சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்
google-play-storeiOS-App-Store

view this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2022/02/26/

அன்னையும் பிதாவும்

 (1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சேலம் ஜில்லா கோக்கலையைச் சேர்ந்த அர்த்தநாரி என்ற ஹரிஜன வாலிபன், ஸ்ரீயுத மல்கானியுடன் டில்லிக்குப்போனான். ஸ்ரீயுத மல்கானி அகில இந்திய ஹரிஜன சேவா சங்கத்தின் காரியதரிசி. தென்னாட்டில் சுற்றுப் பிரயாணத்திற்காக வந்தவர், சேலத்தில் இப் பையனைக் கண்டு வெகு சந்தோஷப்பட்டுத் தம் கூடவே டில்லிக்குக் கூட்டிக்கொண்டு போய்விட்டார். அங்கே அவனைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து, ஆறு வருஷம் தம் வீட்டி லேயே வைத்துக்கொண்டு அவனை

 

எங்கிருந்தோ வந்தான்

 (1937ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாத காலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடுதியில், தங்கியிருந்த மாணவர்களில் அநேகர் கோடை விடுமுறைக்காகத் தத்தம் ஊருக்குச் சென்றுவிட்டனர். என் பக்கத்து அறையும் காலியாகக் கிடந்தது. அன்று ஒரு நாள்; வரண்ட காற்றோடு வந்தவர் போல ஒருவர், திடீரென என் பக்கத்தறையில் குடிவந்தார். அதிகமாக அவரை

 

காசி

போன வருஷம் இதே மாதத்தில் காசி தற்கொலை செய்துகொண்டு பிழைத்து -விட்டான். கல்யாணம் செய்துகொண்ட நான்காவது மாதம், சவர பிளேடால் கழுத்தை ஆழ அறுத்துக் கொண்டான்.உறைந்த ரத்தப் படுக்கைமீது நினைவிழந்து கிடந்தவனை கதவை உடைத்துப் புகுந்து எடுத்து ஜி.எச்.சில் அட்மிட் செய்தார்கள். ஊரில் நான்கு பேர் ‘மறைலூஸ்’ என்று கருதும் காசியைப் பற்றி எனக்கு அப்படி நினைக்க முடியவில்லை. எல்லோரையும் போல, தனக்கும் இந்த நாக்கு பேருக்கும் இடையிலான ‘ஷாக்’ அப்ஸார்பரை’ பழுது பார்த்து சரியாக வைத்துக்

 

முற்றுத் தரிப்பு

 காலம் என் நினைவின் தடங்களை இரண்டு தடவைகள் மீள மீளப் பதித்துச் சென்ற இடம் இதுதான். தேச வரைபடத்தில் அதனாலேயே இந்த இடம் பெரும் வரலாற்று முக்கியவத்துவம் கொள்கிறதெனச் சொல்லமாட்டேன். என்றாலும், இங்கே தகர்ந்திருப்பது என் வாழ்வின் இறுதி நம்பிக்கையாக இருக்கிறவகையில், இது என்னளவில் பெரும் முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது. இதே இடத்தில்தான் சமாதானம் நிலவிய அந்த 2003ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் ஒரு நீண்டகாலத்தின் பின்னால் அவளை நான் சந்தித்தேன். அப்போது அவளுடைய அகன்ற நெற்றியிலே குங்குமப்

மூடல்

 மாந்தீரிக யதார்த்தமெல்லாம் இல்லை; நிஜமாகவே இருண்டு திரண்டிருந்த பெரும் கருமேகம் ஒன்று கடைசியாக விமானத்தினுள் நுழைந்தது. மூடலாமா கூடாதாவென்ற விவாதங்களில் கலந்து கொள்ள வந்திருக்குமோ ? தெரியவில்லை. ‘டக் ‘கென்று விமானத்தினுள்ளிருந்த அத்தனை விளக்குகளும் அணைந்தாற்போன்றிருந்தது மட்டும் உண்மை. இருட்டு, இந்த மேகத்தின் குணம் மட்டும்தானா ? யார்மேலும் அதன் பக்கங்கள் பட்டுவிடக்கூடாதே என்ற பதைபதைப்புடன், படு அதிகாரமாக , ‘தேக் kகர் ச்சலோ…! ‘ ( ‘பாத்துப் போ..! ‘) என்று சத்தமிட்டபடி அணைத்து வந்த

ஒரு பஸ்தோப்புக் குயில் பாட்டு

 (1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) (குயில் பாட்டுத் தெரிந்தவர்களுக்கு மட்டும்) “..நாற்கோணத்துள்ள பல நகரத்து வேடர்களும் வந்து பறவை சுட வாய்ந்த பெருஞ்சோலை….” அது ஒரு பஸ் நிற்பாட்டுகிற இடம். ஊர்த் தலைநகரம். பல நாகரிகங்களும் சேர்ந்து ஒரேயொரு நாகரிகமாகப் பரிணமிக்கும் ஒரு சொர்க்க நரகம். இந்த லோகத்திலேயே சபிக்கப்பட்ட பிச்சைக்காரர்களைத் தாபரிக்கிற நரகம். இல்லை, அப்படி இல்லை… ‘சிக்’கென உடையணிந்த ரம்பைகள் நிறைந்த தேவலோகம். இதில் ஜயப்பாடு

