சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

தலைப்பு: நிஜங்களின் வலி சிறுகதைத் தொகுப்பு
ஆசிரியர்: மு.பஷீர்
பதிப்பகம்: மீரா பதிப்பகம், கொழும்பு.
முதற் பதிப்பு: 23.05.2005

http://www.sirukathaigal.com/2021/06/04/

கை எட்டும் தூரம்

 ஒரு பிடிப்பற்ற மனநிலையுடன் நடந்து கொண்டிருந்தான் இவன். ஹிருதயத்தினுள் சில தீர்மானங்கள் உள்ளறைந்து வலுவேறியிருந்தன. இந்தச் சமூகமும் , சுயவாழ்வும் கேள்விகளாய் அச்சுறுத்தின என்பது மட்டுமல்ல! ஒவ்வொரு தனிமனித வாழ்வு சார்ந்த காயங்கள், பிறமனிதனது பார்வையில் பெரிதாய் உறைக்கவேயில்லை என்பது யதார்த்தம்.…

பாம்பு மனிதன்

 உயரக்கிளை பரப்பியிருந்த மரத்தை வெறித்துப் பார்த்தார் முஸ்தபா வாத்தியார். சாய்வு நாற்காலியில் நீட்டி நிமிர்ந்து சரிந்து கிடப்பது அவருக்கு சௌகரியமாக இருந்தது. மனதிற்குள் ஏதோ ஒரு அழுத்தம் இனம் புரியாத நெருடல் விரக்தியாய், வெறுமையாய் மூளைக்குள் கவிந்தன. ஜனமும், மரணமும் மனித…

மைமூன் ஆச்சி

 மைமுன் ஆச்சியை அறியாதவர்கள் யாரும் எங்கள் கிராமத்தில், இருக்க முடியாது. எனது உம்மம்மா அத்தனை பிரசித்தம். இந்தப் பிரபலத்தின் ஆதார சுருதியே அவளது மனித நேயம்தான் என்பதை என்னால் அறுதியிட்டுக் கூறமுடியும். யாருக்கு சுகக்கேடு, யார் வீட்டில் ஜனாஸா, எங்கெல்லாம் கலியாண…

குழாயடியும் குறுகுறுக்கும் நினைவுகளும்

 உறக்கம் கலைந்து வெகு நேரமாகியும், ஜன்னலினூடே தெரிந்த அதை, வெறித்துப் பார்த்து புன்முறுவல் பூத்தேன். மின்சாரம் செத்த இரவுகளிலும், காலை, மாலை, எப்போதுமே, அதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அலுப்பேயில்லை. “எதை?” என்று நீங்கள் அறிந்துவிடத் துடிப்பதை என்னால் அனுமானிக்க முடிகிறது.…

தலைப்பிறை

 அருள் சுரக்கும் ரம்ழான் மாதம் இது. எல்லோரது முகங்களிலும் உற்சாகம் அணையுடைத்துப் பாய்கிறது. நன்மைகளைக் கொள்ளை அடிக்கும் மாதமிது என்பார்கள். இருக்காதா பின்னே? நன்மைகளை எதிர்கொள்ளலாம். ஆன்மீகச் சுகத்தை அருகணைத்துக் கொள்ளலாம்; என்பது விசுவாசிகளின் கணிப்பு. மேகத் திரை விலகும் முன்னிரவில்,…

வீட்டில்

 தெப்பமொன்றில் இருந்தபடி கடற்காற்றை அனுபவித்துச் சூழலை வெறித்துப் பார்த்தான் பீட்டர். மஞ்சள் கிரகணம் கவிந்து, உறைக்கத் தொடங்கிய முன் காலைப் பொழுது, எதிலும் பிடிப்பற்ற ஒரு வெறுமை உணர்வு அடிமனதை நெருடியது. நீர்கொழும்பு கடற்கரை, எப்போதும் போல் இரைச்சலும் சந்தடியுமாக ஓசைகொண்டு…

