சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

வாழ்க்கை

 அம்பாசமுத்திரத்திற்கும் பாபநாசத்திற்கும் இடையிலுள்ள ரஸ்தா எப்பொழுதும் ஜனநடமாட்டத்திற்குப் பெயர் போனதல்ல. ஆனால், சொறி முத்தையன் கோவில் விழாவன்று வேண்டுமானால் வட்டியும் முதலுமாக ஜனங்கள் அந்த வழியில் நடந்து தீர்த்துவிடுவார்கள். சில சமயம் பாபநாசம் நெசவாலை மோட்டார் லாரி காதைப் பிய்க்கும்படியாகப் புழுதியை…

நாயகன்

 பக்கத்திலிருந்த வங்கிக்குப் போகலாமென்று கிளம்பினார் ராமதுரை. ஒன்பது மணிக்கே நல்ல வெயில் வந்து விட்டது. குடை எடுத்துக் கொண்டு போவதென்பது அவர் வாழ்க்கையிலேயே செய்திராத ஒரு செயல். அவருக்கு மறதி அதிகம் என்பது இதற்கு ஒரு காரணம் என்றாலும், இதை விட…

கடவுளின் உதவிகள்…

 ”குருவே எனக்கு நிறைய கஷ்டங்கள். என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்று சொன்னவனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு. “கஷ்டங்கள் தீர நீ என்ன செய்கிறாய்?” என்று கேட்டார் குரு. “என்ன செய்வது? கடவுளிடம்தான் வேண்டிக் கொண்டே இருக்கிறேன், ஆனால் அவர்தான் எந்த உதவியும்…

தீராப்பகை

 அந்த ஆலமரம் கம்பீரமாக தன் பெரிய கிளைகளையும், விழுதுகளையும் பரப்பி, பெருநிழல் தந்து கொண்டிருந்தது.அதன் கீழே பெருங் கூட்டம். அதில் அனலும், புழுதியும் பறந்து கொண்டிருந்தது. கூடவே கூச்சலும், குழப்பமும். நடுநாயகமாக இருந்த தலைவர் யூதநாதருக்கு சம்பிரதாய வணக்கம் போட்டுவிட்டு, பெரியவர்…

அம்மா

 இன்னும் இரண்டொரு சூரியன் இருந்தால்தான் கட்டுப்படியாகும் என்று பட்டது அவனுக்கு. எலும்பைக் குடையும் நுவரெலியா குளிருக்கு. இந்த ஒரு சூரியன் போதாதுதான். டார்வினின் நண்பரும் விஞ்ஞானியும் தத்துவஞானியுமான ஏர்னஸ்ட் ஹெகல் என்பார், உளசு;சோர்வோ உடற்சோர்வோ உள்ளவர்களுக்கு இது ஒரு மெக்கா என்று…

பழி கரப்பு அங்கதம்

 முல்லைப் புங்கனூர் சங்கரலிங்க அண்ணாவி இசைப் பரம்பரை யில் வந்தவர் வாகைக்குளம் முத்த நல்லாப்பிள்ளை எனும் மகா வித்வான். திருவிதாங்கூர் சித்திரைத் திருநாள் பாலராம வர்மா மகா ராஜா அரசவையில் பாடி பட்டு சால்வையும் நவரத்தின கண்டி ஆரமும் சன்மானம் பெற்றவர்.…

எங்கள் நீதி

 துகளான வெள்ளி நச்சத்திரங்கள் தவறி விழுந்து பூமியெங்கும் மினுங்குகின்ற கடும் குளிர் காலம். வெப்பம் ஆவி போல வெளியேறும் துவாரங்களை மனிதனில் கண்டு பிடித்து வெப்பத்தை அட்டையாக உறிஞ்சும் குளிரின் கொடுமை, அட்டையான குளிரை எதிர்த்துப் பனியுலகில் மனித வாழ்வைக் காப்பாற்ற…

வளையல் துண்டு

 தொட்டதெல்லாம் தங்கமாகும் என்கிறார்களே, அந்த ஜாதி பரமசிவம் பிள்ளை. வாழ்க்கையின் மேடு பள்ளங்கள் யாவும் அவருக்குப் பொன் விளையும் பூமி என்றால் பொய்யல்ல. அவர் மன்னிக்க முடியாத தவறுகள் செய்த இடங்களில் கூட அவருடைய குற்றம் பாவிக்கப்படாமல் அவர் தப்பித்துக்கொள்கிறார். நாங்களிருவரும்…

வெறும்முள்

 சமேரியாவில் கோடைகாலத்தில் மது அருந்தாதவர்களை சோம்பேறிகள் என்கிறார்கள். இந்த பித்துப்பிடிக்கவைக்கும் வெயிலையும் அலையலையாகக் கிளம்பும் தூசுப்படலத்தையும் எதிர்கொள்ள ஒரேவழி குளிர்ந்து புளித்து நுரைத்துக் குமட்டச்செய்யும் யாயினை மண்குவளை நிறைய வாங்கி குடலை நிறைத்துக்கொள்வதுதான். அந்த கடும்துவர்ப்பு நாக்கில் குழைகையில் அபிசீனியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட…

சரோஜாவின் சவுரி

 கும்பகோணத்தில் நான் ரெயிலைப் பிடிக்கும் போது ரெயில் புறப்பட மூன்றே நிமிஷங்கள்தான் இருந்தன. அவசர அவசரமாக டிக்கட் வாங்கிக்கொண்டு இரண்டாம் வகுப்புப் பெட்டியைத் தேடி நடந்தேன். முதலில் கண்ணில் பட்ட இரண்டாம் வகுப்புப் பெட்டியில் இரண்டே இரண்டு பெண்கள் மட்டும் உட்கார்ந்திருந்தார்கள்.…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று தொ.மு.சி.ரகுநாதன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

தொ.மு.சி.ரகுநாதன்

 தமிழ்ப் படைப்பாளி தொ.மு.சிதம்பர ரகுநாதனின் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: • ‘தினமணி’யில் உதவி ஆசிரியர், வை.கோவிந்தன் நடத்திய ‘சக்தி’ இதழின் ஆசிரியர், ‘சோவியத் நாடு’ இதழின் ஆசிரியர் போன்ற பொறுப்புகளில் செயல்பட்டார். • ‘சாந்தி’ என்னும் முற்போக்கு இலக்கிய மாத…

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

சிறுகதை என்பது – அ. முத்துலிங்கத்துடன் நேர்காணல்

 உங்கள் சிறுகதை எப்படி உருவாகிறது? ஒற்றை வார்த்தையிலா, படிமத்திலா, கருத்திலா, நிகழ்வு நோக்கிலா? சிறுகதைகளின் ஆதாரத்தூண்டல் எப்படி நிகழ்ந்திருக்கிறது? உண்மையில் அநேகமாக ஒரு வார்த்தையில் அல்லது ஒரு வசனத்தில் ஏற்பட்ட அகத் தூண்டுதலில்தான் என் படைப்புகள் ஆரம்பமாயிருக்கின்றன. அபூர்வமாக சில சம்பவங்களும்…


தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.