சிறுகதைகள் (Short Stories in Tamil)
www.sirukathaigal.com
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

பவள மல்லி

 உண்மையான மரத்தை பார்ப்பதைவிட, ஓவியத்தில் உள்ள மரத்தை பார்த்து இரசிக்கும் மனநிலை கொண்ட மனிதர்களின் மத்தியில்,சந்திரா எப்போதும் உண்மையான இயற்கை மணம் வீசும் மரங்களோடும், மலர்களோடும் வாழ்வை சுவைத்துக் கொண்டிருந்தாள். வயது அறுபதை நெருங்குவதால், கையை உயர்த்தி, உடம்பை நேர்படுத்தி, மூச்சை…

முன்னாள் காதலி

 சில வருடங்களுக்கு முன்பு. ‘ஹ்ஹூம் இந்த மூஞ்சிக்கெல்லாம் ஒரு அட்ட பிகர் கூட இனியும் செட்டாகாவே செட்டாகாது’னு என்று அவநம்பிக்கை நாக்குத்தள்ளி போய் இருந்த சமயத்தில்தான் அந்த அம்சமான பிகரை சந்திக்கும் வாய்ப்பொன்றும் எனக்கு அமைந்தது. அன்று கொழும்பிலிருந்து ஊருக்கு ரயில்…

சலனங்களும் கனவுகளும்

 அப்பாவின் முகத்தில் எப்படி முழிப்பது? பயத்தினால் கண்கள் இருண்டது. ‘இண்டைக்கும் அடிவிழப்போகுது’ மாமி முந்தி அடிவிழாமல் தடுத்தவ.அவவும் உயிரோட இல்லை.அம்மா பாவம்..அப்பாவின் கோபத்திற்கு முன்னால் அவளால் ஒன்றும் செய்யமுடியாது. அப்பாவும் கோபம் வந்தால் சப்பாத்துக் காலால்,தன் இடுப்பு பெல்ட்டைக் கழற்றி அதுவும்…

கொரோனாபோய்…கொ(கு)ரங்குவந்த கதை!

 (நிஜமாகக்கூடிய ஒரு கற்பனைக் கதை) தமிழ்நாடு மாநிலத்தில் கோயமுத்தூர் அருகே, காடும் மலையும் சூழ்ந்த ஒரு சிறு நகரம், வானரமூர் (கற்பனை பெயர்). குரங்குகள் அதிகம் வசிக்கும் காட்டுப் பகுதி. ஐந்து வருடங்களுக்கு முன்பு தான் ரியல் எஸ்டேட் கம்பெனி ஒன்றின்…

பரணியின் கல்யாணம்

 நீ மச்சக்காரன்யா, உனக்கு வரப்போற பொண்டாட்டி இளவரசி மாதிரி இருப்பா, நல்லா பெரிய இடத்துல இருந்துதான் வருவா” ஜோசியக்காரர் சொன்னதை அப்படியே சொக்கிப்போய் கேட்டுக் கொண்டிருந்தான்பரணி. ஆனால், நாட்கள் வருடங்களாய் ஓடிக்கொண்டே இருந்தன இளவரசியைத்தான் இன்னும் காணோம். “குடும்பம் என்ற இரயிலில்…

வள்ளி கட்டிய குருவிக் கூடு!!!

 அகில் கொஞ்சம் படபடப்பாக இருந்தான்…. அவனுக்கே வேடிக்கையாக இருந்தது…. எத்தனை நேர்காணல்..எத்தனை பிரசன்டேஷன்..???? இந்தியாவின் தொழிலதிபர்கள் பட்டியலில் முதலிடம்…..!!!! ‘Valli’s Nest ‘M.D. …CEO.. .. பின் இப்போது எதற்கு நடுக்கம்….???? ரியல் எஸ்டேட் பிஸினசில் அவனைத் தெரியாதவர்களே இந்தியாவில் இருக்க…

பாப்பாவுக்கு ஒரு நாள் கழிகிறது

 மகிழ்ச்சியான கனவில் திளைத்திருந்த பாப்பாவுக்கு அம்மாவின் அதட்டலான அழைப்புக் குரல் நாராசமாய் விழுந்தது. அவளின் இனிய கனவினை அது கலைத்து நினைவுக்கு இழுத்து வந்தது. “பாப்பா …பாப்பா எழும்பு. எழும்படி நேரம் ஐஞ்சாச்சு…” பாப்பா சோம்பல் முறித்தபடி படுக்கையில் இருந்து எழுந்தாள்.…

புலம்பல்.!

 சேகர் இடிந்து போய் உட்கார்ந்திருந்தான். அவனின் முழு ஜாதகமும் தெரிந்த கணேசன் அவனைத் தேற்றிக் கொண்டிருந்தான். ‘இவன் இருக்கும் இடம் எவ்வளவு கலகலப்பாக இருக்கும்..! இப்போது எல்லாம் போய், எது சொல்லியும் கேட்காமல், பயல் மனதைத் தேற்றிக்கொள்ள மாட்டேன் என்கிறானே..! ‘-…

ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

 அத்தியாயம்-15 | அத்தியாயம்-16 உடனே ஜான் “நீங்க எல்லாம் ரொம்ப படிச்சவங்க.அவங்க ரெண்டு பேரும் உயிருக்கு உயிரா காதலிக்கறாங்க.உங்க பொண்ணு சொன்னதே நீங்க கேட்டீங்களே.அவங்களே தயவு செஞ்சி பிரிச்சி விடாதீங்க” என்று மறுபடியும் ராமநாதனை கெஞ்சினார். ராமநாதன் பிடிவாதமாக ”நீங்க மூனு…

அத்தை

 “வா அனந்து…” “அத்தை உடம்பு மிக மோசமாக இருப்பதாக லட்சுமி சொன்னாள். அதான் பார்த்துவிட்டுப் போகலாமேன்னு வந்தேன்… இப்ப எப்படி இருக்கு?” “அன்னிக்கு லட்சுமி வந்திருந்தபோது ரொம்ப மோசமா இருந்தது. ஞாபகமே இல்லை. லட்சுமியைப் பார்த்து திருதிருன்னு விழித்தாள். லட்சுமி என்னிடம்,…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று இதயா ஏசுராஜ் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

இதயா ஏசுராஜ்

 முகவரி இதயா ஏசுராஜ், பூக்கடை, வன்னியர் தெரு, கல்லக்குடி அஞ்சல், லால்குடி வட்டம், திருச்சி மாவட்டம், அ.கு.எண்; 621 652 அலை பேசி- 9715041385 Idhayayesuraj@gmail.com தன் நிலை விபரங்கள் பெயர் ; ஐ. ஏசுராஜ் புனைப்பெயர் ; இதயா ஏசுராஜ்…

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

சிறுகதை எழுதலாம் வாங்க – மெலட்டூர். இரா.நடராஜன்

 முதலில் ஒன்றை தெளிவு படுத்திவிடுகிறேன். தயவு செய்து நான் சொல்லுவதுதான் சிறுகதையின் இலக்கணம் என்று எண்ணிவிட வேண்டாம். எனது அனுபவத்தில், என்னை செம்மைப்படுத்திக் கொள்ள, நான் முட்டி மோதி அறிந்து கொண்டதை, புரிந்து கொண்டதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவே. ஒரு…

சில குறிப்புகள்:

சென்ற மாதம் பார்வையிட்டோர்:45,437
மொத்தம் பார்வையிட்டோர்:2,891,179
சென்ற மாதம் படிக்கப்பட்ட கதைகள்:123,850
மொத்தம் படிக்கப்பட்ட கதைகள்:10,738,995

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2020]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.