சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்
google-play-storeiOS-App-Store

view this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2022/02/21/

கூடுகள் சிதைந்தபோது…

 கோடை வெயில் அனலாய்க் கொதித்துக்கொண்டிருந்தது. அவ்வப்போது விசிறி விட்டுப்போன காற்றில் மட்டும் லேசாய் ஈரப்பதன். வீட்டுக்குள் இருக்க அலுப்பாய் இருக்க இந்தப் பூங்காவில் வந்து அமர்ந்துகொண்டேன். எவ்வளவு நேரம்தான் அந்த நான்கு சுவர்களையும் பார்த்துக்கொண்டிருப்பது…..? கண்தொடும் தூரத்தில் பள்ளிச் சிறுவர்கள் ஊஞ்சலாடிக்கொண்டு இருக்கிறார்கள். சற்றுத் தூரத்தில் இரண்டு இளவட்டங்கள் நெருக்கமாய் அமர்ந்து, கைகளைப் பிணைத்தபடி உலகையே மறந்து இருக்கின்றனர். அந்த மரத்திற்கு கீழ் அமர்ந்திருக்கும் சீனநாட்டுச் சோடி ஒவ்வொருநாளும் இதே நேரத்திற்கு இங்கே வந்து அமர்ந்து விடுகிறார்கள்.

 

விடியல்

 லட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்த உடனேயே செங்கோடன், சேதி சொல்லி அனுப்பியிருந்தான். பிறந்தது பெண்ணாகப் போனதால் மூன்று மாதங்கள் வரை யாருமே வந்து குழந்தையையும் லட்சுமியையும் பார்க்கவேயில்லை. செங்கோடனும் நடையாய் நடந்தான். சென்றமாதம்தான், மகனை மட்டும் அனுப்பி வைத்தாள், மாமியார்காரி. குழந்தையைச் செங்காடன் புகுந்த வீட்டுக் கொண்டு வந்து விடும் போது, தங்கச்சங்கிலி, வளையல், இடுப்புக்கு அரைஞாண், கொலுசு அத்தனையும் போட்டு அழைத்து வர வேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள். லட்சுமியின் புருஷன் நல்லவன்தான். ஆனால் வாயில்லாப்

 

தொட்டால் சுடுவது..!

 ரொரன்ரோ ஸ்கைடோம் வாசலில் ஒரே பரபரப்பாக இருந்தது. வானம் பார்த்த அந்தப் பிரமாண்டமான மண்டபத்தில் ஏ.ஆர். ரகுமானின் இன்னிசைவிருந்து இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பமாக இருந்தது. விளக்கை நோக்கி விட்டில் பூச்சிகள் வருவது போல இன்னிசையால் ஈர்க்கப்பட்டவர்கள் பல திசைகளிலும் இருந்து அங்கே வந்து குவிந்து கொண்டிருந்தனர். சிந்துஜா அந்த மண்டபத்தை இரண்டு தடவைகள் சுற்றி வந்து விட்டாள். ஸ்கைடோம் வாசலில் அவளது அறைத்தோழி ரமணியைச் சந்திப்பதாக இருந்தது. ஸ்கைடோமுக்கு எல்லாப் பக்கமும் வாசல் இருப்பதால் எந்த

 

வாலும் காலும்

 அவன் அவசர அவசரமாகக் கிளம்பினான் ஆபிசிலிருந்து.. ஒரு அரைமணி நேரம் காட்டுப்பாதையில் பைக்கில் போனால் தான்.. மெயின் பஸ் ஸ்டான்டு போக முடியும். அங்கிருந்து ஒரு மணி நேரம் பஸ் பயணம் வீட்டிற்கு.. அதுவும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் அங்கு சென்றால் தான் பஸ் கிடைக்கும்… இரண்டு மூன்று கிராமங்கள், வயல்வெளி, தென்னந்தோப்பு, மண் ரோடு, உடைந்த ஜல்லி ரோடு, நல்ல ரோடு என பாதை மாறி மாறி வரும்.. பத்து நிமிடம் சென்றிருப்பான்.. வண்டிற்கு முன்னாலுள்ள

 

சுயம்

 (1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘இந்தா ரண்டரையாகுது.’ சுரேஷ் மனசுள் லேசான ஒரு கீத சுகம் நீ விற்று. சோர்ந்த உடல் சாரித்து, சடுதி உற்சாகம் கொண்டது. இடது கை விளிம்புச் சட்டை கிளப்பி வார்ச்’ பார்க்க முகத்தில் மையல் பம்மிய ஆனந்த பரவசம் ‘இன்னும் அஞ்சு நிமிஷம் இருக்கு’ கெக்கலிப்பு. ‘சேவையர் சூட்’ அவன் கையில் அவசர கோலமாகியது. ‘ஹங்கரில் கொழுவினான். பாத்றூம் பேஷன் பைப் திறந்து

