கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: September 22, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

ஆயிஷா

 

 (2011ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆயிஷா ஒரு விஞ்ஞான நூலுக்கு அதன் ஆசிரியை எழுதிய முன்னுரை இந்த விஞ்ஞான கேள்வி பதில் நூலையும் இவ்வரிசையில் வர இருக்கும் இன்ன பிற பன்னிரண்டு நூல்களையும் தமிழில் எழுதத் தூண்டியது ஆயிஷாதான். இந்த நூலுக்குள் நுழையும் முன்னர் என் ஆயஷாவைத் தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் இந்தப் புத்தகமெங்கும் வார்த்தைகளாக வாழ்பவள் அவள்தான். உங்களிடம் சொல்வதில் என்ன இருக்கிறது? இதை எழுதிக் கொண்டிருக்கும்


தெய்வ பரம்பரை

 

 (2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தூங்கி வழிந்து கொண்டிருந்த பேதுரு திடுக்கிட்டுக்கொண்டே தன்னை நிதானமாக்கிக் கொள்கிறான். கயிறு மிகவும் பாரமாகி அம்மிக் கொண்டே இருக்கிறது. இருந்தாற்போல் ஏற்பட்ட இந்த அமுக்கம் எப்பொழுதும் ஏற்படுவதில்லை. ஆசை அருமையாக எப்போதாவது ஒரு நாள் ஏற்படுகின்றது. பேதுருவின் ஐம்பது வருட அனுபவத்தில் ஐந்தோ, ஆறு தடவைகள்! கடல் ஜீவிகளையற்றுக் கிடக்கிறது. ஆனாலும் அது பெருமூச்சு விடுகின்றது. கடற் பரப்பெங்கும் ஊமை வெளிச்சம் இரண்டு


மெட்ராஸ் டூ தில்லி

 

 வருடம் : 1992 இடம் : மெட்ராஸ் சென்டரல் ரயில் நிலையம், நேரம் : இரவு 10:00மணி வண்டி எண் ‘2621’ புது தில்லி வரை செல்லும் “தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் “ இன்னும் சற்று நேரத்தில் முதலாவது பிளாட்பாரத்தில் இருந்து புறப்படும்-என பெண்மணியின் அழகிய குரலுடன் ஒலித்தது. குடும்பத்துடன் முன்னரே வந்து தகவல் பலகையில் பிளாட்பாரம் எண் அறிந்து, தயாராக நின்றிருந்த முன்பதிவு செய்த பெட்டியில் ஏறி எங்கள் இருக்கையில் அமர்ந்து விட்டோம். வண்டி புறப்பட இன்னும்


கரையை மீறும் அலைகள்

 

 (1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நான் ஒரு காஸ்மெடிக் ரெப். பெயர்? ராமானுஜ வெங்கடேசப் பெருமாள். என்னுடைய நண்பர்கள் அழைப்பது ராம். அப்பா போன வருஷம் வரைக்கும் ‘தண்டச் சோறு’ என்று கூப்பிட்டுக்கொண்டிருந்தார். வேலை கிடைத்து முதல் மாதச் சம்பளக் கவரை அவரிடம் நீட்டிய போது அந்தத் ‘தண்டச் சோறு’ பட்டத்தை வாபஸ் வாங்கிக்கொண்டு, ‘மகனே ராமானுஜா’ என்று உச்சி மோந்தார். என் உயரம் அமிதாப்பச்சன் காதுக்கு வருவேன்.


எண்ணங்கள் வித்தியாசமாய்

 

 பதினைந்து வருடங்களுக்குள் மூன்று, நான்கு முறை நூலகத்தில் இருந்து எடுத்து வந்து வாசித்த நூல் தோப்பில் முஹம்மது மீரானின் “அஞ்சு வண்ணம் தெரு” என் மனதின் ஓரத்தில் உறுத்தலாய் இருக்கும் கதாபாத்திரம் “மம்மதும்மா” அவள் தன்னை காப்பாற்றி கொள்ள போடும் வேஷமான, ஆங்கார கோபம், அதன் வெளிப்பாடு, அதே நேரத்தில் அவளின் உள்ளுக்குள் வெளி கிளம்பும் ஆசைகள், நிறைவேற முடியாமல் போகும் அமுங்கி போகும் நிலை. (நாஞ்சில் நாட்டின் சிறு தெருவில் தறி நெசவு செய்யும் ஏழை


