This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2020/12/28/

மருதாணி

 காளியம்மாள் காலை ஐந்து மணிக்கு எழுந்திருந்து அவசர அவசரமாகக் குளித்து விட்டு, ஒட்டுப் போட்ட பாவாடை தாவணியை எடுத்து உடுத்திக் கொண்டாள். பானையில் கிடந்த பழைய சோற்றை அவக்கு அவக்கென்று அள்ளி விழுங்கி விட்டு, மீதம் இருந்த சோற்றை தூக்குச் சட்டியில் கொட்டிக் கொண்டாள் . “அம்மா நான் கம்பெனிக்கு போயிட்டு வர்ரேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் கம்பெனி பஸ் வந்துரும்மா” என்று பொன்னுத்தாயிடம் கூறிக்கொண்டே வாசலில் வந்து நின்றாள். பொன்னுத்தாய் புடவைத் தலைப்பில் முடிந்து வைத்திருந்த


Read More


அனுசரி. அதுதான் சரி

 ஏய்! சிவகாமி, என்ன இது சாம்பாரா? ஒரேயடியா புளிக்குது, என சாப்பாட்டில் பாதியிலே கோபித்து எழுந்துப் போனார் கனகசபை எண்பது வயதைக் கடந்த சிவகாமி அம்மாளின் கணவர், ஓய்வாக வாழ் நாளை கழிக்கும் ஓய்வுப்பெற்ற ஆசிரியர். ஏன் இதுக்கு என்ன? புளி புதிசு. அதுதான், உங்க வாயை முதலில் கட்டனும், நல்லா வாய்க்கு வக்கனையா இந்த முடியாத வயசிலேயும், உப்பு உரைப்பா ஆக்கிப் போடறேன்ல அப்படித்தான் பேசுவீங்க, இது சிவகாமி அம்மா, வயது எழுபத்தெட்டைத் தாண்டியவள், மணம்


Read More


நல்ல மகன்!

 நீங்க எல்லோருமே பத்திரிகைகளில் வரும் சிறுகதைகளை விரும்பிப் படிப்பவர்கள் தானே! அம்மாவின் பெருமைகளைப் பற்றி, சிறப்புகளைப் பற்றி இதுவரை ஆயிரம் கதைகள் படித்திருப்பீர்கள்! கொஞ்ச காலமாக நல்ல அப்பாக்களைப் பற்றியும் நிறைய கதைகள் வரத் தொடங்கி விட்டன! நல்ல அம்மா, நல்ல அப்பாக்கள் மட்டும் தான் நம்மிடம் இருக்கிறார்களா? நம்மிடம் நல்ல மகன்களும் இருக்கிறார்கள்! மகன்கள் என்றால் பொண்டாட்டி பேச்சைக் கேட்டுக் கொண்டு, வயசான காலத்தில் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் கொண்டு போய் தள்ளும் மகன்களைப் பற்றித்


Read More


தரையில் ஒரு நட்சத்திரம்

 சாருமதி (என் காதல் மனைவி) குசினிக்குள் இருந்துகொண்டு நேற்றே வெதுப்பிவைத்த கேக்கை அழகாக ஐசிங் செய்வதற்காகச் செதுக்கியபடி மூன்றாவதுதடவையாக வாக்குறுதி தந்தாள் “இன்னும் ஐந்து நிமிஷத்திலே கோப்பிவரும்.” அடுத்த தடவையும் கண்ணம்மா வாக்குத்தவறுவாளாயின் பியரிடமே தஞ்சம் புகுவதென்று தீர்மானித்தபடி அன்றைய மாலைப்பத்திரிகையை எடுத்துப் புரட்டினேன். முழுப்பக்கக் கட்டுரையொன்றின் நடுவே பிரசுரிக்கப்பட்டிருந்த நடுத்தரவயது மனிதரின் புகைப்படத்தைப் பார்க்கப்பார்க்க அவர் ஏதோ பலவருடகாலம் நெருங்கி வாழ்ந்து பழகிய ஒருவரைப் பார்ப்பது போலிருந்தது. சராசரி ஐரோப்பியர்களைப் போலல்லாது சற்றே கறுத்த கண்களும்

Read More


மகேசும் பாபுவும்

 வளைந்து வளைந்து செல்லும் அந்த மலைச்சரிவில் அநாயசமாய் காரை ஒட்டி சென்று கொண்டிருந்த மகேசின் திறமை வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் பிரமிப்பை தந்து கொண்டிருக்கலாம். ஆனால் காரை ஓட்டிக் கொண்டிருக்கும் அவனின் மனமோ பெளர்ணமி நிலவின் ஈர்ப்பில் கொந்தளித்து கொண்டிருக்கும் கடலின் நிலையில் இருந்தது. அவனை பொருத்தவரை இந்த மலைப்பயணம் வாழ்க்கையின் கடைசி முறையாக இருக்கலாம். இந்த முடிவு காரை வெளியில் எடுக்கும் போதே எடுத்துவிட்டான். இனி அவனுக்கு வாழ்க்கை என்பது ஏது? தன்னுடைய முடிவை அவன்


