சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்
google-play-storeiOS-App-Store

view this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2022/03/17/

வாஷிங்டனில் திருமணம்

(1999ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 9 | அத்தியாயம் 10 காலையிலிருந்தே கல்யாண வீடு பரபரப்பாயிருந்தது. சாஸ்திரிகள் அனைவரும் ஸ்நானத்தை முடித்துவிட்டு கோஷ்டியாக உட்கார்ந்து இட்லி காப்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். பெண்கள் அலங்காரத்தில் ஈடுபட்டிருந்தனர். பொழுது புலர்ந்த பிறகும் அணைக்கப்படாமல், ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காஸ் லைட்டுகள் ‘உஸ்ஸ்’ என்று சத்தமிட்டுக் கொண்டிருந்தன. “காட்டன் ஸாரை எங்கே காணோம்?” என்று கேட்டார் அம்மாஞ்சி. “ஹாலிவுட்டிலிருந்து சினிமா ஸ்டார்ஸெல்லாம்

 

குமார சம்பவம்

பாகம் மூன்று | பாகம் நான்கு ஈஷ்வரனுக்கு பார்வதியுடன் விவாகம் நடைபெற வேண்டும். அதனால் அவரது சார்பாக இமவானிடம் பெண் கேட்பதற்கு சப்தரிஷிகளும் செல்கின்றனர். ரிஷிகளை எதிர் கொண்டு வரவேற்க ராஜதானிகள் விரைந்து வருகின்றனர். இமவானும் சப்தரிஷிகளை வரவேற்று கௌரவப்படுத்துகிறான். ரிஷிகளும் பர்வதராஜனிடம் சிவனது அபிலாக்ஷைகளை எடுத்துக் கூறுகின்றனர். பர்வதராஜனும் மிகுந்த ஆனந்தத்துடன் விவாகத்திற்கு ஒப்புதல் அளிக்கிறான். தனது பரிபூரண சம்மதத்தை தெரியப் படுத்துகிறான். உலகம் உய்யும் பொருட்டு சிவனுக்கும் பார்வதிக்கும் விவாக வைபவங்கள் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

 

சேயோன்

கொற்றவையின் ஒரு கையில் கூர்மையான கல்லாயுதம். அவள் தோளில் அப்பொழுதுதான் வேட்டையாடிய மான் தொங்கிக் கொண்டிருந்தது. அதன் கழுத்துப் பாகத்திலிருஇருந்து இரத்தம் சொட்டி அவள் அணிந்திருந்த தோலாடை வழியே சிற்ரருவி யாக ஓடிக்கொண்டிருந்தது. அவளது மறுகையை அவளது பேரன்புக்குரிய சிறுவன் சேயோன் பற்றிக்கொண்டுவருகிறான். கொற்றவை முது தாய் . ஆனாலும் அவளிடம் இன்னும் இளமையும் உடல் வலிமையும் குறையவில்லை என்பதை பார்ப்பவர் எவரும் ஏற்றுக்கொள்வர்.அவள் தலைமைக்குக் கீழ் தாயரும் அவர்களின் கணவரும் அவர் பிள்ளைகளுமாய் சிறு கூட்டம்

 

அப்பாவும் சிவாஜிகணேசனும்

அப்பா இந்த ஜவ்வாது மலைக்கு வேலைக்கு வந்தபோது ஆலங்காயத்திலிருந்து இங்கு ஒருநாளைக்கு ஒரு பஸ் மட்டும் தான் வரும். அப்பவெல்லாம் அரசாங்க பேருந்துகள் இல்லை. மத்தியானம் ரெண்டு மணிக்கு வரும் அரசாங்க பெர்மிட் பெற்ற தொழிலாளர் கம்பெனி பஸ்ஸில் தான் அங்கிருக்கும் வனத்துறை அதிகாரிகளுக்கு ஹிந்து பேப்பரே வரும். அதுவும் பல நாட்கள் கழுதை கட்டி மேடு வரை வந்து திரும்பிவிடும்.அங்க இருந்து ஐந்து மைல் மலைப்பாதையில் மேடுகளில் நடந்து அல்லது வாச்சர் கார்டுகளின் உதவியோடு சைக்கிளில்

 

அறிவு

‘அறிவு, என்ன செய்துகொண்டிருக்கிறாய்?’ ‘ஏன் என்ன பிரச்சினை?’ ‘அப்ப உனக்கு போன்’ எடுக்கக்கூடாதோ?’ ‘தேவையில்லை என்று சொல்லி அடித்து ‘போன்’ றிசீவரை வைக்கவேணும்போல் இருந்தது சாந்தினிக்கு. நெஞ்சுக்குள்ள இனம் தெரியாத கவலை, யோசனை, எல்லாம் தான் சாந்தினிக்கு. என்ன ஒவ்வொருநாளும் போன் செய்து நடக்கிற செய்திகள் எல்லாம் சொல்ல வேண்டும். அதுதான் அவளுக்குக் கோபம் ஏறியிட்டுது போல இருக்கு. ‘யாருக்கு போன்’ எடுத்தனீங்க?’ சாந்தினி கேட்டாள். ‘அறிவு’ என்ர ஒரு நண்பிக்குத்தான்’ சிவா சிரித்தான். ‘இந்தப் பாட்டுக்

