This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2019/09/15/

தேர்வு - நிலாரவி

ஒரு குடுவையில் இரண்டு அமிலங்களைக் கலந்தால் என்ன ஆகும் என்பதற்கும் குமாஸ்தா வேலைக்கும் என்ன சம்மந்தமிருக்க முடியும் என்பது தெரியவில்லை ரகுவுக்கு. வணிகவியல் பட்டதாரியான அவனுக்கு அந்த வேதியியல் வினா கூட வினையாகத்தான் விடிந்தது. பதில் தெரிந்தும் தேர்வு செய்ய முடியாத படி கீழே இருந்த நான்கில் இரண்டு சாய்ஸ்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியும் அதே சமயம் மிகநுண்ணிய வேறுபாடுகளுடன் இருந்தன . இது கூட பரவாயில்லை அதிகம் கேள்விப்படாத தொலை தூர தேசமொன்றில் ஆண்டுக்கு மிகத்துல்லியமாக

.


Read More


சந்தேக வலை - கடல்புத்திரன்

(ஒரு துளி,ஒரு அலகு நீதி நிகழ்ந்தால் கூட அதை வெளிச்சம் போட்டு காட்டப்பட வேண்டியது அவசியம். ) அன்றைய நாள், இப்படி அகோரமாக முடியும் என யார் தான் நினைத்திருப்பார்கள் ? உயிரை உறைய வைக்கும் பலவித ஆடவர்களின் குக்குரல்களைக் கேட்ட அயலவர்கள் வேலணையில் சற்று தள்ளி உள்ளே இருந்த முல்லை இயக்க காம்பிலிருந்த பெடியள்களிடம் பதற்றமாக சொல்லிய போது…சரிவர விளங்கவில்லை.”ஐய்யோ,போய்க் காப்பாற்றுங்கள் ,பிசாசுகள்,மண்டைதீவுக் கடற்கரையில் படுகொலை செய்கிறார்கள்,கெதியாய் போங்கள்”எனக் கூறிய போது அவசரமாக ஆயுதங்களுடன் தாகுதல்க்

.


Read More


ப்ரியாவின் விபத்து - யோகராணி கணேசன்

அது ஒரு ஆவணி மாதத்து வெள்ளிக்கிழமை. வேலையில் இருந்து வீட்டிற்கு வந்த ப்ரியா, அவசர அவசரமாக சமையல் வேலைகளை முடித்துவிட்டு, வெளியில் புறப்படத் தயாரானாள். நானும் வருகின்றேன் என்று அடம்பிடித்தான் ஏழு வயதான மகன். இதோ அரை மணித்த்கியாலத்தில் வந்து விடுகின்றேன் என்று சொல்லி அவனை சமாதானப் படுத்திவிட்டு, வாசலில் நின்ற சுசுக்கி இக்னிஷ்( Suzuki ignis) மகிழூந்தை (CAR) எடுத்துக்கொண்டு பக்கத்து தெருவிலிருந்த கடைமாளிகை( shopping mall ) நோக்கி விரைந்தாள், ப்ரியா. நாளைக்கு சனிக்கிழமை.

.


Read More


கானக விதி - சிரீஷ் ஸ்ரீனிவாசன்

ஆப்ரிக்கா டன்ஸானியா நாட்டில் வடக்கு செரங்கட்டிப் பூங்கா பகுதியில் இருக்கிறது இக்கிராமம். மனிதனை வேட்டையாடிய விலங்கைப் பழி தீர்க்கும் எண்ணம் உடையவர் இங்குள்ள மக்கள். ‘வில்டர் பீஸ்ட்’ என்கிற மாடுகள் இடம் பெயரும் காலம் அது. செரங்கட்டிப் பூங்காவின் தெற்கு பகுதியில் ஆரம்பித்து வடக்கு நோக்கி செல்லும் பாதையில் இருக்கும் புல்வெளியில் அவை மேயும். ஓய்வு கொள்ளும். அவைகளின் இனப்பெருக்கம் நடக்கும் இடமும் இதுதான். மாமிசப் பட்சிணியான காட்டு விலங்குகள் மாடுகளை வேட்டையாடும். அச்சமயத்தில் மனிதன் குறுக்கே

.


Read More


வளையல் - ஸ்ரீ.தாமோதரன்

முன்னொரு காலத்தில் கமலாபுரம் என்னும் ஊரில் ஒரு வணிகன் வாழ்ந்து வந்தான். அவன் தினமும் வெளியூர் சென்று கை வினை பொருட்களை வாங்கி வந்து ஊர் ஊராய் விற்று வாழ்க்கையை நடத்தி வந்தான். அவனுக்கு ஒரு மனைவி. அவள் வீட்டு வேலைகள் அனைத்தையும் பார்த்துக்கொண்டு, தினமும் இவன் வாங்கி வரும் கைவினை பொருட்களை தரம் வாரியாக பிரித்து கொடுத்து அவனுக்கு உதவி செய்வாள். அதன் பின் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பண்டம் என்று விலை வைப்பார்கள். (குட்டீஸ்

.


