This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2019/08/03/

அந்த மனிதர் - யோகராணி கணேசன்

பொறியியல் கல்லூரியில் உயிர்வேதியியல் பிரிவில் இரண்டாம் ஆண்டில் படித்துக்கொண்டிருந்த காலமது. என்னை விட ஏழு எட்டு வயது குறைவானவர்களுடனான கல்விப்பயணம். அதிகளவிலான நோர்வேஜியர்களையும் ஒரு சில வெளி நாட்டவர்களையும் கொண்டிருந்த அந்தப் பிரிவில் இலங்கையர்கள் என்று சொல்வதற்கு என்னோடு இன்னுமொரு இளம் மாணவி மட்டுமே. இரசாயனவியல் தொழில்நுட்பம் என்னும் பாடம் தொடர்பாக ஒர் ஆய்வுக்கட்டுரை எழுதுவதற்காக ஒரு மதுபானங்கள், குளிர்பானங்கள் தயாரிக்கப்படும் மிகப்பெரிய தொழிற்சாலை ஒன்றிற்கு சென்றிருந்தோம். எங்களுக்கு விரிவுரையாளராக இருந்தவர் பின்லாந்து நாட்டைச்சேர்ந்த ஒரு பெண்மணி.

.


Read More


அரூபவலை - பொ.கருணாகரமூர்த்தி

அது 80களின் ஆரம்பம். கி-ஜெர்மனி நோக்கிப்பறந்த AEROFLOT / LOT போலந்தின் விமானங்கள் அனைத்தையும் நிறைத்துக்கொண்டு தமிழர்கள் அம்முலோதியாக வந்து இறங்கிக்கொண்டிருந்த சமயம். அவர்களைவிடவும் ஒருவருடம் முன்னதாக பெர்லினில் கால்களைப்பதித்துவிட்ட நானும் ராஜாவும் அரசு தந்த பென்ஷியோன்களின் (விடுதிகள்) கட்டில்களைத் தேய்த்துக்கொண்டிருக்கையில் எங்கள் பென்ஷியோனுக்கு இணுவிலிலிருந்து பாரிவேந்தன் என்றொருவரும் வந்து சேர்ந்தார். அவரிடம் வம்புதும்பு பிக்கல்பிடுங்கல்கள் எதுவுமில்லை,. பியர்கூட மாந்தமாட்டார். கொஞ்சம் சனாதனி, ஆசாரசீலர். அவருக்கு ஜெர்மனிக்குப் புறப்படமுதலே ஊரில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அவர் இங்கு வந்திறங்கிய

.


Read More


சேற்றில் மலர்ந்த செந்தாமரை - ஜெ.சங்கரன்

அத்தியாயம்-20 | அத்தியாயம்-21 செந்தாமரை சொன்னதைக் கேட்ட ஷர்மாவின் கண்களில் கண்ணீர் முட்டியது.அவர் தன் மூக்குக் கண்ணாடியை எடுத்து விட்டு தன் கைக் குட்டையால் தன் கண்களைத் துடைத்துக் கொண் டார்.சிறிது நேரம் கழித்து ஷர்மா ”செந்தாமரை. நீ ரொம்ப ‘க்ரேட்’.நீ படிப்பிலே தான் ஒரு ‘மேதை’ என்று நான் நினைச்சேன்.நீ வாழக்கையிலும் ரொம்ப தீர்க்கமா,சரியா யோஜனைப் பண்ணீ முடிவு எடுப்பதிலும் ஒரு ‘மேதை’ என்று என்பதை நீ வாழ்ந்து வரும் விதத்தில்’ ப்ரூவ்’ பண்ணி இருக்கே.

.


Read More


அப்பா - இரா.சடகோபன்

அப்பா, அவருக்குக் கிடைத்த சிறிய சம்பளத்தில் அம்மாவுடன் இணைந்து எங்களது எல்லா தேவைகளையும் கவனித்துக் கொண்டதுடன் தான தர்மங்களும் செய்வார். அவர் தனக்கென்று எதனையும் செய்வதில்லை. போட்டி போட்டுக் கொண்டு போலிம்களில் முன்செல்ல முனைந்ததில்லை. பஸ்ஸிலோ, கோச்சியிலோ பயணம் செய்த போது தான் அமர்ந்திருக்கும் இருக்கையைக் கூட யாருக்காவது விட்டுக் கொடுத்து விடுவார். அவர் தனக்கென வைத்திருந்த ஒரே ஒரு பொருள் பழைய ஹம்பர் சைக்கிள். அதனையும் யாராவது இரவல் கேட்டால் கொடுத்து விட்டு தான் நடந்து

.


Read More


ருக்மிணியின் பதை பதைப்பு - ஸ்ரீ.தாமோதரன்

அலுவலகத்தில் வேலையே ஓடவில்லை, ருக்மினிக்கு,மகளுக்கு இன்னைக்கு விடுமுறை. வீட்டில் இந்நேரம் என்ன செய்து கொண்டிருப்பாள் செளம்யா வரும்போதுதான் தூங்கி எழுந்திருந்தாள். எனக்குத்தான் அவசரம். அலுவலகத்துக்கு கிளம்பி வந்து விட்டேன். இவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று போன் செய்யலாமா? மனதுக்குள் நினைத்தவள் வேண்டாம், திட்டுவாள் ஏம்மா போய் அரை மணி நேரம் தான் ஆச்சு, அதுக்குள்ள எனக்கு போன் பண்ணலையின்னா என்ன? நான் என்ன சின்ன குழந்தையா? இந்த பதிலை இப்பொழுது வாங்குவதற்கு பதில் இன்னும் அரை

.


