சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

நூலின் பெயர்: விபசாரம் செய்யாதிருப்பாயாக (சிறுகதைத் தொகுதி)

ஆசிரியர்: யோ.பெனடிக்ற் பாலன்

வெளியீடு: விவேகா பிரசுராலயம், கொழும்பு

முதற் பதிப்பு: கார்த்திகை 1995

http://www.sirukathaigal.com/2021/07/11/

விபசாரம் செய்யாது இருப்பாயாக

 என்றும் போல் இன்றும் றீற்றா நடுச்சாம வேளையில் இரவின் ஊமையான இருளில் நடந்து கொண்டிருக்கிறாள். எந்தநாளும், இந்த இரண்டுங் கெட்டான் பொழுதில், அவள் கையில் ஒரு ‘பாக்’கும் தூக்கிக் கொண்டு, தன்னந் தனியாகத்தான் செல்வது வழக்கம். அவளுக்கு இந்த நேரமில்லை, எந்த…

சமுதாய வீதி

 சைக்கிளிலிருந்து இறங்கி அதை உருட்டிக் கொண்டு தமது தகரப் படலை அருகில் வந்த வேதநாயகம் கையைப் படலையில் வைத்துக் கொண்டு, அதைத் திறந்து உள்ளே போக மனம் ஏகாமல் அந்த ஒழுங்கை இருளிலே நின்றவாறு சோர்வுற்ற கண்களால் வீட்டை நோக்கினான். வீட்டுக்கு…

அந்தோனியும் விசேந்தியும்

 “மனுக்குலத்தின் இரட்சகர் எனப் புனைந்து அழைக்கப்படும் யேசு, அர்ச்சசிஷ்ட கன்னிமரியம்மாள் வயிற்றில் இஸ்பிரீத்து சாந்துவினால் கர்ப்பமாய் உற்பவித்து, இன்று இரவு நடுச்சாமம் பன்னிரண்டு மணியில், மாட்டுக்கொட்டிலில், நடுங்கும் குளிரில் பாலகனாய்ப் பிறக்கப் போகிறார். அந்தோனியின் மனமும் அவரின் வருகையையிட்டு, நிறைவெய்திக் களிகூர்கிறது.…

மாரியாயி ஒரு மாடு தானே?

 இன்று யோசப்பின் மகளுக்குத் திருமணம். நானும் போகவேண்டியிருக்கிறது. யோசப்பர் எனக்கு ஒருவகையில் பெரியப்பாமுறை. நான் கிளறிக்கல் எடுபட்டு கொழும்புக்கு வேலைக்கு வந்தபோது அவர் வீட்டில் ஒரு அறையில் தான் இருந்தேன். அது என் அப்புவின் ஏற்பாடு. அங்கு அவர்களோடு இரண்டு வருடங்கள்…

பட்டத்துக்குரிய இளவரசன்

 வெள்ளவத்தை கதிரேசன் கோயிலுக்குக் போய்விட்டு, லொறிஸ் விதியில் உள்ள தன் அறைக்குத் தனியாக நடந்து வந்த தெய்வ சிகாமணி கையில் கொண்டு வந்த செம்பரத்தம் பூக்களை, சுவரில் அவனே தொங்கவிட்டிருக்கும் சிவபெருமான் படத்தில் கொழுவிவிட்டான். கோயிலில் இருந்து புறப்படும் போது வாங்கி…

ஒரு பாவத்தின் பலி!

 கிறிஸ்துராசா கண் விழித்துக் கிடந்தான். “எப்போது விடியும்?” நெற்றியில் வலது கையை மடித்துப் போட்டு கால்களைச் சுதந்திரமாக நீட்டி எறிந்து கொண்டு நீட்டி நிமிர்ந்த கோலத்தில் அந்த இருள் கப்பிய சிறு முகட்டை வெறித்தவாறு கிடந்தான். நீண்டபொழுது அவ்வாறு தான் கிடக்கின்றான்.…

கீழைக்காற்று

 பூரணி தூக்கம் கலைந்து கண்ணிமைகளை மெல்லத் திறந்தான். விடியற் பொழுதின் இளம் படரொளி அந்தப் படுக்கை அறைச் சன்னல் நீக்கல்களூடாகத் தன் விரல்களை நீட்டி உள்ளே தூங்கி வழிந்த இருள் முகத்தை இலேசாகத் துடைத்துக் கொண்டிருந்தது. அவள் இருகைகளாலும் தன் சோம்பிய…

இப்படி எத்தனை காலம்?

 ஆசீர்வாதம் கோப்பாயிலிருக்கும் தன் தங்கச்சி வீட்டுக்குப்போய் விட்டுத் திரும்பிப் பருத்தித்துறை வீதியால் யாழ்ப்பாணம் நோக்கிச் சைக்கிளில் வந்து கொண்டிருந்தான். அப்போது மாலை நாலுமணிக்கு மேலிருக்கும். கவசவாகனத் தொடர் வண்டிகள் தற்செயலாக “வீதிவலம் வந்தால் உயிருக்கு ஆபத்து என்ற பயத்தில் இடைக்கிடை தலையைத்…

ஒரு வண்டியில் பூட்டிய மாடுகள்

 கந்தசாமி பொழுது நன்றாக விடிந்து விட்ட போதும் பாயை விட்டு எழும்ப மனம் வராது, நெற்றியில் கை வைத்துக் கொண்டு குப்புறச் சரிந்து படுத்துக் கொண்டான். பக்கத்து வீட்டு மொட்டை ஜினதாசா கொழும்பு மத்திய சந்தைக்குப் போய், தேங்காய் வாங்கி வண்டியில்…

