சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

தலைப்பு: அங்கையன் கதைகள் (சிறுகதைத் தொகுதி)
ஆசிரியர்:அங்கையன் கயிலாசநாதன்
பதிப்பகம்: அங்கையன் பதிப்பகம், கொழும்பு
முதற்பதிப்பு: 2000
 
வினோத வார்ப்பு

 கண்களிலே ஒளியிருந்தும், கதுப்புக்களிலே வெடித்த கோபத்தின் கனலில் தன்னையும், தான் சார்ந்த உலகத்தையும் தன்னை மீறிய வெறுப்போடு நோக்கியவண்ணம் வீட்டின் முன் கூடத்திற்கு வந்து; விழிகளில் முதல் விழுந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்தாள் புவனேஸ்வரி அம்மாள். நல்ல தாய்க்கு மகளாகவும், புகழ்…

அலையைத் தாண்டி

 பார்வதி கலங்கிப்போனாள்! யுகத்தின் கணவேகச் சுழற்சியில் ஒன்றுமே அறியாத சிசுவைப் போல, விழி பிதுங்கி அழுதாள். அவளைத் தேற்ற அப்பொழுது ஒருவருமில்லை. மற்றையவர்கள் அழுவதைப் பார்த்துச் சிரிப்பதும், சிரிப்தைப் பார்த்து எரிவதுந்தானே இந்தப் பிறப்பு எடுத்து எல்லோரும் கண்ட அனுபவம்? அவளுடைய…

முகங்கள் இருண்டு கிடக்கின்றன

 பழுக்கக் காய்ச்சிய இரும்பை நெற்றியின் அண்டையில் வைத்துப் பிடித்தாற் போல எறித்துக் கொண்டிருந்த வெய்யில் முகத்தில் கரிக்கோடுகளை கீறிக் கொண்டிருக்க, அந்த எரிப்புணர்வைக் கைக் குட்டையால் துடைத்துக்கொண்டே நடந்து கொண்டிருந்தான் அவன். கொழும்பு வீதிகளை மிகவும் கஞ்சத் தனமாக முற்றுகையிட்டு ,…

இப்படியும் ஒரு மனிதன்

 அவசரமும் பசியும் மதுரநாயகத்தை உலுக்கியெடுத்துக் கொண்டிருந்தன! பகல் பன்னிரண்டு நாற்பத்தைந்துக்கு மதிய போசனத்துக்காக அடித்த கல்லூரி ‘பெல்’ மறுபடியும் அடிக்க ஒரு மணித்தியாலம் வழமைபோலிருந்தது. அந்தக் கல்லூரிக்கு மூன்று மைல்களுக்கு அப்பாலிருக்கும் தனது வீட்டுக்குச் சென்று அன்றைய மதியம் வயிற்றைக் கழுவி…

ஆத்ம விசாரணை

 தாம்பத்யம் என்பது எவ்வளவு சிக்கலானது என்று பரமானந்தத்துக்கு ஏற்கனவே தெரிந்திருந்தும், அதை அனுபவிக்க நேர்ந்த பொழுது அதன் மேடு பள்ளங்கள் எவ்வளவு கொடூரமானவை என்பதையும் உணர்ந்து கொண்டான். அந்தராத்துமாக்களின் இணைப்பில் ஆனந்த மயமான ஒரு வாழ்க்கை தொடராகத் தொடர்ந்து அந்தியஷ்டமாகும் என்பது…

நிலவு இருந்த வானம்

 யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரிக்கு முன்னால் நிரை நிரையாக உயர்ந்து வளர்ந்திருக்கும் மலை வேம்புகளின் கிளைகளில் காகங்களின் கரைவு காதைக் குடைந்து கொண்டிருந்தது. வீதிக்கு இடப்புறமாக ஆஸ்பத்திரி மதிலுடன் அண்டி அமைக்கப்பட்டிருந்த நடை மேடையில் பிரயாணிகள் போக்கு வரவு செய்து கொண்டிருந்தனர். கறுத்து உருகிப்…

