சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்
google-play-storeiOS-App-Store

view this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2022/03/08/

தாமப்பல் கண்ணனார்

(1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தொண்டை நாட்டில் சிறந்த ஊர்கள் பல உண்டு. காஞ்சிபுரம் அவற்றுள் புகழ்வாய்ந் தது. பழையகாலத்தில், காஞ்சிபுரம் தலை நகரமாகவும் விளங்கியிருந்தது. காஞ்சியை அடுத்துப் பல ஊர்கள் விளங்கின. அவற்றுள், தாமல் (அல்லது) தாமப்பல் என்பதும் ஒன்று. அவ்வூரில் அறிவு மிக்க புலவர் ஒருவர் வாழ்ந்துவந்தார். அவருடைய இயற்பெயர் கண்ண னார். தாமப் பல் என்ற அவர் ஊருடன் அவர் பெயரையுங் கூட்டித் தாமப்பல்

 

பௌர்ணமி

றெக்கை முளைத்த மாதிரியிருந்தது சிந்தாமணிக்கு. சந்தோஷமென்றால் சந்தோஷம்… அம்புட்டுச் சந்தோஷம். உள் நரம்புகளுக்குள் ஓடிப் பரவுகிற பரவசம். உள்மனச் சிலிர்ப்பு. ஒவ்வொரு அணுவிலும் மனத்துள்ளல். சிரமப்பட்டு மறைத்தாலும் மீறிக்கொண்டு முகத்தில் மனசின் மலர்ச்சி. அதன் ஒளி. சிந்தாமணிக்கு வயது முப்பத்தைந்துக்கும் மேலே. மூன்று பிள்ளைகள். மூத்தவள் ராஜி. ஏழாங்கிளாஸ். சிந்தாமணிக்குள் சிறகடிப்பு. இப்பத்தான் கல்யாணம் ஆனவளைப் போல குதூகலத் துடிப்பு. மனசுக்குள் குமரிப் பருவக் கொந்தளிப்பு. கும்மாளம். எல்லாம்… புருஷனை நினைத்துத்தான். குமரேசனை நினைக்க நினைக்க ஒரே

 

சொல்லக்கூடாத வில்லங்கம்

உங்களுக்கு எப்பேண்டாலும் அடக்கேலாமல் ‘அது’ வந்திருக்கோ? வராமல் இருந்திராது. ஆனாலும் வெளியில சொல்லியிருக்க மாட்டியள் – கிரிசை கேட்டை. ஆனால் நான் சொல்லப்போறன். ஏனெண்டால் என்னால அடக் கேலாமல் கிடக்கு – ஆத்திரத்தை! வயசான ஆக்களாயிருந்தால் சில நேரம் ‘அது’ வாறதும் தெரியாது. போற தும் தெரியாது எண்டுவினம். இன்னும் அந்த Stage க்கு நான் வரேல்லை. ஆனாலும் எங்கிடடொக்டர் முருகானந்தம் போலவை புத்தகங்களில எழுதுற வைத்தியக் குறிப்புகளை மேஞ்சு போட்டு, அவயள் சொல்லுமாப் போல லேசான

 

என் ஜீவப்ரியே ஷ்யாமளா

சியாமளா அம்மாளின் பாட்டைக் கேட்ட நாளில் இருந்து அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை என் மனதில் துளிர்விட்டிருந்தது. கணீரென்ற அந்தக் குரல் என்னை எங்கோ இழுத்துச் சென்றது. ஈழமண்ணில் பிறந்து, ஜேர்மனிக்குப் பெற்றோர் புலம் பெயர்ந்ததால் ஜெர்மனியில் தான் நான் வளர்ந்தேன். படிப்பிலே கவனம் செலுத்தினாலும், ஓய்வு நேரங்களில் பாட்டுக் கேட்பது, அதைப்போலப் பாடிப்பார்ப்பது, சினிமா படங்கள் பார்ப்பது என்று என் வாழ்க்கை சந்தோஷமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. முன்புபோல் அல்லாமல், இப்போதெல்லாம் தொழில் நுட்பவளர்ச்சியால் எல்லாமே

 

நீர்க்குமிழி!

