This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2020/12/25/

மகளைப் பெற்ற மகராசன்

ஊர் மெச்சும் அளவில் தன் மகள் ஐஸ்வர்யாவுக்கு பிரம்மாதமாக கல்யாண ஏற்பாடுகள் செய்திருந்தார் மாணிக்கம். கனத்த இதயத்துடன் கண்களில் கண்ணீர் திவலையுடன் கன்னிகாதானம் செய்து வைத்து புருஷன் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் வேளையில், மகளின் பிரிவு மூச்சையும் பேச்சையும் திணறடித்தது. வேதனை தாளமையால் அழுகின்ற தந்தைக்கும் மகளுக்கும் ஆறுதல் சொல்ல வேண்டியிருந்தது. கன்னிப் பருவம் வரையில் மாசு மரு இல்லாமல் கஷ்டம் எதுவும் படாமல், ‘குலத்தளவே ஆகுமாம் குணம்’, என்று வளர்ந்த குணவதியை பிரிவதென்றால் பெற்ற


Read More


மறுவாசனை

ஒரு பக்கம் இடிந்த பழமையான வீடு. ஒரு புறம் சரிந்த வரிசை கலைந்த ஓடுகள். நின்றுக் கொண்டியிருந்த பழைய தூண்களே பறைசாற்றியது வெங்குச்செட்டியாரின் இன்றைய வறுமை நிலைமையை. வெங்குசெட்டியாருக்கு வயது எண்பத்தைந்தாகிறது. மனைவி யோகா ஆச்சிக்கும் எண்பது நெருங்கி இருக்கும். இன்றோ, நாளையோ என உடைந்து ஒட்டிக் கொண்டு இருந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்தார். என்ன செட்டியாரே… என்ன பலத்த யோசனை? என்றபடி வந்தாள் யோகாச்சி. தாம்பத்யவாழ்விற்கு ஒன்றும் குறைவில்லை. நல்லா வாழ்ந்து காலம் கழித்து பெற்ற


Read More


தாமரை இலையும் தண்ணீரும்

சும்மா கிடந்த சங்க ஊதிக்கெடுத்தான் ஆண்டி என்பது போல, தூங்கிக்கொண்டிருந்த மகனை எழுந்திருடா, என்ன புள்ள நீ, மார்கழி மாசத்தில கோவில்ல இருந்து எத்தனை பாட்டு ச்சத்தம் கேட்டாலும் எழுந்திருக்க மாட்டேங்குற, பக்கத்து வீட்டு பிள்ளைங்கெல்லாம் காலையில எந்திரிச்சி குளிச்சிட்டு நல்ல பிள்ளையாட்டம் கோவிலுக்குகெல்லாம் போறாங்க, நீயும் இருக்கியே என்றாள் அம்மா சும்மா இரும்மா எந்த பிள்ளைங்க போகும்? காலங்காத்தால தூங்க விடும்மா என்றான் வேண்டுமென்றே யார் யார் போகின்றார்கள் என்று தெரிந்துகொள்ள. எந்த பிள்ளைகளா? உன்

.


Read More


கொட்டுத்தனை

புத்தூர்ச்சந்தியிலிருந்து கிழக்கு முகமாக சாவகச்சேரி போகும் வீதி, முதல் ஒரு கி.மீட்டர் தொலைவும் இருமருங்கிலும் செறிந்த குடிமனைகளால் நிரம்பியது. அக்குடிமனைகளின் அடர்த்தி பாரிய ஆலவிருட்சத்தோடானதொரு அண்ணமார் கோவிலுடன் முடிகிறது. கோவிலைத் தாண்டியதும் அடுத்த ஒரு கி.மீட்டர் தொலைவுக்கும் இரண்டுபக்கமும் வயல்வெளிகள். மழைக்காலத்தில் வடக்குப் பக்கவயல்களில் தேங்கும் வெள்ளம் வீதியைமேவி தெற்குப்பக்க வயல்களுக்குள்ளும் புகுந்துவிடாதிருக்க, வீதிநீளத்துக்கு வடக்குப்பக்கத்தில் ஒரு மீட்டர் உயரத்தில் கல்லாலான மதிலொன்று வீதியைத்தொடர்கிறது. அதனால் அவ்வீதியை அவ்விடத்தில் ‘சுவர்க்கட்டுவழி’ என்பர். அச்சுவர்க்கட்டுவழி முடியுமிடத்தில் வீதிக்கு வடக்கில்


Read More


சப்தங்கள்…நிசப்தம்

சாரி.. இந்த படத்துல உங்களை வேண்டாம்னுட்டாங்க. இப்ப “பீக்”ல இருக்கற பாடகர கூப்பிட்டிருக்காங்க. ஏன் இவ்வளவு நாள் நான் அவங்களுக்கு பாடிகிட்டுத்தானே இருந்தேன். எல்லோரும் நல்லா இரசிச்சுகிட்டுதானே இருந்தாங்க, இப்ப என்ன திடீருன்னு. அவரு பாடின பத்து பாட்டுமே இப்ப சூப்பர்டூப்பர் ஹிட்.. அதனாலே இந்த சந்தர்ப்பத்துல இந்த படத்துலயும் பாடவைக்கணும்னு ஆசைப்படறாங்க. புதிசா வரவங்க தாராளமா வரட்டும், அதுக்காக புக் பண்ணி பாடப்போற நேரத்துல வேண்டாம்னு சொல்றது அவ்வளவு நல்லா இல்லே எனக்கும் தெரியுது, அதனாலதான்


Read More


அப்பா எங்கே போகிறாய்….???