அவன் வர்க்கம்

 யாழ்ப்பாணத்து முற்ற வெளியில் முக்கால் வாசியையும் தனதாக்கிக் கொண்டு உறங்கிக் கிடக்கின்றது கோட்டை. அதனிடையே ஓங்கி வளர்ந்த வெள்ளரசு மரம் அதன் மீளா உறக்கத்திற்குச் சாமரை வீசுகிறது. கிழக்கே உயர அமைக்கப்பட்ட மதில்கள் காலை வெய்யிலைக் கோட்டையின் ஒரு புறத்திலும் விழாதவாறு…

ஓ! அந்த இனிமை நினைவுகள்

 நினைவுகளே கனவாக. கனவுகளே வாழ்வாக எண்ணியிருந்த பொழுதும் புலர்ந்துவிட்டது. சுந்தரலிங்கத்துக்கு இந்த வாழ்வு கொடுத்த பரிசு….. நிமிண்டி நிமிண்டி உடலை வளைத்து கணுக்காலுக்கு மேலேயும் காற்புறங்களின் சுற்றாடலிலும் கருகிவிட்ட புண்கள் மறுபடியும் மறுபடியுமாக கொப்புழங்களாக உமிழ்ந்திருந்தன. அவற்றை நகங்களினால் சொறிந்து சொறிந்து…

நாதங்கள் கோடி

 ‘ஹால்டிங் பிளேஸ்’ அல்லாத இடத்தில் வந்தும் வராததுமாகப் ‘பஸ்’ திடீரென்று நின்றது. சிறிது அமைதியாக இருந்த பிராணிகளிடையே தம்மையறியாத பரபரப்பு ஏற்பட்டது. ‘பெல்லை அமுக்கி , அமுக்கி அடித்தாலும் உரிய இடத்தில் நிற்பாட்டாத சாரதி யாருக்காகவோ பரிந்து இடையிலே நிற்பாட்டியது சிலருக்கு…

சுவீப்

 “போனால் ஐம்பது…வந்தால் எழுபதினாயிரமே! நானைக்கு உருட்டுற ஆஸ்பத்திரி சுவீப் டிக்கட் வாங்குங்கள்! கமோன்….கமோன்…!” யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் என்றும் இல்லாதவாறு இன்று கூட்டம் நிறைந்து வழிகின்றது. வெய்யில், மழை போன்றவற்றிலிருந்து பிரயாணிகளைக் காப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த அந்தக் கூடாரத்துக்கு வெளியே அவன் குரல்…

தீரம்

 ‘எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் இனம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ அந்த மூன்று நாய்களைப் பொறுத்த மட்டில் ‘இது’ பொய்தான். அவை ஒன்றையொன்று பார்த்து வாள் வாள்’ என்று குரைத்துக் கொண்டிருந்தன. அவை – கறுவல், வெள்ளை, புள்ளி. கறுவல்…

கடலும் கனவும்

 ஊரிக் காட்டிலிருந்து விடுபட்ட உடுப்பிட்டி வீதி வழியே வல்வெட்டியை நோக்கி வந்து கொண்டிருந்த அந்த இராணுவ ஜீப் சிவகாமியைக் கண்டதும் திடீர் என நின்றது. கடையில் அரை இறாத்தல் சீனி தேயிலைப் பாக்கட்டும் வாங்கி சிவந்த அவளுடைய கைகளுள் திணித்திருந்த அவள்,…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று அங்கையன் கயிலாசநாதன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

அங்கையன் கயிலாசநாதன்

அங்கையன் கயிலாசநாதன் (ஆகத்து 14, 1942 - ஏப்ரல் 5, 1976) ஈழத்து எழுத்தாளர். 33 ஆண்டுகளே வாழ்ந்திருந்த அங்கையன் நாவல், சிறுகதை, கவிதை, ஓவியம், வானொலி நாடகம் போன்ற பல துறைகளில் கால் பதித்தவர். ஒரு பத்திரிகையாளராக ஈழநாடு, வீரகேசரி ஆகியவற்றில் ஊடகத்துறையில் பணியாற்றியவர். சிறிதுகாலம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் தமிழ் வானொலி நாடகத் தயாரிப்பாளராகவும், 'வானொலி மஞ்சரி' இதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறார்.…

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.