சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

தலைப்பு: மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள் (நகைச்சுவை)
ஆசிரியர்: விந்தன்
பதிப்பகம்: அருந்ததி நிலையம், சென்னை
முதற்பதிப்பு: 2000

http://www.sirukathaigal.com/2021/07/13/

படிப்பதற்கு முன்: கொஞ்சம் ‘தம்’ பிடிக்க வேண்டியிருக்கலாம்; தயார் செய்து கொள்ளவும்.

“அகோ, வாரும் பிள்ளாய்!” - என்னுரை

வழக்கத்திற்கு விரோதமாக ஒரு நாள் என்னைக் கண்டதும், "அகோ, வாரும் பிள்ளாய்" என்றார் ‘தினமணி கதி’ரின் பொறுப்பாசிரியரான திரு. சாவி அவர்கள்.
"அடியேன் விக்கிரமாதித்தனா, என்ன? என்னை 'அகோ, வாரும் பிள்ளாய்!' என்கிறீர்களே?" என்றேன் நான்.
"அது தெரியாதா எனக்கு? ‘பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைகளைப் பின்பற்றி 'மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்’ என்று எழுதினால் எப்படியிருக்கும்?"
"பேஷாயிருக்கும்"
"சரி, எழுதும்!"
"என்னையா எழுதச் சொல்கிறீர்கள்?"
"ஆமாம்."
"எந்த எழுத்தாளரும் தமக்கு உதித்த யோசனையை இன்னொருவருக்கு இவ்வளவு தாராளமாக வழங்கி நான் பார்த்ததில்லையே?"
"அதனால் என்ன, என்னிடம் யோசனைக்குப் பஞ்சமில்லை; எழுதும்!" என்றார் அவர்.
"நன்றி!" என்று நான் அவருடைய யோசனைக்கு நன்றி தெரிவித்துவிட்டு எழுத ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட ஒராண்டு காலம் அது ‘கதி’ரில் தொடர்ந்தது. பலர் அதை விழுந்து விழுந்து படிக்கவும் செய்தார்கள்; சிலர் அதற்காக என் மேல் விழுந்து விழுந்து கடிக்கவும் செய்தார்கள்.
ஏன்?
இதற்கு நான் பதில் சொல்வதைவிட, அமரர் கல்கி அவர்கள் இன்றல்ல– இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னாலேயே சொல்லி விட்டுச் சென்றதை இங்கே நினைவூட்டினாலே போதும் என்று நினைக்கிறேன். என்னுடைய முதல் சிறுகதைத் தொகுதியான ‘முல்லைக்கொடியாள்' என்ற நூலுக்கு முன்னுரை எழுதும்போது ஆசிரியர் கல்கி அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்கள்:
"விந்தன் கதைகளைப் படிப்பதென்றால் எனக்கு மனத்திலே பயம் உண்டாகும்..... அவருடைய கதா பாத்திரங்கள் அனுபவிக்கும் கஷ்ட நஷ்டங்களுக்கெல்லாம் நாம்தான் காரணமோ என்று எண்ணி எண்ணித் தூக்கமில்லாமல் தவிக்க நேரும்....!"
தம்மால் முடிந்தவரை பிறருக்கு நன்மை செய்வதையே தம்முடைய வாழ்வின் லட்சியமாகக் கொண்டிருந்த அந்த அரும் பெரும் உத்தமரையே என் கதைகள் அந்தப் பாடுபடுத்தின என்றால், மற்றவர்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?
அத்தகைய அனுபவத்திற்குத் தெரிந்தோ தெரியாமலோ உள்ளான சிலர் 'மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைக'ளில் வரும் கதாபாத்திரங்களைத் தாங்கள்தான் என்று நினைத்துக் கொண்டு, இரவெல்லாம் நிஜமாகவே தூக்கமில்லாமல் தவித்திருக்கிறார்கள்; பொழுது விடிந்ததும் நிஜமாகவே அவர்கள் என்மேல் விழுந்து கடிக்கவும் வந்திருக்கிறார்கள்.
ஒருவிதத்தில் பார்க்கப் போனால் வேறு யாருக்கு நன்றி செலுத்தாவிட்டாலும் இவர்களுக்கு நான் அவசியம் நன்றி செலுத்தியே ஆக வேண்டும். ஏனெனில், "வாழ்க்கையையும், அதைப் பல வழிகளில் வாழ்ந்து காட்டும் பல்வேறு மனிதர்களையும் அப்படியே படம் பிடித்துக் காட்டுவதுதான் உண்மையான இலக்கியம்’ என்று இக்காலத்து இலக்கிய மேதைகளும், இலக்கிய விமரிசகர்களும் கூறுகிறார்கள். இவர்களுடைய கூற்றை மேலே கண்டவர்கள் என்னைக் கடிக்க வந்ததன் மூலம் மெய்யாக்கியிருப்பதோடு, "மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள் உண்மையான இலக்கிய வகையைச் சேர்ந்ததுதான்" என்றும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்திருக்கிறார்களல்லவா?
மிகுந்த மகிழ்ச்சி; நன்றி.
- விந்தன்