பட்டம் விடுவோம்

 கொட்டாஞ்சேனையில் ஒரு குச்சு ஒழுங்கையிலே அந்த இடத்திலே மூன்றரைப் பேர்ச் துண்டிலே பழைய வீடு உடைக்கப்பட்டு புதியதாக அந்த மூன்று மாடிக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த மாடிக்க கட்டிடத்தை கட்டுகின்ற “றிச்சார்ட்” என்பவன் யாழ்ப்பாணத்தவன். அவன் யாழ்ப்பாணத்திலே எட்டாம் வகுப்பு வரை…

கரையேறும் மீன்கள்

 ஞானேஸ்வரிக்கு இரவு முழுவதும் நித்திரை தீக்கிரையானது. அவள் கண்களை மூடி நித்திரை கொள்ள ஆசை கொள்கையில் அவளது வாழ்க்கையின் நிச்சயமற்ற தலைவிதியின் கோலங்கள் சிதைவுற்ற சித்திரங்களாக மூடிய கண் இருளில் நிழல்கள் காட்டின. அவள் கட்டிலில் தலையணையைக் கட்டிப்பிடித்தவாறு உடலை இரண்டு…

லூக்கஸ் மாஸ்ரர்

 நான் ஓர் ஏழை. எனக்கு அப்பனைத் தெரியாத காலத்திலே அவர் காலமாகி விட்டார். எனக்கு அம்மாதான் எல்லாம். வசதியான பாடசாலையில் என்னைச் சேர்த்துப் படிப்பிப்பதற்கு அம்மாவிடம் பணம் இல்லை. நல்லூர் ஆசீர்வாதப்பர் ஆரம்பப் பாடசாலையில் அம்மா என்னைச் சேர்த்து விட்டார். நான்…

சபிக்கப்பட்டவனா?

 நான் கொழும்புக்கு ஆசிரியர் நியமனம் பெற்று வந்து ஒரு பிரபல கல்லூரி யில் பட்டதாரி ஆசிரியராகக் கடமையாற்றுகின்றேன். நான் கொழும்புக்கு வந்தது முதல் எனது நண்பனின் உதவியினால் கொச்சிக்கடையில் ஒரு தேநீர்க் கடையின் மேல் மாடியில் வாடகைக்குக் குடியிருக்கிறேன். - அந்தக்…

ஓர் அக்கினிக்குஞ்சு

 நான் 1991 ஆம் ஆண்டு தமிழ்ப் பாடசாலைகளுக்குப் பொறுப்பான பணிப்பாளராக ஹொறணைக் கல்விக் கோட்டத்துக்குச் சென்றேன். அக்கோட்டத்தில் உள்ள பாடசாலைகள் தோட்டப் பாடசாலைகள். அப்பாடசாலைகளின் அபிவிருத்தியைக் கவனிக்குமாறு எமது கல்விப் பணிப்பாளர் எனக்குக் கூறியிருந்தார். அங்குள்ள பாடசாலைகளுக்கு இறப்பர் தோட்டங்களுக்கூடாக நான்கு…

உனக்கு இது போதும்

 தோட்டத்துரைமார் அந்தியில் வந்து விளையாடுகின்ற டென்னிஸ் கிளப் அது. அது கண்டி நகரில் கண்டிக் குளத்துக்குப் பின்னால் செனநாயக்கா சிறுவர் பூங்காவுக்கு அருகில் உள்ளது. அழகும் அமைதியும் மிகுந்த சூழ்நிலை. அந்த “டென்னிஸ் கிளப்” மைதானத்தில் சுப்பிரமணி நின்று வெளியே போகின்ற…

கைதேர்ந்தவர்கள்

 தோட்டத்துரை, தங்கமலைத் தோட்டக் கந்தோரில் தனக்கென அமைக்கப்பட்ட அறையில் உள்ள மேசையின் முன் கெம்பீரமாக அமர்ந்திருந்தார். அவர் நெற்றியில் விழும் வெள்ளைத் தோல் சுருக்கங்கள் அவரின் யோசனையைத் துலாம்பாரமாகக் காட்டின. கொஞ்சத் தூரத்துக்கப்பால், இரு மலைகளுக்கு மத்தியில் அமைக்கப் பட்டிருக்கும் “பக்டரியின்”…

கவரிமான்கள்

 மகாலிங்கசிவத்தார் தன் பழம்பெரும் வீட்டு முன் விறாந்தையின் இடது பக்க மூலையில் அவருக்கெனப் போடப்பட்டுள்ள சாய்மனைக் கட்டிலில் தன் கால்களை அதன் இரு சட்டங்களிலும் பக்கத்துக் கொன்றாகத் தூக்கிப் போட்டபடி, கிழக்கீறுகள் விழுந்த தன் ஏறு நெற்றியில் வலது கையை மடித்துப்…

தேயிலைப் பூ

 தயிலை மலைகளையும் லயங்களையும் மூடி கவிந்திருந்த கும்மிருட்டு கலைந்து பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. பசி கொண்ட நாயைப் போல் ஊளையிடும் பாக்டரிச் சங்கும் ஊதி ஆயிற்று. அந்தத் தோட்டத்தின் அந்த டிவிஷனில் உள்ள பெண்கள் கூடைகளையும் முதுகில் போட்டுக் கொண்டு கணக்குப்பிள்ளை…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று யோ.பெனடிக்ற் பாலன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

யோ.பெனடிக்ற் பாலன்

பெனடிக்ற் பாலன், யோ. (1939 – 1997) ஓர் எழுத்தாளர். இவர் கல்வித்துறையில் முதுகலைமாணிப் பட்டம் பெற்று உளவியல் விரிவுரையாளராகக் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் 1984 முதல் 8 ஆண்டுகள் பணியாற்றிப் பின்னர் பிரதிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றினார்…

Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.