இதுவேறுலகம்…தனிஉலகம்…

“சார்..உன்னோட பெரிய ரோதனயாப் போச்சு… நானும் மூணு நாளா பொறுத்து பொறுத்து பாத்துட்டேன்… ‘பாலு தண்ணியா இருக்கு….’ ‘அர லிட்டர் இருக்காது போலியே…’ ‘பாலு என்னவோ வாடை வீசுதே..காம்பெல்லாம் நல்லாத்தானே கழுவுற…இல்லாட்டி டி.பி.வந்துடும்ப்பா…’ ‘என்னப்பா லேட்டு….?’ ஏன் சார்..பத்து வருசமா எங்கிட்டத்தானே பால் வாங்குறீங்க..? காலைல எந்திருச்சு குளிச்சு தெளிச்சு மகாலச்சுமியாட்டம் மகராசி பால் வாங்கிட்டு ஒரு வார்த்த பேசாம போய்க்கிட்டே இருக்குமே .. நீ வீட்ல இருந்தாலும் இருந்த .. ‘நொய்..நொய்’னு… சார் போயி அம்மாவ

கிழவியின் நிழல்

(1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வெயில்; படை பதைக்கும் வெயில். அந்த வெயிலில் கொத்தர்களும், கல் தச்சர்களும் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு வேலை யிலே கண். வெயிலின் வெம்மையை அவர்கள் அவ்வளவாக உணரவில்லை. ஆயிரக்கணக்கான கூலி யாட்கள் அங்கே வேலை செய்து கொண்டிருந்தனர். நூற்றுக்கணக்கான சிற்பியர் தங்கள் கலைத்திறனைக் காட்டினர். சிவபாதசேகரன், சோழ சக்கரவர்த்தி, இராஜராஜ சோழன் நெடுநாட்களாக எண்ணி எண்ணிச் சங்கற்பம் செய்து கொண்ட காரியம்

நினைவில் நின்றவள்

“ஜானு..! ” ரவி உற்சாகமாக குரல் கொடுத்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான். “என்னங்க..?….” கூடத்து சோபாவில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த ஜானகி புத்தகத்தை மூடி வைத்து விட்டு கணவனைப் பார்த்தாள். “இப்போ… உனக்கு நான் ஒரு சேதி சொல்லப் போறேன். !…” சொல்லி அவள் அருகில் நெருக்கமாக அமர்ந்தான் “என்ன சேதி..? “ஏறிட்டாள்.. “ஒரு மாதிரியான சேதி..? “கண்ணடித்தான். “ச்சீய்…! “ஜானகி செல்லமாய் முணகி முகம் சிவந்தாள். “ஏ… அந்த மாதிரி சேதி..? இல்லே. இது வேற….”

ஏழாம் பக்கம்

இன்டர்நெட் யுகத்திலும் தினசரி செய்தித்தாள் படிப்பவர்களில் ஒருவரான கோபாலன் – தலையங்கத்தில் கவனம் செலுத்த முடியாத அளவுக்கு உள்ளே அவர் மனைவி சாருவுக்கும் மகள் ரேவதிக்கும் காரசாரமாக பட்டிமன்றம் நடந்து கொண்டிருந்தது. அவர் எப்போதும்போல் கண்டு கொள்ளாமல் இருந்தார். ‘அம்மாவுக்கும் பொண்ணுக்கும் வேறே வேலையே இல்லை…’ என்று அவர் முணுமுணுத்தபோது “நீங்களே சொல்லுங்கோ” என்றவாறு சாரு கூடத்துக்கு வந்தாள். “என்ன சொல்லணும்?” என்று அவர் தலையைத் தூக்கியபோது ‘பை ஃபோகல்’ கண்ணாடி மூக்கு மேட்டில்சிறிது சரிந்தது. “அதான்…முகுந்தன்

 

பாட்டியின் தீபாவளி

‘குத்து விளக்கேற்றி கோலமிட்டு பாரேனோ.’ சங்கரிப் பாட்டியின் வீடு வெறிச்சோடிக் கிடந்தது. பாட்டியின் வாழ்க்கை திடீரென்று இந்திரப் பதவியை இழந்த நஹுஷகன் நிலைமை மாதிரி. அவள் வாழ்க்கை சுகமான கவலையற்ற முடிவை எதிர்நோக்கித் தன் பிள்ளை, மாட்டுப்பெண், குழந்தை மீனு இவர்கள் இடையில் கழிந்து வந்தது. திடீரென்று சென்ற ஐப்பசியில், அந்தக் கண்ணற்ற விதி எல்லோரையும் ஒரேயடியாகக் கொண்டு போய்விட்டது. காலராவிற்குத் தராதரம் தெரிகிறதா? அந்தக் குழந்தை, குழந்தை மீனு, அவள் என்ன பாபம் செய்தாள். கிழக்கட்டையைத்

Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook Instagram
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2022]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.