சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்
google-play-storeiOS-App-Store

view this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2022/02/19/

சாமத்திய வீடு

 காலைக்குளிர் சில்லென்று வீசினாலும் தொலைபேசியின் தொணதொணப்பில் எரிச்சல் வந்தது. தொணதொணப்பு ஓய்ந்தது.. அன்று என்றும் இல்லாத களைப்புடன் படுத்திருந்தாள் சிந்து. அவள் கணவன் சபாவின் குறட்டை ஒலியில் இருந்து அவன் அயர்ந்து தூங்குவது தெரிந்தது. பாவம் அவன் லண்டன் வந்த காலத்தில் இருந்து தொடர்ந்து இரவு வேலையே செய்து வந்ததால் இவ்வாறான ஒரு சில இரவுகளே அவனால் இரவு நித்திரை கொள்ள முடிந்தது. சபா மட்டுமா? இவனைப்போல புலம்பெயர்ந்த தமிழர் பலரின் நிலை இப்படித்தானே!!.. மீண்டும் ஒலித்தது….

 

இரைகள்

 (ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இலவச ஆம்புலன்ஸ் உதவிக்குக் கூப்பிட வேண்டிய தொலைபேசி எண்கள் குறிக்கப்பட்ட விளம்பரப் பலகைகள் ஓரங்களில் நாட்டப்பட்ட நெடுஞ்சாலை. சாலை ஓரங்களில் தயார் நிலையில் நிற்கும் பளபளப்பான ஆம்புலன்ஸ்கள் பார்ப்பதற்குக் கவர்ச்சியாகத்தானிருக்கும். அனைத்து வசதிகளும் அமையப் பெற்ற விலை உயர்ந்த வெண்ணிற வாகனங்களை மக்கள் சேவைக்காகச் சாலை ஓரங்களில் நிப்பாட்டியிருக்கும் கருணை உள்ளங்களை, அது வழியாகப் பயணிக்கும் போதெல்லாம் முன்பு வாழ்த்தாமல் இருந்ததில்லை. இப்போது பார்த்தால் எரிச்சலாகவும் பயமாவும்

 

வாஷிங்டனில் திருமணம்

 (1999ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 7 | அத்தியாயம் 8 ஆர், ஸ்ட்ரீட் முழுதும் பந்தல் போட்டு முடித்ததும், ஜோடனைகளில் வல்லவர்களான தஞ்சாவூர் நெட்டி வேலைக்காரர்கள், வாழைத்தார், தென்னங் குருத்து, மாவிலைக் கொத்து, பாக்குச்சரம், சாமந்தி மாலை, காகிதப் பூ. ஜிகினாத் தகடு, சல்லாத் துணி இவ்வளவையும் கொண்டு கம்பக் கால்களையும், கூரை முகட்டையும் அலங்கரித்து முடித்தனர். பாட்டிமார்கள், அந்தத் தெருவெங்கும் பெருக்கி மெழுகி, மாக்கோலம் போட்டு

 

மான்குட்டி

 (1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒரு பெரிய காடு. அந்தக் காட்டிலே ஒரு மான் இருந்தது அந்த மானுக்கு ஒரு குட்டி இருந்தது. அம்மா மான் எப்போதும். குட்டி மானைக் கூடவே அழைத்துச் செல்லும். புல் இலை தழைகளையெல்லாம் எப்படித் தின்பது, எங்கே எப்படித் தண்ணீர் குடிப்பது என்றெல்லாம் கற்றுக் கொடுக்கும். அந்தக் காட்டுக்கு அடிக்கடி வேட்டைக்காரர்கள் வரு வார்கள். அவர்கள் வரும் போது கூடவே வேட்டை நாய்களையும்

 

இது என் வீடு

 “ஹேய் தேவி நீ வேணும்னா பாரு அம்மா உன் பிறந்தநாள் அதுவுமா தான் போய் சேரும் போல”. “வேணாம்டி மதி வாய வச்சுக்கிட்டு சும்மா இரு, நான் என் பிறந்தநாளை காலத்துக்கும் கொண்டாட முடியாம போயிடும்டி”. “ஏய் பெரியம்மா ரெண்டு நாளில் என் பிறந்தநாள் வருது அன்னைக்கு பார்த்து நீ போய் சேர்ந்த அவளோ தான் பார்த்துக்க” என்று இழுத்துக் கொண்டிருந்த தன் பெரியம்மாவை நோக்கிக் கூறினாள் தேவி. அனைவரும் ஒவ்வொருவராக சீதேவிக்கு பால் கொடுக்க, தொண்டைக்குழி

நிர்வாணம்

 வேலையை முடித்துக்கொண்டு காரியாலயத்திலிருந்து வெளியேறிய சந்திரன் யோர்க் வீதி வழியாக நடந்து வந்து கொண்டிருந்தான். யோர்க் வீதியின் இரண்டு பக்கங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் சந்திரனின் கண்களைக் கவர்ந்தன. ‘பென்ஸ்’ ‘ஹம்பர்’ ‘பிளைமவுத்’ ஒவ்வொரு காரின் பெயரையும் வாசித்துக்கொண்டு வந்த சந்திரனின் மனம், “சீ..ஒரு சுவீப் விழுந்துதெண்டாலும் என்ன சுதியாக ஓடித்திரியலாம்” என்று எண்ணியது. “பெரிய கார்தான் இல்லாட்டிலும் ஒரு மொரிஸ் மைனர் இருந்தாலும் காணும்” என யோசித்துக்கொண்டு வந்த சந்திரனின் தோளை உரிமையுடன் ஒரு கரம்

