சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்
google-play-storeiOS-App-Store

view this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

https://www.sirukathaigal.com/2022/04/14/

காற்றைப் போன்றதடி என் காதல்!

 சித்தப்பிரமை பிடித்தவனாகவே அவன் எனக்கு அறிமுகமானான்! ஸ்காபரோ நகரில் எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் இரண்டு பிரதான வீதிகள் குறுக்கறுக்கும் இந்தச் சந்திப்பிலுள்ள, இதே பஸ் தரிப்பு நிலையத்துச் சீமெந்து வாங்கில், அவன் அடிக்கடி உட்கார்ந்திருப்பான். சந்திப்பின் வடமேற்கு மூலையில் பேர்பெற்ற வர்த்தக வளாகம் ஒன்று அமைந்திருக்கிறது. ஏராளமான அலுவலகங்கள் அடங்கிய, பல அடுக்கு மாடிகள் கொண்ட ‘ப’ வடிவ வர்த்தக வளாகம். இதே கட்டடத்தின் தரைத் தளத்தில்தான் நான் பணியாற்றிவரும் அலுவலகமும் இருக்கிறது. மடியில் வெடி கட்டி

கற்கண்டு

 (1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1 புதுச்சேரியில் முதலியார் வீதி என்பதொன்று. அவ்வீதியின் முனையில் இருப்பது சிங்கார முதலி யார் வீடு. சிங்கார முதலியார் புதுச்சேரியில் உள்ள பணக்காரர்களில் ஒருவர்; செல்வாக்குள்ளவர்; நல்ல பரோபகாரியுமாவார். அந்தச் சிங்கார முதலியார் வீட்டுக் கெதிரில் ஒரு வாரமாகத் தருமன் சிறுத்தொண்டப் பத்தன் கதை பாடி முடித்ததில் அவனுக்கு நல்ல வரும்படி. அதனால் அதே இடத்தில் சிறுத்தொண்டப் பத்தன் கதையைத் துவக்கி யிருக்கிறான்

மாமியார், மருமகள் உலகமகா யுத்தம்!

 கி.மு….கி.பி. – அதாவது கிறிஸ்துவுக்கு முன் கிறிஸ்துவுக்குப் பின் என்று காலத்தைக் கணக்கிடச் சரித்திர ஆராய்ச்சியாளர்கள் அளவுகோல் வைத்திருக்கிறார்கள். அதேபோல, உலகில் மாமியார் – மருமகள் சண்டையே இல்லாத காலத்தையும், சண்டை இருந்த காலத்தையும் பாகுபடுத்திக் கூறவேண்டுமானால் அளவுகோலாக ஆ.ஏ.மு. – ஆ.ஏ.பி. என்ற வாசகங்களைத்தான் பயன்படுத்த வேண்டும். …. அதாவது, சண்டையே இல்லாத காலத்தை ஆதாம் ஏவாளுக்கு முன் என்றும், சண்டை இருந்த – இருக்கும் – நிச்சயமாக இருக்கப் போகும் காலத்தை – ஆதாம்

சிரித்தால் அழகு!

 “என்னம்மா அது? பார்த்துப் பார்த்து சிரிச்சிகிட்டிருக்கே?” என்றவாறு எனது படுக்கையருகே வந்தமர்ந்தார் அம்மா. ஆம். என் கையிலிருக்கும் இந்த புகைப்படம் கடந்த ஒருமணி நேரமாக என்னை எங்கெங்கோ கூட்டிச் செல்லும் வல்லமை பெற்றிருக்கிறது தான். எனது பக்கத்துப் படுக்கை, நோயாளி யாருமின்றி காலியாக உள்ளது. எனவே தான் இரண்டாம் வகை சிறப்பு அறை, முதலாம் வகை சிறப்பு அறை போன்ற ஏகாந்தத்தை தருகிறது எனக்கு. எனது தந்தையின் மத்திய அரசுப் பணிக்கான சிறப்புச் சலுகை என் குடும்பத்தினருக்கான

கையெழுத்து…

 இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், வீடு சத்தமாக இருந்தது. மற்ற நாட்களெல்லாம் வீட்டில் ஆள் நடமாட்டம் குறைவு என்பதால் இன்று மட்டும் இப்படி ஒரு இரைச்சல். சத்தமில்லாத நாள்களில் வீட்டில் ஏற்பட்டிருக்கும் அலங்கோலத்தை எல்லாம் இன்றைக்குத்தான் மாற்றியமைக்க வேண்டும். ஆறுநாட்கள், கொஞ்சம் கொஞ்சமாக வீட்டில் உள்ளவர்கள் சேர்த்து வைத்த சோம்பேரித்தனம், வீட்டின் திரைத் துணியிலும் தொலைக்காட்சி மேல் இருக்கும் தூசியிலும், சமையல் அறை எண்ணெய் பிசுபிசுப்பு கொண்ட அடுப்பிலும் ஒட்டிக் கொண்டிருந்தன. அவ்வபோது செய்திருக்க வேண்டியதை செய்திருந்தால் இன்றைய

வாரிசுகள்

 “என்னமோ சீரியசா ஏதோ போயிட்டிருந்தது போல. நான் வந்து வாசல்லெ நின்னு கொஞ்ச நேரம் கழிச்சுதா திரும்பிப் பாத்தீங்க.. ” “விதவிதமான க்ளயண்ட்ஸ்.. குடிகார நாய் ஒருத்தன் எல்லார்த்தையும் கஷ்டப்படுத்தறான். தற்கொலை பண்ணிக்கவன்னு மிரட்டல் வேற பண்றானம்மா.அதெப்பத்தி பேசிகிட்டிருந்தன்.” ”குடிகாரனோட ஒண்ணு சேத்தி சொன்னீங்களே. அது உங்களுக்கும் சேத்தா ‘ தேவராஜன் பெருமூச்சு விட்டுக்கொண்டார். “செரி.. உள் ரூம்லே போயி உட்காருங்க. வந்தர்ரன்.. மகளே உள்ள போயி உட்காரு. வந்தர்ரேன்”சியாமளா தளதளத்துக் கொண்டிருந்த சேலையை சரிசெய்து கொண்டு

