சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்
google-play-storeiOS-App-Store

view this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2022/04/30/

நெய்தலங்கானல்

(1953ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மலாகி- கார்ன்வால் மாவட்டத்தின் கடற்கரைஒரே பாறை மயமானது. பாறைகள் செங்குத்தாகவும் அடிக் கடி கடற்கரை நெடுகப் பலகல் தொலைவுவரை தொடுப் பாகவும் கிடந்தன. அத்துடன் அவை சுவர்போல் அலை கள் வந்து மோதும் இடத்திலேயே திடுமென இறங்கி முடிவுற்றதனால், கடற்கரைப் பக்கம் எவரும் எளிதில் வரமுடியாமல் இருந்தது. பாறைகளில் ஒருசில இடுக்குப் பிளவுகள் இருந்தன. இவற்றின் வழியாகக்கூட மக்கள் மிக அரும்பாடுபட்டே ஏறி

மாயவலை

வெளியில் பெய்த வெள்ளை மழைச் சாரலினால் யன்னல் கண்ணாடிகளில் நீர்த்திவலைகள் சொட்டிக்கொண்டிருந்தன. கதிரவனின் மஞ்சள் ஒளி யன்னலைத் தாண்டி உள்ளே பரவியிருந்தது. நேரத்தைப் பார்க்கிறேன். மணி பத்தை காட்டுகிறது.வழமையாக இப்பொழுது வேலைக்கு போயிருக்கவேண்டும்,கொரோனா ஊரடங்கில் உலகமே ஸ்தம்பித்திந்தது,அதனால் நேரம் பற்றி எந்த பிரக்ஜையும் இல்லாது கதகதப்பான போர்வையை விலக்காமலே விட்டத்தை பார்த்தபடி கிடக்கிறேன்.மனதில் மகிழ்ச்சி இல்லை. சலிப்பு மட்டுமே எஞ்சியிருந்தது. இப்படியே எத்தனைநாள் வேலையில்லாது இருப்பது.? எனது கைத்தொலை பேசி ஒலிக்கிறது, அந்த அழைப்பு வந்த எண்

குமுதம் மலர்ந்தது

(1940ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஜானகி அம்மாளுக்கு உடம்பு சரியில்லை என்கிற விஷயம் அந்த வட்டாரத்தையே ஒரு கலக்கு கலக்கி விட்டது. நல்ல உயரமும். அதற்கேற்ற பருமனும், பறங்கிப் பழம்போல் தளதள வென்ற உடலும் கொண்ட கம்பீரம் வாய்ந்த அந்த அம்மாளிடம் அங்குள்ளவர்களுக்கு ஒரு தனி மதிப்பு இருந்து வந்தது. பால்யத்தில் கணவனை இழந்த ஜானகி அம்மாள் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டாள். தன் வயிற்றுக்குக் கூடச்

கார்த்திகை மாசத்து நாய்

‘Blazer’ எங்கள் வீட்டுக்கு வந்தது நேற்றுப்போல இருக்கிறது, நாலு வருஷங்களாகிவிட்டன. அப்பாதான் சொல்லிவைத்தாராம். சாரத்தை மடித்துச் சண்டியாகக் கட்டிக்கொண்டு மீன்வியாபாரி போலத் தெரிந்த அந்த உயரமான மனிதன் மிதியுந்தின் காவியில் (Carrier) வைத்துக்கட்டிய சன்லைட் சவர்க்காரப்பெட்டிக்குள் சாக்குமடிப்பொன்றில்வைத்து கழுநீரின் நிறத்தில் உடம்பும், அடிவயிறு வெள்ளையாகவும் இருந்த . அந்த நாய்க்குட்டியைப் பக்குவமாகக் கொண்டுவந்தான். ஐம்பது ரூபாயாக இருக்கவேணும், அப்பா பணத்தைக்கொடுத்ததும் இரண்டாந்தடவையும் எண்ணிப்பார்த்துவிட்டு “கள்ளுக்கொண்டும் இல்லையோவும்” என்று இளித்துக்கொண்டு நிற்கையில் அப்பா மேலுமொரு பத்து ரூபாவைக்கொடுக்கவும் முழு

கிளியின் கதை

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சிறிய ஊர் – அது ஒரு ஒரு அழகான கிராமம். நான்கு புறமும் மலைகள் – ஊரின் நடுவே ஒரு சிற்றாறு – திரும்பும் திசை எல்லாம் பச்சைப் பசேல் என்ற தோட்டங்கள் — அப்பப்பா ; அந்த ஊரின் அழகே அழகு! ஊரிலுள்ள சிறுவர் சிறுமிகளுக்கு – பள்ளிக்கூடக் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் விளையாடுவதற் கென நல்ல நல்ல இடங்கள் இருந்தன.

