This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்: http://www.sirukathaigal.com/2019/05/22/.

எது வளர்ச்சி? - பி.ஜெகன்நாதன்

சிறுதும் சுருக்காத விழிகள் ஏக்கம் நிறைந்த மனசுடன் பேருந்தின் ஜன்னல் இருக்கையில் தனது 20வருட வெளிநாட்டு வாழ்க்கையை முடிந்துக் கொண்டு சொந்த கிராமத்தை பார்க்கும் மகிழ்ச்சியில் நவீன் வருகிறான். இதுவரையிலும் செல்போன் விடியோ காலில் மட்டுமே பார்த்த அம்மா அப்பா தம்பி பெரியப்பா சித்தப்பா சித்தி நண்பர்கள் என அனைவரையும் நேரில் பார்த்து பேச வேண்டும் மனதில் தேங்கிக் கிடக்கும் அழுத்தங்கள் எல்லாம் தொலைத்துவிட்டு. இனி உங்களுடனே வாழ வேண்டும் என்று அவனது நினைவில் சாலையில் முன்நோக்கி

.


Read More


இன்பம் கொள்ளை போகுதே…- பொ.கருணாகரமூர்த்தி

ஒட்டுசுட்டானிலிருந்து புதுக்குடியிருப்புநோக்கி வடக்காகச்செல்லும் பாதையில் பத்து கி.மீட்டர் போனால் அது ஒரு சிறிய கணவாயில் கீழிறங்கும். அதன் அதியாழத்தில் பேராறு எனப்படும் சிற்றாறு மெல்லத் தவழ்கிறது. கீழிறங்க இறங்க அடர்வனத்தினூடு வந்து பேராற்றோடு விளையாடிய பவனத்தில் அது ஏற்றியனுப்பும் சீதளம் சுகமாக முகத்தில் முத்தும். பேராற்றின் வாராவதியில் தன் மிதியுந்தைச் சாத்திவிட்டு அதன்கீழ் சலசலக்கும் ஆற்றைச் சிறிதுநேரம் வேடிக்கை பார்த்தான். ஆனாலும் எதையும் வேடிக்கை பார்க்கவோ மனதைக்குவிக்கவோ முடியாமல் திரும்பத்திரும்ப மனைவி ராகினியின் சமீபகாலச் சாங்கியங்கள் மனதில்

.


Read More


சேற்றில் மலர்ந்த செந்தாமரை - ஜெ.சங்கரன்

அத்தியாயம் – 1 சென்னை சேத்துபட்டு கூவம் நதிகரையில் இருந்தது அந்த குடிசைப் பகுதி.வா¢சையாக இருந்த குடிசைகளில் பகல் நேரங்களில் ஒரு மயான அமைதி நிலவும்.சில நேரங்களில் கூச்சலும் சண்டையுமாய் இருக்கும்.சில நேரங்களில் குடித்து விட்டு வரும் தினக் கூலி ஆட்களின் முரட்டுப் பேச்சும்,மற்றவர்கள் கெட்ட,கெட்ட,வார்த்தைகளால் திட்டி வருவது கேட்டுக் கொண்டு இருக்கும். ஆனால் எல்லா நாட்களிலும்அந்த குடிசைப் பகுதியின் சின்ன பெண்கள் பாண்டி ஆடி வருவதும், நொண்டி ஆட்டம் ஆடி வருவதும்,கண்ணா மூச்சி விளை யாடி

.


Read More


வீடும் கதவும் - இமையம்

பெரியார் நகரில் பாவேந்தர் தெருமுனைக்கு வந்ததும், எத்தனையாவது வீடு என்ற குழப்பம் சகுந்தலாவுக்கு வந்தது. ஐந்தாவது வீடு என்ற நினைவு இருந்தது. `போன் போட்டுக் கேட்கலாமா?’ என யோசித்தாள். போனை எடுத்தாள். அதற்குள், `அஞ்சாவது வீடுதான். வடக்குப் பார்த்த வீடு’ என நினைவுக்குவந்த மாதிரி சொன்னாள். ஆனாலும் சந்தேகத்துடன் நடக்க ஆரம்பித்தாள். மேற்கில் இருந்து நடந்துவந்து ஐந்தாவது வீட்டின் முன்பாக நின்றாள். வீட்டின் தோற்றம், அவள் முன்னர் பார்த்ததற்கும் இப்போதைக்கும் பெரிய மாற்றத்துடன் இருந்தது; குழப்பத்தை உண்டாக்கிற்று.

.


Read More


தண்டித்தலைவிட தட்டிக் கொடு… - ரஞ்சன்

“எனக்கு ஒரு பிரச்னை’ என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு. வந்தவன் ஒரு இளம் தொழிலதிபன். “என்ன பிரச்னை, என்னாச்சு?’ என்று வினவினார் குரு. “என்னிடம் வேலை பார்க்க நல்ல வேலையாட்கள் கிடைப்பதில்லை. வேலைக்கு வருபவர்களும் நீடித்து இருப்பதில்லை. ஏதாவது பிரச்னையில் வேலையை விட்டுப் போய்விடுகிறார்கள்’ என்றான் வந்தவன். குருவுக்கு அவனுடைய பிரச்னை புரிந்தது. அவனுக்கு ஒரு சம்பவத்தைச் சொல்லத் துவங்கினார். “பழங்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் அது. அங்கே ஒரு மேனேஜர் வேலை செய்து கொண்டிருந்தார்.

