This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்

http://www.sirukathaigal.com/2019/08/21/

இந்த முகம் எந்த முகம்? - சுதாராஜ்

அந்த முகம் எந்த முகமென்பது உண்மையிலேயே எனக்கு நினைவில் இல்லை. சில நாட்களுக்கு முன்னர் ஒருநாள் அவர் என்னைக் காண வந்திருந்தார். அப்போது நான் எனது புத்தகக் கடையின் பின் அறையில் சில கடமைகளில் ஈடுபட்டிருந்தேன். மதியம் பன்னிரண்டு மணியிருக்கும்.. கடையிற் பணி புரிபவர் என்னிடம் வந்து அவரது வருகையைப்பற்றிக் கூறினார். “யாரோ உங்களைத் தேடி வந்திருக்கிறார்..” “யாரது..?” “தெரியாது.. காலையிலும் வந்து தேடியிட்டுப் போனார்..” நான் எழுந்து வெளியே வரவில்லை. அவரது வருகை ஏதாவது அலுவல்

.


Read More


மரணம் என்றால் பயம் ஏன்? - இரா.சடகோபன்

மரணம் என்றால் பயப்படாதவர்கள் உலகில் யார் இருக்கிறார்கள். ஆனால் அதற்காக மரணம் வந்து விடாமல் இருந்து விடுமா. இன்று நீ இறந்துவிடு உடனேயே உன்னை சொர்க்கத்துக்கு அனுப்பி விடுகிறேன் என்று அந்த கடவுள் வந்து சொன்னாலும் அவர்கள் நம்பவா போகிறார்கள். இந்த கடவுட் கொள்கைகள், மற்றும் மதம்கள் என்பன உருவாவதற்கு அடிப்படையாக அமைந்ததுதும் இந்தப் பயம் என்ற உணர்வுதான். ஆனால் அதனை நாம் சரியாகப் புரிந்துகொண்டால் நாம் மரணத்தைப் பற்றி அஞ்சத் தேவையில்லை. பின்வரும் கதையைக் கேளுங்கள்.

.


Read More


சேற்றில் மலர்ந்த செந்தாமரை - ஜெ.சங்கரன்

அத்தியாயம்-24 | அத்தியாயம்-25 உடனே சாந்தா “செந்தாமரை எங்க வீட்டுக்கு வந்த வேளை ரெண்டு வருஷத்துக்குள்ளாற எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பொறந்துங்க.எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்ததுங்க” என்று சொன்னாள்.செந்தாமரை “நான் பத்தாவது வகுப்பு படிக்கிற பிள்ளைங்களை இட்டு கிட்டு மதுரைக்கு ‘எக்ஸ்கர்ஷன்’ போய் இருந்தேன்க்கா.நாங்க மதுரை கோவிலை பபாத்து விட்டு வெளியே வந்தப்ப, தூரத்தில் அப்பாவும்,அம்மாவும் தனியா உக்காந்து கிட்டு இருப்பதை பாத்தேங்க்கா.அவங்க பையன் ஆனந்தன் அப்பாவையும் அம்மாவையும் ஒரு முதியோர் இல்லத்லே சேத்து விட்டு

.


Read More


விழலுக்கு இறைத்த நீர் - பரிவை சே.குமார்

தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தார் நாகராஜ். அவருக்கு இப்பல்லாம் இரவில் தூக்கம் வருவதில்லை. படுத்ததும் அயர்ந்து தூங்க ஆரம்பிப்பவர் திடீரென விழித்துக் கொள்வார். அப்புறம் தூக்கம் அவ்வளவுதான். எப்பவும் கொஞ்ச நேரமாச்சும் தூங்குவார். இன்று தூக்கம் வரவேயில்லை… அதுக்கும் காரணம் இருந்தது… இரவு வாசலில் உக்கார்ந்து சாமிநாதனுடன் வெற்றிலை போட்டபடி பேசிக்கொண்டிருப்பது அவரது வாடிக்கை. இன்றும் பல விஷயங்களைப் பேசினார்கள்… சிரித்தார்கள்… பேச்சு சந்தோஷமாய்ப் போய்க்கொண்டிருந்த வேளையில் சாமிநாதன், ‘உன்னைய மாதிரி பிள்ளைகளை நாங்க யாரும்

.


Read More


கலப்படம் - ஸ்ரீ.தாமோதரன்

ராசாராமன் என்னும் வியாபாரி கிளியூர் என்னும் ஊரில் வாழ்ந்து வந்தான். கிளியூர் சிறு ஊர், அங்குள்ள மக்கள் அப்பாவிகள். ஆனால் ராசாராமன் வியாபாரம் செய்வதில் படு புத்திசாலி. எப்பேர்பட்ட சரக்கையும் விற்று பணமாக்கி விடுவான். அந்த ஊரில் அவன் கடை மட்டுமே இருப்பதால் அந்த ஊரில் உள்ளவர்களும் வேறு வழியில்லாமல் அவனிடமே பொருளை வாங்குவர். இதனால் எப்படியும் நம்மிடம்தானே வாங்க வருவார்கள் என்ற நம்பிக்கையில், கடையில் பலசரக்குகளில் கலப்படம் செய்து வியாபாரம் செய்வான். இதனால் பலர் உடல்

.


