This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2019/09/21

பச்சைத்தேவதையின் கொலுசுகள் - பொ.கருணாகரமூர்த்தி

‘அண்ணே ஜெனிஃபர் உங்களைக்கண்டுதான் பம்முறாள், ஆனால் ஆள் சரியான வியாழி தெரியுமோ……….. தெரியாமல் வாயைக்கொடுத்திட்டால் ஊரே அதிர்றமாதிரிக் கெட்ட கெட்ட பாஷைகளாய் எடுத்துவிடுவாள்’ என்றனர் நண்பர்கள். வியாழியானவர் :> 70, 80களில் கீரிமலையில் தன் ரௌடி குமாரர்களுடன் சாராயவாணிபத்தில் கொழித்திருந்த ஒரு வல்லடிவாத்ஸாயனி என்றறிக. “என்ன ஜெனிஃபர் ‘கெட்டபாஷை’ பேசுவாளா……………….” “ ஓ………… அவளுக்கு உலகத்துப் பாஷைகள் அனைத்திலும் கெட்டவார்த்தைகள் அத்துப்படி, ‘கூறியதுகூறல்’ இன்றி வகைவகையா எடுத்து மல்டிபிள்பரல் லோஞ்சர்மாதிரி விசிறிக்குத்தினாளென்டா ஒரு கொம்பன் நின்டுபிடிக்கேலாது…….” எங்கள்

.

Read More


இன்றைய மனநிலை - யோகராணி கணேசன்

அன்றைய நாள் அவளுக்கொரு புதிய அனுபவத்தைக் கொடுக்கப்போகின்றதென்பதை அறியாதவளாய் சுறு சுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தாள் தேன்நிலா.வரிசையில் காத்திருப்பவர்களை ஓரக்கண்ணால் பார்த்தபடி, இலக்கம் 120 என்ற நம்பரை அழுத்தியபோது; அவளிடம் வந்த நபருக்குரிய மருந்துப்பெட்டிகளின் லேபிளை கணனியில் எழுதிக்கொண்டிருந்தாள் அவள். நன்கு உயர்ந்த வாட்டசாட்டமான மனிதர், ஆனால் சீனி வருத்தம்,உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு என ஒரு பட்டியலே இடப்பட்டிருந்தது இவருக்கான மின் மருந்துச்சீட்டில்…. பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும்போது மருந்தகம் ஒன்றில் பகுதிநேர வேலைக்குப் போய்க்கொண்டிருந்தாள் தேன்நிலா. வழமையாக சனிக்கிழமைகளில்தான் இவ்வாறு

.

Read More


ஏக்கம் நிறைவேறுமா? - தேவவிரதன்

“பணி ஓய்வு பெற்ற பின்னால் எங்கேனும் ஒரு குக்கிராமம்! அதில் ஓரளவு சுமாரான ஓட்டு வீடு; வாசலில் திண்ணை! திண்ணையைத் தாண்டி ஒரு வேப்பமரம். உள்ளே போனால் ஒரு ரேழி, அதைத் தாண்டிய பின்னர் கம்பி போட்ட முற்றம், தாழ்வாரம். தாழ்வாரத்தின் பக்கவாட்டில் ஒரே ஒரு அறை; அதையும் தாண்டி பூஜையறை.அதையொட்டி சமையலறை. பின்னால் ஓரளவு பெரிய தோட்டம்; கிணறு அவசியம்! அதனருகில் துவைக்கும் கல். ஏழெட்டு தென்னை, பூச்செடிகள், பவழமல்லி மரம், மாமரம், பலா மரம்,

.

Read More


அழிவின் ஆரம்பம்! - சௌ.முரளிதரன்

முருகன் படித்தவன் . பீ.ஈ , ஈரோடு கல்லூரியில் முடித்து, சென்னையில் ஒரு கணினி விற்பனை கம்பனியில் , சுமாரான சம்பளத்திற்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தான். வயது 25. கைக்கும் வாய்க்குமே பற்ற வில்லை. இதிலே ஊரில் இருக்கும் அப்பா அம்மாவிற்கு வேறு மாதா மாதம் பணம் அனுப்ப வேண்டும்!. வேறு வேலை தேடிக் கொண்டிருந்தான். கிடைத்தால் தானே? ஒரு ஞாயிறு அன்று, முருகனுக்கு பொழுது போகவில்லை. பக்கத்தில் இருக்கும் ஆம்பா மால் எனும் பெரிய சூப்பர்

.

Read More


குத்துச்சண்டை - ஸ்ரீ.தாமோதரன்

“சான் அண்டேனியோ” என்னும் ஊரில் பச்சை பசேல் என்று காணப்பட்ட அந்த பூங்கா நடைவாயிலில், சுயீங்கத்தை மென்று கொண்டே சென்று கொண்டிருந்த பிரபல குத்து சண்டை வீரன் ராபர்ட் “ஹாய் அங்கிள்” என்ற கோரசான குரல்கள் கேட்டு தலையை திருப்பி பார்த்தான். “ஹாய்” இவனும் மகிழ்ச்சியுடன் கை காட்டியவன் இங்க என்ன பண்ணறீங்க எல்லாரும்? கேள்வியை கேட்டவனை அந்த சிறுவர் கூட்டம் ஓடி வந்து சூழ்ந்து நினறனர். அங்கிள் எங்க ஸ்கூல்ல இருந்து டூர் வந்திருக்கோம்.நீங்க எப்படி

.

