சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்
google-play-storeiOS-App-Store

view this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2022/02/17/

சாளரம்

 அடையார் பஸ் மயிலாப்பூருக்கு வந்து கொண்டிருக்கிறது. பஸ்ஸுக்குள் இருந்த மங்கிய ‘பல்ப் வெளிச்சம் இருட்டை எடுத்துக் காட்டுகிறது. பிரயாணிகளின் முகமும் மார்பும் தவிர வேறொன்றும் தெரியவில்லை. “டிக்கெட் ப்ளிஸ்” என்று கத்தினான் கண்டக்டர். “இந்தாப்பா, மயிலாப்பூருக்கு ஒன்று” என்றார் நரைத்த தாடியுடைய ஒரு கிழவர். “ஸார் நீங்களா! எங்கிருந்து இந்த இருட்டில்?” என்றார் ஓர் உச்சிக்குடுமி, “பெஸண்ட் அம்மையாரின் மரணத்தைக்குறித்து ஒரு பொதுக்கூட்டம் நடக்கிறது அம்மையார் ஆவியுலகிலிருந்து தந்த ஆசிமொழிகள் – ஹா! என்ன அருள்வாக்கு!” என்று

 

ஒத்தையடிப் பாதையிலே…

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “ஜோசப்…டே ஜோசப்…” “யார்றா ?” “நான்தான்!” “நான்தான்னா?” “பூமணி!” “அட! பூமணியா…” “பூமணி! எப்படியிருக்கடா…?” “இருக்கேன்.” “லைனுக்குப் போகலையா பூமணி?” “போவணும். உன்னைத்தான் தேடிட்டிருக்கேன்.” “எதுக்கு?” “ஒரு விசயம், ரொம்ப ரொம்ப முக்கியமானது!” “சொல்லேன்.” “நீ எங்கே இருக்கேனு தெரிய லீயே …!” “இங்கதான். இங்க பாரேன். அட இங்க பார்றானா… எங்கயோ பாக்குறே! பூமணி இங்க… நேரா இங்க பாரேன்…” “குரல்தான்

 

மாசிலன்

ஒன்று… மரணத்தின் இருப்பு தென்றலாய் முகிழ்ந்து தவழ்ந்து கொண்டிருக்க இவனோ சுகமாய் அதில் லயித்து தன்னிலை மறந்தவனாய் தரை மீது விரித்திருந்த கோரைப்பாயின் மீது தலையணை ஏதுமின்றி படுத்திருந்தான். கைகளை மடக்கி உள்ளங்கையை கோர்த்து இவனாகவே உருவாக்கிக் கொண்ட மெல்லிய தலைப்படுகையில் பின்னந்தலை பதிய படுத்துக் கிடந்தவனுக்கு மனதுள் நாளைய தினத்தைப் பற்றின எண்ணமெழுச்சி ஏற்பட்டது. இன்றைய பொழுதில் இருபத்தியிரண்டு மணிநேரத்தை கடத்தியாகிவிட்டது. எஞ்சியிருக்கும் இரண்டு மணி நேரம் கடந்தால்… நாளைக்குள் பிரவேசிக்கலாம். புதியதாய் எதாவது பிரச்சனைகளுடன்

 

மரம் வைத்தவன்

வழக்கம் போல் இன்றும் விடியற்காலை நாலரை மணிக்கெல்லாம் விழிப்பு வந்து விட்டது. சளக்சளக்கென்று அம்மா வாசல் தெளிப்பதும், தொலைவிலிருந்து வரும் கொக்கரக்கோவும், பால்காரர்களின் சைக்கிள் மணிச் சப்தமும், பேப்பர் போடும் பையனின் கூவலும், அன்றைய பொழுது புலர்வதை, அதன தன் பாணியில் ஆரம்பித்துக் கொண்டிருந்தன. பனி கலந்த காற்றும், பவழ மல்லிகையின் தூக்கலான மணமும் மனதையும், உடம்பையும் சிலிர்க்கச் செய்தன. ஒரு நிமிடம் கண்களை மூடியபடி ‘இன்றைய தினம் நல்லபடியாக’ விளங்க இறைவனை வேண்டியபடியே எழுந்து கொண்டான்

 

தைப்பூசத்துக்குப் போகணும்

போன வருடமே பத்துமலைக்குப் போய் முருகனைத் தரிசிக்க முடியவில்லையே என்று பெரிய குறை சின்னசாமிக்கு. பல ஆண்டுகளுக்குமுன்பு ரப்பர் தோட்டப்புறத்தில் வாழ்ந்தபோது லோரிக்காரனுக்கு முப்பது வெள்ளி கொடுத்து, `கோலும்பூ’ருக்கு வந்து தரிசனம் செய்ததுடன் சரி. அப்போது, கடவுளையே நேரில் பார்த்ததுபோன்று அடைந்த மகிழ்ச்சியை இந்த ஜன்மத்தில் மறக்க முடியுமா! ஏனோ, அதன்பின் அந்த பாக்கியம் கைகூடவில்லை. செல்வம் தன்னுடன் வரும்படி அழைத்தபோது, மனைவி போனால் என்ன, நினைத்தபோதெல்லாம் பத்துமலை தரிசனம் கிடைக்குமே என்ற நப்பாசையுடன் மகன் வீட்டில்

 

நினைப்பதுவும் நடப்பதுவும்

விமானத்தில் அமர்ந்ததும் “குளிர்கிறது” என்று சின்னப் பெண் நிதியாவை போர்வையால் போர்த்தி விட்டு பெரியவள் நிவேதிதாவிற்கு தண்ணீர் கொடுத்தபின் தொலைபேசியில் தொடர்புகொண்டு கணவன் சேகருடன் பேசினாள். ”இன்னும் சில நிமிடங்களில் விமானம் புறப்பட்டு விடும். இரண்டரை மணி நேரத்தில் நாங்கள் துபாய் ஏர்போர்ட் வந்து விடுவோம். டெர்மினல் ரெண்டுல பிளைட் வந்து இறங்கும்” என்றாள் கீதா. எதிர்முனையில் “நானும் அபுதாபியில் இருந்து கிளம்பி விட்டேன். நீங்கள் இறங்குமுன் நான் அங்கே ஏர்ப்போர்ட்டுக்கு வந்து விடுவேன்.” என்றான் சேகர்.