தாலி காத்த அம்மன்

 திருமணம் முடித்த சில மாதங்களிலோ அல்லது ஆண்டுகளிலோ சிலருக்கு தாம்பத்ய வாழ்க்கை வெறுப்பை ஏற்படுத்தி விடுகிறது. எப்போதும் அவள் புதுப்பெண்ணாக இருக்க வேண்டும் என்று இயற்கைக்குப் புறம்பாக நினைக்கிறானோ என்னவோ, பல பெண்களுடைய வாழ்க்கை தொடங்கிய உடனேயே முடிவுக்கு வந்து விடுகிறது, ஆண்டவன் எதற்கும் குழந்தைப்பேறுக்கான உடலமைப்பை ஆண்களுக்கும் கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. கடவுள்களுக்கும் ஒரு கறாரான நீதிபதி இருந்திருந்திருந்தாள் இதுகூட நடந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட அனிதாவின் வாழ்க்கையும்

அவர்களின் மகன்

 (1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தங்கம்மாவுக்கு அச்செய்தியைக் கேட்டதும் உலகமே திடீரென்று உடைந்து போனாற் போல அதிர்ச்சியுற்றாள். நிலைகுலைந்து போய் அப்படியே தள்ளாடியவளாய் திண்ணையிலே சரிந்தாள். வாயின் நடுக்கத்தை மீறிக் கொண்டு விசும்பல் ஒலித்தது. செல்லம், தங்கம்மாவிற்கு அருகாக வந்து, வாஞ்சை ததும்பி அவளின் முதுகிலே ஆதரவோடு தொட்டாள். “அக்கா….. ஆறுதல் சொல்லித் தீராத விஷயந்தான் ஆனாலும் என்ன செய்ய? இதைத் தாங்கிக் கொண்டு தான் ஆகவேணும் அ…க்கா…”

பாப்பா

 சந்தோஷ், “வீட்டுக்கு வந்துட்டீங்களா?” “நான் ஆபீஸ்ல தான் இருக்கேன்.. நீ எங்கே இருக்கே? “நர்மதா ஹஸ்பெண்டுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சுன்னு கால் பண்ணினா, அதனால அர்ஜென்ட்டா அவிநாசி வந்துட்டேன்.” “ஆக்சிடென்ட்டா? எப்படி ஆச்சு?” “மதியம் அவிநாசி ரோட்ல பைக்ல வரும்போது எதிர்ல கார் வர்றது தெரியாம இவரே போய் நல்லா மோதி கீழ விழுந்திருக்கார்.. நல்லவேளை, வலது முழங்கையில் மட்டும் நல்ல அடி …” “அடடே, இப்போ எப்படி இருக்கார்?” “பரவால்லையா இருக்கார்.. நான் வர ஏழு மணி

துரும்பு வாழ்க்கையிலும், துலங்கும் ஒரு சோதிப் பிழம்பு

 கொரொனோவின் கோரப் பிடிக்குள் சிக்கி, உலகமே சின்னபின்னமாகிச் சிதறி விட்ட நிலை வந்தும், பூரணியின் மனதில் எந்தச் சலனமும் இல்லை. அவள் ஒரு தபஸ்வினியாகவே இன்னும் இருக்கிறாள். அது என்ன வகைத் தவம்? அவள் என்ன தவம் செய்யக் காட்டுக்குப் போய் வந்தவளா? காடு போய்த் தான் தவம் செய்ய செய்ய வேண்டுமா என்ன? வீடே அவளின் தவச் சாலை. உறவாகத் தோன்றி வந்து உதைத்து விட்டுப் போன, சக மனிதர்களே அவளுக்கு வேதம் போதித்து வழி

 

அக்கா

 (1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நாங்கள் எல்லாரும் வெறும் மேலுடன் தான் திரிவோம். எனக்கு வெறும் மேல் தான் பிடிக்கும்; சட்டையே பிடிக்கா. கிட்ணனும் அப்பிடித்தான்; வெறும் மேலுடன் தான் வருவான். ஆனா கிட்ணன் நல்ல வடிவு. வெள்ளையாய் இருப்பான். ஏனெண்டால் அவன் அம்மா நல்ல வெள்ளை; என்னுடைய அம்மா கூட நல்ல வெள்ளை; அப்பாதான் கறுப்பு; பல்லுத் தீட்டுவமே கரி. அதைப் போல. சனிக்கிழமை அம்மா முழுக

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று அ.முத்துலிங்கம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

1937 ஜனவரி 19 ல் இலங்கை யாழ்ப்பாணம் அருகாமையில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். அ. முத்துலிங்கம், அப்பாத்துரை ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் சாட்டர்ட் அக்கவுண்டனாகவும், இங்கிலாந்தின் மனேஜ்மெண்ட் அக்கவுண்டனாகவும் பட்டம் பெற்றவர்.
 
சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

 

சிறுகதை என்பது தற்காலத்தில் (1934ல்) எழுந்த மேனாட்டு சரக்கு, சிறுகதை என்றால் சிறுகதை கொஞ்சப் பக்கங்களில் முடிந்து விடுவது என்பதல்ல. சிறுகதை என்ற பிரிவு இலக்கியத்தில், அதில் எழுதப்படும் பொருள் பற்றியது ஒரு சிறு சம்பவம் ஒரு மனோநிலை ஆகிய இவற்றை எடுத்து எழுதுவது, சிறுகதையில் முக்கிய சம்பவமோ நிகழ்ச்சியோ அல்லது எடுத்தாளப்படும் வேறு எதுவோ, அது ஒன்றாக இருக்க வேண்டும்..

Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook Instagram
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2022]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.