சிறுகதைகள் (Short Stories in Tamil)
www.sirukathaigal.com
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஜனனம் இல்லாத ஆசைகள்

ஸரஸு எச்சில் இட்டுக் கொண்டிருந்தபோது அப்பா உள்ளே நுழைந்து சமையல்கட்டு வாசப்படியில் தலையை வைத்துப் படுத்திருந்த அம்மாவிடம் வந்து நின்றார். பாதி எச்சில் இடுகையில் கையை எடுத்தாலோ தலையை நிமிர்த்தினாலோ அம்மாவுக்குக் கோபம் வந்துவிடும். “எச்சில் இடறப்போ பராக்கு என்னடீ?” என்பாள்.…

குழந்தைமை

பேருந்தின் ஆட்டத்தைவிட அவரின் ஆட்டம் மிகுதியாக இருந்தது. பேருந்தில் கூட்டம் குறைவுதான். ஆனால், இருக்கைகள் நிறைந்துவிட்டன. அவரைத் தவிர யாரும் நிற்கவில்லை. அவருக்கு மட்டும் இருக்கை கிடைக்கவில்லை. கிடைத்தாலும் அவர் அமர்வார் என்று உறுதியாகக் கூற முடியவில்லை. அவர் நிற்பது போலவே…

வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!

அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 நரீடா விமான கூடம் ‘ஜே ஜே’ என்று பரபரத்தது. இன்னும் சிறிது நேரத்தில் ஏர் இண்டியாவில் வந்து இறங்கப் போகும் இந்தியன் வங்கி சேர்மன் கோபாலகிருஷ்ணனை வரவேற்று, அரண்மனைக்கு அழைத்துச் செல்ல ஜப்பான் சக்ரவர்த்தி தமது அந்தரங்கக்…

இதுவும் ஒரு காதல் கதை

கொழும்பு, கோட்டைப் புகையிரத நிலையத்தின் ஐந்தாவது இலக்க மேடையில் ஆண்களும் பெண்களுமாக யாழ்ப்பாணத்தை நோக்கிச் செல்லும் பிரயாணிகள் நிறைந்து நிற்கின்றனர். வழக்கமாகவே கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் போகும் ஆட்கள் அதிகம் தான். அன்று வழக்கத்தை விட அதிகமாக இருந்தது கூட்டம். “கொழும்பு…

ஊனம் மனதுக்கல்ல

நேரம் அதிகாலை நாலரை இருக்கும். பக்கத்து வீட்டுச் சேவல் இரு தடவை கூவி அமைதியாகிவிட்டது. இன்னும் பறவைகள் விழித்துக்கொள்ள வில்லைப் போலும். அமைதியாக இருந்தது. மார்கழி மாதக் குளிருக்கு போர்வையைத் தலைவரை மூடிக்கொண்டு படுத்திருந்த சந்திரன் விழித்துவிட்டான். ஆனால் கட்டிலில் இருந்து…

முகநூலும் முத்துலட்சுமியும்

அன்று மத்தியானம் பொழுதே போகாது, முகநூலுக்குள் நுழைந்தாள் அமிர்தா. பழைய கதைதான். தங்களுடைய குடும்பத்தோடு இணைந்த புகைப்படம், உறவினரின் அறுபதாவது அல்லது எண்பதாவது பிறந்தநாளை ஒட்டி நடத்திய விழா. இதெல்லாம் முன்னேபின்னே பார்த்தறியாத `நண்பர்’களுக்காக. பிடிக்கிறதோ, இல்லையோ, எல்லாவற்றையும் அவர்களும் பாராட்டிவைப்பார்கள்.…

அந்த ஒரு நாள்

“சார், கொஞ்சம் wait பண்ணுங்க. வயசானவங்களுக்கு மொதல்ல பண்ணிடறோம். காலைல இருந்து சாப்பிடாம வந்துருப்பாங்க. சுகர் பேஷண்ட்ஸ் வேற. அதுக்கப்பறம் உங்களுக்கு டெஸ்ட் பண்ணறோம். ஓகே-வா?” என அந்த மலையாள நர்ஸ் சொன்னபோது மறுப்பேதும் சொல்ல மனம் வரவில்லை. அழகிகள் என்ன…

துக்கமே செத்துப் போச்சு..!

பத்தடி தூரத்தில் வரும்போதே….குடிசை வாசலில் துவண்டு உட்கார்ந்திருந்த நான்கு வயது பிள்ளையைப் பார்த்ததும் செல்லாயிக்கு நெஞ்சு திக்கென்றது. எட்டி நடை போட்டு அருகில் சென்றாள். “அம்மா ! பசிக்குது !…” அருண் வயிற்றைப் பிடித்துக் கொண்டு அழுதான் இவளுக்குப் பெற்ற வயிறு…

இப்படியும் நடக்கலாம்

அமெரிக்காவின் அழகிய நகரமொன்றின் நதிக்கரை ஓரத்தில், மாலை நேர சூரியன் மேற்கிலிருந்து பார்க்க, ரம்யமான அந்த பொழுதில் அவன் கையை இறுகப்பற்றிய அவள், ஏதோ சொல்ல வாய் திறந்தாள்.. “எது வேணா சொல்லு… ஆனா நீ இப்போ சொல்லப்போறத மட்டும் சொல்லாத”…

காதல் கல்யாணம்

காலையில் கல்யாணியிடமிருந்து ஈ மெயில் வந்தது. ராகவன் பரபரப்புடன் மெயிலைத் திறந்து படித்தான். “டியர் ராகவன், நம்முடைய ஐந்து வருடக் காதல், இந்த வருடமாவது நம் கல்யாணத்தில் முடியும் என்று நினைக்கிறேன். தை பிறந்து விட்டது. இனி நம் காதலுக்கு வழியும்…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று வே.சிவராஜா பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

வே.சிவராஜா

 கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியக் குழுவும் இலங்கையர்கோன் பரிசில் நிதியமும் இணைந்து வீரகேசரி பத்திரிகையின் அனுசரணையுடன் நடாத்திய இலங்கையர்கோன் நினைவு அகில இலங்கைச் சிறுகதைப் போட்டியில்   வேலாயுதம் சிவராஜா”தமிழ்பௌத்தன்” எனும் தனது சிறுகதைக்காக முதலிடம் பெற்று எமக்குப் பெருமை சேர்த்துள்ளார். ஊர்காவற்றுறை…

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

சிறுகதை என்றால் என்ன? – சுஜாதா

  சிறுகதை என்பது சிறிதாக உரைநடையில் விவரிக்கப்பட்ட கதை.     A short fictional narrative in prose.  வேறு எந்த வரைமுறைக்குள்ளும் நவீன சிறுகதை அடங்காது. சிறுகதைகளில் ஒரு பொது அம்சம் இருக்கிறது. படித்த இரண்டு நிமிஷத்தில் மறந்து…

சில குறிப்புகள்:

சென்ற மாதம் பார்வையிட்டோர்:40,942
மொத்தம் பார்வையிட்டோர்:2,958,917
சென்ற மாதம் படிக்கப்பட்ட கதைகள்:113,585
மொத்தம் படிக்கப்பட்ட கதைகள்:10,925,841

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.