ஏழாவது குப்பை தொட்டி

 அடுத்த வேளை சாப்பாட்டுக்கு சிங்கி தான் என்பது ரவிக்கு புரிந்துவிட்டது . சுதா ஹோட்டலில் இருந்து விழும் எச்சில் இலைகளுக்கு பக்கத்தில், இடம் போட்டு படுத்தே விட்டான் கோபி. கால் மணி நேர தாமதத்தால் அம்மா உணவக தொட்டியையும் தவற விட்டிருந்தான் . பசி வயிற்றை பதம் பார்க்க ஆரம்பித்தது. என்னடா வாழ்க்கை இது என்று நொந்தான் . சரி கடவுள் நமக்கென்று ஒரு குப்பை தொட்டியை கூடவா ஒதுக்க மாட்டார் என்று தேட ஆரம்பித்தான் .

தவிட்டுப் பிள்ளை..

 காலை 7.00 மணி. நாற்காலியில் அமர்ந்து காபி குடித்து முடித்துவிட்டு தினசரியை விரிக்கும்போதே….அருகிலிருந்த கைபேசி சிணுங்கியது. எடுத்துப்பார்த்தால் வெறும் எண்கள். அறிமுகமில்லா நபர் ! ‘எவர்…?’- என்று யோசிக்கும்போதே… “சார் ! மணிமாறனா…?” – குரல். “ஆமாம்..!” “உங்க சகோதரன் மிதுரன் மரணம். சேதி சொல்லச் சொன்னாங்க. வந்துடுங்க…”அடுத்த வினாடி துண்டிப்பு. குண்டுமில்லாமல் மருந்துமில்லாமல் வெடித்தது போல்…. ‘யார் இந்த மதுரன்.? செய்தி சொல்லியது யார்… ?’ கேள்வி மண்டையைக் குடைய…. ‘அதுவும்..சகோதரன் !??!’ எனக்குள் யோசனை

ஔவை

 மை தீட்டிய அகன்ற அறிவொளி வீசும் விழிகள் . அழகிய ஒளி பொருந்திய நெற்றி.கண்டவரை மரியாதை செலுத்த தூண்டுவதும் இளமையானதுமான தோற்றம். இதுதான் ஔவை. அவள் , பாணர் குடியில் பிறந்த விறலி. இதனால் கலை அவளது நாடி நரம்புகள் எங்கும் ஊடுருவியிருந்தது. அவள் தன் முன்னோர் போன்று வாய்மொழியாக பாட்டுக் கட்டி பாடுபவள் மட்டுமல்ல ,நன்கு கற்றுத் தேர்ந்து புலமை கைவரப் பெற்றவளும் கூட. எழுத்தின் வகை தொகையுடன் சொல்லிலக்கணமும் கற்றுத்தேர்ந்தவள் “அதியமான் பெரும் வள்ளல்

 

விருந்தாளி

 (2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) – கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும், உங்கள் கால்களைக் கழுவி, மரத்தடியில் சாய்ந்து கொண்டிருங்கள். – நீங்கள் உங்கள் இருதயங்களைத் திடப்படுத்தக் கொஞ்சம் அப்பம் கொண்டுவருகிறேன்; அப்புறம் நீங்கள் உங்கள் வழியே போகலாம். – மாட்டு மந்தைக்கு ஓடி, ஒரு நல்ல இளங்கன்றைப் பிடித்து வேலைக்காரன் கையிலே கொடுத்தான்; அவன் அதைச் சீக்கிரத்தில் சமைத்தான். – வெண்ணெயையும், பாலையும், சமைப்பித்த கன்றையும் எடுத்து வந்து

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம்

- கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன்.

-கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம்(எம்.ஏ) திரைப்படத்துறையில்பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும்

-எழுத்துக்கள்: 7 நாவல்கள்,6 சிறுகதைத்தொகுப்புக்கள்,2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி.

 
சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

 

தகவத்தின் கடந்த கால அனுபவத்தை மாத்திரம் எழுத்துக் கொண்டு பார்த்தால் சிறுகதை என்ற வடிவம் பற்றிய உணர்வு எழுத்தாளர்களிடையே வளர்ந்திருக்கிறது என்பதையும், வாசகர்களிடையே வெறுமனே கதைகள் மாத்திரம் படிக்கிறோம் என்ற உணர்வின்றி கதைகளில் வடிவம், சம்பவம், பாத்திர அமைப்பு முதலிய இலக்கிய கூறுகளையும் கவனிக்க வேண்டும் என்ற விமர்சன நோக்கும் உருவாகி இருக்கிறது என்பதைக் காண முடிகிறது. தமிழ்க் கதைஞர் வட்டம் (தகவம்) பரிசளிப்பு 2010 விழா கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் கடந்த மாதம் 28ம் திகதி நடைபெற்ற போது தலைமையுரை ஆற்றிய தகவம் தலைவர் மாத்தளை கார்த்திகேசு இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தலைமையுரையாற்றிய மாத்தளை கார்த்திகேசுல் புதுசுதான்..

Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook Instagram
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2022]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.