 

மூன்று மனிதக் குரங்குகள்

எனது மகள் என்னிடம் ஒருபத்திரிகையில் வந்த படத்தை கொண்டு வந்து என்னிடம் காட்டி அப்பா இந்தப் படத்தை பார்த்தீர்களா, இது ஒரு சிறு கதை போட்டிக்கு ஒரு பத்திரிகை விளம்பரம் செய்த படம் அப்பா. இந்த படத்தை கருவாக வைத்து சுமார் இரடியரம் வார்த்களுகுள் ஒரு சிறுகதை எழுத வேண்டும் முதல் பரிசு 5௦௦ டொலர்கள். இரண்டாம் பரிசு 3௦௦ டாலர்கள். மூன்றம் பரிசு 1௦௦ டொலர்கள். நான் படத்தை வாங்கி பார்த்தேன். நான் படத்தை பார்த்து

 

காதல் ஒரு விபத்து

(அவனை நேரே சந்தித்து, அவனோடு பழகிப் பார்க்க வேண்டும், அவன் தனக்கு ஏற்றவன் தானா என்பதை உறுதிப் படுத்த வேண்டும் என்ற ஆவலோடு தான் அவள் இந்தப் பயணத்தை மேற்கொண்டாள்.) நியூயோர்க் லாகாடியா விமான நிலையத்தில் பயணிகள் ஏறும் இடத்தில் எயர்பஸ் ஏ-320 நோர்த் கரோலினாவில் உள்ள சாலொட்டிக்குச் செல்வதற்குத் தயாராக நின்று கொண்டிருந்தது. நோர்த் கரோலினாவிற்குச் செல்லும் பிளைட் இலக்கம் 1549-ல் பயணம் செய்பவர்களை செக் இன் செய்யும்படி கணனித் திரையில் சிகப்பு நிறத்தில் எழுத்துக்கள்

 

முக்கோண நட்புக்கதை

 நாங்க மூன்று பேரும் மூணாவது படிக்குறதுலேந்து நண்பர்கள். நான், கர்ணன், பாலா. பள்ளிகளில் மூணு முட்டாள்கள்னு பேருடுத்தவங்க, அதுக்கு என்ன அர்த்தம்னு தெரியாதப்பவே சந்தோஷப்பட்டவங்க. என்ன அர்த்தமா இருந்தா என்ன?, மூணு பேரும் சேந்து இருக்கோம் அவ்ளோதான் எங்களுக்கு வேணும். எங்களுக்குள் என்ன ஒற்றுமை?, என்ன வேற்றுமைனு?, விவரம் தெரியாதவரை எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் அல்ல, கருத்துகளே இருந்தது இல்ல. பத்தாவது வந்திருப்போம் அப்போதான், மத்தவங்க எங்கமேல நெறைய திணிச்சாங்க. அது எங்களுக்கு புரிந்தும் புரியாமல் இருந்தது.

 

நாளை

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்த இடம் ஒரு கணத்தில் பரபரப்பானது. ‘எழுந்திரு, எழுந்திரு’ என்று பெரியவன் அவசரப்படுத்தினான். சின்னவன் சோர்வினால் கண்ணயர்ந்திருந்தான். அவனை அந்நிலையில் விட்டுவிட்டு ஓடுவதற்கு இவனுக்கு மனம் வரவில்லை . தூரத்தில் வாகனங்கள் நிரையாக வருவதாக ஒருவன் கூறினான். அவனை நெருக்கி விசாரித்தபோது அவன் தான் பார்க்கவில்லையென்றும் இன்னொருத்தன்தான் பார்த்ததாகவும் சொன்னான். சனங்கள் ஒவ்வொரு திசையில் ஓட ஆரம்பித்தனர். தங்களுக்கு வேண்டிய மாதிரி வரிசை

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று ஜெகதீஷ் குமார் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ்.ரமேஷ்

அடியேனின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர்.

தொழில் தனியார் பள்ளி ஆசிரியர். இது வரை மொழிபெயர்ப்பு, புனைவு இலக்கியம், குறு நாவல்கள், கட்டுரை நூல்கள், ஆங்கிலக்கவிதை, தமிழ்த்திரைக்கதை, என்று 15 நூல்கள் வெளியிட்டுள்ளேன்.
 
சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

 

கதை சொல்லிகள் நம் கிராம வாழ்க்கையில் பழக்கம்தான்.

இரவின் கடையாமம் வரை ஒயிலாடும் காடா விளக்குகள் அவிந்து தூபமாய்க் கேட்ட கதைகளை அசைபோடும் தொழுவத்து மாடுகள் தோற்க.

ஆயினும் சிறுகதை நம் வரலாற்றில் புதுசுதான்..

Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook Instagram
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2022]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.