This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2019/10/01/

ஒரு கவிதையை முன்வைத்து.. - செல்வராஜ் ஜெகதீசன்

காற்றில் ஆடிக்கொண்டிருந்தது கடிதம். கடிதம் என்றால் கடிதமில்லை. அன்புள்ள என்று ஆரம்பித்து நலம் நலமறிய மாதிரி இல்லை. இது முழுவெள்ளைத்தாளில் முழுவதும் கவிதையாய் ஓடி முடிவில் கேள்வி போட்டு தொக்கி நிற்கிறது. இது இப்படி முடியுமென்று அவன் ஒரு பொழுதும் நினைத்ததில்லை. Lady writing அந்த அலுவலகத்தின் அக்கௌண்டன்ட் ரகு. அறிமுகமான ஒரு எழுத்தாளன். உணவு இடைவேளைகளில் அதிகமும் விவாதிக்கப்படும் அவன் கதைகளும் கவிதைகளும். அப்படி ஒரு விமர்சகியாகத்தான் அறிமுகமானாள் மாலதி. அந்த அலுவலகத்தின் தட்டச்சு தாரகை.

.


Read More


அரவான் - லா.ச.ராமாமிருதம்

இரண்டாவது உலகயுத்த சமயத்தில், அது பற்றி இருந்த அப்போதைய மன நிலையில் இக்கதை உருவாகியது. மனிதாபிமானமும், சமுதாய போராட்டமும் என் எழுத்த்தில் பிரதிபலிக்கவில்லை என்று என் மேல் ஒரு புகார்உண்டு. மனிதாபிமானம் என்றால் தனியாகத் தன் பேரைச் சொல்லிக்கொண்டு மேலி ருந்து இறங்குமா? அறியேன். “எல்லாம் பாரதயுத்தம் மாதிரிதான்- எல்லாரும் தோத்தாங்க; எல்லாரும் ஜெயிச்சாங்க. தோத்தவனும் கஷ்டப்பட்டான், ஜெயிச்சவனும் சொகப்படல்லே. என்னவோ காரியம் சாதிக் கிறாப்போல சண்டை போட்டதிலும் கொறைச்சவில்லே. காள் பாத்ததிலே கொறைச்சலில்லே. பலி போட்டதிலே

.


Read More


எதிரி - தேவவிரதன்

குவைத் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்ததும் ‘குப்’பென்று உஷ்ணம் பரவுவதை உணர்ந்தார் சிவானந்தம். அவர் அரபு நாடுகளுக்கு வருவது முதல் தடவை. அவர் சென்றதெல்லாம் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள்தான். விமான நிலையத்திலிருந்து வெளியே வரும்போது முதலில் அங்கெல்லாம் தெரிவது குளிர்ச்சிதான். இவை பாலைவனங்களாக இருந்தவை. இங்கு குளிரும் அதிகமாகத்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டார். அவரை அழைத்துச் செல்ல வந்திருந்த டிரைவர் பின்னால் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான கார்களைக் கடந்து அவன் சென்றடைந்து கதவைத் திறந்த காரில்

.


Read More


அவனுக்கு இனிக் கனவுகளும் கூட வராது…- இரா.சடகோபன்

அந்த ஆஸ்பத்திரி அந்த வாட்டு அதன் சுற்றுப்புற சூழ்நிலைகள் எல்லாமே மௌனமாக இருந்தன. ஜன்னலுக் கருகில் சுவரோரமாக போடப்பட்டிருந்த ஒரு கட்டிலில் சுமார் பதினெட்டு, பத்தொன்பது வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் கண்ணயர்ந்தபடி படுத்திருந்தான். அவன் கண்கள் மூடப்பட்டுக் கிடந்த போதும் ஏனிந்த வாழ்க்கை என்பது போல் அவன் முகம் மிக ஆழமான சோகத்தில் மூழ்கிப் போயிருந்தது போல் தான் தோன்றியது. அவனது முகம் மட்டும் சோகத்தைப் பறைசாற்றவில்லை. அவனைப் போர்த்தியிருந்த போர்வையை விலக்கி அவன் சரீரத்தைப்

.


Read More


மகள் - ஸ்ரீ.தாமோதரன்

பத்பனாபனுக்கு அன்று அலுவகத்தில் வேலையே ஓடவில்லை. அவர் மனம் முழுக்க மகள் பத்மாவை பற்றியே நினைத்துக்கொண்டிருந்தது. இந்நேரம் வீட்டில் என்ன செய்து கொண்டிருப்பாள்? தெரியவில்லை. ஏன் குழந்தைகளை கூட்டி வரவில்லை. முகத்தை பார்த்தால் நம் வீட்டிற்கு மகிழ்ச்சியாக வந்ததாக தெரியவில்லை.வேறு எதுவும் இருக்காது, இருந்திருந்தால் கஸ்தூரி இந்நேரம் போன் பண்ணீயிருப்பாளே, மனம் அலைபாய செயல்களோ அலுவலக கோப்புகளை புரட்டிகொண்டிருந்தது. பத்பனாபனுக்கு ஒரு பையன், ஒரு பெண், பெண்ணுக்கு பத்மா என்று பெயர் வைத்து படிக்க வைத்து நல்ல

.


