சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

iew this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2021/06/16/

பாரத நாடு பழம்பெரும் நாடு

 கிருஷ்ணன் அன்று மிகவும் உற்சாகத்தில் இருந்தார். அரசாங்க நிறுவனத்தைச் சார்ந்த எஃகு உற்பத்திச் சாலையின் விற்பனைப் பகுதித் தலைவராக இருந்த அவருக்கு அரைமணி முன்புதான் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி கிடைத்தது. ஓர் அயல்நாடு தங்கள் ரயில்வே நிறுவனத்துக்காக எஃகு வேண்டி சர்வதேச…

புதிய சக்தி

 அந்தப் பள்ளியில் நவநீதன் வாங்கி வந்த அபுடவையைப் பற்றித்தான் பேச்சாக இருந்தது. ‘டார்க் மெரூன்’ கலர் பட்டுப்புடவை அனைத்து ஆசிரியைகளையும் கவர்ந்தது. “சூப்பர் செலக்ஷன் சார்… இந்தப் புடவையைப் பார்த்ததும் உங்கள் மனைவி அசந்துருவாங்க…” என்று சாவித்திரி டீச்சர் கூறும்போது, நவநீதனுக்குப்…

முடியாத கதைகள் பல…

 தலைத்துண்டை இறுக்கமாகத் தலையில் சுற்றிக் காது ஓரத்தில் சொருகியபின், இரு கைகளாலும் தலைப்பாகையைச் சரிசெய்து கொண்ட வேலாயுதம் சட்டைப்பையில் இருந்த கடிதங்களையும் மறுபடி வெளியே எடுத்துச் சரி பார்த்து வைத்துக்கொள்கிறார். அந்தக் கடிதங்களிடையே ஒரு சிறு தணி முடிப்பும் இருக்கிறது. அது…

பைரவ தரிசனம்

 மஸ்கட்டில். இருந்து வந்த வாசகர் அன்பளித்துச் சென்ற ஸ்மார்ட் ஃபோன் நோண்டிக்கொண்டிருந்தார் கும்பமுனி. அப்படி எல்லாம் கொடுப்பார்களா என்று கேட்டால் என்னத்தைச் சொல்ல? ‘வேணும்னா சக்கை வேரிலேயும் காய்க்கும்!’ முல்லைக்கொடிக்குத் தேர் ஈந்த பாரியை வள்ளல் என்பதுதானே தமிழ் மரபு. மனதில்லாதவன்…

இளவரசி வாழ்க!

 1 தமதுரத் தமிழ் வாழ்த்துகின்ற பொங்குவிரி காவிரியின் வாழ்த்தைப் பெற்றது அல்லவா சோழவள நாடு! புலிக்கொடி வாகை சூடிக் கொடிகட்டி பறந்த சோழமண்டலத் திற்கு, அன்றைக்கு வழித்தடம் அமைத்துக் கொடுத்த முதல் மரியாதைக்குரியது சிருங்காரபுரி நாடு… அந்நாட்டின் பூலோக சொர்க்கமாகத் திகழ்ந்த…

காணாமற் போனவர்

 எனக்கு எதிரே உட்கார்ந்திருந்த அந்த மனிதர், நான் தேடிக்கொண்டிருந்த பாவெல் தோழரைக் கொல்வதற்குத் தானே உத்தரவிட்டதாகச் சொல்லிவிட்டு ஒரு கோணல் சிரிப்புடன், பாதி நரைத்துப்போன அவரது மீசையில் படிந்திருந்த ‘பியர்’ நுரையை அழுத்தித் துடைத்துக்கொண்டார். நான் அவரையே வெறித்துப் பார்த்தவாறு இருந்தேன்.…

முன்னோடி

 வாசலில் மணி அடிப்பது கேட்டதும் தரையில் படுத்திருந்த முகுந்தன் சட்டென்று எழுந்து கொண்டான். கலைத்து. அவிழ்ந்திருந்த லுங்கியைச் சரி செய்து கொண்டான். வலது கை விரல்களால் தலைமுடியை வாரி விட்டுக் கொண்டான். கதவைத் திறந்தான் முருந்தன். எதிரே, வெளியே தாஸ் நின்று…

ஸ்பரிசம்

 சின்னப்பா ரெட்டியாரின் உடல், அவர் எப்போதும் படுத்திருக்கும் அந்த வெளிர் நிற சுமைதாங்கிக் கல்லின் மீதே கிடத்தப்பட்டிருந்தது. அரைகுறைத் தூக்கத்தில் அவசரமாய்த் தட்டி எழுப்பிவிட்டதைப்போல, கண்களைச் சிவக்கச் சிவக்கத் தேய்த்துக்கொண்டே எழுந்த சூரியன் ஏரிக்கரையின் பின்னிருந்து மசமசவென முளைக்கத் தொடங்கியிருந்தான். சுற்றிலும்…

மேனகை

 வாலிப வயதின் கனவுகள் நிறைந்த ‘மனக்காதல் ஆயின் விஸ்வாமித்திரர் மனிதர்களின் மத்தியில் வாழ்வதை விடுத்து கொடிய கானகத்தை நாடி வந்திருக்க வேண்டியதில்லை. ஆயிரம் மோகினிகளின் மத்தியிலேயே கனவு கண்டபடி காலத்தைக் கடத்தி விட்டிருக்கலாம். ஆனால் அவர் வாலிபப் பருவத்தைக் கடந்து பல்லாண்டுகளாய்…

கனகாங்கியின் மனம்

 தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத் தின் மீது ஏறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின் னர் கீழே இறங்கி அவன் அதனைச் சுமந்தி கொண்டு மயானத்தை நோக்கிச் செல்கையில் அதனுள் இருந்த வேதாளம்…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று செங்கை ஆழியான் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

செங்கை ஆழியான்

 செங்கை ஆழியான் என்ற புனைபெயரால் பரவலாக அறியப்படும் க. குணராசா (சனவரி 25, 1941 – 28 பெப்ரவரி 2016) மிகப்பெருமளவு நூல்களை வெளியிட்ட ஈழத்து எழுத்தாளராவார். புதினங்கள், சிறுகதைகள், புவியியல் நூல்கள், வரலாற்று ஆய்வுகள், தொகுப்பு முயற்சிகள் மற்றும் பதிப்புத்துறை…

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

சிறுகதை – அதன் அகமும் புறமும் – சுந்தர ராமசாமி

 தமிழாலயமும் அகில இந்திய வானொலி நிலையமும் இணைந்து மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பாக நடத்தப்பட்ட சிறுகதைப் பயிலரங்கில் ஆற்றிய உரை – 25.03.95 சிறுகதை என்பது ஒரு தனியான கலை உருவம். அதை எல்லோரும் எழுதிப் பார்க்கலாம். ஆனால்…

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.