சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்
google-play-storeiOS-App-Store

view this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2022/03/14/

மேனரிஸம்

 ஊதல், உறிஞ்சுதல், உமிழ்தல் என்று மூன்று வகையாகக் கெட்டப் பழக்கங்களை நமது முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள். ஊதல் – அதாவது புகைப் பிடித்தல். இழுக்கயிழுக்க இன்பம் இறுதிவரை பாலிஸியில் சிகரெட்டின் ஃபில்டர் பகுதி வரும் வரை இழுத்து…. இதற்கு மேலும் இழுத்தால் புகைக்குப் பதிலாக வெறும் விசில் சத்தம்தான் வரும் என்ற நிலைவரும் அளவுக்கு அலுப்பில்லாமல் கர்ம சிரத்தையாக சிகரெட் பிடிப்பவர்களைப் பார்த்திருக்கலாம். வேலை மும்முரத்திலோ அல்லது மனம் ஒடிந்துபோன சோகக் கட்டங்களிலோ (கெட்டப் பழக்கம் உள்ளவர்களுக்கு இது

 

பத்மாவதி கதை

 (1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவளைப்போன்ற அழகான ஒருத்தி இந்த உலகத்திலேயே இருக் கமுடியாது என்றே எனக்குத் தோன்றிற்று அப்படி ஒரு அழகு. பத்மா வீட்டுக்கு வந்து போகும் போதெல்லாம் நான் அவளைச் சுற்றிச் சுற்றித்திரிந்தேன் அவள் முகத்தை இமைவெட்டாமல் பார்த்தபடியே இருந்திருக்கிறேன் பத்மா இவ்வளவு அழகிதான் ஆனாலும் வறுமையும் அவளது குடும்பச்சொத்தாகி இருந்தது. படிப்பு வாசனை அவளால் அறிய முடியவில்லை. எங்கள் வீட்டில் எல்லோரும் அவளை பத்மா

 

வெரோனா நகரின் இரு செல்வர்கள்

(1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கதை உறுப்பினர் ஆடவர் 1. புரோத்தியஸ் : வெரோணாநகர் இளைஞன் – ஜூலியாவின் காதலன். 2. வலந்தைன் : புரோத்தியஸ் நண்பன் – வில்வியாவின் காதலன். மாற்றுருவில் கள்வர் தலைவன். 3. மிலன் நகரத் தலைவன் : வில்வியாவின் தந்தை. 4. தூரியோ : மிலன் தலைவனால் வில்வியாவுக்குக் கணவனாகத் தேரப்பட்டவன். 5. எக்ளாமர் : வில்வியாவின் நம்பகமான பணியாள் – காட்டிற்கு

 

எவளுக்கும் தாயாக…

நக நுனி சாடை, பிறை நிலா, ஒரு வெண் கீறு பாவி, மேக வெளி நாடி மின்வரி போட, செக்கல் கருகி இருள் அடர்ந்து கவிகிறது. பூமி முற்றாக மயான கோலம். அதிர் வேட்டுக்கள் வானமடங்க வெடித்து, நிலமதிரச் சிதறி, அவன் மனக்கண்ணுள் மின்னித் தெரிகின்றன. கைம்பெண் போல் தன்னை அவள் காட்டிக் கொள்வதில்லை. புருஷன் சம்பளம் பென்சனாக வருகிறது. ஒரே ஆண்பிள்ளை. இரண்டு இளங் குமர்கள். பிள்ளைகள் மூவரும் சதா படிப்பில் மூழ்கியபடி. பிள்ளைகளுக்கான படிப்புச்

 

கடன் கேட்போர் நெஞ்சம்

அந்த தெருவின் வீட்டில் இருந்த நாய் என்னைப்பார்த்து நின்றது ! இப்பொழுது என்னை விரோதியாய் பார்த்துக்கொண்டுள்ளதா? இல்லை நட்பாய் பார்க்கிறதா? என்னால் அறிய முடியவில்லை. இப்பொழுது நான் அந்த நாயை தாண்டி போக வேண்டும். அது என் மீது பாயுமா? அல்லது நட்புடன் பழக வருமா? என்பது என் மனதில் வந்த கேள்வி. முக்கியமான விஷயம் என்னவென்றால் அதன் எண்ணம் என்ன? என்று தெரியாமல் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. என் கால் அவ்வளவு