இன்டர்வியூ – ஒரு பக்க கதை

“எதுக்குடா இவ்ளோ பயம்..? தைரியமா இரு.. பயந்தாலும் வெளிய காட்டிக்காத” “இல்லடா முதல் இன்டர்வியூ… நினைச்சாலே கை, காலெல்லாம் நடுங்குது” “ஏன்டா.. இப்படி பயந்தீனா.. எப்படி இன்டர்வியூல ஆன்சர் பண்ணுவ?” “அதான்டா தெரியல..” “எனிவே.. இன்டர்வியூ அட்டன்டு பண்ணு.. கலக்கு.. ஆல் தி வெரி பெஸ்ட்” “தேங்க்ஸ்டா” இன்டர்வியூ நாள்.. மொத்தம் முப்பது பேர்.. இவனது பேர் லிஸ்டில் இருபத்தி ஏழாவது இடத்தில் இருந்தது. “சேது..” அவனது பெயர் அழைக்கப்பட.. பதட்டப்படாமல் ஸ்டெடியாய் கிளம்பினான்.. “மே ஐ

துரோகம்

ஜகன் மஞ்சரியின் தலையை தடவி விட்டு,நெற்றியில் அழுத்தமாக முத்தத்தை பதித்துவிட்டு வேலைக்கு செல்ல ஆயத்தமானான் என்னங்க கதவை பூட்டி விட்டு போய்விடுங்கள் எனக்கு எழும்புவதற்கு சோம்பேறித்தனமாக இருக்கு என்றாள் மஞ்சரி,சனிகிழமை என்றாலே உனக்கு எழும்புவதற்கு நினைவு வராதே சரி சரி நீ படு நான் கதவை பூட்டி விட்டு சாவியை எடுத்துக் கொண்டு போறேன் உன்னிடம் இன்னொரு சாவி இருக்கு தானே என்றான் ஜகன் ஆமாம் இருக்கு லைட்டை அனைத்துவிட்டுப் போங்கள் என்றாள் மஞ்சரி,அவன் சரியென்று சென்று

பூமி இழந்திடேல்

தொழிலதிபர் சோப்ரா இந்த சமயத்தில் இப்படி ஒரு சிக்கலை எதிர்பார்க்கவில்லை. அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய சாயத் தொழிற்சாலை தொடங்க ‘லொகேஷன்’ தேடிய சோப்ராவுக்கு அந்தக் கிராமம் மிகவும் பிடித்துப் போயிற்று. கிராம முக்கயஸ்தர்களை அணுகி நோக்கம் விளக்க நிலம் கேட்டபோது, ஊர் கூடி முடிவு செய்து, பல பேருக்கு வேலை வாய்ப்பைத் தரும் பெரிய தொழிற்சாலை தொடங்குவதை வரவேற்று நியாயமான விலையில் நிலம் தர முன் வந்தனர். தேவைக்கு மேல் ஒரு பங்கு அதிகமாகவே

கடைசி இடம்

ஊர்ந்து, வழிந்து, வழியில் தென்படும் குழிகளில் இறங்கி, மேடுகளைத் தயக்கத்துடன் கடந்து, சட்டென்று வேகமெடுத்துப் பாயும் புதுவெள்ளத்தின் வீச்சு அவனிடம் இருந்தது. வலைப்பின்னல் தொப்பியும் குஞ்சுதாடியும் அவனுக்கு எடுப்பையும் ஆலிம் தோற்றத்தையும் தந்தன. நொடிக்கொரு தரம், “அல்லா லேசாக்கிடுவான்” என்பான். விஷயத்துக்கேற்ப குர்-ஆனிலிருந்தும் ஹதீஸ்களிலிருந்தும் மேற்கோள் காட்டிப் பேசும் விஷயஞானமும் அவனிடமிருந்தது! கழுத்தை மேலே எழுப்பி, இதமாய்க்காலை உதைத்தும் கைகளை வீசியும் நீந்தும் பரவசம் அவன் பேச்சிலிருந்து இடம் பெயர்ந்து என்னையும் பரவசப்படுத்தியது. இத்தனை நாட்கள் ஏன்

 

கற்கண்டு

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 7-8 | 9-10 9 கற்கண்டும் தருமனும் மணவறையில் உட்கார்ந் திருக்கிறார்கள். இன்னும் தாலி கட்டவில்லை. ராம சாமியும் சீனிவாசனும் ஆக வேண்டிய காரியத்தைப் பொறுப்புடன் கவனிக்கிறார்கள். தாலிகட்டப் போகும் சமயம். துரைசாமி முதலி யார் மண வீட்டில் நுழைகிறார், மாப்பிள்ளையைப் பார்க்கிறார். அவர் முகம் வேறுபடுகிறது. மகாபெரிய மனிதராகிய சிங்காரமுதலியார்தான் மாப்பிள்ளையா? அப்படியானால் அவர் சுய காரியத்திற்காகப் ‘பல சூழ்ச்சி செய்தாரா

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று வாசுகி நடேசன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

வாசுகி நடேசன் யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டில் கலாநிதி க சொக்கலிங்கம், தெய்வானை ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தை சொக்கன் என்ற புனைபெயரில் எல்லோராலும் அறியப்படும் சிறந்த தமிழறிஞர், எழுத்தாளர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook Instagram
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2022]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.