கிய மஞ்சள் நிறத்திலும். நான்காவது நீல நிறத்தில் இருந்தன. காரின் வண்ணக் கலப்புஉக்ரெயின் நாட்டின் கொடி வண்ணங்களை நினைவூட்டியது. இது எதேச்சையாக நடந்த வண்ணக் கலப்பாகஇருக்கலாம். ஆனால் அந்த கார் உக்ரெயினிலிருந்து மேற்கு திசையில் இருக்கும் போலந்து நாட்டைஇலக்காக வைத்து நகர்ந்தபோது உக்ரெயின் மக்களின் உரிமை ஓலம் நமக்குக் கேட்கவில்லையா? மேற்கு திசையில் போலந்து நாட்டு எல்லையில்

 

ஹலோ, போலீஸ் ஸ்டேஷனா?

 (1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1 இரவு ஒன்பது மணிக்குமேலிருக்கும். குளிர்காலமாகையினால் எங்கும் மூடுபனி கவிந்துகொண்டிருந்தது. ஜன நடமாட்டம் வெகுவாய்க் குறைந்திருந்த போதிலும், வீதிகளில் நடமாடு வோரின் முகத்தைச் சரியாகப் பார்க்க முடியாதபடி செய்து கொண்டிருந்தது பரவிக் கிடந்த பனிப்படலம். அந்த மூடுபனி யைக் கிழித்துக்கொண்டு வெகு வேகமாக ஒரு கார், மாம்பலத் தில் இருக்கும் உஸ்மான் ரோட்டில் வந்துகொண்டிருந்தது. அந்தக் காரின் முன்னாலிருந்த இரண்டு பிரகாசமான

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று கலைச்செல்வி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

“சக்கை“ என்ற இவரின் நாவல் NCBH வெளியீடாக 2015 ஜனவரியில் சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியானது. இந்நாவல் நேரு மெமோரியல் கல்லுாரி, புத்தனாம்பட்டியில் தமிழ் இலக்கியத்திற்கான பாடமாக ஆக்கப்பட்டுள்ளது.

Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook Instagram
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2022]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.