பச்சை நிறப் பூனை

நசீறாவின் முகத்தில் படர்ந்திருந்த ஒளி மங்கத் தொடங்கி இருளடைந்திருந்தது. இருளின் நிறம் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. உள் ஒடுங்கி பின்னப்பட்ட வலையொன்று வீசப்பட்டது போல் பகலையும் இரவையும் பிரித்துக் காட்டும் நிழல் படிமங்கள் மர்மமான முறையில் இறைந்துகிடந்தன. இப்போதெல்லாம் வீட்டு வாசலை விட்டு வெளியே வருவதில்லை . வாசல்படிகளில் அறிமுகமான முகங்களும் உதடுகள் தெறித்துப் போடும் வார்த்தைகளும் நசுங்கிப் போயின. ரெண்டு மூன்று நாட்களாக நெருங்கிய உறவினர்கள் நிறைய துக்கங்களைச் சுமந்து இங்கு வந்து இறக்கிவைத்து விட்டுப்

வாய்மையின் இடத்தில்…

தொலைபேசி கொஞ்சநேரமாக அலறிக்கொண்டிருந்தது. சாதாரணமாகக் கிணுகிணுக்கும் தொலைபேசி கூட இப்போதெல்லாம் அலறுவது போலத்தான் இந்த வீட்டில் கேட்கிறது. கொஞ்ச நாட்களாக யாராவது துக்கம் விசாரித்துக் கொண்டே இருக்கிறார்கள். புரொபஸர் சிவராமன் மெல்ல எழுந்து வேண்டாவெறுப்பாகத் தொலைபேசியை எடுத்தார். யாராய் இருக்கும்? என்ன செய்தியாய் இருக்கும்? இப்படித்தான் அன்றும் தொலைபேசி அலறியது. அவரது மகன் சாலைவிபத்தில் இறந்து போன செய்தி தொலைபேசியில் இடியாய் வந்து விழுந்தது. அன்று அந்த அதிர்ச்சி தரும் செய்தியைக் கேட்டு உடைந்துபோனவர் அந்தத் துயரத்தில்

குமார சம்பவம்

பாகம் இரண்டு | பாகம் மூன்று எப்போது ஈஷ்வரன் மன்மதனை எரிதது பஸ்மம் ஆக்கினாரோ அப்போதில் இருந்து பார்வதி மிகுந்த மனகிலேசம் உடையவளானாள். அவள் தன்னைத் தானே பழித்துக் கொண்டாள். ஈஷ்வரனை இன்னும் சிரத்தையாக ஆராதனை செய்ய வேண்டும் என்று சங்கல்பித்துக் கொண்டாள். வனத்திற்கு சென்று கடும் தவம் இயற்ற நிச்சயித்தாள். இதனைக் கேள்வியுற்ற தாய் மேனாதேவி மனம் கலங்கினாள். “மகளே! கடுமையான தவம் நீ ஏன் மேற்கொள்ள வேண்டும்? உனது கோமள தேகத்திற்கு எளிது அன்று.

அப்பா ஒரு புதிர்

 “வாங்க அண்ணா, வாங்க.” ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவிலிருந்து வந்திருக்கும் எனக்கு வரவேற்பு பலமாகவே இருந்ததில் வியப்பில்லை. வரவேற்றது என் இரண்டாம் தங்கை சங்கரிதான், விமான நிலையத்துக்குத் தன் இரண்டு குழந்தைகளுடன் வந்திருந்தாள். “சௌக்யமா சங்கரி ஜகன் எப்படி இருக்கார்?” என்று அவருடைய கணவனைப் பற்றிக் கேட்டேன். “எல்லாம் உங்க புண்ணியம்தாவே, அண்ணா … எல்லோரும் சௌக்யம்தான். அவருக்கு ஆபீசில் முக்கியமான வேலை. ஏர்போர்ட்டுக்கு வரமுடியலே” என்றாள். சங்கரியே காரை ஓட்டினாள். ஆறு வருசத்துக்கு முன் நான்

 

அம்மாவின் பாவாடை

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அம்மாவிடம் ஒரு பாவாடை இருந்தது. எப்பொழுது பார்த்தாலும் அம்மா அதற்கு நாடா போட்டபடியே இருப்பாள். அது சாதாரண நாடா அல்ல; அம்மா அசட்டையாக இருக்கும் சமயங்களில் பாவாடையின் மடிப்புக்குள் போய் ஒளிந்து கொள்ளும். அம்மா நாடாவை இன்னொரு முறை போடுவாள். இது அடிக்கடி நடக்கவே நாடாவில் நெடுகலும் இருக்கிறமாதிரி ஒரு மடிப்பு ஊசியை அம்மா குத்திவைத்துவிட்டாள். நாடா உள்ளே போவதும், அம்மா மடிப்பு

Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook Instagram
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2022]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.