சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

 

தலைப்பு: தோணி - சிறுகதை தொகுப்பு

ஆசிரியர்: ..இராசரத்தினம்

பதிப்பகம்: அரசு வெளியீடு, கொழும்பு

முதற் பதிப்பு: ஜூலை 1962

 

முன்னுரை

இக்கதைத் தொகுதியிலே தேசியம்' இருக்கலாம். 'முற்போக்கும்' 'யதார்த்த மும்' கூட இருக்கலாம். '. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக உலகச் சிறுகதை இல்க்கியத்திற்கு ஈழத்தின் பங்காக அமையக் கூடிய ஒரு சில கதைகளாவது இத்தொகுதியில் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

இந்த நம்பிக்கையோடு தான் சிறுகதை இலக்கிய ரசி கர்கட்கு ஓர் ஈழத்து எழுத்தாளனின் பங்காக இத் தொகுதியைத் தருகிறேன்.

இக்கதைகளைத் தங்கள் பத்திரிகைகளில் வெளியிட் டும், அவைகளைப் புத்தகத்திற் சேர்த்துக் கொள்ள அனு மதி தந்தும் உதவிய பத்திரிகை ஆசிரியர்கட்கு என் நன்றி.

கடைசியாக, ஆரம்பத்தில் கூறிய இலக்கிய ரசிகரும். நண்பருமான திரு எம். . ரஹ்மான் மட்டும் இல்லா விட்டால் இப்புத்தகமே இல்லை அவருடைய முயற்சி யின் வடிவந்தான் இப்புத்தகம். அவருக்கும் நன்றி எனச் சம்பிரதாயத்தை ஒட்டி நான் சொல்வதை விட, ஓர் நல்ல புத்தகத்தை வெளிக் கொணர்ந்தவர் என்று இல க்கிய உலகம் அவரைப் பாராட்டினால்...

பாராட்டும் என்பது என் திடமான நம்பிக்கை.

வணக்கம்,

தங்கள்.

. . இராசரத்தினம்

மூதூர். 26-7-62

இந் நூலில் அடங்கியுள்ள சிறுகதைகள்:

http://www.sirukathaigal.com/2021/06/11/

பாலன் வந்தான்

 “எங்கள் வீட்டுக்குப் பாலன் வருவானா?” என்று ஆயிரத் தடவை கேட்டுவிட்டாள் பிலோமினா. அன்று விடிந்தால் நத்தார்த் திருநாள். “நிச்சயமாக வருவார்” என்ற பதிலைத்தான் திருப்பித் திருப்பிச் செல்லிக்கொண்டிருந்தாள் அம்மா. “அவர் எப்போது அம்மா வருவார்?” “இரவைக்குத்தான் வருவார்.” “அவர் வந்தா எனக்குக்…

கலைஞனும் சிருஷ்டியும்

 புத்ர, நத்தையின் வயிற்றிலும் முத்துப்பிறக்க லாம். இலக்கியம், சிற்பம், சித்திரம் போன்ற அருங் கலைகளும், ஓரோர் வேளை மக்களிற் கீழானவன் என்று மதிக்கப்படுபவர்களிடத்திருந்தும் பிறக்கின்றன. கலை ஞர்களும் இரத்தமும் – சதையும், உள்ளமும் – உணர்வும் கொண்ட மனிதர்களே. ஆசாபாசங்கள் அவர்கட்கும்…

அறுவடை

 ‘தையும் மாசியும் வையகத்துறங்கு’ என்ற வாக்கியம் ஆரம்பப் பாடசாலைக்குத் தானும் சென்றிராத அப்துல்லாவிற்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால், ஊருக்குள்ளே இருக்கும் தன்குச்சிலே, வழுதி கூடலிற் தங்கிய சத்திமுற்றப்புலவரைப் போலக் கையையும் காலையும் முடக்கிக் கொண்டு போர்த்துக் கிடந்தால் இதமாக இருக்கும் என்பது…

மனிதன்!

 அவளுடைய பெயர் எனக்குத் தெரியாது. அவளுடைய மேனி புடம் போட்ட தங்கம் போல இருந்ததினாலும், சௌகரியத்திற்காகவும் நான் அவளைத் தங்கம் என்றே அழைக்கிறேன். தங்கம் அவனை இராசா என்றழைத்த காரணத்தினால் நானும் அவனை இராசா என்றே எழுதுகிறேன். இராசாவுக்கு எங்கே என்ன…

பாசம்

 ஆயிரத் தலைகளையும் உயர்த்திக்கொண்டு சீறி வரும் நாகேந்திரனைப் போலக் கடல் பொங்கிக் குமுறியடித்துக்கொண்டிருந்தது. அநாதியான கடவுளைப்போல ஓயாது குமுறியடித்துக் கொண்டிருக்கும் பொங்குமாங் கடலின் இரைச்சலோடு போட்டியிட்டுக்கொண்டு, மரக் கலந் தரும் செல்வப்பொருட்டால் தாம் பிறந்த நிலத்தை விட்டுப் போந்த பரதேசிகள் பலரின்…

தோணி

 கரு நீலமாகப் பரந்து கிடக்கும் வங்காள விரிகுடா வைப் பார்த்தவாறு எங்கள் கிராமம் இருக்கிறது. கிரா மம் என்றா சொன்னேன்? பூமி சாத்திர, சமூக சாத்திர நியதிப்படி கிராமம் என்றால் எப்படியிருக்கு மென்று எனக்குத் தெரியாது. சோழகக் காற்றுச் சரசரத்துக் கொண்டிருக்கும்…