Read More


அம்மா மாதிரி - செல்வராஜ் ஜெகதீசன்

வரவர இந்த அப்பாவைப் பார்க்கவே பிடிக்கவில்லை. ஏன் அப்பா இப்படியெல்லாம் செய்கிறார்? என்ன செய்தாலும் என்னால் அதை தடுக்கவா முடியும்? பன்னிரண்டு வயது பையனால் என்ன செய்ய முடியும்? இவர் இப்படியெல்லாம் செய்வாரென்று தெரிந்துதான் அம்மா முன்னாடியே போய்விட்டாளா? அம்மாவை நினைத்ததும் கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்தது. அம்மாதான் எவ்வளவு அன்பாக இருந்தாள்? சாந்தமான அந்த முகம். எதைக் கேட்டாலும் வாங்கித் தரும் கனிவு. “அம்மா தாயே” என்று யாராவது பிச்சைக்காரர்கள் வந்தால் அவர்களுக்கு அரிசியோ,

.

Read More


சுடுகாட்டு கிரிக்கெட் பிட்ச் - ஜெயசீலன்   

சனிக்கிழமை ஆனாலே காலை உணவை முடித்த கையோடு நாங்கள் தேடுவது பந்தையும் கிரோ ஹோண்டா பேட்டையும் தான். கங்குலி எங்கள் காலத்தில் ஒரு மறக்க முடியாத ஜாம்பவான் அவர் பயன் படுத்திய அதே கிரோ ஹோண்டா மட்டையை உபயோகிப்பது எங்களுக்கு ஒரு போதயை தரும் எப்போதும். நாங்கள் விளையாடும் சுடுகாட்டு பிட்ச் எங்கள் தெருவில் இருந்து எப்படியும் ஒரு இரண்டு மையில் இருக்கும். இடைப்பட்ட பயனத்தில் ஒரு குளத்தையும் சுடுகாட்டையும் கடந்து தான் போக வேண்டும். சைக்கிளில்

.

Read More


உயிர்ச் சிக்கல் -  காரை ஆடலரசன்   

இன்றோ நாளையோ. .. அணையப் போகும் விளக்காய் அறுபத்தி எட்டு வயது கன்னியப்பன் வீட்டுக் கூடத்தில் நீண்டு படுத்திருந்தார். ஆறடிக்கும் அதிகமான உயரம். நல்ல வாட்ட சாட்டமான உடல்வாகு. சிறு வயதிலிருந்தே ஸ்பானரும் கையுமாய் மெக்கானிக் வேளையில் ஈடுபட்டு வந்ததால் கை விரல்கள் நல்ல நீளமாய், காய்ப்பேறி இப்போதும் இரும்பாக இருந்தது. ஒரு மலையே சாய்ந்தது போல படுத்திருந்தார். விரைவில் அழியப்போகும் பூ, பொட்டு என்பதினாலோ என்னவோ அவரது மனைவி விசாலாட்சி முகம் நிறைய மஞ்சள் பூசி,

.

Read More


சீ! இவரையா… - ஜெ.சங்கரன்

“வனஜா,லக்ஷ்மிக்கு தலையில் அடிப்பட்டு இருக்காம்,நான் போய் பார்த்து விட்டு வரேன்” என்று சொல்லி விட்டு செல் போனை பேச்சைத் துண்டித்து விட்டு வனஜாவின் பதிலுக்குக் கூட காத்து இராமல் தன் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு பறந்தான் சேகர். வனஜாவுக்கு இது பிடிக்கவே இல்லை!. ‘கல்யாணம் பண்ணி ‘குத்துக் கல்லு’ மாதிரி நான் ஒருத்தி இருக்கும் போது என்ன வேண்டிக் கிடக்கு இவருக்கு இந்த பெண்கள் சகவாசம்’ என்று ஸ்கூட்டரில் கிளம்பிப் போன கணவனை தன் மனதில் திட்டினாள்

.

Read More


பட்டுச்சேலை - எஸ்.கண்ணன்

(இதற்கு முந்தைய ‘ஆரம்ப விரிசல்கள்‘ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) கல்யாணமான புதிதில்கூட மரகதத்தை ஊர் இளசுகள் அவளை இளம் பெண்ணாகப் பார்க்காமல், சபரிநாதனின் மனைவியாகத்தான் பார்த்தார்கள். அதேபோல அவரின் மகள்களையும் இளம் பெண்களாகப் பார்க்காமல் அவரின் மகள்களாகவே பார்த்தார்கள். இப்போது அதே சின்ன வயதுப் பையன்கள் ராஜலக்ஷ்மியை சபரிநாதனின் மனைவியாகப் பார்க்கவில்லையோ? எல்லா பையன்களுமே அவளை அழகான சின்ன வயசுப் பெண்ணாக மட்டும்தான் பார்க்கிறார்களோ? இந்தக் கேள்வி மண்டைக்குள் உதித்ததும் சபரிநாதன் கொஞ்சம்

.

Read More


நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.



To change your subscription, click here.