சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2021/06/30/

மூவரை வென்றான்

 மதுரையிலிருந்து தென்காகி செல்லுகிற மங்கம்மாள் சாலையில் கல்லுப்பட்டி என்ற ஊருக்கும் ஸ்ரீவில்லிபுத்துாருக்கும் இடையில் ஒரு கிராமம் இருக்கிறது. சாலை தெற்கு வடக்காகச் செல்கிறது. சாலையின்மேல் மேற்கு நோக்கி நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு கைகாட்டி மரத்தில் ‘மூவரை வென்றான்-1 மைல் 4 பர்லாங்கு-’ என்று…

போவது நீதியில்லை

 தொழிற்சாலையைக் கவனிக்க ஒரு சுற்று நடந்துவிட்டு அலுவலகத்துக்குள் வந்ததும் வழக்கம் போலவே ஒரு சலிப்புணர்வு தலைகாட்டியது; செய்கின்ற வேலையிலேயே லயிப்பு அற்றுப் போவது போல… என்ன இது? பெருமூச்சொன்றுடன் கதிரையிலமர்ந்து மேசையில் வைக்கப் பட்டிருக்கும் குழந்தைகளின் படத்தில் கண்களைப் பதித்தேன். சலிப்பை…

யேசுநாதர் என்ன சொன்னார்

 வருடப் பிறப்புக்கு ஒரு வாரம் தான் இருந்தது. நான் பதுளையில் இருந்து புறப் பட்டேன். வழியில் சில வேலைகளை முடித்துக்கொண்டு யாழ்ப்பாணம் போக வேண் டும் என்பது தான் எனது திட்டம். ஆனால்… சேகுவேரா இயக்கத்தினர் அரசாங் கத்துக்கு எதிராகத் திடீர்த்…

ஆண்களின் படித்துறை

 அன்னம்மாள் ஆண்களின் படித்துறையில் அமர்ந்து நீராடிக்கொண்டிருக்கிறாள். படித்துறைக்குக் குளிக்க வரும் ஆண்களின் எண்ணிக்கை அந்நேரங்களில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மத்திய வயது முழுவதையும் அவள் தாண்டிவிட்ட பின்னரும் அவளுடல் இன்னும் வரிசை குலையாமல் இருக்கிறது. தொய்வடையாத முலைகளும் மடிப்பு விழாத இடுப்பும் கொழுத்த…

பிசிறு

 அறக்காய்ச்சும் வெயில். பங்குனி மாதத்தின் பிற்பாதி. சித்திரை பத்தாம் உதயத்துக்குத் தப்பாமல் பெய்யும் மழைக்கான மேகத்திரட்சிகள் ஏதும் வானத்தில் இல்லை . ஏலத்தில் பிடித்த சமுக்காளம் இழந்த சாயம் போல வானம் வெளிறிக்கிடந்தது. அவிழ்த்தடிப்புக் காலம் ஆனதால் மனம்போல மேய்ச்சலுக்கு விடப்பட்ட…

புதிய நட்சத்திரம்

 “என்னை நல்லாப்பாருங்கோ …. பார்க்கச் சொல்லுறன். கவனமாய்ப் பாருங்கோ …. என்னைப் பார்க்க ஆர் மாதிரியிருக்குது? ஏன் யோசிக்கிறிங்கள்? நீங்க சி. ஐ. டி. 686 என்ற படம் பார்க்கவில்லையோ? பார்த்தனீங்கள். எனக்குத் தெரியும். எனக்கு வயது கொஞ்சங்குறைவு தான் –…

கோவிந்தசாமி

 அற்புதம் வீடு, நூறு பேர் படுத்து உருளலாம் போன்ற பெரிய திண்ணை. அதற்கடுத்து மரவேலைப்பாடுகளுடன் கனமான ஒற்றை தேக்குக் கதவு. உள்ளே நுழைந்ததும் இடதுபுறம் சாமியறை. அடுத்து உக்கிராண அறை. பிறகு தட்டு முட்டு சாமான்கள் வைக்கிற அறை. வலப்புறம் படுக்கை…

இலக்கு மாறினால் வெற்றி கிடைக்காது

 “குருவே எனக்கு எந்த வேலையும் சரிப்பட்டு வர மாட்டேன்கிறது. எதை ஆரம்பித்தாலும் அது நஷ்டத்தில் முடிகிறது” என்று கவலையோடு சொன்னவனிடம் ஆறுதலாய் பேசத் துவங்கினார் குரு. “ஏன், உன் வேலைகளில் என்ன பிரச்சனை வருது?” என்ற குருவின் கேள்விக்கு வந்தவன் செய்த…

வீடற்றவன்…

 சனிக்கிழமை இரவு. நேரம் நள்ளிரவைத் தாண்டி விட்டிருந்தது. ரொரோண்டோ மாநகரின் உள்நகர்ப் பகுதியின் பொழுது போக்குப் பிரதேசமான ரிச்மண்ட் டங்கன் பிரதேசம் இன்னும் பரபரப்பாகக் காணப்பட்டுக் கொண்டிருந்தது. மூலைக்கு மூலை கிளப்புகள். ஆட்டமும் பாட்டமுமாக யுவன்கள் யுவதிகளால் நிறைந்திருந்தது. ‘ஹாட் டாக்’…

நாடகத்தின் கடைசி நாள்

 சென்னையிலிருந்து மதுரைக்கு வந்து நாடகம் நடத்தும் குழுவின் விளம்பர போஸ்டர் அது. மாணிக்கத்தின் வீட்டிற்கு எதிரில் ஒட்டப் பட்டிருந்தது.. முதல் வரிசை டிக்கெட் ஐநூறு ரூபாய் என்றார்கள். வாங்கிக் கொண்டு போய் உட்கார்ந்தார். என்ன ஆச்சர்யம்.. அது அவருடைய சொந்தக்கதைதான்.. மோகன…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று தாரமங்கலம் வளவன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

தாரமங்கலம் வளவன்

தாரமங்கலம் வளவனின் முப்பது சிறுகதைளை கொண்ட முதல் சிறுகதை தொகுப்பு, ‘ ஐயனார் கோயில் குதிரை வீரன்’ என்ற தலைப்பில் காவியா வெளியீடாக 2016 இல் வெளி வந்தது…

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

சிறுகதை எழுதுவது எப்படி? – தி.ஜானகிராமன்

 எல்லோரும் நாட்டியம் ஆடுவதில்லை. எல்லோரும் சங்கீதம் பாடுவதில்லை. எல்லோரும் வயலினோ, மிருதங்கமோ வாசிப்பதில்லை. சிலருக்குத்தான் இந்தக் காரியங்களைச் செய்ய முடிகிறது. அந்தச் சிலரிலேயே ஓரிரண்டுபேர் செய்யும் பொழுது நமக்கு மெய் மறந்துவிடுகிறது. தெய்வத்தையே கண்டு விட்டாற்போல புல்லரித்துப் போகிறோம். வேறு பலர்…

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.