துணி

 “வணக்கம்!பண்ண.” “வாடா!வெள்ள,மண்டய சொரியாத. என்ன வேணுஞ்சொல்லு.” “பண்ண,ரெண்டு மாடு வாங்கிருக்கேன்.” “அப்படியா!மாட்ட வேணா…நம்ம தோட்டத்துல மேய்ச்சிக்கோ,வேற என்ன?” “சரி பண்ண,மேய்ச்சுக்கிறேன்”னு மீண்டும் மண்டய சொரிஞ்சான் வெள்ளைத்துரை. “கழுதப்பயலே!மறுபடி ஏண்டா சொறிஞ்சிட்டு நிக்குற.சோலி நெறய கெடக்கு.சொல்லி தொலடா?” சளித்தொண்டையை இருமி,விழி ரெண்டை உருட்டினார் பண்ணையார். “மாட்டுக்கு வைக்கப்படப்பு அடய எடமில்ல பண்ண.” “இதென்னடா!ஆனைய வாங்குனவென் தொரட்டிய வாங்காத கதையாயிருக்கு.” “வீட்டுக்கு பின்னால ரெண்டுசென்ட்டு கெடந்துச்சி பண்ண.அதுலத்தான் தம்பி வீடு கெட்டிட்டு இருக்கான்.” “ஓந்தெருவுல எவன் எடமாவது சும்மாருந்தா,பண்ண சொன்னாருன்னு

வெட்டு ஒண்ணு

 பட்டங்கள் பல பெற்ற அறிவு ஜீவி சுந்தரலிங்கத்தின் கையைத் துண்டாக வெட்டும் நோக்கத்தோடு கபாலி அரிவாளை வீசவில்லை. ‘சும்மா மிரட்டி வைப்போம்,’ என்ற எண்ணத்தில் கபாலி அரிவாளைச் சுழற்ற; தற்காத்துக் கொள்ள கையை நீட்டிய சுந்தரலிங்கத்தின் கை துண்டாகி விட்டது. ஓரிரு வருடங்கள் எங்கெங்கோ சுற்றி அலைந்துவிட்டு ஊர்ப்பக்கம் வந்தான் கபாலி. ‘ஊரில் தன்னைப் பார்ப்பவர்கள் தூற்றுவார்களோ!’ என்ற அச்சத்துடன் வந்த கபாலிக்கு யாரும் அவனைக் கண்டு கண்டுகொள்ளாதது வியப்பைத் தந்ததது. டீக்கடைக்குச் சென்ற கபாலி, அங்கே

என்ன ஆச்சு?

 ஒரு சாஃப்ட்வேர் கம்பெனி். பிற்பகல் மூன்று மணி. திடீரென்று ஆபிசில் பரபரப்பு. அன்று ஆபிசில் சுமார்எண்பது பேர் வேலைக்கு வந்திருப்பார்கள். சட்டென்று தட்டச்சு சத்தம் அத்தனையும் அடங்கியது. என்ன ஆச்சு? நான் கம்ப்யூட்டர் திரையிலிருந்து பார்வையை திருப்பினேன். அவரவர் தங்கள் இடத்திலிருந்து எழுந்துநின்றனர். ஆண்களில் சிலர் தலையை சொரிந்து கொண்டும், சிலர் நகத்தை கடித்துக்கொண்டும், மற்றும் சிலர்முகத்தைத் தடவிக்கொண்டும் நின்றனர். சில பெண்கள் தமது துப்பட்டா நுனியை விரலில் சுற்றுவதும்விடுவதுமாக இருந்தனர். மற்றும் சில பெண்கள் மேக்கப்

 

ஜக்கு

 (1952ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 6. நாடகம் நடந்தது | 7. ஊர் திரும்புகிறான் ஜக்குவின் பெயர் ஒரே நாளில் பையன்களிடையே பிரபலமாகி விட்டது. தெருவில் போய்விட்டால் போதும். ஒரே அட்டகாசம்! “அடே, இவன் தாண்டா புது ஹெட்மாஸ்டராக ஆக்ட் பண்ணினவன்!” என்பான் ஒருவன். “டிக்கெட்கூட இல்லாமல் எங்களை உள்ளே விட்டாண்டா” என்பான் இன்னொருவன். “இந்தப் பையனாடா அவ்வளவு ஜோராய் நடிச்சது?” என்று கேட்பான் வேறு ஒருவன். “இந்தப்

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று அழ.வள்ளியப்பா பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

அழ. வள்ளியப்பா (நவம்பர் 7, 1922- மார்ச் 16, 1989) குழந்தை இலக்கியங்கள் படைத்த மிக முக்கியமான கவிஞர். 2,000 க்கும் மேலான குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இராயவரத்தில் 1922 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த அழகப்ப செட்டியார், உமையாள் ஆச்சி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்குச் சூட்டிய பெயர் வள்ளியப்பன். ஐந்தாம் வயதில் தான் பிறந்த வீட்டிற்கு அடுத்த வீட்டில் வாழ்ந்த அழகப்பன் என்பவருக்குத் தத்துப்பிள்ளையாகச் சென்றார். [1] இராயவரம் காந்தி ஆரம்பப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். பின்னர் இராமச்சந்திரபுரத்தில் உள்ள பூமீசுவரசுவாமி இலவச உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook Instagram
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2022]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.