தரகர் தந்திருந்த ஃபோட்டோக்களில் இருந்த பெண்களில் பெரும்பாலானவர்களைப் பார்த்தாயிற்று. ஆனாலும், எந்தப் பெண்ணின் மீதும் மனசு ஒன்றாமல் மிகுந்த சலிப்பும், அதிருப்தியுமே உண்டாகியிருந்தது சின்ராசுக்கு. கோபத்தில் அள்ளிப் போட்டவையில் கையிலிருந்து நழுவி விழுந்த ஃபேன் காற்றினால், மெதுவாக அசைந்தபடியிருந்த அந்த ஃபோட்டோவை எடுத்து, வைத்த கண் மாறாமல் பார்வையில் மேய்ந்த அவர், சட்டென்று முகத்தைத் திருப்பி, தரகரிடம் கேட்டார். “யோவ்… பலராமா.. யாருய்யா இந்தப்புள்ள? ஏஞ் சின்ன மகன் மாடசாமிக்கு ரொம்ப பொருத்தமாயிருப்பா போலிருக்கே. ஜீன்ஸ் பேண்ட்

பேசும் மலர்

பாழடைந்த கட்டிடமொன்றின் சுவர்களோரம் வளர்ந்து நிற்கிற செடிகளினூடே பேசும் மலரொன்றைச் சந்தித்தேன். மற்ற செடிகளைவிட உயர்ந்து வளர்ந்திருந்த செடி ஒன்றின் காம்பின் நுனியில் சிறு குழந்தையின் மூடின கையளவில், மென் மஞ்சள் நிறத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தது அந்த மலர். முதலில் அதன் பொலிவால் கவரப்பட்டுத்தான் அதனருகில் சென்றேன். திடீரென்று அது பேச ஆரம்பித்ததும் அதிர்ச்சியில் பின்வாங்கி விட்டேன். மலரோ என் அதிர்ச்சியைக் கவனியாததைப் போல தன் உள்ளத்தில் இருந்ததையெல்லாம் இதழ்கள் குவித்துப் பேசிக்கொண்டேயிருந்தது. ஆரம்பத்தில் திட்டம் செய்து

குமார சம்பவம்

பாகம் ஒன்று | பாகம் இரண்டு தேவேந்திரன் மன்மதனை நினைவு கூர்ந்ததால் மன்மதன் உடனே இந்திரன் சமீபம் வந்தான். புஷ்பங்களினால் அமைக்கப்பெற்ற வில்லை கையில் கொண்டிருந்தான். அவன் பத்தினி ரதிதேவியும் அவனுடன் வந்திருந்தாள். மன்மதன் இந்திரனை வணங்கி கேட்கிறான்,”பிரபோ! என்னை எதற்காக தாங்கள் நினைத்தீர்கள் ? நான் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? எனக்கு கட்டளை இடுங்கள்” என்றான். மன்மதனைக் கண்ட இந்திரன் வெகு சந்தோஷம் அடைந்தான்.”உலக ஷேமத்திற்காக சிவ – பார்வதி விவாகம் நடை பெற

விசாரணை

திடீரென உறக்கம் கலைந்தது. விழிகளை மெல்ல மேலெடுத்துப் பார்த்தேன். முதலில் ஒன்றும் புரியவில்லை . ஒரே இருள். என்னைவிட்டு விலகிச் சென்ற காலடி ஓசைகள் காதில் விழுந்த ஞாபகம் வந்தது. சற்று நேரம் இருளுக்கு என்னைப் பழக்கப்படுத்திக் கொண்டேன். சுற்றியிருப்பவை மெல்ல மெல்லப் புலப்பட ஆரம்பித்தன. அப்படி ஒன்றும் ஏராளமான பொருட்கள் சுற்றியிருக்கவில்லை. ஒரே மண் கட்டி கட்டியாக… மிருதுவாக… மேலெல்லாம்… முகமெல்லாம்… உடம்பும் மண்ணில்தான் வெகுநேரம் கிடந்திருக்க வேண்டும். இடுப்புப் பக்கம் செவ்வகமாய் மரக்கட்டைகள்; அடிப்பகுதியில்

சாதாரணப் பெண்

உன்னை போல் நானும் ஒரு சாதாரணப் பொண்ணுதான். எல்லா விதத்துலேயும் சாதாரணந்தான். நம்மநாட்டுல சாதாரணப் பொண்ணுங்கதானே அதிகம்? உலக நாடுங்கள்ல பொண்ணுங்க தலைவிகளா வந்துநிறைய சாதிச்சிருந்தாகூட நாம இன்னும் சாதாரணம் தானே? நம்மை நாமே ஏமாத்திக்க வேணாம். எதையோசொல்லப் போக என்னத்தையோ சொல்றேன்… என் புத்தி எங்கேயோ திரியுது… நீ என்னை கேட்டியே…ஒரு சாதாரண பொண்ணுக்கு வாழ்க்கையிலே எப்போ ஓய்வு? என் வாழ்க்கையைஉதாரணமா சொல்றேன்… நீ புரிஞ்சுக்கவே. ஏன்னா நீயும் சாதாரணப் பொண்ணுதானே? எனக்கு சின்ன வயசு…

