சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்
google-play-storeiOS-App-Store

view this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2022/02/07/

ஒரு நாய்ப் பயல்

கொழும்பு கோட்டைப் புகையிரத ஸ்தானத்துக்குள் ஓடி வந்த ஆறு முகம்பிள்ளை, அவதியாக காங்கேசன் துறை நோக்கிக் காலை புறப்படு யாழ்தேவியில் மூன்றாம் வகுப்புப் பெட்டி ஒன்றில் ஏறி ஒரு மூலை சீட்டில் உட்கார்ந்தார். தன் கையில் வைத்திருந்த பார்சலைத் தனக்குப் பக்கத்தில் வைத்து விட்டார். ‘கொழும்பிலும் மனுஷன் சீவிக்க முடியுமா’ என்று மனதுக்குள் எரிந்து கொண்டார். புகையிரதத்தில் ஏறியதும் யாழ்ப்பாணம் வந்து விட்டது போன்ற நிம்மதி. அவருக்குக் கொழும்பு வாழ்க்கை மிக அருவருப்பாகவும் வெறுப்பாகவும் இருக்கின்றது. யாழ்ப்பாணத்திலிருந்து

 

ரசனை

ரகுவுக்கும் அவன் லவ்வர் வசுமதிக்கும் ஒரே லடாய். ரகு ரொம்பக் குழம்பிப் போயிருந்தான். இன்று அவனுடைய அபிமான நடிகரின் புதுப் படம் ரிலீஸாகிறது. ஒவ்வொரு தடவையும் எப்படியாவது முதல் நாளே அவர் நடித்த புதுப் படத்தைப் பார்த்து விடுவான். ஆனால், இம்முறை அது முடியாது என்ற நினைப்பே அவனுக்குக் கசந்தது. அதுதான் வசுமதியுடனான சண்டைக்கும் காரணம்.அவன் குடியிருக்கும் ஏரியாவில், அந்த நடிகர் மன்றக் கிளைச் செயலாளர் ரகுதான். அவனே முதல் நாள் பார்க்காவிட்டால் எப்படி? மற்ற மன்ற

 

சிவனணைந்த பெருமாளின் சிக்கல்கள்

நகருக்குப் பன்னிரண்டு கல் வெளியே இருந்தது அந்த வீடு. கிழமைக்கு இரண்டு மூன்று நாட்கள் சின்னஞ்சிறு வேலைகள் ஏற்படுத்திக்கொண்டு நகருக்குப் போவார். அந்த வேலைகளை அவர் குடியிருக்கும் புறநகர்ப் பகுதியிலேயே செய்யலாம். கொஞ்சம் புதிய காற்று, புதிய முகங்கள், புதுப்புது அனுபவங்கள். பணி ஓய்வு பெற்றுவிட்டார். பணி என்ன பெரிய பணி, லஞ்சம் வாங்க வாய்ப்பே இல்லாத தபால் நிலைய எழுத்தர் பணி. சக ஊழியர் பலரின் மனக்குறை அவர் அறிவார். ஆங்கு ஒரு கல்லை அம்மன்

 

மங்கையர்க்கரசியின் காதல்

தமிழ்ச்சிறுகதையின் தொடக்கப்புள்ளிகளில் ஒன்று என வ.வே.சு.ஐயர் எழுதிய மங்கையர்க்கரசியின்காதல் என்ற சிறுகதைத்தொகுதி குறிப்பிடப்படுகிறது. அதில் உள்ள குளத்தங்கரை அரசமரம் தமிழின் முதல் இலக்கணம் அமைந்த சிறுகதை என க.நா.சு. மரபினர் சொல்வார்கள். தொகுப்பு 1917-இல் வெளிவந்ததாம். சூசிகை குலோத்துங்க சோழனுக்காகக் கலிங்கம் சென்று, வென்று வந்த கருணாகரத் தொண்டைமானுடைய மகளான மங்கையர்க்கரசி என்னும் மங்கை, கருணாகரன் என்னும் வாலிபனைக் காதலிக்கிறாள். அவள் தகப்பன் இறந்துவிட்டதால், அவளுடைய சிற்றப்பன்தான் தற்காலம் அவள் குடும்பத்துக்குத் தலைவன். அவன் அவளை மார்த்தாண்டன்

 

விஸ்வரூபம்

(2019ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தொலைபேசி தொடர்ந்து தொல்லை கொடுக்க. இன்று என்ன ஒரு புதிய தகவல் – மளது சுருதி சேர்க்க விரைந்து போனை எடுத்து…. “ஹலோ! நான் ஜி.பி.கே. பேசறேன்….. ” என்றாள் கமலா. “ஹாய்… நான் சீதா பேசறேன்… எப்படி இருக்க.” “சீ..தா! எத்தளை நாளாச்சு உன்னோட பேசி! எள்ள விசேஷம்? எப்படி இருக்க… உன்னைப் பார்த்து நாளாச்சு.. பார்க்கணும் போல இருக்குடா….. ”

 

பியூன் துரைசாமி

டமார் என்று ஒரு சத்தம். அந்த அலுவலகத்தில் இருந்த அத்தனை பேருடைய கண்களும் ஒரே இடத்தில் வெறித்து நின்றன. மேசையிலிருந்து தவறி விழுந்த கண்ணாடிக் குப்பி, ஆத்திரக்காரனின் அறிவைப்போல தரையில் சிதறிக் கிடந்தது. அருகே உள்ளம் பதற, உடலும் பதற ஒருகணம் தவித்துப்போய் நின்ற துரைசாமி அவசரமாகச் சிதறலைப் பொறுக்கத் துவங்கினார். பல திக்கிலுமிருந்து பலவகையான வசையொலிகள் வெடித்தன. பெரிய கிராணி ஆசோங்கின் குரல் உச்சஸ்தாயியில் ஒலித்தது. டைப்பிஸ்ட் லெங் லெங் கூட ஏதேதோ சொன்னான். அது