நீயே நிழலென்று

 தொலைபேசி ஒலிப்பிய மணிச்சத்தம் கேட்டதும் மீன் வெட்டிக் கொண்டிருந்த கையை அவசரமாகக் கழுவி விட்டு, அது தீபாவாகத் தானிருக்கும் என்று ஆர்வத்துடன் ஓடிச் செல்கிறேன் நான். ஆனால் அது வழமையாக வரும் மாதாந்த கிறிஸ்தவ ஆராதனை பற்றிய பிரச்சாரத்துக்கான மின்கணிணி அழைப்பு என தொலைபேசி இலக்கத்தைப் பார்த்ததும் புரிகிறது. எனக்குத் தேவையற்ற அந்தச் செய்தி தொலைபேசியில் பதியப்படாமல் இருப்பதற்காக றிசீவரைத் தூக்கி மீண்டும் வைத்து, வந்த லைனைக் கட் பண்ணி விட்டு மீண்டும் குசினிக்குள் போகிறேன். இருந்தாலும்

அங்குசம்

 (1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவள் மீண்டும் சலித்து நின்றாள். பின்னே என்ன அவர்கள் இருவருக்கும் இருந்த பிரச்சனை சுதந்திரம்தான்! அது இல்லாமல் இருந்தால் அவனும், அவளும் இந்நேரம் ஒன்று சேர்ந்து குடும் பாமாகி குழந்தைகள் பெற்று வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டிருப் பார்கள், இரண்டு பேருமே அதில் சளைத்தவர்களில்லை. வாழ்க்கையின் பொருள் சுதந்திரம்தான் என்று சாதித்தார்கள். அதுதான் சுதந்திரமற்றுப் போனார்கள், அந்த பஸ் ஸ்டாண்டில்தான் எத்தனை நேரம்

தோழமையென்றொரு சொல்

 (1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “தம்பி உன்ரை காசு இந்தா” ஐயாத்துரையிடம் இரண்டு கைகளையும் நீட்டிக் காசை வாங்கி மடிக்குள் வைத்தான் நாகலிங்கம். ஐயாத்துரையோடு நாகலிங்கமும் கரு வாடு விற்பதற்குச் சென்றிருந்தான். இன்று தான் அவர்களிருவரும் மீண் டும் வீட்டுக்குத் திரும்புகிறார்கள். “தம்பி காசை வடிவாய் எண்ணிப்பாரும்” நாகலிங்கம் மடியை உள்ளாய்ச் செருகியபடியே சிரித்தான். “தேவேயில்லை. நீங்கென்ன வேறையாளோ?” நாகலிங்கம் தன்னுடைய கலியாணத்துக்கென இரு நூறு ரூபா வரையில்

 

புதிய கூண்டு

 1 அருவங்குளம் என்ற நாரணம்மாள்புரம் தாமிரவருணியின் வடகரையில் ஒரு சிறு கிராமம். சுற்றிலும் தோப்புத்துரவு; கண்ணுக்கெட்டிய வரையில் வயல்கள்; அதாவது, திருநெல்வேலி ஜில்லாவின் வசீகர சக்தியின் ஒரு பகுதி அது. சாயங்காலம். வேனிற்கால ஆரம்பமாகையால் இரண்டாவது அறுவடை சமீபித்துவிட்டது. பயிர்கள் பொன்னிறம் போர்த்து, காற்றில் அலை போல் நிமிர்ந்து விழுந்து, ஆகாயத்தில் நடக்கும் இந்திர ஜாலங்களுக்குத் தகுந்த, அசைந்தாடும் பொற்பீடமாக விளங்கியது. அகன்ற மார்பில் யக்ஞோபவீதம் போல் ஆற்றில் நீர் பெயருக்கு மட்டிலும் ஓடிக்கொண்டிருந்தது. நீர், ஸ்படிகம்போல்

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று குப்பிழான் ஐ.சண்முகன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

ஐ. சண்முகலிங்கம் (பிறப்பு ஆகஸ்டு 1, 1946, குப்பிழான், யாழ்ப்பாணம்) குப்பிழான் ஐ. சண்முகம் என்ற பெயரில் எழுதும் ஈழத்து எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கலைப்பட்டம் பெற்ற இவர் ஓர் ஆசிரியர். சிறுகதையாசிரியராக கவனம் பெற்ற சண்முகன் இசை, சினிமா, ஓவியம் போன்றவற்றிலும் ஈடுபாடுடையவர். அலையின் ஆரம்ப ஆசிரியர் குழுவில் இடம்பெற்றவர்.
 
சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

 

சிறுகதை ஒரு நவீன கலை வடிவம்: தமிழிற்கோ மிக மிக நவமான கலை வடிவம்

மேனாட்டவரின் ஏகாதிபத்தியப் படை எடுப்பாலும், காலனி ஆதிக்கத்தாலும் – கீழைத் தேசங்களில் ஏற்பட்ட சமூகப் பொருளாதார அரசியல் மாற்றங்களினாலும், ஆங்கிலக் கல்வியி; விருத்தியினாலும் – கீழைத்தேய இலக்கிய வடிவங்களிலும், தன்மைகளிலும் அவற்றின் போக்குகளிலும் பலத்த புத்திருப்ப மாற்றங்கள் ஏற்பட்டதுடன், புதிய புதிய இலக்கிய வகைகளும் அறிமுகமாயின..
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook Instagram
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2022]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.