சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2021/09/11/

ஸிம்பலின்

 முன்னுரை ஷேக்ஸ்பியர் உலகறிந்த புலவர் என்பது யாவரும் அறிவர். அவர்தம் நாடகங்கள் நவில்தொறும் நயம் பயப்பன. ஆங்கிலத்தில் சார்லஸ் லாம் (Charles Lamb) எழுதிய ஷேக்ஸ்பியர் கதைகளைத் தழுவியே தமிழில் கதைகளும் எழுதப்பெற்றுள்ளன. இப்போது மூன்றாம் புத்தகமாக நடுவேனிற் கனவு (A…

முன்கோபி ராஜா

 வெங்காயபுரம் ராஜாவுக்கு எப்போதுமே முன் கோபம் அதிகம். அதனாலே அவரை எல்லோருமே ‘முன் கோபி ராஜா’, ‘முன்கோபி ராஜா’ என்றே அழைப்பார்கள். அவருடைய உண்மையான பெயர் என்ன என்பது எவருக்குமே தெரியவில்லை. ஆகை யால், நாமும் அவரை முன் கோபி ராஜா’…

வசந்தங்கள் வரும் நேரம்

 பொன் அந்தி மாலையும் தென்றல் காற்றை மெதுவாக பூமிக்கு அனுப்பி வெப்பம் குறைந்துள்ளதா என வேவுபார்த்து வர அனுப்பியது. ஆதவன் தன் வேலை நேரம் முடிந்து விட்டதென ‘டாட்டா’ காட்டி விட்டு பூமிக்குள் ஓடி ஒளிய முயற்சி செய்து கொண்டிருந்தது. தன்னருகே…

அப்பா, நான் உள்ளே வரலாமா…

 அத்தியாயம்-12 | அத்தியாயம்-13 அந்த ‘மானேஜர்’ மிகவும் சந்தோஷப் பட்டு “காசிக்குப் போய் இருந்து வரப் போறேளா.எல்லாரு க்கும் இந்த மாதிரி வயசு ஆன காலத்லே காசிக்குப் போய் இருக்கும் ’பாக்கியம்’ கிடைக்காது.என் அம்மாவும் அப்பாவும் காசிக்குப் போய் இருந்துட்டு ‘பிராணனே’…

தனிமை

 கச கச..வென்ற மக்களும்,வாகனங்களும் சென்று கொண்டிருக்கும் பாதையை சிரமப்பட்டு கடந்து வரும்போது அப்படியே அமைதியாக காட்சியளிக்கும், பெரிய பெரிய பங்களாக்களாக அமைந்துள்ள இப்பகுதியை கடக்கும்போது, நம் மனம் “வாழ்ந்தால் இப்படி வாழவேண்டும்” என்று மனதில் கண்டிப்பாய் தோன்றும். இதில் அதோ இரண்டாவது…

சித்த இங்க வரேளா…?

 ‘சித்த இங்க வரேளா…!’ சன்னமான குரல்ல , கஸ்தூரி , அவர் காதுக்கு மட்டும் கேக்கறாப்படி கூப்படற சத்தம் கேட்டு சுவாமிநாதன் ஒடம்பெல்லாம் அப்படியே சிலுத்து போறது… ‘இதோ ..வரேண்டி…தங்கம்…’ வாய்தான் முணுமுணுக்கறதே தவிர ஒரு அனக்கமும் இல்ல… வெறும் காத்து…

சுவர்

 இந்த நேரம் யார்? இப்படித் தட்டுவது? வீட்டில் இருந்த எங்கள் எல்லோரது மனதுக்குள்ளும் தூண்டி லில் செருகிய புழுவாய் துடித்து நெளிந்து கொண்டிருந்தது இந்த ஒரே கேள்விதான். இந்த நேரம் யார்… இப்படித் தட்டுவது…! போலீஸ் ரிப்போர்ட், அடையாள அட்டை இத்தியாதிகளை…

மலையின் தனிமை

 கருகிய காகித அடுக்குகள் கிணற்றடியில் புரண்டு கொண்டிருந்தன. உடைந்த சில காகிதத்துண்டுகள் காற்றில் நகர்ந்து, காம்பவுண்டு சுவரில் ஏறமுயன்று பின் கீழே விழுந்து சிதறின. ஒரு குச்சியால் பிரிசில்லா காகித அடுக்குகளைப் புரட்டினாள். கறுப்புத் துகள்கள் குபுக்கென்று எழுந்தன தீய்ந்த நாற்றத்தோடு.…

வியாசர் விருந்து – அகஸ்தியர்

 பாண்டவர்கள் அருச்சுனனத் தவம் செய்ய அனுப்பிவிட்ட பிறகு ஒரு நாள் லோமசர் என்கிற பிரம்மா அவர்களைக் காண வந்தார். இந்திரப் பிரஸ்தத்தில் புதிஷ்டிரனைப் பூஜித்து வந்த பிராமணர்களின் கூட்டம் வனவாசத்திலும், கூடவே இருந்து கொண்டு வந்தது. இது ஒருவிதத்தில் கஷ்டமாகவே இருந்தது.…

ஈருடல் ஓருயிர்

 (இதற்கு முந்தைய ‘அர்த்தநாரீஸ்வரர்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). கணவன், மனைவி உறவு பல பிறப்புகளிலும் தொடர்ந்து வரும் என்று நம்பினர். இந்தக் கருத்தை வேறு எங்கும் காணமுடியாது. சங்ககாலத் தமிழர்கள் சொல்லிலும், செயலிலும் இந்துக்களாக வாழ்ந்தனர். காளிதாசன்…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று மகாகவி சி.சுப்பிரமணிய பாரதியார்  பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

மகாகவி சி.சுப்பிரமணிய பாரதியார்

சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921), ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்…

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

புனைகதை: ஐரோப்பிய மரபும் இன்றைய புதிய சாத்தியங்களும் – எஸ். ராமகிருஷ்ணன்

 புனைகதைகளுக்கு என்று திட்டமான வரையறைகள், இலக்கணங்கள், விதிமுறைகள் இருக்கின்றனவா என்ன? நாவல், குறுநாவல், சிறுகதை, குறுங்கதை என்று இன்று நாம் பிரித்துவைத்துள்ள அத்தனையும் ஐரோப்பிய இலக்கியமரபில் இருந்து உருவானவையே. இவை பக்க அளவிலும், கதை குறித்த மேற்குலகின் பார்வையிலும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவர்களே…


தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.