 

பாதைகள்

குடிவந்த போது சிவசங்கரன் மாமா தன்னை ஓர் ஓவியர் என்று தான் அறிமுகப்படுத்திக் கொண்டார். அந்த வீடு எட்டுவருடமாகப் பூட்டிக் கிடந்தது. அதைக் கட்டியவர் சிங்கப்பூர்க்காரான டேனியல் வைத்தியர். அவ்வருடமே அவரது மகளும், மனைவியும் கார் விபத்தில் இறந்தார்கள். வைத்தியருக்கு ஆரம்பத்தில் ஒன்றும் தெரியவில்லை. அழுகையும் படுக்கையுமாக இருந்தார். ஊரார் போய் துக்கம் கேட்டார்கள். மூன்று மாதத்தில் எழுந்து நடமாடி ஆறுமாதத்தில் வழக்கம் போல புதுமாப்பிள்ளைக் கோலம் பூணுவார் என்றுதான் எதிர்பார்த்தார்கள். சில கல்யாணத்தரகர்கள் கூட போய்

 

நடுகை

“முன்னால் வாழத் தோப்பாக்கிடந்த இடந்தானே இதெல்லாம்?” முதலில் அவர் மண்வெட்டியை உபயோகிக்கவில்லை. குனிந்து குனிந்து ஒவ்வொரு “பார்த்தீனியம்” செடியாகப் பிடுங்கிப் போடஆரம்பித்தார். “மேலெல்லாம் ஊறல் எடுக்கும்னு சொல்வாங்களே” என்று சொன்னபோது அவர் சிரித்தார். “ஊறல் எடுக்கும்னு பயந்துக்கிட்டே பூடுங்கினா ஊறல் எடுக்கத்தான் செய்யும்” – இரண்டு கையிலும் மாறி மாறிப் பிடுங்கப் பிடுங்க, ஐந்து நிமிடத்துக்குள் இரண்டு கொத்துச் சேர்ந்து விட்டது. இங்கேயிருந்து எட்டித் தூர வீசினது எல்லாம் காம்பவுண்ட் சுவரில் மோதி மண்ணுதிர விழுந்தது. “பச்ச

 

விஷக்கடி

அது மேல்நோக்கி செலுத்திய குரலாகத்தான் வந்தது. கீழ்வீட்டில் யாரும் இல்லை. வெகு நேரமாகக் கூப்பிட்டுக் கொண்டிருப்பது போல் தெரிந்தது. “ஸாரி ஸார்” என்ற அழைப்புக்குரல் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து சுருண்டது. காலை முதல் சுறுசுறுப்பாய் இயங்கிய வீதிவிறைப்பு அடங்குகிற மதியப் பொழுது, சத்தமில்லாமல் அடங்கி விட்ட வீடுகளும், மௌனத்தின் குகைபோல் நீண்டு கிடக்கும் வீதியும், கொஞ்சம் தலைசாய்க்க அனுமதித்தன. இமைகள் வலுக்கட்டாயமாகப் பிரித்து, எதிரேயும், சுற்று முற்றும் பார்த்தாள். எவரும் இல்லை. கீழ்வீடு காலியாக இருந்தது. நல்ல

 

கனவுப் பூதம்

சோகமே உருவாக அமர்ந்திருந்தான் அரசி மதுவந்தி. அகண்ட அவள் விழிகளில் துயரம் தேங்கிக் கிடந்தது. சமீப காலமாக அவளை ஏதோ கவலை பிடித்து ஆட்டி வந்தது. அடிக்கடி, சோர்ந்த முகத்துடன் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தவளாக அமர்ந்து விடுகிறாள். “உள்ளே வரலாமா அரசியாரே?” குரலைக் கேட்ட மாத்திரத்தில் அரசியாரின் முகம் மாறியது. “வா கனகதாரா” என்றாள். வந்தது அமைச்சர் வித்யார்த்தியின் மனைவி கனகதாரா. அரண்மனையிலேயே, சொல்லப்போனால் அந்த பிரத்யுக தேசத்திலேயே மதுவந்திக்கு மிகவும் நெருக்கமானவள் கனகதாராதான். “ஏதோ ஆழ்ந்த

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று கோ.புண்ணியவான்பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

கோ.புண்ணியவான்

கோ. புண்ணியவான் (ஆங்கிலம்: K.Punniyavaan; பிறப்பு: மே 14 1949) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் ஒரு தலைமை ஆசிரியராவார். மேலும் இவர் கெடா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

 
முதலில் ஒன்றை தெளிவு படுத்திவிடுகிறேன். தயவு செய்து நான் சொல்லுவதுதான் சிறுகதையின் இலக்கணம் என்று எண்ணிவிட வேண்டாம். எனது அனுபவத்தில், என்னை செம்மைப்படுத்திக் கொள்ள, நான் முட்டி மோதி அறிந்து கொண்டதை, புரிந்து கொண்டதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவே. ஒரு சிலருக்காவது இவை பயண்பட்டால் அது என் பாக்கியமே
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2022]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.