Title சிறுகதைகள் செய்திமடல்
  செப்டம்பர் 2015 / மடல் #12
இந்த வாரம்:

வணக்கம்

சிறுகதைகள் - இது உங்களுக்கான தளம். சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்.

சிறுகதைகள் தளத்தின் வாயிலாக இதுவரை 305 ஆசிரியர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். அனைத்து உள்ளங்களுக்கு மிக மிக நன்றி.

ஆசிரியர் பகுதி

இந்த மாதம் ஆசிரியர் பகுதியில், எஸ்.கண்ணன் அவர்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

இதுவரை 50க்கும் மேற்பட்ட சிறுகதைகள் வார, மாத இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. முதல் நான்கு சிறுகதைகள் ஆனந்த விகடனில் பிரசுரமாயின.அடுத்து வரிசையாக குமுதம், கல்கி, அமுதசுரபி, ஓம் சக்தி, கலைமகள், மங்கை, சாவி, இதயம் பேசுகிறது இதழ்களில் பிரசுரமாயின.

மேலும் படிக்க..

கதைகள்

செப்டம்பர் 2015 மாதம் வெளியான சிறப்பு கதைகள்:

  • வெளிச்சம் - அ.மு.ஹாரீத் (1425)
  • நாற்று - நிர்மலா ராகவன் (1452)
  • என் வீடும் தாய்மண்ணும் - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (1141)
  • தாக்கம் - எஸ்.கண்ணன் (1886)
  • நங்கூரி - குரு அரவிந்தன் (5740)
  • அந்த இரு கண்கள் - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்(2404)
  • அன்பெனும் மாமழை - சுதாகர் ஜெயராமன் (1967)
  • பறக்க கொஞ்சம் சிறகுகள்…- கனகராஜன் (2700)
  • சாந்தி அக்காவின் ஆவி - எஸ்.ஸ்ரீதுரை (2611)
  • கதறீனா - பொ.கருணாகரமூர்த்தி (1703)

மேலும் படிக்க...

கதைகளில் ஒன்று

கடவுச்சொல்

கதையாசிரியர்: அ.முத்துலிங்கம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: Oct 21, 2014
பார்வையிட்டோர்: 5747

அன்று காலை விடிந்தபோது, அது அவர் வாழ்க்கையில் மிகவும் ஆச்சர்யமான நாளாக மாறும் என்பது சிவபாக்கியத்துக்குத் தெரியாது. செப்டம்பர் மாதத்தில் இலைகள் நிறம் மாறுவதைப் பார்க்க அவருக்குப் பிடிக்கும். அவர் வசித்த நான்காவது மாடி, மரங்களின் உயரத்தில் இருந்தது இன்னொரு வசதி. ஜன்னலைத் திறந்தவுடன் குளிர்காற்று வீசியது.

மேலும் படிக்க...
 
அறிந்துகொள்ளுங்கள்

எழுத்துக்கலைபற்றி இவர்கள்...மாக்சிம் கார்க்கி

1. கலைஞன் என்பவன் தன் நாட்டின், தன்னுடைய சமுதாயத்தின் செவியாக,கண்ணாக, நெஞ்சமாக விளங்குபவன். தான் வாழும் காலத்தின் உண்மைகளை எடுத்துக் கூறுபவன்தான் கலைஞன்.

2. எழுதத் தொடங்குபவர்களுக்கு இலக்கிய வரலாறு பற்றிய பரிச்சயம் இருக்க வேண்டும்; எந்தக் கலையானாலும் அதன் வரலாற்றினையும் அதன் வளர்ச்சியினையும் அறிந்திருக்க வேண்டும்..

மேலும் படிக்க...

உங்களுக்கு மேலும் கேள்விகள் இருந்தால், எங்களை தொடர்ப்பு கொள்ளுங்கள்.

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.

இத்தளம் சிறுகதை எழுத்தர்களின் களம். பிரசுரங்கள் கனவு எனும் நிலை மாறி யாரும் தன் எழுத்தை பதியலாம் என்பது நிஜம்.

உங்கள் கருத்து

முன் காலத்தில் அனைத்து வார மற்றும் மாதாந்திர பத்திரிக்கைகளில் நிறைய சிறுகதைகள் வரும். ஆனால் இப்பொழுது சிறுகதைகளைப் படிப்பதே  அபூர்வமாக இருக்கிறது. எனவே மாதம் ஒரு புத்தகமாக சுமார் பத்து அல்லது பதினைந்து சிறுகதைகளை நீங்கள் வெளியிட்டால் என்ன? அதே போல் சிறுகதை போட்டிகள் வைத்தாலும் மிகவும் பயனாக இருக்கும். பரிசு முக்கியமல்ல. எல்லோருக்கும் எழுத வேண்டும் (அ) படிக்க வேண்டும் என்கிற உந்துதல் உண்டாகும். செய்வீர்களா?. - A.Ravi

சிறுகதை பற்றி

சில குறிப்புகள்:

செப்டம்பர் மாதம் பார்வையிட்டோர்:36,125

மொத்தம் பார்வையிட்டோர்:
896,214

செப்டம்பர் மாதம் படிக்கப்பட்ட கதைகள்:136,887 

மொத்தம் படிக்கப்பட்ட கதைகள்:3,921,530

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.
Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2015]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content

To unsubscribe click here, to edit your profile click here.