Read More


குழந்தை எனும் மேஜிக் வார்த்தை! - யுவகிருஷ்ணா

முதலாம் திருமணநாளின் போது தான் இளவரசியோடு அம்மா, அப்பா காலில் விழுந்து எழுந்தபோது அம்மா சொன்னாள். “யாராவது நல்ல டாக்டரா பாரு குமரா!” “எதுக்கும்மா?” “உங்களுக்கு அப்புறமா கல்யாணம் ஆன பாங்க்காரம்மா மருமவ கூட ஆறுமாசம்” “……..” “எங்கே போனாலும் ‘மருமவளுக்கு விசேஷமா?’ன்னு கேட்குறாங்க. பதில் சொல்லி மாளலை!” “சரிம்மா. பார்க்குறேன்!” டாக்டரம்மாவுக்கு வயது 30களின் மத்தியில் இருந்தது. சினிமாவில் வரும் டாக்டர்களைப் போலவே கோல்ட் ஃப்ரேம் மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தார். ஆனால் வெள்ளை அங்கி எதுவுமில்லாமல்

.


Read More


சப்புமல் குமாரயாவின் புதையல் - ஜே.கே

குளித்துக்கொண்டிருக்கும்போது கிணற்றடிக்கு அம்மா வந்தார். “யாரோ ஒரு பொம்பிளைப் பிள்ளை உன்னை தேடிக்கொண்டு வந்திருக்கு” கிணற்றடியில் நின்றவாறே அடைப்பு வேலி விரிசலுக்குள்ளால் முற்றத்தைப் பார்க்கலாம். சொப்பர் சைக்கிள், கறுப்புப்பாவாடை, சிவப்புச்சட்டை, முகம் கிளியராக தெரியவில்லை. தேவையில்லை. இது தாரணிதான். காதருகே மச்சம், இரட்டைப்பின்னல், ஒருபக்க கண் இமை நீளம், கிறங்கடிக்கும் .. என்று வழமையான கதை என்றால் வர்ணனையிலேயே புங்குடுதீவு வரையும் போயிருப்பேன். அந்தளவுக்கு தாரணியை விடாமல் முன்னே பின்னே துரத்தியிருக்கிறேன். 143 சொல்லியிருக்கிறேன். அதான், I

.


Read More


கோபாலா…கோபாலா…! - காரை ஆடலரசன்

புது வீட்டில் தொலைக்காட்சிப் பேட்டி குறை. கலர்தானென்றாலும் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் வாங்கியது. பழசு! வரவேற்பறையில்…. புது சோபா, புது பாலிமர் நாற்காலி. சுவரில் மாடர்ன் ஆர்ட் படங்கள். ஷோ கேசில் பொம்மைகள், பூக்கள். ” இந்த வீட்ல டி. வி. மட்டும்தான்ப்பா பழசு..! ” என் பெரிய மகன் நிர்மல் வாய்விட்டே சொல்லிவிட்டான். ” வித்துட்டு புதுசு வாங்கலாம்ப்பா. .! ” அடுத்தவன் விமல் ஆலோசனை சொன்னான். அருகே இருந்த என் மனைவிக்குப் பொறுக்க முடியவில்லை.

.


Read More


சுட்ட கதை - பா.அய்யாசாமி

ஐயா, விசாரனைக்காக எனச் சொல்லி அழைத்து வந்து இருக்கோம், நீங்க ஏதாவது பண்ணிடாதிங்க! என பயம் காட்டினார், பள்ளிக்கரனை காவல் நிலைய சிறப்பு எஸ்ஜ சிங்காரம். எஸ் பியே ஆசைப் படறாருனு, டிஎஸ்பி இன்ஸ்ட்ரெக்சன் கொடுத்து இருக்கார்,அப்புறம் என்ன? நமக்கும் நல்லதுதானே? இருந்தாலும் தப்பு தானே? வழக்கு, விசாரனைனு .வந்தா, நாமதான் அலையனும், அவங்க ஒதுங்கிடுவாங்க! என இழுத்தார்..சிங்காரம். தப்புதான்! ஆனா, அவங்களே செய்யச் சொல்றாங்க, நமக்கென்ன? நான் பார்த்துக்கிறேன். நீங்க என் கூட மட்டும் வாங்க.

.


Read More


பெண் தேடல் - எஸ்.கண்ணன்

(இதற்கு முந்தைய ‘தனிமை’ மற்றும் ‘ கோணலான பார்வை’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது) சபரிநாதனுக்கு அடுத்த கல்யாணம் முடிந்து, புதுப் பெண்டாட்டி வருவதற்கு முன்பே தன்னைக் கழட்டி விட்டு விட்டதைத்தான் சிவக்குமாரால் சற்றும் பொறுத்தக்கொள்ள முடியவில்லை. பழிக்கு பழி வாங்கும் உணர்ச்சியை அவரும் பதிலுக்கு வார்த்தைகளால் கொட்டி விட்டார். “என்னைய வேலையை விட்டு திடீர்ன்னு போகச்சொல்லிட்டீங்க; ரொம்ப சரி. ஒங்க சொல்படி நான் இங்கேயே என் மகன்களோட இருக்கேன். நீங்களும் ஒங்க இரண்டாம் கல்யாணத்துக்கு

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.