பெண்

 ஆநந்தனுக்கும் திலகத்துக்கும் கல்யாணமாகி இர ண்டு மாதங்கள் கூட ஆகியிருக்காது. ஆதர்ச தம்பதிகள் என்று சொல்வார்களே அந்தச் சொற்றொடருக்குப் பொருளாகவும் விளக்கம்போலவும் அவர்கள் வாழ்த்தார்கள். ‘கல்யாணமானதும் காதல் கருகிவிடுகிறது’ என்று குறும்புத்தனமாகவோ அல்லது அர்த்தத்தோடோ எழுதும் இந்த இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்நாட்டு…

குடிமகன்

 தம்பலகாமம் இரண்டு விஷயங்களுக்குப் பெயர் பெற் றிருந்தது. முதலாவதாகக் கல்வெட்டுடைய தென் கைலைநாதனான பிறவாத பெம்மான் கோயில் கொண்டது அங்கு இரண்டாவதாகக் குளக்கோட்டன் கட்டிய கந்தளாய்க் குளத்து நீர் பாய்வதும் அந்தப் பகுதியிற்தான். இந்தப் பெருமைகளைக் கொண்ட தம்பலகாமம் இவ்விரண்டு பெருமைகளிலும்…

ஒற்றைப் பனை

 பக்கத்துக் காணிக்குள் இருந்த பனையிலிருந்து பனம்பழம் ஒன்று எங்கள் வீட்டு முற்றத்திற் பொத் தென்று விழுந்தது. தாழ்வாரத்திற் கிளித்தட்டு விளை யாடிக் கொண்டிருந்த நான் ஓடிப்போய் அந்தப் பழத்தை எடுத்துக் கொண்டு வந்து அதன் தோலை இழுத்துப் பிய்க்கத் தொடங்கினேன். அப்போது…

கோகிலா

 மங்கி மடியப்போகும் விளக்கு பக்குப் பக்’ கென்று தன் கடைசிச் சுவாலையை வீசுவது போல, ஆவணிமாத த்து அந்தி வெய்யில் தன் கடைசிக் கிரணங்களை முற்ற த்திற் சுளீரென்று அடித்துக் கொண்டிருந்தது. சாப்பி ட்டு விட்டுச் சுக நித்திரை செய்து கொண்டிருந்த…

பிரிவுபசாரம்

 சித்திரை மாதத்து உச்சி வெய்யில் கொளுத்திக் கொண்டிருந்தது. அந்த வெய்யிலின் அகோரத்தில் அச்சுற்றுப்புறம் யாவுமே, நேர்மையற்ற விமர்சனத்தைச் சகித்துக் கொள்ள மாட்டாத எழுத்தாளனின் இதயத்தைப்போல வெந்து புழுங்கிக் கொண்டிருத்தது. தெருவிற் சொறி நாய் கூடப் போகவில்லை; காகங்கூட ஆகாயத்திற் பறக்கவில்லை. இந்த…

ஏமாற்றம்

 வெள்ளைக் கமலத்தில் வீற்றிருந்த சரஸ்வதி தேவி அல்லும் பகலும் அநவரதமும் அவளைப் பூசித்து, அவ ளைப் பெருமைப்படுத்துவதிலேயே திருப்தியடைந்திருக்கும் தன் பக்தனான எழுத்தாளனை எறிட்டு நோக்கினாள். இருண்ட இரவை ஒளி செய்யத் துடிக்கும் புகை மண்டிய அகல்விளக்குக்கு முன்னால் ஏகாந்தத்தில் ஏதோ…

தருமம்

 பேதுரு ஓர் பிறவிக் குருடன். அவனை நான், முதன் முதல் கிண்ணியாத் துறையிலேதான் சந்தித்தேன். அன்று மட்டக் களப்பிலிருந்து திருகோணமலைக்கு வந்துகொண்டு இருந்தேன். பங்குனி மாதமாதலினால் நல்ல வெயில் கொளுத்திக்கொண்டு இருந்தது. தென் ஆப்பிரிக்கக் கதையொன்றில் வரும் கதாநாயகன் திடீர் என்று…

நம்பிக்கை

 வயல் வெளியின் கிழக்குக் கரையோர மாக ஓடும் வாய்க்கால் மேட்டில் அவள் குத்திக்கொண்டிருந்தாள். அவளின் தீட்சண்யமும் திடமும் கொண்ட பார்வை அந்த வயலிடையே வயித்திருந்தது. வாய்க்காலின் கரை யிலே உயர்ந்து கவிந்திருந்த மருத மரத்தின் பழுத்த இலைகள் தண்ணீரில் பொட்டுப் பொட்டென்று…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று அசோகன் குப்புசாமி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

வ.அ.இராசரத்தினம்

வ. அ. இராசரத்தினம் (சூன் 5, 1925 – பெப்ரவரி 22, 2001) புகழ் பெற்ற ஈழத்து சிறுகதை, நாவல் எழுத்தாளர். சுருக்கமாக வ. அ. என அறியப்படுபவர். ஈழநாகன், கீழக்கரை தேவநேயப் பாவாணர், வியாகேச தேசிகர் என்னும் பல புனைபெயர்களிலும் எழுதியுள்ளார்.

திருகோணமலை மாவட்டம், மூதூரைப் பிறப்பிடமாக கொண்ட இவரின் பெற்றோர் வஸ்தியாம்பிள்ளை, அந்தோனியா. தாமரைவில் றோமன் கத்தோலிக்கப் பாடசாலையிலும் பின்னர் மூதூர் புனித அந்தோனியார் பாடசாலையிலும் கல்வி கற்றார். 1952 இல் மேரி லில்லி திரேசா என்பாரைத் திருமணம் புரிந்தார்...


தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.