Read More


ஓட்டம்னா ஓட்டம், அப்படி ஒரு ஓட்டம்! - யுவகிருஷ்ணா

எச்சரிக்கை : இப்பதிவின் தலைப்பை யாரும் எம்.ஜி.ஆர் பாணியில் படித்துத் தொலைத்துவிட வேண்டாம். பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. அப்போது +2 படித்துக் கொண்டிருந்ததாக நினைவு. எங்கள் வீடு மெயின்ரோட்டில் இருந்து சிறிய சந்துக்குள் அமைந்திருந்தது. மெயின்ரோட்டில் எங்கள் வீட்டுக்கு முன்பாக ஒரு கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் அலுவலகம். அதற்கு பக்கத்தில் பூசாரிவீடு. பூசாரி வீட்டுக்கு அடுத்ததாக மிஷின்காரம்மா வீடு. அவர்கள் வீட்டுக்கு முன்பாக கடையில் வாடகைக்கு ஒரு ஒயின்ஷாப்பும், பாரும் இருந்தது. அவ்வப்போது குடிகாரர்கள் குடித்துவிட்டு கலாட்டா

.


Read More


கோட்டாமி - பரிவை சே.குமார்

அவரு பேரு கோட்டசாமியோ இல்லை கோபால்சாமியோ… அது யாருக்குமே தெரியாது. எல்லாருக்கும் அவரை கோட்டாமியாத்தான் தெரியும். அவருக்கு எப்படியும் ஐம்பது வயசுக்கு மேலதான் இருக்கும். இந்த ஊருக்கு வந்து நாலஞ்சு வருசமாச்சு. வரும்போது ஒரு மஞ்சப்பை மூட்டையோடும் அழுக்கு சட்டையுடனும்தான் வந்தார். பிச்சைக்காரராய் இருக்குமோ என்று நினைத்து யாரும் அவரைக் கண்டு கொள்ளவில்லை… ஆனால் அவர் பிச்சை எதுவும் எடுக்கவில்லை… கோவில் அருகில் பயனில்லாமல் கிடந்த ஒரு வீட்டு திண்ணையில் படுத்துக் கொண்டு கோயில் பிரசாதங்களை வாங்கி

.


Read More


தாய், தகப்பன் ஆகலாமா…? - காரை ஆடலரசன்

” நீ நினைக்கிற மாதிரி இல்லே. சுந்தரம் கட்டைப் பிரம்மச்சாரி ! ” சொன்ன தோழியை அதிர்ந்து, ஆச்சரியமாகப் பார்த்தாள் ராதா. ரத்னா விடாமல் தொடர்ந்தாள். ” அவரை எனக்கு நல்ல தெரியும். நாங்க ஒரே ஊர். பக்கத்து பக்கத்துத் தெரு. பள்ளிகூடம்கூட ஒண்ணா படிச்சோம். சுந்தரத்துக்கு அம்மா மட்டும்தான். அப்பா இல்லே. புள்ளை தலை எடுத்ததும் அவர் மண்டையைப் போட்டுட்டார். அஞ்சு அக்கா தங்கச்சிங்களைக் கரையேத்துறதுக்குள்ளே இவருக்கு கலியாண வயசு காணாம போச்சு. ‘ திருமணமே

.


Read More


அம்மாகிட்ட உண்மையே சொல்லிடலாம்ப்பா… - ஜெ.சங்கரன்

அம்மா!,நான் காலேஜுக்கு கிளம்பறேன், ரொம்ப லேட்டாயிடுச்சி” என்று கத்திக் கொண்டே காலேஜுக்கு கிளம்பினாள் சுதா. “ஜாக்கிறதையா போய் வா,ஸ்கூட்டரை கவனிச்சு ஓட்டு” என்று சொல்லி விட்டு தன் மகள் சுதாவுக்கு ‘டா’ ‘டா’ காட்டி விட்டு வீட்டுக்கு உள்ளே வந்தாள் மரகதம். உள்ளே வந்து சமையல் ரூமுக்குப் போய் கணவனுக்கு நாஷ்டாவை எடுத்து வந்து கணவன் உட்கார்ந்து இருக்கும் ‘டைனிங்க் டேபிள்’ மேல் வைத்து விட்டு,தனக்கு கொண்டு வந்து இருக்கும் நாஷ்டாவையும் வைத்துக் கொண்டு அவர் பக்கத்தில்

.


Read More


விரட்டும் இளைஞர்கள் - எஸ்.கண்ணன்

(இதற்கு முந்தைய ‘இரண்டாம் கல்யாணம்’ படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) ராஜலக்ஷ்மியை நடுத்தர வயதான ஆண்களோ அல்லது வயசான ஆண்களோ உற்றுப் பார்த்ததில் சபரிநாதனின் மனசில் பெருமைதான் ஏற்பட்டதே தவிர வேற பாதிப்பு எதுவும் இல்லை. அதே சமயம் சின்ன வயசுப் பையன்கள் ராஜலக்ஷ்மியை கொஞ்சம் கவனித்துப் பார்த்தாலும்கூட அந்தப் பார்வைகள் அவரை நெளிய வைத்தது! மகள்கள் சென்ற ரயில் கிளம்பிப் போனபிறகு ஸ்டேஷனில் இருந்த புத்தகக் கடையில் ராஜலக்ஷ்மி சில வாரப் பத்திரிகைகளும் கதைப்

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.