இது இவர்கள் உலகம்

 மேல் மாடியில் நின்று சிரத்தையோடு பாதையை வெறித்துப் பார்த்தேன். கீழே நெடுஞ்சாலை பரபரப்பாகிக் கொண்டிருந்தது. விரையும் வாகனங்களும், பாதசாரிகளுமே நகரின் பிரதான பாத்திரங்கள். வேலை தேடித் தேடி அலைந்து அலுத்து, இறுதியில் அறிந்த ஒருவரின் அனுசரணையில், ஒருவாறு வேலை கிடைத்தது. இது…

ஒரு ஜன்னலோர இருக்கை

 சூரியன் சுட்டெரித்துக் கொளுத்தும் உச்சிப்பொழுது வீட்டு வேலைகளை சற்றே முடித்துவிட்ட ஆசுவதத்தில் இளைப்பாற ஜன்னலருகில் வந்து அமர்ந்து கொண்டேன். தபால்காரனின் மணியோசை எப்போது கேட்கும்? என்ற ஆர்வத்தில் காத்துக்கிடக்கிறேன். தபால்காரனின் வருகையை எதிர்பார்த்துக் காத்துக் கிடப்பது என்பது, இப்போது நமது சமூகத்தின்…

அக்னி மழை

 கல்லூர்க் கிராமம் விடியலுக்கு முன்னே பரபரப்புக்கு ள்ளாகியிருந்தது. இதமான சீதளக்காற்று மரங்களைத் தழுவி வந்து வீசியது. முன் தினம் இரவு அர்த்தராத்திரியில் நிகழ்ந்த அந்தக் கொடூரம், கிராமவாசிகளின் உரையாடலுக்கு கருப்பொருள் ஆனது. சம்பவத்தை செவியுற்ற கணத்திலிருந்து என் மனம் அதிர்ந்து துடிக்கிறது.…

மிருக உத்தி

 குளிரில் விடிகாலை உறைந்திருந்தது. சோர்வும் உறக்கக் கலக்கமுமாக உற்சாகம் பிறக்கவில்லை. வாசல் திண்ணையில் அமர்ந்தவாறு, சூழ்ந்திருந்த மரம், செடிகளை அர்த்தமின்றி வெறித்தேன். எங்கும் புகை கவிந்த பனிமூட்டம். மாமரத்தி லிருந்து முத்துத் துளிகள், சொட்டுச் சொட்டாய் தரையை நனைத்தன. கூ…..வ்!, கூ………வ்!,…

மீட்பு

 வானொலியிருந்து நிகழ்ச்சிக்கான அழைப்பு வந்திருந்தது. இன்று உடம்பிற்கு சரியில்லை. நோய்க்கான சமிக்ஞை தென்பட்டது. மேனிக்குள் அரக்கன் புகுந்து கொண்ட வலி, உளைச்சல், எல்லாம் நீரிழிவு நோயின் உபாதை. உடலெங்கும் பரவியிருந்தது. இன்றைய யுகத்தில் சர்க்கரை நோயை விலைக்கு வாங்கிக் கொண்டு சங்கடப்படுவோர்…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று மு.பஷீர் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

மு.பஷீர்

மு.பஷீரின் ‘இது நித்தியம்’ என்ற சிறுகதைத் தொகுதி அவரது நாலாவது சிறுகதைத் தொகுதியாக அவரது சொந்த கல்ஒழுவைக் கிராமத்தில் வெளியிடப்படுவது இலக்கிய உலகுக்கும் கல்ஒழுவைக் கிராமத்திற்கும் மறக்க முடியாத வரலாற்று நிகழ்வாகும். ஏற்கனவே மீறல்கள் (1996), தலைமுறை இடைவெளி (2003), நிஜங்களின் வலி (2005) என்று ஒரு சீரான இடைவெளியில் அவரது தொகுப்புக்கள் வெளிவந்து 4வது வெளியீடாக ‘இது நித்தியம்’ இன்று கல்ஒழுவை மக்கள் முன்னிலையில் வெளியிட்டு வைக்கப்படுகின்றது.…

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.