சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்
google-play-storeiOS-App-Store

view this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2022/03/23/

ஜராசந்தன் வதம்

 மகத நாட்டு அரசன் பிரகத்ரதன். காசிராஜனுடைய இரட்டைப் பெண்களை விவாகம் செய்து கொண்டான். இரு மனைவியர் மீதும் அளவில்லா அன்புடையவனாக இருந்தான். மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த அரசன் பிரகத்ரதனுக்கு சந்தானப் பிராப்தி இருக்கவில்லை. அதனால் மிகுந்த மன வருத்தம் உடையவனாக இருந்தான். ஒருமுறை வனத்தில் வசிக்கும் கௌசிகர் முனிவரை சந்தித்தான். தனக்கு புத்திரப் பேறு வேண்டும் என்று விண்ணப்பிக்கிறான். மாமரத்தினடியில் உட்கார்ந்திருந்த அவர் மடியில் ஒரு மாங்கனி வந்து விழுந்தது. கௌசிகர் முனிவர் அந்த கனியினை

 

தொடர்ந்து தோற்கும் புலிக் கடவுள்

 அந்த அறையின் சுவர் முழுவதும் அடர் எண்ணையின் பிசுபிசுப்பு. கிழக்கு மூலையில் ஒரு குருட்டுச் சிலந்தியின் வலை முடியும் தருவாயில் இருந்தது. ஓரே சுற்றுடன் அதன் வீடும் இன்றோடு பூர்த்தியாகிவிடும். மூடிய கதவில் தொங்கும் மணிகள் காற்றை எதிர்பார்த்து ஒலி எழுப்பக் காத்திருந்து. பாதி எரிந்து அணைந்த அகல் விளக்குகளின் கருகிய திரியில் இருந்து புகை அந்த அறை முழுவது பரவ என் தோளில் சாற்றிய பூக்களின் மணமும் உடன் சேர்ந்து கொண்டது. இன்று ஏனோ காலையிலிருந்து

 

முடிவை மாற்று…

 ‘இருளைக் கிழித்துக்கொண்டு திடீரெனத் தோன்றிய வெளிச்சம் வியப்பை ஏற்படுத்தியது..’, இருந்தாலும் கண்டுகொள்ளாமல் எழுதிக் கொண்டே இருந்தான் அந்திவண்ணன். “மானிடா.. என்ன எழுதிக்கொண்டு இருக்கிறாய்…?” “வேறென்ன.. கதை தான்..” “இப்படி இரவு நேரத்தில் எழுதுகிறாயே.. உனக்கெல்லாம் பயமே இல்லையா?” “இப்படி இரவு நேரத்தில் கதை எழுதும் ஒருவனிடம் பேச்சுக் கொடுத்து தடங்கல் செய்கிறாயே.. உனக்கு வெட்கமே இல்லையா?” “ம்… வெட்கம்.. நான் யார் என்று என்னைப் பார்.. அப்புறம் பேசு..” “கதை முடியும் கட்டத்தில் இருக்கும் போது.. இது

 

என் அம்மாவின் கொழும்பு பயணம்

 என் அம்மா சிவகாமி யாழ்ப்பாணத்தில் இருந்து ரயில் ஏறி கொழும்புக்கு போறாளாம். இது தான் அவலளின் முதல் கொழும்பு பயணம். இந்த பயணம் பற்றி ஊரில்பலருக்கு அவள் பல தடவைகள் சொல்லிப் போட்டாள் பக்கத்து வீட்டு பாக்கியத்தைத் தவிர. “ஏன் அம்மா உன் சினேகிதி பாக்கியத்துக்கு எதுக்காக நீ கொழும்புக்கு போவதை சொல்லவில்லை?”. நான் அம்மாவைக் கேட்டேன். “எடேய் செல்வன் உனக்குத் தெரியாது அவளைப் பற்றி.அவவின்டை மூத்த மகள் குடும்பம் கொழும்பிலை இருக்கினம். அது பெரிய குடும்பம்.

 

காலத்தின் முடிவு

 ஓரளவுக்கு வசதியான மருத்துமனை அது, அந்த ஊரில் பிரபலமானது புற்று நோய் சிகிச்சைக்கு மிகுந்த பெய்யர் பெற்றது. டாகடர் “டேவிட்” போர்டு போட்டிருந்த அறை வாசலில் டாக்டரை பார்க்க ஒரு முகமதிய தம்பதியர் உட்கார்ந்து இருந்தனர். உள்ளிருந்து ஒரு தம்பதியர் அழுது கொண்டே வெளியில் செல்ல. நர்ஸ் இவர்களை உள்ளே அழைக்க, நுழையும் போதே இந்த தம்பதியர் இருவரின் கண்களிலும் கண்ணீர். எழுந்து வந்த டாக்டர் ப்ளீஸ் மனசை தளற விடாதீங்க. நம்மால முடிஞ்சதை செய்யலாம். எங்க

மூன்றாவது மாலை…!!!