.


Read More


கணவன் மனைவி! - ஜே.கே

“நிகழும் மங்களகரமான ஸ்ரீமுக வருடம், கார்த்திகை திங்கள், முதலாம் நாள்(16.11.1993) செவ்வாய் கிழமை, வளர்பிறை …..” குமரன் கொடுத்த அழைப்பிதழை மண்ணெண்ணெய் கடை சங்கரப்பிள்ளை முதலாளி மேலோட்டமாக நோட்டம் விட்டார். தாலி கட்டு எத்தனை மணிக்கு தம்பி? பதினொன்றுக்கும் பதினொன்றரைக்கும் நடுவில.. கோயில்லையோ? இல்ல, பொம்பிள வீட்ட, கொக்குவில் .. குளப்பிட்டி சந்திக்கு கிட்ட, ஓ, இவன் காந்தன் விரும்பி இருந்த பிள்ளை என்ன? கொக்குவில் பெட்டையே? ஆர் ஆக்கள் எண்டு தெரியுமோ? இன்றைக்கு மட்டும் இது

.


Read More


தப்புக்குத் தண்டனை…! - காரை ஆடலரசன்

” நீங்களா கத்தியை எடுத்து ஒருத்தருக்கொருத்தர் குத்திகிட்டு சாகப் போறீங்களா.! …இல்லே … நானே இந்த துப்பாக்கியால உங்க ரெண்டு பேரையும் சுட்டு அந்த காரியத்தைச் செய்யவா. ..? ” – கேட்ட….. வரதராசனுக்கு வயது 50 .சோபாவில் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார். வலது கையில் ரிவால்வர் அசத்தலாக சம்பந்தப்பட்டவர்களைக் குறி பார்த்து இருந்தது. அவருக்கு எதிரே உள்ள டீபாயில்…. பளபளவென்று இரண்டு கத்திகள். அதேப் பக்கத்தில் …. நிர்மலா அவசரக் கோலத்தில் புடவையை அள்ளிப்

.


Read More


மந்திரியின் தந்திரம் - ஸ்ரீ.தாமோதரன்

இளவரசி அழைத்தார் என்று வெளியே காத்திருந்த அமைச்சர், சிறிது சலிப்புடன் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார். இளவரசி வீட்டு வாயில்காப்போன் அமைச்சரின் சலிப்பான நடையை கண்டு ஒரு வித பயத்துடன் பார்த்து கொண்டிருந்தான். இந்த நாட்டுக்காக என்ன என்னவெல்லாம் செய்ய வேண்டி உள்ளது, என்று ஒரு கணம், சிந்தித்த அமைச்சர், தன்னுடைய எண்ணத்தை உடனே மாற்றி கொண்டார்.இளவரசி அழைக்கிறார்,என்று ஒரு பெண் பணியாள் வந்து சொல்லவும் உள்ளே சென்றார். மன்னிக்கவேண்டும் அமைச்சரே, தங்களை அழைப்பதற்கு நேரமாகிவிட்டதால் தாங்கள்

.


Read More


பிரியா வரம் - பா.அய்யாசாமி

60 வயசு ஆச்சு, உங்களுக்கும், இன்னும் ஒழுங்கா சாப்பிடக் கூட தெரியலை, கீழே சிந்தாம சாப்பிடக் கூடாதா? என்னமோ? உங்க வளர்ப்பே சரியில்லை என முகம் இழுத்தாள், சீதா. நீயும் புலம்பின்டே இரு, சிந்தினா என்ன? சுத்தம் பண்ணினாப் போச்சு, எனக்கும் கை நடுங்கிறது, வயசாயிடுத்துல்ல, க்கும்.. இந்த வாய்க்கு மட்டும் வயசு ஆகலை, ராமன், சீதா தம்பதி திருமணம் ஆகி 32 வருடம் ஆச்சு, இருவரின் அன்பின் பயனாய் ஒரு மகன், மகள். நல்ல வசதியான

.


Read More


இசக்கியும் ஜோசியரும் - எஸ்.கண்ணன்

(இதற்கு முந்தைய ‘இசக்கியின் அம்மா’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) சும்மா இருக்க வேண்டாம் என்கிறதுக்காக, பெரிய அளவில் முதல் போட்ட தொழில் எதுவும் ஆரம்பிக்க இசக்கிக்குப் பிரியம் இல்லை. கமிஷன் வருகிற வியாபாரம் ஏதாவது செய்யலாம்னு நினைத்தான். ஆவுடையப்பன் அண்ணாச்சிக்கு மலையாளத்துக்கு சரக்கு வாங்கிபோடுகிற வியாபாரம்தான் தெரியும். அதனால் அவரிடம் போகாமல் கோட்டைச்சாமியைத் தேடிப்போனான். அவர் இசக்கியைவிட மூத்தவர். பொய் புரட்டல் இல்லாத மனுஷர். “வணக்கம் சாமி…” “அடட.. இசக்கியா வா வா.

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.