சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்
google-play-storeiOS-App-Store

view this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2022/03/06/

இறைவனில்லா இடம் எது?

இறைவன் எல்லாம் வல்லவன், எங்கும் நிறைந்தவன், எல்லாம் அறிந்தவன் என்றே உலக அறிஞர்கள் எல்லாம் கூறுகின்றனர். அத்தகைய இறைவன், மக்கள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் உறைகின்றான் என்பதும், மக்கள் தொண்டு ஆற்றுவதே இறைவன் பணி ஆற்றுவதாகும். என்பதும் அனைவரும் ஒப்புக் கொள்ளக் கூடிய: தொன்றாகும். இதனை விளக்க உருசியப் பேரறிஞர் தால்ஸ்தாய் கூறியுள்ள கதையொன்றினைத் தழுவிப் பின்வரும் கதை கூறப்படுகிறது: பொன்னூரில் வாழ்ந்த சின்னப்பர் நெசவுத். தொழில் செய்து வாழ்க்கை நடத்தி வந்தார்; “நெய்யுந் தொழிலுக்கு நிகரில்லை” என்றபடி

 

அடையாளம்

போவதையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, அவன் சாலையின் மறுபுறம் சென்று மறைந்த பிறகு சுய நினைவு அடைந்தவராகப் பெருமூச்சு விட்டுக் கொண்டார் ஹாலீத் ராவுத்தர். ‘ம்! காலம்….., எப்படியெல்லாம் கெட்டுப்போயிருக்கிறது. எங்கள் காலத்தில் முகம் தெரியாத பெரியவங்ககிட்டே பேசவே தயங்குவோம். இரண்டு மூணு வயசு கூடுனவங்க முன்னாடியெல்லாம் புகைக்கவே மாட்டோம். பதினஞ்சு வயசிருக்குமா இவனுக்கு…! தன்னோட தாத்தாவுக்கு தெரிஞ்சும், எவ்வளவு தைரியமா எங்கிட்டேயே ஒரு பகுதி ரூபாய்க்கு பீடி வாங்கிட்டுப் போறான்? காசு அதிகமாக இல்லை போலும். இருந்திருந்தால்

 

சௌக்கிய மன்னன் பட்டப்பா!

 “என்ன சார் சௌக்கியமா?” – அவசர காரியமாகச் சென்று கொண்டிருக்கும் பொழுது எதேச்சையாக எதிரில் வரும் அறுவைகளிடமிருந்து தப்புவதற்காகவும், அதே சமயத்தில் நம்மோடு இயல்பாக ஊறிய இந்து – சமவெளி நாகரிகத்தை’ வெளிப்படுத்துவதற்காகவும் நாம் சகஜமாகக் கேட்கும் ஒரு சாதாரண கேள்வி இது. மனைவியின் தலைவலிக்கு (நமது தலை வலிக்கும் சில சமயங்களில் தலைவலி வருகிறதே!) தைலம் வாங்கச் செல்லும் நாம், அறியாமையில் அசிரத்தையாகக் கேட்கும் இந்தக் கேள்வி வேலியில் செல்லும் ஓணானை வேட்டியின் மீது அசட்டுத்தனமாக

 

கல்வி

சரண்யா கண் விழித்துப் பார்கிறாள்,அருகில் அமர்ந்திருந்தான் கார்த்திக்.வீட்டுக்குப் போவோம் என்றாள் அவள்,சரி போவோம் டாக்டர் வந்து பார்த்தப் பிறகு போகலாம் என்று அவளின் தலையை தடவினான் அவன்,இதையே எத்தனை தடவை தான் சொல்லுவீங்கள் என்று எரிச்சல் பட்டாள் சரண்யா,சரி போகலாம் இப்ப சாப்பிடுறீயா? என்று அவன் கேட்டான்,எனக்கு சாப்பாடு வேண்டாம்,நான் வீட்டுக்குப் போகவேண்டும் என்று அடம் பிடித்தாள் சரண்யா.சரி,சரி இன்னைக்கு மாலையில் போய்விடலாம்,இப்ப சாப்பிடு என்று அவன் சொன்னதும் உண்மையாகவா!என்று கேட்டாள் அவள்.ஆமா நீ அடம் பிடிக்காமல்

 

உன் வீடு

பெண் குழந்தை பிறந்திருக்கு சொன்ன செவிலியரை மகிழ்ச்சியுடன் பார்த்தான் பார்த்தீபன். இப்ப பாக்கலாமா? சிஸ்டர்? போய் பாருங்க..புன்னகையுடன் சொல்லிவிட்டு சென்றாள் ரோஜாப்பூ போல படுத்துக்கொண்டிருந்த குழந்தையை ஆசையுடன் பார்த்தான். அவன் அருகாமையை உணர்ந்த பானு பிள்ளை பெற்ற களைப்பில் உறக்கத்தில் இருந்தவள் மெல்ல கண் விழித்தாள்.கணவன் குழந்தையை ஆசையுடன் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து “க்கும்” கணைக்க.. சட்டென்று மனைவியை பார்த்து டயர்டா இருக்கா?..கனிவுடன் கேட்டான். மெல்ல தலையசைக்க மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள். பார்த்தீபன் அவள் தலைமேல் கை

ஆமியுடன் ஒரு அற்புத இரவுப் பொழுது…!

