This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2020/12/22/

பதற்றம்

 காலை எழுந்ததிலிருந்தே ரம்யா பதற்றமாக இருந்தாள். தான் பணிபுரியும் ப்ராஜெக்ட் இறுதி நிலையில் இருப்பதினாலும், அந்த IT நிறுவனத்தின் நற்பெயரை தக்கவைப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கக்கூடிய தருணமாகவும் இருந்ததினால் இரவு-பகல் பாகுபாடின்றி உழைத்துக் கொண்டிருந்தான் அவளது கணவன் ரமேஷ் கடந்த மூன்று மாதங்களாகவே. அவ்வகையில் அன்று வீட்டிலிருந்தவாறே நைட் ஷிப்ட் பார்த்துவிட்டு அதிகாலை ஐந்து மணிக்குதான் உறங்கச் சென்றிருந்தான். எப்போதும் ரமேஷ் உறங்கச் செல்லும்முன் ரம்யா எழுந்து அவனுக்கு காலை உணவாக இட்லியோ, தோசையோ தயார்


Read More


பாசப்பறவை

 கல்யாண மண்டபமே கலவர பூமி ஆகியது., கல்யாணப் பெண் சித்ராவை காணவில்லை?! காலை 7.30 மணி முதல் 9.00மணிக்குள்ளாக முகூர்த்த நேரம் நிச்சயிக்கப் பட்டிருந்தது. அதற்கு முன்பாக சில சடங்குகள் செய்யப்பட வேண்டியிருந்ததால், தோழிகளுடன் படுத்திருந்த சித்ராவை எழுப்ப அம்மா அமுதவல்லி சென்றபோதுதான் அவளை காணவில்லை என தெரிய வந்தது. மண்டபம் முழுவதும் விஷயம் பரவியது. ஆளுக்கு ஆள் அவதூறு பேச ஆரம்பித்தனர். பெண்ணின் அண்ணன் ராஜா ஆவேசமாக நாலாபுறமும் தங்களது ஆட்களை அனுப்பி எப்பிடியாவது சித்ராவை


Read More


லட்சுமி பொறந்தாச்சு

 பெரிய ஈயச் சட்டியில மொச்சைப் பயறு ஒரு அடுப்புலயும் சீனிக் கிழங்கு ஒரு அடுப்புலயும் ஏத்தி வச்சிட்டு வேலிமுள்ளையும் விறகுக் கட்டையையும் ஒவ்வொன்னா திணிச்சி கொஞ்சம் சீமெண்ணெயை ஊத்தி அடுப்பு பத்த வச்ச பொன்னம்மா தான் அந்த வீட்டுக்கு வந்த முதல் மருமக.. ஒன்பது மாச பிள்ளைத்தாச்சியா இருந்தாலும் மாமியாருக்குப் பயந்து பயந்து வேலை செய்வா.. “என்னத்தா ,நான் கடைக்குப் போயிட்டு வாரேனு சொல்லிக்கிட்டே தோள்ல கிடந்த அந்த பச்சைத் துண்ட சுருட்டி சும்மாடு செஞ்சி, “வா,


Read More


பெயர் தெரியாத மனிதன்

 ஐந்துமணிவரையில் யாழ்நகரை வெதுப்பிக்கொண்டிருந்த வெயிலோன் ஐந்தரையாகவும் இன்றைக்கு ஊழியம்போதுமென்று நினைத்தவன்போல் மரங்கள் கட்டிடங்களின் பின்னால் கடலைநோக்கிச் சரிந்திறங்க ஆரம்பித்திருந்தான், தேய்ந்த ஓவியங்கள்போல வானத்தில் சில ஓவியங்கள் தோன்றத்தொடங்கியவேளை. எனக்குத்தெரிந்த அந்த மனிதர் மின்சாரநிலையவீதியில் வடக்குமுகமாகச் சென்றுகொண்டிருப்பதைக் கண்டேன். நீங்கள் மலையாளப்படங்களுக்கு பரிச்சயமான நடுவயதுக்காரரயிருந்தால் ஜி.அரவிந்தனின் ‘சிதம்பரம்’ படத்தில் ஸ்மீதா பட்டீலின் கிராமத்துக் கணவனாகவும் மாட்டுப்பண்ணை பராமரிப்பவராகவும், வரும் ஸ்ரீனிவாஸனைத் தெரிந்திருப்பீர்கள். அசப்பில் இவருக்கும் ஸ்ரீனிவாஸனைப்போலவே ஆறடி உயரத்திலான கரிய திருமேனி. சற்றே நீண்டமுகவாகு, அப்போது விஞ்சிப்போனால் முப்பத்தைந்து


Read More


என் தவறு

 கமலா மதியம் சாப்பாடு கொஞ்சம் தாராளமா வை ! கேள்விக்குரியாய் பார்த்த மனைவியிடம், ஸ்கூல்ல நல்லா படிக்கிற பையன் ஒருத்தன், பாவம் கஷ்டப்படறான், அவனை தினமும் மதியம் வர சொல்லி இருக்கிறேன். பாவம் கஞ்சிதான் தினமும் கொண்டுவர்றான். வேறு ஒன்றும் பேசாமல், மற்றொரு டிபனில் சாப்பாட்டை எடுத்து வைத்தாள். எனக்கு அவள் ஒன்றும் பேசாமல் எடுத்து வைத்தது, ஏதோமாதிரி இருந்தது. என்ன கமலா எதுவும் பேசாம இருக்கே. அந்த பையன் பத்தாவது படிக்கிற பையன். இன்னும் அஞ்சுமாசம்தான்


Read More


தத்தை நெஞ்சம்!!!

