சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

iew this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2021/06/28/

அந்த நாய்க்குட்டி எங்கே?

 1 ஹாலிவுட் நட்சத்திரம் ஜிப்பி தமிழ்நாட்டின் தலை நகரான சென்னைக்கு வருகை தந்திருந்ததல்லவா? அதைப் பற்றி அன்றைய தினசரியில் செய்தி வெளியாகியிருந்தது. அந்த மனிதக் குரங்கை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தான் பூபாலன். அவனுக்கு வாயெல்லாம் பல்லாகிவிட்டது. சிரிப்பு…

இரண்டு ஊர்வலங்கள்

 மரணத்தோடு போராடிக்கொண்டிருந்த சமயத்திலும் விதி அவளுடைய படுக்கையை அந்த அரசமரத்தடியிலிருந்து மாற்றி வைக்க விரும்பவில்லை யென்றே சொல்லவேண்டும். அவளுக்குப் பக்கத்தில் ஸ்வாமி மட்டும் உட்கார்ந்திருந்தான். சற்றுத் தொலைவில் ஒரு கிழவன் விழுந்து கிடந்தான். மற்றவர்களை அங்கே காணவில்லை. ஸ்வாமி அடிக்கொருதரம் அவளைக்…

பட்டாம்பூச்சியைத் தேடி

 எனது சுய விவரம்: பெயர் விண்முகிலன். அஸ்ட்ரா யுகத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் பேசும் இளம் யுக ஊர்தி ஆய்வாளன். யுக ஊர்தி என்பது காலத்தின் ஊடே பின்னோக்கி மட்டும் செலுத்தக்கூடிய ஒரு விண்கலம். மிக மிக ரகசியமாகப் பாதுகாக்கப்படும் ஒரு…

அப்பா, நான் உள்ளே வரலாமா…

 அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 “நான் சொல்ல மறந்துட்டேன்.நம்ப மாப்பிள்ளே கூட நான் முதல் தடவை அவா ஆத்துக்குப் போனப்ப அவர் என் கிட்டே ‘என் அப்பாவும்,அம்மாவும் திடீர்ன்னு ஒரே நாள்ளே ‘தவறிப் போனது க்கு’ அப்புறமா,அவா ‘காரியங்களே’ எல்லாம் நான் பண்ணின…

பூலோகம் திரும்பி வந்தால்!

 “நீங்கள் இல்லாமல் உலகம் இல்லை” யாராவது சொன்னால் நம்பி விடாதீர்கள். உலகம் என்றில்லை, நம் குடும்பமே ஆகட்டுமே, இவனாலத்தான் இந்த குடும்பமே ஓடுது, சொல்லிவிட்டால், பெருமையாக நினைத்துக்கொள்கிறோம்.ஆனால் நாம் போய் விட்டால் எதுவும் நிற்பதுமில்லை, படுப்பதுமில்ல்லை. அதுபாட்டுக்கு தூக்கி போட்டுவிட்டு காலன்…

மன்னிப்பாயா..?

 பவித்ரா வெறி பிடித்த மாதிரி அலமாரியிலிருந்த அத்தனை துணிகளையும் வெளியே உருவிப் போட்டாள்டிராயரிலிருந்த புத்தகங்கள்ஃபைல்கள் செக் புக்.. முக்கிய பில்கள் எல்லாம் வெளியில் வந்து விழுந்தது கடைசியில் கையிலகப்பட்ட ஒரு கவரையும்ஆல்பத்தையும் எடுத்துக் கொண்டு சோஃபாவில் பொத்தென்று அமர்ந்தாள் ஆல்பத்தை பிரிக்கும்போது…

ஈசா உபநிஷத் கதை

 ஒரு முறை , வசிஷ்டர், துர்வாசர், விஸ்வாமித்திரர் போன்ற முனிவர்கள், மேரு மலையில் எல்லா முனிவர்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள் . பெரிய ஞானிகள், முனிகள், ரிஷிகள் அந்த சந்திப்புக்கு வர வேண்டும் எனக் கட்டளை . வராவிட்டால், பெரிய தோஷத்திற்கு,…

இவளும் பெண்…!

 மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டு கட்டிலில் சலனமின்றிப் படுத்திருக்கும் மகன் கணேசுக்கு அருகில் இடிந்து சிலையாக அமர்ந்திருந்தார் தணிகாசலம். இப்போதுதான்… இவரோடு சம்பந்தம் செய்து கொள்ளப் போகிற சாந்தமூர்த்தி அந்த அறைக்குள் நுழைந்தார். கவலையுடன் மகனைக் கவனித்துக்கொண்டிருந்த தணிகாசலம் அவர் வந்ததைக் கவனிக்கவில்லை.…

தண்டனை

 பக்கத்து வீட்டு இளம்பெண் குறிஞ்சி இறந்து போனதாகச் செய்தி வந்த போது அடித்துக் கொண்டு ஓடினான் கணேசன். ஓலைக்குடிசையின் குறுக்குக் கம்பில் தூக்குப் போட்டு பிணமாகத் தொங்கினாள். அவளின் அம்மா “ஓ” வென்று அலறித் துடித்து அழுது கொண்டிருந்தாள். மரணித்து விட்ட…

அப்பாவின் மரணம்

 (இதற்கு முந்தைய ‘ஜே.கிருஷணமூர்த்தி (ஜேகே)’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). அன்றைய ஹிண்டுவில் வேறு செய்திகள் எதையும் வாசிக்காமல் அப்படியே எழுந்து அவன் மாடி பால்கனிக்கு போய்விட்டான். விருதுநகர் வீட்டில் அந்தப் பால்கனி அவனுக்கு மிகவும் முக்கியமான பிரத்தியேகமான…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று சிவக்குமார் அசோகன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

சிவக்குமார் அசோகன்

 நான் குமுதத்தில் ஒரு பக்கக் கதைகள்(பல வருடங்கள் முன்பு) எழுதியிருக்கிறேன். ஜோக்ஸ் முயற்சி செய்திருக்கிறேன். குமுதம், கல்கி, குங்குமம் இதழ்களில் பிரசுரமாகியிருக்கின்றன. இணையத்தில் கட்டுரைகள் எழுதி வருகிறேன். sivakumarasokan16.wordpress.com என்ற வலைப்பூவில் என்னுடைய சில கட்டுரைகளைக் காணலாம். ஃபேஸ்புக், ட்விட்டரிலும் சற்று…

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

சிறுகதை என்பது – புதுமைப்பித்தன்

 சிறுகதை என்பது தற்காலத்தில் (1934ல்) எழுந்த மேனாட்டு சரக்கு, சிறுகதை என்றால் சிறுகதை கொஞ்சப் பக்கங்களில் முடிந்து விடுவது என்பதல்ல. சிறுகதை என்ற பிரிவு இலக்கியத்தில், அதில் எழுதப்படும் பொருள் பற்றியது ஒரு சிறு சம்பவம் ஒரு மனோநிலை ஆகிய இவற்றை…

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.