ஆமி ஒரு குட்டி வனதேவதை… அவளுடன் சிறிது நேரம் செலவிட்டால் போதும்… உற்சாகம் உங்களையும் தொற்றிக்கொள்ளும்.. அவளுக்கு நேற்று என்பதும் நாளை என்பதும் இல்லை.. இன்று மட்டும்தான்… எப்போதும் பச்சரிசி பல் தெரிய சிரிக்கும் இளவரசி..!! கேரளாவில் மலப்புரம் மாவட்டம் நீலாம்பூரிலுள்ள மலைநாயக்கன் என்று அழைக்கப்படும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஓரியின் செல்லமகள்..! சிறு வயதிலேயே தாயை இழந்தவள்.ஓரி வேறு துணை வேண்டுமென்று நினைக்கவே யில்லை.. ! அவனுக்கு தேன் எடுக்கவும் மெழுகு தயாரிக்கவுமே நேரம் சரியாய்

குமார சம்பவம்

பாகம் ஒன்று தேவ மொழியாகிய சமஸ்கிருதத்தில் உள்ள ஐந்து பெரும் காப்பியங்களில் குமார சம்பவமும் ஒன்று ஆகும். மகாகவி காளிதாசர் எழுதிய இக்குமார சம்பவம் காவியக் கதையினை இங்கு சுருக்கமாகப் பார்ப்போம். மூவுலகத்தையும் துன்புறுத்திக் கொண்டிருக்கிறான் தாரகன் என்னும் அசுரன். அவனை உலக நன்மைக்காக சம்ஹாரம் செய்ய வேண்டும். தாரகாசுரனை வதம் செய்வதற்கு குமரனின் ஜனனம் நடைபெற வேண்டும்.சிவகுமரன் கார்த்திகேயனே தாரகனை வதம் செய்யும் தகுதி உடையவன். குமார சம்வத்திற்காக சிவ – பார்வதியின் விவாகம் நடைபெற

தத்து…!

 ‘ஏன் அழைக்கிறார்..?! ‘ – யோசனையுடன் அந்த கட்டிடத்தின் முன் சைக்கிளை நிறுத்திய பதினான்கு வயது சிறுவன் ராமு விடுதியை அன்னாந்து பார்த்தான். பத்துமாடிக் கட்டிடம்! ஆள் முன் பின் பழக்கமில்லாதவர். நேற்று மூன்றாவது மாடி பால்கனியிலிருந்து எதிர் திசையிலுள்ள டீக்கடையைப் பார்த்து அவர்….. “சோமு! சோமு!!” என்று கத்தினார். வியாபார மும்முரம் டீ மாஸ்டர் கவனிக்கவில்லை. சைக்கிளில் தினசரிகளுடன் வந்து கொண்டிருந்த இவன் காதில் அவர் கூப்பாடு விழுந்தது. அவர் அழைக்கும் கடை வாசல் முன்

என் காதலி ஒரு கண்ணகி

நயாகரா நீர் வீழ்ச்சியின் நீர்த் துளிகள் காற்றோடு கலந்து எங்கள் உடம்பைக் குளிரூட்ட, ‘மிஸ்ற் ஒவ்த மெயிட்டில்’ வானவில்லின் வர்ண ஜாலங்கள் என்னை ஒரு கணம் திகைக்க வைத்தன. இவ்வளவு அருகில், மிக அருகில் வானவில்லை நான் ஒரு போதும் பார்த்ததில்லை. அற்புதம்! இல்லை அதிசயம்! மாலை நேரத்து வெயிலில் நீர்த் துளிகள் பொன்மயமாக, சொர்க்க வாசலில் நுளைவது போல படகு மெல்ல மெல்ல ஆடி அசைந்தது. இயற்கையின் அதிசயத்தில் என்னை மறந்து என்னை அறியாமலே எழுந்து

 

வெளிப்பூச்சு

(1935ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ரங்கநாதத்திற்கு அன்று சம்பளம் போடவில்லை. நாளும் ஏறக்குறைய மாசக் கடைசியாகிவிட்டது. விட்டில் எண்ணூற்று ஐம்பது செலவு. வீட்டு வாடகைக்காரன் என்னவெல்லாம் பேச முடியுமோ அதெல்லாம் சொல்லிவிட்டுப் போய்விட்டான் விட்டுச் சாமான்களைத் தூக்கி எறிய அவற்றின் மீது கைதான் வைக்கவில்லை. இன்று இரவு வேளைக்கு வீட்டில் அரிசி இல்லை. சாப்பாடு லங்கணம் என்றாலும் பாதகமில்லை . இந்தச் சிறிய கவலைகள் உயிரையே வாட்டிவிடுகின்றன. ஆபீஸிற்கு

கதையாசிரியர்: கி.வா.ஜகந்நாதன்

மனை விளக்கு (சங்கநூற் காட்சிகள்),

முதற் பதிப்பு: டிசம்பர் 1951,

அமுத நிலையம் லிமிடெட், சென்னை.

http://www.sirukathaigal.com/2022/02/27/

1. வேத முதல்வன்

2. மனை விளக்கு

3. வழிபடு தெய்வம்

4. கலுழ்ந்தன கண்

5. தப்பினேன்!

6. யாமத்து மழை

7. அதன் பண்பு

8. எப்படிப் போவாள்!

9. தோழியின் சினம்

 

கதையாசிரியர்: கி.வா.ஜகந்நாதன்

பவள மல்லிகை (சிறு கதைகள்),

முதற் பதிப்பு: செப்டம்பர் 1951,

அமுத நிலையம் லிமிடெட், சென்னை.

http://www.sirukathaigal.com/2022/02/25/

1. பவள மல்லிகை

2. கூன் பாண்டியன்

3. பாசம்

4. விசித்திர உலகம்

5. ரத்தக் கண்ணீர்

6. பஞ்ச கல்யாணிக் குதிரை

7. யார் தெய்வம்?

8. ஜோடி மரப்பாச்சி

Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook Instagram
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2022]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.