சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்
google-play-storeiOS-App-Store

view this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2022/03/26/

நிழலாட்டம்

சந்திரி அக்காவிற்கு பீடை கூடியிருக்கிறது என்று ஜோசியர் தாத்தா அப்பாவிடம் வந்து சொன்னார். அன்றைக்கு வெள்ளிக் கிழமை. ஜோசியர் தாத்தா வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை பத்து மணி வாக்கில்தான் வருவார். பகல் முழுக்க அப்பாவிடம் சாஸ்திரம் பேசிவிட்டு மத்தியானம் சாப்பிட்டு கண்ணயர்ந்து விட்டுப் போவார். ஆற்றங்கரைப் படிக்கட்டில் புஸ்புஸ் என்று அவர் ஏறி வருவதை நான் தான் முதலில் பார்த்தேன். புருவங்களில் வேர்வை திரண்டு மினுங்கியது. “ஜோசியர் தாத்தா” என்றேன். “உங்கப்பா எங்கேடா?” என்றார். “குளிக்கிறார்” வேட்டி நுனியைத்

 

கறங்கு

சுடலைமாடனுக்கு நெஞ்செரிச்சலும் வயிற்றுப் பொருமலுமாகி புங்குபுங்கென்று கோபமும் வந்தது. ஒரு புல்லும் தன்னைப் பொருட்படுத்துவதில்லை என்ற ஆங்காரம் வேறு. முன்னொரு காலம் பட்டப்பகலில், நட்டநடு வெயில் கொளுத்தும்போது, அந்த வழி நடக்கும் ஆடவர், அவர் திசைப்பக்கம் திரும்புவதில்லை அச்சத்தால். பெண்டிர் பற்றி பேசல் வேண்டுமோ? சுடலையின் பின்பக்கம், ஆற்றங்கரையோரம் நிற்கும் இரண்டு நெட்டைத் தெங்குகளில் இருந்து தேங்காய் நெற்றுக்கள் முற்றி, அடந்து கீழே தொப்பென ஒலி எழுப்பி வீழ்ந்தாலும், எவரும் சென்று பொறுக்குவதில்லை. சுடுகாட்டுப் பேய்களும் தென்னை

 

எண்பது ரூபா

தூரத்தில் எங்கேயோ பௌத்த ஆலயத்திலிருந்து பிக்குகள் பிரித் ஓதும் சத்தம். ‘புத்தம் சரணம் கச்சாமி’ ‘சங்கம் சரணம் கச்சாமி’ என்று விட்டு விட்டுப் புத்தர் பெருமானின் திருப்பாதங்களைத் தொழுகின்ற அடியார்களது ஒலிகூடக் கந்தையாவை அமைதிப் படுத்தவில்லை. படுக்கையில் புரண்டு படுத்த அவனைக் கணநேரத்திற்குள் சுள் என்று குத்திய மூட்டைப் பூச்சி தட்டி எழுப்பிவிட்டது. பக்கத்து அறையில் இருந்த தனிக்குடித்தனக் காரர்களின் பழைய காலத்துப் ‘பிக்பென்’ மணிக்கூடு டாண் டாண் என்று பன்னிரண்டு தடவைகள் அடித்து ஓய்ந்தது. கந்தையாவுக்குப்

 

ஜானகி

(1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மணி நாலரையாகி விட்டது. வாசலைப் பார்த்தபடியே நின்ற ஜானகி அப்போது தான் தனக்குப் பின்னால் வந்து தன் தோள்களில் கை வைத்த ஜெயலட்சுமியை நோக்கி முகமசைத்துப் புன்னகை செய்தாள். ஜெயலட்சுமிக்கும் ஜானகியைப் போலத்தான் மூன்று மணியோடு ஆஸ்பத்திரியில் வேலை முடிந்து வீட்டது. “இன்னும் அம்மா வீட்டிலிருந்து வரலில்லையே?” ஜெயலட்சுமியின் கேள்விக்கு இல்லையென்று தலையசைத்துப் பதிலளித்தாள் ஜானகி. “பஸ் பிந்தியிருக்கலாம். கொஞ்ச நேரத்திலை வந்திடுவா…”

 

வானவர்கள் செல்லும் இடங்கள்

இறந்துவிட்ட, வெளியூர்வாசியான ஷேக் அப்துல்லா மகன் அஹமது கபீர் என்பவருடைய மய்யம் அடக்கம் செய்வது தொடர்பான ஜமாஅத் (ஊர்) நிர்வாக சபை முதலில் இரண்டுமுறை கூடியது. முதல் இரு முறை நடந்த பேச்சு வார்த்தையிலும் எந்த முடியும் ஏற்படாமல் கூட்டம் கலைக்கப் பட்டதால் மூன்றாவது சுற்றுக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. ஜமா அத் தலைவரும் செயலாளரும் முரண்பாடான கருத்துக்களுடையவர் களாகியிருந்ததின் நிமித்தம், உறுப்பினர்களில் பலர் இரு அணிகளாக நின்று காரசாரமாக விவாதித்தனர். காலையில் நடந்த முதல் கூட்டத்தில்

முக்கலங்குத்தி மாயக்கா

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒரு ஊர்ல – ஒரு வெறகு வெட்டி இருந்தா. தெனமும், மூணு மூட நெல்லுக்கு, வெறகு வெட்டி, வித்துப் பொளச்சுக்கிட்டிருந்தா. அவ பொண்டாட்டி, அந்த மூணு மூட நெல்லயுங்குத்தி, கஞ்சி வெள்ளம் வச்சு, புருசெ, வெறகு வெட்டுற எடத்துக்கு, கொண்டுகிட்டு போவாளாம். மூணு மூட நெல்லயும் குத்துறதுனால; அவள, அந்த ஊர்ல, எல்லாரும் முக்கலங்குத்தி மாயக்காண்டு கூப்டுவாங்களாம். இப்டி – வெறகு வெட்டுறவ,

