சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

வேர்கள்

 “அய்யிரு செத்துப் போனதிலிருந்து ஆறு மாசமா பெருமாளு பட்டினிதான், சாமி. புள்ளாகோவுல்லாம் தெனப்படி நடக்குது. பெருமா கோவுலை உட்டுட்டாங்களே!’ என்று அங்கலாய்த்தான் அளவுகார ராமசாமி நாயக்கன். தாத்தா வரதாச்சார், கொள்ளுத் தாத்தா சடகோபாச்சார் மற்றும் ஆசூரி பரம்பரையே பட்டாச்சார்களாக இருந்து கைங்கர்யம்…

யாதுமாகி நின்றவள்..!

 பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று, அரி நரைக் கூந்தல்…

முதல் பயணம்

 +2 எக்ஸாம் முடிஞ்சு 2 நாள்தான் ஆனது. நான் அதுவரை எங்கள் மாவட்டத்தின் தலைநகருக்கு கூட சென்றதில்லை. பள்ளி படிப்பை முடித்தவுடன் எதோ பெரிய சுமையை இறக்கி வைத்ததுபோல் இருந்தது. இனிமேல் எதிர்காலத்தை விருப்பம்போல் அமைத்துக்கொள்ளலாம், எங்கும் செல்லலாம் இன்னும் பல…

அப்பா, நான் உள்ளே வரலாமா…

 அத்தியாயம்-19 | அத்தியாயம்-20 “நான் நிச்சியமா உங்காத்துக்கு காத்தாலேயும்,சா¡யங்காலமும் ஒரு ‘அஸிஸ்டெண்ட்’ வாத்தி யாரே அனுப்பறேன்” என்று சொல்லி விட்டுப் போனார் வாத்தியார். ஒரு ‘அஸிஸ்டெண்ட்’ வாத்தியார் காலையிலும்,மாலையிலும் ராகவன் வீட்டுக்கு வந்து பரம சிவத்திற்கு ‘சந்தியாவந்தனம்’ பண்ணும் மந்திரங்களையும், ‘அபிவாதயே’…

எருதுகட்டு

 (1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இன்று, புதன்கிழமை, ‘எருதுகட்டு’. உக்கிரமான நாள். நிறைகுளவள்ளி அம்மனுக்கு வருஷா வருஷம் ஆவணிக்குள்ளே முளைக்கொட்டு நடத்தி ஆகணும். தவறினால் ஆத்தா ‘கோவம்’ ஊர் தாங்காது. எருதுகட்டு ஒரு…

பைபிள் ஒரு பணப்பயிர்

 வீட்டு சேவல் கூவியது. விடிவெள்ளி மறைந்தது. அடிவானம் சிவந்தது. ஆதவன் உதித்தது. இருள் அகன்றது. இடியாப்பசத்தம் கேட்டது. அதிகாலை எழுந்து ஆறரை மணிக்கு வழக்கம் போல் வீடு சந்திக்கப் புறப்பட்டார் சபை போதகர் பொவனெர்கேஸ் கோபால். வாசல் பெருக்கி, முற்றம் தெளித்து,வரவேற்ற…

மந்திரி இட்ட… தீ!

 உல்லாச விடுதியின் உப்பரிகையில் அரைக் கீற்று நிலா.. மங்கிய ஒளியில் காய்ந்துக் கொண்டிருந்தது. அந்த விடுதி;க்குள்ளிருக்கும் உணவு சாலையும்¸ மது மேசைகளுங்கூட மங்கிய வெளிச்சத்துக்குள்தான் அடங்கியிருந்தன. அந்த மது மேசையைச் சுற்றி அமர்ந்திருக்கும் அவர்கள் கொழு கொழுவென்று கொழுக்கட்டையாக இருந்தார்கள். அந்த…

சம்பாத்தியம்..

 சென்னையில் நண்பனின் மகளை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுப் பார்ப்போம், சந்திப்போமென்று கனவிலும் நினைக்கவில்லை கதிரவன். சின்னக் குழந்தையாய்க் கைகளில் தவழ்ந்தவள். அப்புறம் வளர்ந்து, படித்து… திருமணத்திற்குப் பிறகு தந்தையின் சாவில் சந்தித்ததோடு சரி. அதன் பிறகு இதோ… கதிரவன்… சென்னை தியாகராய…

ஈடு

 (1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காலை பதினோரு மணி. ஜனக் கூட்டம் கணிசமாய்ப் புழங்கும் அந்த மெயின் ரோட்டின் வலைவில் பலகைகளால் தடுக்கப் பெற்ற, சுப்பையனின் டீக்கடையில் வியாபாரம் சுறுசுறுப்பாய் நடந்து கொண்டிருந்தது.…

பாபி

 எட்டு வயதில் நேபாளத்திலிருந்து இந்தியாவிற்கு கடத்திகொண்டு வரப்பட்ட சிறுமிதான் பாபி. “எனக்குத் தினமும் இரண்டு முறை சிவப்புநிற மருந்து கொடுப்பார்கள். அதைக் குடித்ததும் எனக்கு வாந்தி வரும். அந்த மருந்தைச் சாப்பிடவே பிடிக்காது. வேண்டாம் என்று மறுப்பேன், அழுவேன். ஆனால் என்னைக்…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று ஆதவன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

ஆதவன்

 கே. எஸ். சுந்தரம் என்ற இயற்பெயர் கொண்ட ஆதவன் (1942 – சூலை 19, 1987) தமிழக எழுத்தாளர். அறுபதுகளில் எழுதத் துவங்கி, தமிழ்ச் சிறுகதை உலகில் பல குறிப்பிடத் தக்க சாதனைகளை நிகழ்த்தியவர். ஆதவன் 1942 ஆம் ஆண்டில் கல்லிடைக்குறிச்சியில்…

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

சிறுகதை பற்றி சிறுகுறிப்பு – கி.நடராஜா

 ‘மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்ற வாசகம் சிறுகதை இலக்கியத்திற்கு முற்றிலும் பொருந்தும். சிறுகதை உருவத்தில் சிறியது. ஒரு நிகழ்ச்சி அல்லது ஓர் உணர்ச்சிதான் சிறுகதையின் ஆட்சி எல்லை. நான் படித்து அனுபவித்த சில சிறுகதைகளைக் கொண்டு சிறுகதைக்கு அவசியமான குணாம்சங்களை…

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.