சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்
google-play-storeiOS-App-Store

view this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2022/02/15/

ந்யூமாவின் நகல்

 ராகுலன் – 00. 003398 G II – இந்திய அரசின் தலைமை அணுக்கரு விஞ்ஞானி – 4.3.2094. 17: 58 : 245 மணி “திரு. ராகுலன், தாங்கள் இந்திய அரசின் அணுக்கரு விஞ்ஞானத் தலைமையகக் கணிப்பொறியால் அழைக்கப்படுகிறீர்கள்.” ‘கோக்’ பானம் குடித்துக் கொண்டிருந்த ராகுலன் நகர்ந்து வந்து அகலமான மானிட்டர் முன்பு அமர்ந்தான். “ஆஜர். செய்தி என்ன?” “ வணக்கம் ராகுலன்! கடந்த 2600 நானோ விநாடிகளாகத் தாங்களுக்கும், தலைமையகத்துக்கும் இருக்கும் தொடர்பு கொஞ்சம்

 

பிராயச்சித்தம்

 இப்போது சித்திரைத் திருவிழாவும் இல்லை, ஆடிப்பூச்சொரிதலும் இல்லை. ஆனால் உள்ளூர் மக்களின் சிறப்பு ஆராதனைகளால் பாகம்பிரியாள் கோவில் களைகட்டியிருந்த து. அர்ச்சனைத் தட்டுக்களோடு வந்த எல்லோரும் ஒரே ஒரு பெயருக்குத்தான் அர்ச்சனை செய்தார்கள். அந்த ஊரில் வசித்து வரும் அர்ச்சகர்களும் , அன்றுதான் மந்திரங்களைப் பிசகாமல் சொல்லி ஆராதனை செய்தனர். “…மந்திரத்தில் இவ்வளவு உண்டா..?” என்பது பாகம்பிரியாளுக்கே அன்றுதான் தெரிந்திருக்கும் போல. நாள்தோறும் அவ்வளவு அலங்காரத்தில் காட்சி தந்து கொண்டிருந்தார். கோவிலுக்குப் போன எல்லோரும் பெரிய அம்பலம்

 

அனுபவம்

 கிருபாஷினி புத்தகம் வாசித்துக் கொண்டு இருந்தாள்,யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது எழுந்துப் போய் கதவை திறந்தாள்,அவளின் மாமியார் அபிராமி நின்று கொண்டு இருந்தாள்,வாங்கள் அத்தை எப்படி இருக்கீங்கள் ஒரு போன் கூட பன்னவில்லை வருவதாக என்றாள் கிருபாஷினி,மகன் வீட்டுக்கு வருவதற்கு எதற்கு தகவல் சொல்லனும்,நினைத்தேன் கிழம்பி வந்துட்டேன் என்றாள் அபிராமி,உங்கள் மகன் வீட்டுக்கு வருவதற்கு தகவல் சொல்ல தேவையில்லை தான்,நான் வீட்டை பூட்டி விட்டு வெளியில் போய் இருந்தால் நீங்கள் வந்து வெளியில் நிற்கனுமே அதனால்

 

இனி எல்லாம் சுகமே

 அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4 4 வீட்டைக் கவனிக்க இன்னொரு நல்ல ஆளை தேட வேண்டியிருந்தது. திரும்பவும் ஒரு வாரம் லீவு எடுத்துக்கொண்டு சரோஜாவுக்கு சமையலில் உதவினான் குமரன். வீட்டு சமையல் நன்றாக இருந்தது. ஹோட்டல் உணவு ஒத்துக்கொள்ளவில்லை. வேலைக்கு ஆள் வைத்தாலும் சமையல் திருப்தியாக இல்லை. என்ன செய்வது என்று திகைத்தனர். ஒரு வாரம் ஓடி விட்டது. அடுத்த நாள் வேலைக்கு செல்ல வேண்டும். உதவிக்கு ஆளும் கிடைக்கவில்லை. இதுபற்றி சுரேஷிடம் தன் கவலையை

 

தண்டனை

 இந்த இராத்திரி குளிருக்கு மதமதப்பாத்தான் இருக்கு ! புது சரக்கு, இன்னும் கொஞ்சம் கிடைச்சிருந்தா, நினைக்கும்போதே எச்சில் ஊறியது அவனுக்கு, கூடாது, இன்னும் கொஞ்சம் அடிச்சிருந்தா பிளாட் ஆயிடுவோம். அப்புறம் தொழில் கெட்டு போயிடும், பின் சீட்டில் உட்கார்ந்திருந்தவன் அப்படியே காலை தூக்கி ஓட்டுநர் சீட்டின் மேல் போட்டு உடம்பை வளைத்து படுத்தான்.தூக்கம் சுகமாய் வந்தது. மணி என்ன இருக்கும், ஒரு மணி இருக்குமா? இந்த நைட் ஷிப்ட் வண்டி ஓட்ட வந்தா இதுதான் பேஜாரு, ஒருத்தன்

 

பூமராங்…(எறிவளைதடு)..!