பூ

“ராசாத்தி மகள் மூலையில் உட்கார்ந்து விட்டாள்.” முந்தா நாளிலிருந்து ஊரில் இதே பேச்சுதான். ஊர்ப் பெண்கள் மூக்கில் விரலை வைத்தனர். வாயைப் பிளந்தனர். ஆச்சரியத்தில் மாய்ந்து போனார்கள். “நிஜந்தானா” “நிஜந்தானா” என்று ஒவ்வொரு பெண்ணும் திணறித் தவித்தார்கள். பூங்கோதைக்கும் ஆச்சரியம்தான். அத்துடன் கொஞ்சம் அதிர்ச்சியும்கூட. மனசுக்குள் மெல்லிய நெருடல். ஆழத்திற்குள் ஜில்லிட்டுப் பாய்கிற பயம். “அப்பவும் இப்படியா. அப்பவும் இப்படியா” என்று வாய்க்கும், கைக்குமாய் புலம்பிக்கொண்டிருந்தாள். புருஷனுக்கும், பிள்ளைகளுக்கும் எல்லாவற்றையும் கவனித்து, சமாளித்து முடித்துவிட்டு, கூலி வேலைக்குக்

அண்ணன் வாங்கிய வீடு

ஸ்பானரை வைத்து முடுக்கினான். நட்டு அசையவில்லை. கார் நான்கு பக்கத்திலும் டயரின் பக்கத்தில் முட்டுக் கொடுத்து ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. வேலு ஒரு அட்டையைப் பரப்பிக் கீழே படுத்திருந்தான். நட்டுத் துருப்பிடித்துக் கிடந்தது. ஆண்டுக் கணக்கில் கிரீசைக் காணாத நட்டு. காரை சர்வீஸ் பண்ணி எத்தனை வருஷமோ தெரியவில்லை. அப்படிக் கார்கள்தான் இந்தப் பட்டறைக்கு வருகின்றன. ஓலைக்குடிசையின் கீழ் ‘ஓ’வென்று கிடக்கும் ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள பட்டறைக்கு வேறு என்ன மாதிரி கார்கள் வரும்? “சுலைமான், அந்த

முகம்

(2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) குளியலறைக் கண்ணாடியில் முகத்தைப் பார்த்தான் நித்தியானந்தன் என்ற நித்தி. அவனுடைய முகம்தான் கண்ணாடியில் தெரிந்தது. அது அவன் முகம்தானா? தெரிவதைக் காட்டுவது தானே கண்ணாடி. அது அவன் முகமே தான்… உள்ளத்தைதான் கண்ணாடி காட்டும்; காட்டுகிறது. இந்த உலகில் உள்ளதை உள்ளபடியே காட்டுவது இந்தக் கண்ணாடி மட்டும்தான்… வேறு யார் இப்படி இருக்கின்றார்கள்? எங்கு பார்த்தாலும் பொய் புகழ்ச்சி…. முகத்துக்கு முன்னே ஒரு

 

ஜக்கு

(1952ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1. பட்டணம் போகிறான் “டேய், அதோ வராண்டா ஜக்கு!” என்று மணி கூச்சல் போட்டான். “ஆமாண்டா, ஜக்கு தாண்டா!” என்றான் சீதா ராமன். உடனே அங்கிருந்த ஐந்தாறு பையன்களும், ‘ஹோஹ்ஹோ!’ என்று கைதட்டிச் சிரித்தார்கள். ஜக்கு தேரடித் தெருவைத் தாண்டி இந்த முடுக்குத் தெருவுக்கு வராமலே போய்விடத்தான் நினைத்தான், அங்கே தெருவில் ரோடுக்குக் கப்பி போட்டுக்கொண்டிருந்தார்கள். பெரிய ரோலர் எஞ்சின் ஒன்று குறுக்கும்

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று சுதாராஜ் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

அடர்த்தியாக இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக நட்சத்திரம் தாங்கும் சில இரவு வானம்போலப் பள்ளி நாள்களில் கவிதை எழுதத்துவங்கி பின்னர் கல்லூரி நாட்களில் சிறுகதை எழுதிப் பார்த்தேன். 1994ம் ஆண்டில் ஒருநாள் நானெழுதி அனுப்பிய அட்டைப்படக் கமெண்டை ‘பாக்யா’ வார இதழ் அங்கீகரித்து வெளியிட்டிருந்தது. அந்த ‘பாக்யா’ வார இதழ் எனது எழுத்தார்வத்தின் ஆரம்பம். பின்னர் பொருளாதாரத் தேடலின் புயல்காற்றில் அலைக்கழிந்து கவிதை கதைகளை முழுவதுமாக மறந்துவிடாமல் நட்சத்திர அடர்த்தியற்ற இரவு வானமாகவே கிட்டத்தட்ட 2014ம் ஆண்டுவரை கடந்துசெல்ல, 2015 முதல் அமெரிக்கா எனக்கு படிப்பதற்கும் எழுதுவதற்குமான நேரம் வழங்கத் துவங்கியிருக்கிறது. அனுபவங்களும் அங்கீகாரங்களும் எனது இரவு வானத்தில் நட்சத்திரங்களின் அடர்த்தியை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook Instagram
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2022]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.