கதைகளின் அட்டவணை
1. முதல் மாடி ரிஸப்ஷனிஸ்ட் ரஞ்சிதம் சொன்ன அழகியைக் கண்டு அழகி மூர்ச்சையான அதிசயக் கதை
2. இரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் மதனா சொன்ன பாதாளக் கதை
பாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன பத்மாவதி கதை
மந்திரவாதி கதை
அகதிகள் கதை
வீர தீர சூரன் கதை
மானங் காத்த மனைவியின் கதை
கிளிக் கதை
காவற்காரன் கதை
கலியாணராமன்கள் கதை
சதிபதி கதை
காடுவெட்டிக் கதை
மெல்லியலாள்கள் கதை
நஞ்சுண்டகண்டன் கதை
தருமராசன் கதை
பார்வதி கதை
பரோபகாரி கதை
கருடன் வந்து கண் திறந்த கதை
பைத்தியம் பிடித்த ஒரு பெண்ணின் கதை
மணமகள் தேடிய மணமகன் கதை
நாய் வளர்த்த திருடன் கதை
தம்பிக்குப் பெண் பார்த்த அண்ணன் கதை
சீமைக்குப் போன செல்வனின் கதை
கனகாம்பரம் சிரித்த கதை
முகமூடித் திருடர் கதை
பாப விமோசனம் தேடிய பக்தர் கதை
3. மூன்றாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் கோமளம் சொன்ன கோபாலன் கதை
மங்களம் சொன்ன கோகிலம் கதை
மணவாளன் சொன்ன மர்மக் கதை
வேலைக்காரி சொன்ன வேதனைக் கதை
4. நான்காவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் கல்யாணி சொன்ன ஆண் வாடை வேண்டாத அத்தை மகள் கதை
பண்டாரம் சொன்ன பங்காரு கதை
5. ஐந்தாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் மனோன்மணி சொன்ன பேசா நிருபர் கதை
பாதாளசாமி சொன்ன புதுமுகம் தேடிய படாதிபதி கதை
6. ஆறாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் மோகனா சொன்ன கலியாணமாகாத கலியபெருமாள் கதை
7. ஏழாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் எழிலரசி சொன்ன ‘ஜிம்கானா ஜில்' கதை
8, எட்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் செளந்தரா சொன்ன கார் மோகினியின் கதை
9. ஒன்பதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் நவரத்னா சொன்ன ஒரு தொண்டர் கதை
10. பத்தாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் கனகதாரா சொன்ன நள்ளிரவில் வந்த நட்சத்திரதாசன் கதை
11. பதினோராவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் வித்தியா சொன்ன ஜதி ஜகதாம்பாள் கதை
12. பன்னிரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் சாந்தா சொன்ன சர்வகட்சி நேசன் கதை
பாதாளம் சொன்ன பத்துப் புத்தகங்கள் கதை
13. பதின்மூன்றாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் சூரியா சொன்ன மாண்டவன் மீண்ட கதை
சப்பாணி சொன்ன காடு விட்டு வீடு வந்த கதை
14. பதினான்காவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் பூரணி சொன்ன சந்தர்ப்பம் சதி செய்த கதை
15. பதினைந்தாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் அமிர்தா சொன்ன வஞ்சம் தீர்ந்த கதை
16. பதினாறாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் கிருபா சொன்ன ஆசை பிறந்து அமைதி குலைந்த கதை
17. பதினேழாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் கருணா சொன்ன கை பிடித்த கதை
18. பதினெட்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் பரிமளா சொன்ன கள்ளன் புகுந்த கதை
19. பத்தொன்பதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் சற்குணா சொன்ன கன்னி ஒருத்தியின் கவலை தீர்ந்த கதை
20. இருபதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் சுந்தரா சொன்ன ஏமாற்றப் போய் ஏமாந்தவர்கள் கதை
21. இருபத்தோராவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் இந்திரா சொன்ன காணாமற் போன மனைவியின் கதை
22. இருபத்திரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் பங்கஜா சொன்ன ஒரு கூஜா கதை
23. இருபத்து மூன்றாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் அபரஞ்சி சொன்ன பேயாண்டிச் சாமியார் கதை
24. இருபத்து நான்காவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் மனோரஞ்சிதம் சொன்ன கடவுள் கல்லான கதை
25. இருபத்தைந்தாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் காந்தா சொன்ன அழகுக் கதை
26. இருபத்தாறாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் கலா சொன்ன அவமரியாதைக் கதை
27. இருபத்தேழாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் மாலா சொன்ன கல்லால் அடித்த கதை
28. இருபத்தெட்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் ஷீலா சொன்ன கால் கடுக்க நின்ற கதை
29. இருபத்தொன்பதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் நர்மதா சொன்ன போலீஸ்காரனைத் திருடன் பிடித்த கதை
30. முப்பதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் முல்லை சொன்ன நட்சத்திர வீட்டு நாயின் கதை
31. முப்பத்தோராவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் நிர்மலா சொன்ன கை குவித்த கனவான் கதை
32. முப்பத்திரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் நித்தியகல்யாணி சொன்ன விக்கிரமாதித்தனைக் கண்ட சாலிவாகனன் கதை

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று விந்தன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

விந்தன்

விந்தன் என்று அறியப்படும் கோவிந்தன் (செப்டம்பர் 22, 1916 – ஜூன் 30, 1975) புதின எழுத்தாளரும், இதழாசிரியரும் ஆவார்.

கோவிந்தன் காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் வேதாசலம், ஜானகி ஆகியோருக்குப் பிறந்தார். சென்னை சூளைப் பகுதியில் கோவிந்தன் ஆரம்பக் கல்வி கற்றார். சிறு வயதிலேயே தந்தையோடு கருமான் (ஆசாரி) வேலை செய்து வந்தார்...

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.