“கனகா ….அப்பா இரண்டு நாளா ஆத்துக்கு வரல்லடி…. மனசு கிடந்து அல்லாடறது… எல்லாம் என்னோடே தலையெழுத்து…!!!!!” “என்னடா… கொஞ்ச நாளா ஒழுங்கா அடங்கி ஒடுங்கி இருக்காரேன்னு மனுஷன்னு நெனச்சேன்… மறுபடி வேதாளம் முருங்க மரத்ல ஏறியாச்சா …” “கனகா…. அப்பிடி சொல்லாதடி…. இந்த தடவ என்னவோ நடக்கப்போறதுன்னு மனசு சொல்றது….. முடிஞ்சா ஒரு எட்டு வந்துட்டுப் போயேன்….” “அம்மா…நீ எதுக்கு இப்படி கிடந்து துடிக்கிற….என்னமோ புதுசா கல்யாணமான பொண்டாட்டிய விட்டுட்டு புருஷன் காணமப் போன மாதிரி…! விடும்மா….தன்னால


Read More


சும்மா

இன்றைக்கு ஏழாவது நாள்; வேலையில்லாத ஏழாவது நாள். அவன் எந்த வேலையும் செய்யாமல் ஒருபோதும் இப்படி ‘சும்மா’ இருந்ததில்லை. அலுவலகத்தில் மட்டுமல்ல, விடுமுறையென ஒரு நாள் வீட்டில் இருந்தால்கூட புத்தகங்களை அடுக்கி வைப்பது, மேஜை டிராயரில் பல நாட்களாக போட்டு வைத்திருந்த இன்சுரன்ஸ் கட்டிய இரசீதுகள், சொசைட்டி மெய்ண்டனன்ஸ் இரசீது, கரண்ட் பில், கேஸ் பில், தொலைபேசி பில் இன்னும் பிற எல்லாம் எடுத்து அதற்கான கோப்புகளில் வைப்பதென, ஏதாவதொரு வேலையை செய்துகொண்டே இருப்பான். தொடர்ந்து ஏழாவது


Read More


வாய்..!

‘வாயை வைத்துக் கொண்டு சும்மா இரு !’ – என்று யாருக்குச் சொன்னார்களோ இல்லையோ… எனக்குச் சரியாய்ச் சொல்லி இருக்கிறார்கள் ! – என்பதுதான் என்னைப் பொறுத்தவரை சரி. இல்லையென்றால் நான் ஏன் இப்படி முழி பிதுங்குகிறேன்…!! சரி. விசயத்திற்கு வருகிறேன். இன்று காலை சரியாய் 10. 10. மணிக்கு ஆட்டம் தொடக்கம். தினமும் குளியலறையில் வசதியாய் குளிக்கும் என் மனைவி…அபிநயா… “ஆத்துல புது தண்ணி வந்திருக்கு. குளிக்க ஆசையாய் இருக்கு. போகலாமான்னு..?” ஆர்வமாய் க் கேட்டாள்.


Read More


ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

அத்தியாயம்-12 | அத்தியாயம்-13 உடனே ராமசாமி “நீ சொல்றது ரொம்ப ‘கரெக்ட்’மங்களம்.நானும் தினமும் ‘ஹிண்டு’ பேப்பர் படிக்கிறேனே. நீ சொன்னா மாதிரி எல்லா கம்பனியும் வேலைக்கு ஒரு ‘கிராஜுவேட்டை’த் தான் அப்ளை பண்ண சொல்றா” என்று வருத்ததுடன் சொன்னார். சாயங்காலம் ராமநாதன் வேலையில் இருந்து வீட்டுக்கு வந்ததும் மங்களம் தன் ‘ஆபீஸி’ல் இருந்து வந்த ‘லெட்டரை’ அழுதுக் கொண்டே காட்டினாள்.’லெட்டரை’ப் படித்த ராமநாதனுக்கு ‘ஷாக்காக’ இருந்தது.”இப்போ தான் சுதாவும் ரமாவும் பள்ளிகூடம் போக ஆரம்பிச்சு இருக்கா. நாளுக்


Read More


பிரமிப்புகள்

அது 1960 ம் வருடம் என்று நினைவு… கஞ்சிமட மஹா பெரியவா மன்னார்குடி வந்திருந்தார். குன்னியூர் சாம்பசிவ ஐயர் தனது ‘குன்னியூர் ஹவுஸ்’ என்ற பங்களாவில் சகலவிதமான வசதிகளுடன் நாலைந்து நாட்கள் பெரியவாளைத் தங்கவைத்து உபசரித்தார். அப்போது ஒருநாள் காலையில், காந்தி சாலையில் உள்ள தேசிய உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளியின் வாசலில் நின்று பூர்ணகும்ப மரியாதையுடன் மஹா பெரியவாளை வரவேற்றுப் பள்ளிக்குள் அழைத்துச் சென்றார். பெரியவாளிடம், “இந்த இடம் ஒரு காலத்தில் பெரிய கீற்றுக் கொட்டகையாக


Read More

Subscribe to YouTube:
https://www.youtube.com/user/Sirukathaigal

Like Us in Facebook:
https://www.facebook.com/siru.kathaigal

Follow-us on Twitter:
https://twitter.com/sirukathaigal

Telegram:
https://t.me/sirukathaigal

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2020]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.