 

மாயமான்‌

அப்பாவு செட்டியார்‌ சைக்கிளில்‌ வந்து ‘ஜம்‌’ என்று இறங்கினார்‌ அவர்‌ வருகைக்காக காத்துக்‌ கொண்டிருந்த கிராமத்து இளைஞர்கள்‌ சைக்கிளின்‌ பக்கம்‌ நெருங்கி, ‘ஹேன்ட்பாரில்‌’ சொருகி இருந்த தினப்‌ பத்திரிகையை உரிமையோடு எடுத்து, உலக விஷயங்களில்‌ மூழ்க ஆரம்பித்தார்கள்‌. செட்டியார்‌, சைக்கிளை ‘ஸ்டாண்டு’ போட்டு நிறுத்திவிட்டு இந்தப்‌ பக்கம்‌ திரும்பினார்‌. அவருடைய தர்மபத்தினி உலகம்மாள்‌ தண்ணீரும்‌ செம்புமாய்‌ தயாராக நின்றுகொண்டிருந்தாள்‌. செம்பைக்‌ ையில்‌ வாங்கி முகம்‌ கைகால்‌ சுத்தி செய்தார்‌. இதற்குள்‌ அவருடைய மகன்‌ சிவக்கொழுந்து கடையில்‌ இருந்து

கதையாசிரியர்: முல்லை பி.எல்.முத்தையா  
சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்,
முதற் பதிப்பு: நவம்பர் 1997,
முல்லை பதிப்பகம், சென்னை.

http://www.sirukathaigal.com/2022/03/01/

1. மகிழ்ச்சியாக வாழ்ந்தவன்
2. மூடத்தனத்தால் ஏமாந்த வியாபாரி
3. சமயோசித புத்தியால் தப்பித்தாள்
4. இளவரசனின் தியாக உள்ளம்
5. தொழில் கற்று முன்னேறினான்
6. சுண்டெலிகளின் ஏமாற்றம்
7. ஏழைகளின் நெஞ்சக் குமுறல்
8. உணவுக்குப் பயன்படுகிறோம்
9. தாயை ஏமாற்ற நினைத்தான்
10. திருட்டில் ஒரு தந்திரம்
11. அதை நீயே எடுத்துச் செல்
12. அவர் எதற்காக இருந்தார்?
13. அண்ணனின் பணத் திமிர்
14. மோதிரம் அணிந்தவனின் பெருமை
15. உணவு தயாராகிறதா?
16. தன் பெயரைச் சொல்லாதவன்
17. தந்திரவாணன் செய்த தந்திரம்
18. பொருளின் அருமை தெரியாதவன்
19. ஒரு கடனை தீர்க்க மற்றொரு கடனா?
20. தண்ணீர் கரையிலேயே உள்ளது  
21. சுவையான உணவுக்கு ஏங்கிய ஆண்டிகள்
22. நிலம் யாருடையது
23. மோசம் செய்யக் கூடாது
24. மனம் இருந்தால் இடம் உண்டு
25. தந்தை செய்த தந்திரம்
26. உயிர் பிழைத்த சிறுவன்
27. வீட்டில் உள்ள பொருள் யாருக்கு?
28. நன்றி இல்லாதவன்
29. ஏமாந்த ஓநாய்
30. பொய் சொன்ன வியாபாரி
31. சிறுவனின் புத்திசாலித்தனம்
32. யானையை ஏமாற்றிய நரி
33. கிராமவாசியின் பெருந்தன்மை
34. ஆட்சியாளரின் பிரச்சார தந்திரம்
35. இரண்டுக்கு ஒன்று இலவசம்
36. எல்லோருக்குமே ‘பேப்பே’ தான்!
37. மாப்பிள்ளை வீட்டார் செய்வது என்ன?
38. முன்போலவே பழைய காகித விற்பனை
39. வெற்றி பெறுவது எப்படி?
40. கணவனை பயமுறுத்தும் மனைவி
41. மூடர்கள் உயிரை இழந்தனர்
42. திருமணம் செய்து கொள்வது ஏன்?
43. இந்த உருவமே போதும்
44. பேசுவதும் நடந்து கொள்வதும்
45. புரட்சிப் பெண்
46. மூன்று பேரையும் தேள் கொட்டியது
47. உழைப்பினாலா? கருணையினாலா?
48. நாட்டு மக்களை வாழ வைத்தவன்
49. திறமை மிக்க அமைச்சர்கள்
50. குற்றங்களைத் தடுக்க வழி

Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook Instagram
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2022]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.