காலை மணி 8.00… ‘கடுவன்பூனை…டிராகுலா…முசுடு.. பிரம்ம ராட்சசன்’ எல்லா திருநாமங்களும் அந்த கம்பெனியைப் பொறுத்தவரை ஒருவரைத்தான் குறிக்கும்.. கம்பெனியின் MD வீரராகவன்தான் அந்த திருநாமங்களுக்கு சொந்தக்காரர்… இன்றைக்கு அவர் வழக்கத்தைவிட அதிக கோபத்தில் இருந்தார்.. ஒரே மகன் சரண்..அவனை எப்படியும் மருத்துவராக்கியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார்.. காலையில் நீட் தேர்வு முடிவுகள் அவருடைய கனவை தவிடுபொடியாக்கிவிட்டதே.. “உன்னெல்லாம் டாக்டராக்கணும்னு நெனச்சேனே. என்னச் சொல்லணும்… ஸார் இனிமே பைக்கை எடுத்துட்டு ஜாலியா ஊர சுத்துங்க… தங்கம்..உம்பிள்ளைக்கு

 

ஒதுக்குப்புறமாய் ஒரு சில நாட்கள்

 அந்த அதிகாலை நேரத்தில், ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் வந்து இறங்கினான் ஸ்ரீதர். வாசலில் அவனை வரவேற்று அழைத்துப் போவதற்காக அவனது மாமா காத்திருந்தார். “வா ஸ்ரீதர்” மகிழ்ச்சியாக வரவேற்றார் மாமா. “எப்படி இருக்க” “நல்லா இருக்கேன் மாமா, நீங்க எப்படி இருக்கீங்க, அக்கா, அத்தை, பசங்க எல்லாம் எப்படி இருக்காங்க?” “எல்லாரும் நல்லா இருக்காங்க USல சுதா, ஐஷுலாம் எப்படி இருக்காங்க?” “எல்லாரும் நல்லா இருக்காங்க மாமா” என்றபடியே நான் காரில் ஏற மாமா வீட்டை நோக்கி

 

பொன்னம்பலம்..!

 ஒரு பிரளயமே நடந்து முடிந்து மைதிலி வீட்டை விட்டு வெளியேறி அலுவகத்திற்குச் சென்றாள். அமைதியாக கூடத்தில் அமர்ந்து நாளிதழ் பார்த்துக்கொண்டிருந்த பொன்னம்பலத்திடம் வந்தாள் செண்பகம். “என்னங்க…?” முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அழைத்தாள். “என்ன..?” நாளிதழை இறக்கி ஏறிட்டார். “இன்னைக்குத்தானே ஏலம்.?” ‘என்ன ஏலம்?’ – புரியாமல் மனைவியைப் பார்த்தார். “நாம போட்டிருக்கிற ரெண்டு லட்ச ரூபாய் ஏலச்சீட்டு..” “ஆமாம்!” “அது இன்னைக்குப் பணமா என் கைக்கு வரனும்…” “ஏன்..???…” “நம்ம மைதிலிக்கு உடனே திருமணம் முடிச்சாகனும்..!”

 

வாஷிங்டனில் திருமணம்

 (1999ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 6 | அத்தியாயம் 7 மிஸஸ் ராக்ஃபெல்லருக்குக் கைகால் ஆடவில்லை. “மேரேஜுக்கு இன்னும் ஸிக்ஸ்டீன் டேஸ்தான் இருக்குது. இதற்குள் எவ்வளவோ ஏற்பாடு செய்தாகணும். பெண்ணும் மாப்பிள்ளையும் வரணும். என் ஃபிரண்ட்ஸும் ரிலேடிவ்ஸும் வரணும். அவங்களுக்கெல்லாம் ஜாகை ஏற்பாடு செய்தாகணும்” என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள் அந்தச் சீமாட்டி. அப்போது அங்கே வந்த பஞ்சு, “மேடம்! மாசாசூஸெட்ஸிலேருந்து இன்றைக்கு ஈவினிங் உங்க ஃபிரண்ட் பெட்டி

 

உன்மத்தராயிருந்தோம்

 (1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “கச்சி ஏகம்பனே” முறையிட்டுக் கொள்வதற்கு அவரைவிட வேறு யார் இவ்வளவு மலிவாக அகப்படுவார்கள். ஏகம்பனாம், ஏகம்பன்! பக்திப் பெருக்கினால் கண்ணீர் சொரிய , மயிர்க் கால்கள் எல்லாம் குத்திட்டு நிற்க, உணர்ச்சி வசப்பட்டு ‘கச்சி ஏகம்பனே’ என்று அழைக்க வேண்டிய அந்தப் புனிதமான திருப்பெயரை, உம்முடைய ஊத்தை வாயால் வெறுமனே உச்சரிக்கிறீரா? சீ, துப்பிவிடும், அந்த வார்த்தையை. பிரலாபிக்கிறாராம்! துக்கப்படுகிறாராம்! கள்ளிப் புதரும்,

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று ஜெகதீஷ் குமார் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

கமலாதேவி அரவிந்தன்

கமலாதேவி அரவிந்தன் பிறப்பால் மலையாளி, எனினும் தமிழ் பால் தணியாத காதல் கொண்டவர். மிக இளம் வயதிலேயே எழுத ஆரம்பித்து இ்ன்று வரை எழுதி வருபவர். தமிழுக்குக் கிட்டிய தவச்செல்வி என தமிழவேள் கோ. சாரங்கபணியால் பாராட்டப்பெற்றவர்.

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

 
முதலில் ஒன்றை தெளிவு படுத்திவிடுகிறேன். தயவு செய்து நான் சொல்லுவதுதான் சிறுகதையின் இலக்கணம் என்று எண்ணிவிட வேண்டாம். எனது அனுபவத்தில், என்னை செம்மைப்படுத்திக் கொள்ள, நான் முட்டி மோதி அறிந்து கொண்டதை, புரிந்து கொண்டதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவே. ஒரு சிலருக்காவது இவை பயண்பட்டால் அது என் பாக்கியமே.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook Instagram
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2022]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.