சிறுகதைகள் (Short Stories in Tamil)
www.sirukathaigal.com
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

தண்ணீரும் கண்ணீரும்சரஸ்வதி வெளியீடுமுதற் பதிப்புஜூலை 1960

டொமினிக் ஜீவா - சிறுகதைத் தொகுப்பு - தண்ணீரும் கண்ணீரும் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது. இந்த தொகுப்பில் இருந்து 10 கதைகள்:
கரும்பலகை

 வகுப்பறையிலிருந்து எழுந்து கொண்டிருந்த சமுத்திர ஆரவாரம் தீடீரென்று கரைந்து, மடிந்து, மறைகிறது. இடுகாட்டின் சலனமற்ற அமைதி – வகுப்பெங்கும் ஆழ்ந்த மௌனம் நிலவுகின்றது. கந்தவனம் வாத்தியார் குமுறும் எரிமலையாய்த் தோன்றுகிறார், அவர் கண்கள் அக்கினிக் கெந்தகக் குழம்பைக் கக்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றன.…

ஞானம்

 யாழ்ப்பாணம். மூன்றாம் குறுக்குத் தெரு, கிட்டங்கி ரோட்டினைக் கட்டித் தழுவும் சந்தி. அதன் மேற்குப் புறமாகப் ‘பவுண் மார்க்’ ஓட்டுக் கிட்டங்கி. கிட்டங்கியிலிருந்து பத்து கஜ தூரத்தில், தனிமையில்-விரகதாபத்துடன் தவிக்கும் பெண்ணைப் போன்று காட்சி தரும் – முனிசிப்பல் மின்சாரக் கம்பம்.…

முற்றவெளி

 “ஹை , ஹை!…த்தா!…த்தா ! சூ…! சூ…!” என்று வாயால் ஓசை செய்த வண்ணம் கையில் பூவரசந் தடியுடன் குறுக்கும் மறுக்குமாக நாற்புறமும் சிதறி ஓடிய மாடுகளை சின்னக் குட்டியன் வரிசைப் படுத்தித் தனது க்ட்டுப் பாட்டிற்குள் கொண்டுவரப் பகீரத முயற்சி…

சிலுவை

 நாவல்களையும் சிறுகதைகளையும் திடுதிப்பென்று ஆரம்பிக்க வேண்டும். அப்பொழுது தான் அவை விறுவிறுப்பாக வும், சுவாரஸ்யமாகவும் இருக்குமாம். இப்படி யாரோ ஒரு பெரிய எழுத்துப் புலி சொல்லி இருக்கும் அநுபவ இலக்கியத்தில் எனக்கு அபார நம்பிக்கையுண்டு; மதிப்புண்டு. ஆனால், இது நாவலல்ல; சிறுகதையுமல்ல…

தீர்க்கதரிசி

 பாரிஸ்டர் பரநிருப சிங்கர் பாமரனாக மதிக்கப்பட்டார். நேற்றைக்கு இருந்த கௌரவம்? அந்தஸ்து ? இராஜ நடை போட்ட மிடுக்கு ? எல்லாம் ஒருசேர நொறுங்கி… தாங்க இயலாத நெஞ்சக்குமுறல். பெரிய மனிதத் தனத்திற்கே எமதூதுவனாக விளங்கும் விழுக்காடு… ‘சே! என்ன வாழ்க்கை…

காலத்தால் சாகாதது

 நூற்றி ஐம்பது ஆண்டுகளாக நம்மீது-இலங்கை மக்கள்மீது-ஆட்சி செலுத்திய ஆங்கிலேயர், கட்டிக் காத்த ஆட்சி அமைப்பு. இயந்திரத்தின் உபயோகமுள்ள இரும்புச் சக்கர அங்கங்கள் தான் விதானைமார்கள். இந்தத் திருக் கூட்டத்தினர், இப்பொழுது பல்லிழந்த பாம்புகளைப்போல தங்கள் அதிகாரங்கள் பலவற்றை இழந்திருப்பினும், இந்த உண்மையை…

செய்தி வேட்டை

 காக்காய் பிடிப்பது ஒரு கலையென்றால், கயிறு திரிப் பதும் ஒரு கலைதான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருப்பவர்தான் நமது நித்தியலிங்கம் அவர்கள். கயிறு திரிப்பது என்பது அவருக்கு வாலாயமாக அமைந்துவிட்ட கலை மட்டுமல்ல, தொழிலும்கூட. நித்தியலிங்கம் ஒரு நிருபர். தினசரிப்…

தண்ணீரும் கண்ணீரும்

 யாழ்ப்பாணப் பட்டினத்துக் கடற்கரையோரப் பகுதிகளில் ஒரு நாளாவது குடியிருந்தவர்களுக்குத்தான் – அதன் பெருமை சட்டென்று தெரியும்; அதன் அருமை நன்றாகப் புரியும். மருந்துக்குக்கூட நல்ல தண்ணீர் குடிப்பதற்குக் கிடைக்காமல், அந்தச் சுற்றுப்பகுதியில் உள்ளவர்கள் சாதாரண மக்கள் படும்பாட்டைப் பார்க்கும் பொழுது நமக்கே…

வெண் புறா

 “உங்களுக்கு என்ன வேண்டும்?”- பம்பரமாகச் சுற்ச் சுழன்று சேவை செய்து கொண்டிருந்தவள், அந்தச் சீன மரப் பார்த்து ஆங்கிலத்தில் கேட்கிறாள். உதட்டில் தெளியும் சிரிப்புடன் குழைந்து வெளிவரும் சொற்களின் ஓசை அந்நியமாக இருப்பினும், அவை மனித குலத்தை இணைக்கும் சங்கிலி அசைவின்…

கொச்சிக் கடையும் கறுவாக்காடும்

 “மாத்தயா…” டாக்டர் இராஜநாயகம் திரும்பிப் பார்த்தார்.. ஹார்பர் தொழிலாளி அப்புஹாமி அங்கு நின்றுகொண்டிருந்தான். அப்புஹாமி ஏதோ சொல்ல விரும்பினான். ஆனால் வார்த்தைகள் மட்டும் கோர்வையாக வாயைவிட்டு வெளி வரத் தயங்கின. மீண்டும் “மாத்தயா……மாத்தயா……” என்று மட்டும் அழைத்தான்; கூப்பிட்டான். “என்னப்பா, என்ன…

Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.