Read More


கல்யாணம்! - யுவகிருஷ்ணா

கிருஷ்ணன் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பான். நாகேஷைப் போல ஒல்லியான வெடவெட தேகம். நிற்கும்போது கூட ஏதாவது சாய்மானம் அவனுக்கு தேவைப்படும். துறுதுறுவென்று எதையாவது செய்து கொண்டிருப்பான். கையையும், காலையும் வெச்சுக்கிட்டு சும்மாவே இருக்கமாட்டியாடா என்று அவனை கேட்போம். இரவு 12 மணிக்கு முன்னதாக அவன் வீட்டுக்கு சென்றதாக சரித்திரமேயில்லை. தினமும் பீர், பீச்சு, பிகர், பார்க், சினிமா என்று அலுவலக நேரம் தவிர்த்தும் எந்நேரமும் பிஸியாகவே இருப்பான். பெயருக்கு ஏற்றாற்போலவே கிருஷ்ணலீலா தான் தினமும். முருங்கை

.


Read More


நகுலனின் இரவு - ஜே.கே

காவலுக்கு நிற்பதிலேயே என் இரவுகள் கழிகின்றன. நாட்டு மாந்தர். வனமேகியோர். தமையர். தம்பி. அன்னை. அவ்வப்போது மனைவி. அல்லாத பொழுதுகளில் அண்ணி. காவலுக்கு நிற்பதிலேயே என் இரவுகள் கழிகின்றன. காப்பது என் கடன் எனில் எவரிடமிருந்தெல்லாம் இவர்களைக் காத்துக்கொள்கிறேன்? நட்சத்திரங்களிடமிருந்தா? நிலவிடமிருந்தா? பறவைகளிடமிருந்தா? அடர்ந்து பரவிக்கிடக்கும் இரவிலிருந்தா? இரவுக்கு அப்பாலே வேட்டைக்குத் தயாராயிருக்கும் இரை தின்னிகளிடமிருந்தா? கெளரவர்களிடமிருந்தா? சோதரர்களிடமிருந்தா? அல்லது என்னிடமிருந்தா? *** நல்ல மனிதர்களைத் தள்ளியே வைத்திருத்தல் சாலம் என்று படுகிறது. அவர்கள் என்னை நெருங்கும்போது

.


Read More


நேர்க்கோடு..! - காரை ஆடலரசன்

இருளும் ஒளியும் கலந்த மசக்கையான நேரம். பக்கத்து வீட்டில் ஏதோ கரைச்சல். சோமசுந்தரம் மிராசு, அவரின் கூலி ஆள் சங்கன், மிராசுவின் மனைவி செண்பகம்…. என்று குரல்கள் மாறி மாறி கேட்டது. கொஞ்ச நேரத்தில் சோமசுந்தரத்தின் மகன் ராமு என் வீட்டிற்குள் நுழைந்தான். படித்துக்கொண்டிருந்த என்னிடம் வந்து , ” சார் ! அப்பா உங்களைக் கையோட கூட்டி வரச் சொன்னாங்க. ” நின்றான். அவருக்கு ஏதாவது சிக்கல், பிரச்சனை என்றால் என்னை உடனே அழைப்பார். எனக்குத்

.


Read More


இப்படியும் மனிதர்கள்… - யோகராணி கணேசன்

இன்று திங்கட்கிழமை, அதிகாலை நேரம் 6:30 மணியிருக்கும் அவசர அவசரமாக 6:35 ற்கு என் வீட்டிலிருந்து 200 மீற்றர் தூரத்தில் இருக்கும் பேரூந்து தரிப்பிடத்திலிருந்து ஒஷ்லோ(Oslo) தலை நகரம் நோக்கி புறப்படும் பேரூந்தை பிடிப்பதற்காக வெளிக்கிட்டுக்கொண்டிருக்கிறேன். வீட்டுக்கு வீடு இரண்டு மகிழூந்து, வழி எங்கும் போக்குவரத்து நெரிசல். அதைவிட சுங்க வரிக்காரரின் தொல்லை. அதனால் பணிக்குச் செல்லும்போது எப்பொழுதும் பொதுப்போக்குவரத்து சாதனங்களை பயன்படுத்துவது என் வழக்கம். இன்றும் வழமைபோல என் மன்னவரே மகிழூந்தில் ஏற்றிச்சென்று பேரூந்து வரும்வரை

.


Read More


புது மாப்பிள்ளை - எஸ்.கண்ணன்

(இதற்கு முந்தைய ‘அடுத்த பெண்மணி’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) இந்தக் கல்யாணம் நிச்சயமானத்தில் சபரிநாதனுக்கு இரண்டு விதத்தில் சந்தோஷம். முதல் சந்தோஷம், வறுமைக் கோட்டுக்குக் கீழே ஏழ்மையில் உழன்றாலும் ராஜலக்ஷ்மி ரொம்ப அழகான பெண்ணாக இருந்தாள். இரண்டாவதாக, பார்ப்பதற்கு அவள் பிராமணாள் வீட்டுப் பெண் போல இருந்தாள். சபரிநாதனுக்குப் பாவம் இறக்கை இல்லாமல் போய்விட்டது. அதுமட்டும் இருந்திருந்தால் கல்லிடைக்குறிச்சிக்கு நூறு தடவையாவது பறந்துவிட்டு வந்திருப்பார். ராஜலக்ஷ்மிக்கு வயது இருபத்தைந்து. அம்மா, ஒரு அண்ணனும்

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.



To change your subscription, click here.