Read More


தூக்கு - வினோத்குமார்

கைகளில் அரிவாள், அரிவாளில் இரத்தம். அந்த இரத்தம் பூமிப் பந்தை நோக்கி சரசரவென்று விழுந்து, அந்த இடத்தை சிவப்பு மயமாக்கி மறைந்தது. ஓர் துளி மட்டும் அரிவாளின் முனையில், தொங்கிக் கொண்டிருந்தது. அரிவாளின் சிறு அசைவும், அந்த இரத்த துளியை பூமி மீது எப்போது வேண்டுமானாலும் தூக்கி எறியச் செய்யும். ஓர் ஜனக்கூட்டம் அரிவாள்காரனை நோக்கி ஓடி வந்தது. அருகில் சென்ற பல இதயங்கள் பதைபதைத்துப் போனது. “கடவுளே” என்று சில உதடுகள் கடவுளை துணைக்கு அழைத்தது.

.


Read More


கூடு - ஷன்முகப்ரியா

ஓரு நாள் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பி கதவைத் தட்டிய பொழுதே, உள்ளிருந்து என் ஆறு வயது இளவரசியின் உற்சாகக் குரல் கேட்டது: “அப்பா வந்தாச்சு…அப்பா வந்தாச்சு…” கதவைத் திறந்தும் திறக்காததுமாய் குதித்துக் கொண்டிருந்தவள், என் கால்களைக் கட்டிக் கொண்டு, “அப்பா இன்னிக்கு பெரிய சர்ப்ரைஸ் இருக்கு உனக்கு” என்றாள். “என்ன குட்டிமா? ஒழுங்கா சாப்டுட்டு அம்மா சொன்னது எல்லாம் கேட்டிட்டிருக்கியா நீ?” என்றேன். “இல்லை” என்றவள் என் கால்களையும் கைகளையும் பற்றி இழுத்தாள். “பெட் ரூமுக்கு வா…”

.


Read More


சிம்ரன் - காரை ஆடலரசன்

கலகலப்பாய் இருக்க வேண்டிய வீடு நிசப்தம். மயான அமைதி . எல்லோர் முகங்களிலும் கலவரம். மணப் பெண்ணான சிம்ரனுக்குள் தீவிர யோசனை. எல்லாம் மாப்பிளையாக வந்த திவாகர் போட்ட போடு. அவன் இப்படி எல்லோரையும் கதிகலங்க வைப்பானென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. எல்லாம் சிறிது நேரத்திற்கு முன்தான் நடந்தது. ஓய்வு பெற்ற தேசிய நெடுஞ்சாலை தலமைப் பொறியாளர் தணிகாசலம், அவர் மனைவி, மகள்கள்… சிம்ரன், மாலா ஆகியோர் மாப்பிள்ளை வீட்டாரை ஆவலோடு எதிர்பார்த்து இருந்தார்கள். பத்து நிமிடங்களில். ….

.

Read More


தீர்ப்பு உங்கள் கையில்… - ஜெ.சங்கரன்

அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 ஸ்கூட்டர் ஓட்ட கத்துக்கறவன் எங்காவது காலி மைதானத்லே போய் தானே கத்துக்கணும் இப்படியா ஜனங்க நடந்து போகும்’ பிஸி’ ரோட்லே கத்துக்கறது” என்று சொல்லி வருத்தப் பட்டார் விசு.”எல்லாம் என் போறாத காலம்.படவேண்டிய ‘டயம் இது.மாவு கட்டுப் போட்டுண்டு உக்காந்து ண்டு இருக்கேன் விசு” என்று சொல்லி வருத்தப் பட்டார் ராமு. கொஞ்ச நேரம் ஆனதும் ராமு “விசு,இது தாண்டா சாக்குன்னு என் பையன் ‘அப்பா நீ ‘ஸ்வீட் மாஸ்டரா’ இத்தனை வருஷமா

.


Read More


அரண்மனைக் கிளி - எஸ்.கண்ணன்

(இதற்கு முந்தைய ‘கதைப் புத்தகங்கள்’ கதையைப் படித்த பிறகு, இதைப் படித்தால் புரிதல் எளிது) “ப்ளஸ் டூ எழுதி என்ன செய்யப் போறே?” சபரிநாதன் அசுவாரசியமாக காது குடைந்துகொண்டே கேட்டார். “ஒவ்வொரு பரிட்சையா எழுதுவேன்.” “ஒவ்வொரு பரிட்சையான்னா?” “மொதல்ல பி.ஏ., பொறவு எம்.ஏ.” சபரிநாதன் காது குடைவதை நிறுத்தினார். பாளையங்கோட்டையில் புனித சவேரியார் பள்ளியில் அந்தக் காலத்தில் அவர் படித்தது பத்தாவது வரைக்கும்தான். அவரைப் பொறுத்த வரையில் அவருடைய பெண்டாட்டி அவரைக் காட்டிலும் பணக்காரியாக இருக்கலாம். ஆனால்

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.