 “அம்மா.. மணி பன்னிரெண்டு ஆயிடுச்சும்மா… அப்புறம் உங்க இடத்தில வேற யாராச்சும் வந்து உக்காந்திடுவாங்க… கெளம்புங்கம்மா….! “அஞ்சல… ஒரு நிமிஷம்.. பாத்ரூமுக்கு போயிட்டு போகலாமே…!” “இப்பத்தானேம்மா கூட்டிட்டு போனேன்..சரி.வாங்க..! அஞ்சலைக்குத்தான் தெரியும்..இந்து பிடித்தால் பிடித்ததுதான்… அஞ்சலை மெதுவாக அவள் கையைப் பிடித்துக் கொண்டு வெளியில் வந்து அறைக்கதவை பூட்டி சாவியை இடுப்பில் சொருகிக் கொண்டு கிளம்பினாள்.. *** இந்துமதியைப் பார்க்கப் பார்க்க அவளுக்கு பரிதாபமாக இருக்கும்.. எவ்வளவு பணம் இருந்தென்ன , வசதி இருந்தென்ன… கண் தெரியாத

கமலினி

 ‘தோரணம் நாட்டி துளாய்மாலை தொங்கவிட்ட பூரணகும்பம் பொலிவாக முன்வைத்து-’ அந்த திருமணக் காட்சி,கமலினியின் மனக்கண்ணில்,என்றோ நடந்த தனது திருமணம் நடந்த காட்சியாகப் பளிச்சென்று வந்;தபோது, இன்று திருமண கோலத்துடன் அவளது தங்கையின் மகள் கீதாஞ்சலி கமலியின் கால்களைக் கண்ணீரால் நனைப்பது அவளின் இதயத்தில் பனி கொட்டுவது போலிருந்தது. ‘ஆசிர்வாதம் என் கண்மணியே,பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்வாய் அம்மா’ கமலினி கீதாஞ்சலியை தன்னுடன் ஆர அணைத்து மனமார வாழ்த்தினாள். கீதாஞ்சலி தனது பெரியம்மா கமலினியின்; மனம் கனிந்த ஆசிர்வாத்துடன்

புதிய ஒளி

 “அதிர்ஷ்டம் அடிச்சாலும் இப்படி அடிக்கனும்…!” “அல்பாயுசு அண்ணன்காரனுக்குத் தம்பியாய்ப் பொறக்கனும்….!” “அதுவும் அண்ணன்காரன் பணக்காரனா இருக்கனும்…!” “அனுபவிக்கனும்ன்னே ஒருத்தனைப் பணக்காரனாகவும், இன்னொருத்தனை ஏழையாவும் ஆக்கி இருக்கான் ஆண்டவன்!” இதெல்லாம் வந்து சென்றவர்கள் பேசிய பேச்சுக்கள்.!,. இலை மறைவு காய் மறைவாகக் காதில் வந்து விழுந்த சொற்கள்.! – சுழற்றி நினைக்க நினைக்க மனசு வலித்தது தினகரனுக்கு. கனத்த மனத்துடன் அந்த பங்களாவின் கூடத்திற்குச் சென்று சோபாவில் அமர்ந்து சுவரில் மாலையிட்டுத் தொங்கும் தன் அண்ணன், அண்ணி படங்களை

ஒரு ரூபாய் நோட்டு

பதில் சொல்லத் தெரியாமல் சிவாவுக்கு வாய் அடைத்துப்போய் கொஞ்ச நேரம் உட்கார்ந்தான். பிறகு தன்அறைக்குப் போய் பத்திரமாய் வைத்திருந்த சின்னப் பெட்டி ஒன்றை எடுத்து வந்தான். அதை எடுத்தபோதுஅவனுக்குக் கைகள் சற்று நடுங்கின மாதிரி தோன்றியது. அது பெட்டியைத் தொடும் போதெல்லாம் ஏற்படும்அநுபவம்தான். சிவா பெட்டியைத் திறந்தான். அதில் – ஒரு ரூபாய் நோட்டு! சிவாவைப் பொறுத்தவரை அந்த ஒரு ரூபாய் நோட்டு அவன் வாழ்க்கையில் விலை மதிப்பேயில்லாத மிகப்பெரிய பொக்கிஷம்தான்! அதைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு

 

உண்மைக்கதை

புரட்சிக்காரர்கள் ரயில் தண்டவாளங்களைப் பிடுங்கி விடுவார்கள் என்ற பயத்தாலோ என்னவோ அன்று எக்ஸ்பிரஸில் கூட்டமே இல்லை. என் நண்பனும் நானும் ஏறிய வண்டியில் இருவர்தான் இருந்தார்கள். வயது சென்ற ஒருவர் பலகையில் ஒரு ஓரமாக ஜன்னலில் சாய்ந்து கொண்டு உட்கார்ந்திருந்தார். சுமார் இருபது வயதுள்ள பெண் பலகையின் பாக்கி இடத்தில் படுக்கயை விரித்துக்கொண்டு படுத்திருந்தாள். வண்டி புறப்படும் வரையில் அவர் ஒன்றுமே பேசவில்லை . நாங்களும் ரயிலுக்கு வந்த நண்பர்களுடன் பேசுவதில் ஈடுபட்டிருந்தோம். வண்டி நகர்ந்ததும், நாங்கள்

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று சுதாராஜ் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

மனித உணர்வுகளின் மறை பக்கங்களை ஆர்ப்பாட்டமில்லாத தன் எழுத்தினூடாக படம் பிடித்துக் காட்டுகிற படைப்பாளி சுதாராஜ். வாழ்வும் எழுத்தும் சம கோட்டில்தான் பயணப்படவேண்டுமென்பதில் அவதானமாக இருப்பவர். எழுத்து எதையெல்லாம் செய்யுமென்பதற்கு இவர் கொண்டிருக்கிற கருத்துகள் யதார்த்தமானவையும், தரம் வாய்ந்த பேனாக்காரனுக்கு இருக்கவேண்டிய உள முத்திரையுமாகும்.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook Instagram
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2022]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.