Read More


தப்புக் கணக்கு…சரியான விடை…

 ஒரு ஞாயிற்றுக்கிழமை … காலை பத்து மணி இருக்கும்… பெருமாளுக்கு போதாத காலமோ இல்லை ருக்மணிக்கு போதாத காலமோ தெரியவில்லை…… “ருக்கு… ஏதோ சாமிப் படம் மாட்டணும்னு சொன்னியே….இப்போ மாட்டித்தறேன்….” “இப்பவா….வேணாங்க…. நாளைக்கு குமார் கீஸர் ரிப்பேர் பண்ண வருவானில்ல…அவன மாட்ட சொல்லலாம்….” “ஏன்… அவனுக்கு நூறு ரூபா தண்டம் அழணுமா….நானே மாட்டிடுவேன்…” சரி… இன்னிக்கு படணும்னு இருந்தா பட்டுத்தானே ஆகணும்… “ஆமா … அந்த உயர ஸ்டூல் எங்க…???” ஆரம்பிச்சாச்சு….!!!!! “ஏங்க… போனவாரம் பரண்லேர்ந்து நீங்கதானே


Read More


அந்த கணங்கள்

 திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றனவா, இல்லை திருமணங்கள் திருமணங்களில் நிச்சயிக்கப்படுகின்றனவா என்ற விவாதங்கள் சிலகாலம் எழுந்து இப்போது ஓய்ந்து போய்விட்டன. என்னைக் கேட்டால் எங்கெல்லாம் காதல் உள்ளங்கொண்ட இரு ஆண்– பெண் சந்தித்துக் கொள்கின்றனரோ அங்கெல்லாம் திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன என்பேன். ஆம், அஜந்தனும் அனுபமாவும் தற்செயலாகத்தான் சந்தித்துக் கொண்டார்கள். அவர்கள் இருவருமே ஒரு பத்திரிகை காரியாலயத்தில் பத்திரிகையாளருக்கான வேலை ஒன்றுக்கு விண்ணப்பித்து விட்டு நேர்முகத் தேர்வுக்காக வந்திருந்தார்கள். அவர்கள் இருவரும் அருகருகே அமர வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.


Read More


லாட்ஜுக்கு வர்றீயா லட்சுமி…!

 “ஏய் ! உனக்கு எவ்வளவு தெனாவட்டு இருந்தா எம் பொண்சாதியைப் பார்த்து லாட்ஜிக்கு வர்றியான்னே கூப்பிடுவே…?” கத்தினான் காத்தமுத்து. பிளாட்பாரத்தில் அமர்ந்து பீடி பிடித்துக் கொண்டிருந்த சிங்காரம்.. “ஏய் ! பேசுறதை மருவாதையாய் பேசு…” என்று எச்சரித்து பீடி புகையை தெனாவட்டாக விட்டான். “இன்னா.. உதார் காட்டுறீயா..? எம் பொண்சாதியைக் கூப்பிட்டதுமில்லாம என்கிட்டேயே வேலை காட்டுறீயா… ? மவனே மஞ்சா சோத்தை எடுத்துவேன்…” என்று காத்தமுத்து எகிற… அவனுக்குப் பின்னல் கலவரமடைந்த முகத்துடன் இருந்த லட்சுமி அவனைப்


Read More


ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

 அத்தியாயம்-13 | அத்தியாயம்-14 இந்த மாதிரி ‘பாஷன் டிரஸ்’,‘பாஷனான’ செருப்பு,தலை மயிரை ‘பாஷனா’ வெட்டிண்டு வர சுதா இனிமே அவ சம்பள பணத்லே ஆத்துக்கு காலணா கூட தர மாட்டா.அவளை இனிமே நாம ‘ஏன் சுதா,உன் சம்பள பணத்தை ஆத்லே குடுக்காம இருக்கே கேக்கறதிலே ஒரு பிரயோஜனும் இல்லே. அவளுக்கே ‘நாம கல்யாணம் பண்ணீண்டுப் போனா, அப்பா, அம்மா, பாட்டி, தாத்தா கிட்டே நம்ப சம்பள பணத்தே தர முடியாதே.கல்யாணம் ஆற வரைக்கும்,நம்ம சம்பள பணத்தே ஆத்லே


Read More


கிரீட ரகசியம்

 அந்தத் தம்பதிகள் மஹா பெரியவா மீது மட்டற்ற பக்தியும், மரியாதையும் உடையவர்கள். தரிசனத்திற்கு போகும்போது ஏதாவது நவீனமாகப் பொருள் செய்து கொண்டுபோய் சமர்ப்பணம் செய்வார்கள். ஒரு தடவை வெல்வெட்டில் இரண்டு வகைக் கிரீடம் செய்துகொண்டு போனார்கள். ஒன்று சிவலிங்கம் போல் தோற்றமளிக்கும் மாடல், மற்றொன்று அம்பாள் சிரசில் வைத்துக் கொள்ளும் மாதிரி, ஒரு பிறைச் சந்திரனுடன் கூடியது. அவர்கள் கிரீடங்களை பெரியவாளிடம் சமர்ப்பித்தது மாலை வேளையில்; இருட்டும் நேரம்வரை பெரியவாளுடன் பேசிக்கொண்டு இருந்தார்கள். சாதாரணமாக கிரீடம் சமர்ப்பித்தால்,


Read More

Subscribe to YouTube:
https://www.youtube.com/user/Sirukathaigal

Like Us in Facebook:
https://www.facebook.com/siru.kathaigal

Follow-us on Twitter:
https://twitter.com/sirukathaigal

Telegram:
https://t.me/sirukathaigal

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2020]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.