 “அனி…அனி…!!!!! “ “கீக்கீ …..! என்ன வேணும் …..??? இப்போதானே உனக்கு ஆப்பிள் நறுக்கி கொடுத்தேன்…. இன்னும் பசிக்குதா டியர் …..??” “சீஸ் … சீஸ் …!!!!” என்றது கீக்கீ.. “என்ன மாதிரி நீயும் சீஸ் பைத்தியம் ஆய்ட்டயா… ???” அனிதா ஃபிரிட்ஜைத் திறந்து ஒரு சீஸ் கட்டியை எடுத்து துருவி கீக்கியின் கூண்டைத் திறந்தாள்… அவள் கையில் லாவகமாய் ஏறி உட்கார்ந்து சீஸை சாப்பிடத் தொடங்கினாள் கீக்கீ…!!! “தாங்யூ…. தாங்யூ …” என்றாள் கீக்கீ…. “கீக்கீ….கிரண்


Read More


அழைப்பு

 “குமார், முதலாளி கூப்புடுறாரு” “எதுக்கு மாஸ்டர்?” “தெரியல… போ, போய் பாரு…” அவன் கண்ணாடிக் கதவை தள்ளிக்கொண்டு முதலாளியின் அறைக்குள் நுழைந்தான். மீசையெல்லாம் மழித்து இந்திப் பட நாயகன்போல முதலாளி தன் இருக்கையில் அமர்ந்திருந்தார். அவருக்கு முன்னால் ஆறுக்கு மூன்று சதுர அடியில் மேசை. கண்ணாடியிலான மேல்பாகம் உள்ளிருந்த மரத்திலான அழகான வடிவமைப்பை பளிச்சென்றுக் காட்டியது. முதலாளிக்கு எதிரிலிருந்த இருக்கையில் மேனேஜர் அமர்ந்திருந்தார். அவன் உள்ளே நுழைந்த சப்தத்தைக் கேட்டு திரும்பிப் பார்த்தார். அவருடைய முகம் கறுத்துப்


Read More


தத்துப் பொண்ணு…

 அவள் எங்கள் வீட்டுப் படியேறியதும்…. “மருமகன் பாராயினி…! மகள் பிரியாரிணி…! மந்தாரை வந்து விட்டாள். பராக்..! பராக்..!!” – என்று கூவ ஆசை. சிரமமப்பட்டு அடக்கிக்கொண்டு என் மனைவி மங்கம்மாளைப் பார்த்தேன். அவள் முகத்தை முறுக்கித் திருப்பிக் கொண்டாள். மந்தாரை எங்கள் தெரு. பத்து வீடுகள் தள்ளி கடைசி வீடு. என் மனைவிக்கு உதவி, ஒத்தாசைகள் செய்யும் சாக்கில் பேச்சுத் துணை தேடி வந்துவிடுவாள். சரியான தொணதொணப்பு..! ஆனால்… கள்ளங்கபடமில்லாத ஐம்பது வயது மனுசி . கணவன்,


Read More


ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

 அத்தியாயம்-11 | அத்தியாயம்-12 மணைவியும் ரகுராமனும் விடாமல் நெருக்கி வரவே,அவருக்கு ‘என்ன சொல்லி இவா ரெண்டு பேரையும் மாத்தறது’ என்று புரியாமல் தவித்தார். கொஞ்ச நேரம் ஆனதும் அவர் “சரி நீங்க ரெண்டு பேர் சொன்னபடியே பண்றேன்.அந்த ‘பக வான்’ விட்ட படி ஆகட்டும்” என்று சொன்னார் குப்புசாமி. உடனே அவர் கொஞ்சம் கூடப் பிடிக்காமல் தன்னிடம் இருந்த எல்லா நிலங்களையும்,தான் இருந்து வந்த வீட்டையும் எல்லாம் வந்த விலைக்கு விற்று விட்டு,எல்லா பணத்தையும் பீரோவில் வைத்து


Read More


பெண்ணுரிமை

 அவள் பெயர் ப்ரியா. சென்னையின் ஒரு பிரபல ஐடி மல்டி நேஷனில் டெலிவரி ஹெட்டாக இருக்கிறாள்; வயது இருபத்தியெட்டு. கோதுமை நிறத்தில் பார்க்க ரொம்ப அழகாகவே இருப்பாள் ஹாஸ்டலில் தனியறையில் வாசம். அவளை யாரும் கட்டுப்படுத்த முடியாது. பிடித்ததைச் செய்வாள். இது தப்பு அது ரைட்டு அப்படியெல்லாம் எந்த வேலிகளும் அவளுக்குக் கிடையாது. தனிமனித சுதந்திரத்தை மதிப்பவள். சுதந்திரப் பறவை. அவ்வப்போது பெண்கள் கல்லூரியில் லெக்சர் கொடுப்பாள். இதனால் கல்லூரி மாணவிகள் மத்தியில் அவள் பிரபலம். ப்ரியா


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2020]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.