எக்ஸ்சேஞ்ஜ் – ஒரு பக்க கதை

 

 மெடிக்கல் ரிப்போர்ட்களோடு ஜம்புவின் மனைவி அகிலாண்டேஸ்வரி கன்ஸல்டிங் அறைக்குச் சென்றாள். தன் மனைவி கன்ஸல்டிங் அறையிலிருந்து வெளியே வந்து ஷாப்பர் பையிலிருந்து எதையோ எடுத்துக்கொண்டு மீண்டும் டாக்டர் அறைக்குள் சென்றதைக்கூட கவனிக்காமல் வாட்ஸப்பில் மூழ்கியிருந்ததார் ஜம்பு. “என்னங்க..” “கன்ஸல்டேஷன் முடிஞ்சிடுச்சா அகி.” மொபைலை சட்டைப்பையில் செருகியபடியே கேட்டார் ஜம்பு. “ம்..” “பார்மஸில மருந்து வாங்கணுமா?” “ம்ஹூம்.. டாக்டரே கொடுத்துட்டாங்க..” “அப்படியா” என்று வியந்தபடியே ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தான் ஜம்பு. “எல்லாத்தையும் விவரமா சொல்றேன் இப்போ கீரைக் கடைல


ரிகர்ஸல்

 

 (1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காரைப் போர்டிகோவில் நிறுத்தினேன். நர்ஸிங்ஹோமின் சுற்றுப்புறம் பசுமையாய் இருந்தது. தென்னை மரங்கள் தோட்டக்காரனின் கார்டியன்ஷிப்பில் உயர்த்துகொண்டிருந்தன. திறப்பு விழா தேதி சலவைக்கல்லில் ஆழமாய் இருந்தது. ஒரு வருஷத்தில் நர்ஸிங் ஹோம் செங்கல் செங்கல்லாக, நோயாளிக்கு மேல் நோயாளியாக வளர்ந்து கொண்டிருந்தது. தரையில் மொஸைக் வழுக்கி விட்டது. வழக்கமான வாசனை மிக லேசாக இருந்தது. முன் ஹாலில் பிரதான டாக்டரின் தந்தை ஜரிகை மாலையில்


அரவம்

 

 மருதன் நான்கு நாட்களாகத் தூங்கவேயில்லை. வந்தவாசிக்கு அருகிலிருக்கும் இடைக்கல் எனும் கிராமத்தில் விவசாயக் குடும்பம். கொஞ்சம் நிலம். பம்பு செட் இல்லை, கிணறு இல்லை. வானம் பார்த்த பூமி. மாரி பொய்த்துவிட்டால் நகரம் நோக்கி நகர வேண்டியது தான். ஊரின் பெரும்பாலான மக்களுக்கு இதே நிலைதான். சென்னை பெருநகரம் இவர்களைப் போன்றவர்களை வாரி அணைத்து கொள்கிறது. கட்டிட வேலை ஜரூராக நடந்து கொண்டிருக்கும் புறநகர் பகுதிகள் இவர்களது தொழில் மையம். எங்காவது வாட்ச்மேன் வேலை கிடைக்கும். நெளிவு


அந்தி மந்தாரை

 

 (1937ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘பட்டாபி!’ பதில் இல்லை, ஒரு விநாடி, மீண்டும் ஒரு முறை அழைத் தான் சேஷாத்திரி. பட்டாபி உள்ளே இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் ஜன்னல் கதவு திறந்திருந்தது. அதுதான் பட்டாபி ஆபீஸி லிருந்து வந்து விட்டானென்பதற்கு அடையாளம். இருந்தால் பதில் சொல்லாமலிருப்பானா? ஒருவேளை, உள்ளே காபி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாளோ… என்று நினைத்துக் கொண்டே சேஷாத்திரி சிறிது தயங்கிய வண்ணம் படிகளிலேறி ஓரமாய் மூடியிருந்த கதவைத்


சகுனியின் சிரம்

 

 1 கிருஷ்ணனால் தூங்க முடியவில்லை. அன்று மாலை முடிவுற்றிருந்த முதலாம் நாள் பாரதப் போரின் அவலங்களெல்லாம் மீள மீளவெழுந்து அவன் மனத்தை உலுப்பிக்கொண்டிருந்தன. கையிழந்த காலிழந்த மெய்பிளந்த மனிதர்கள் எழுப்பிய வதைப்பாட்டின் பெருவோலம், குலைந்த சுருளின் விசையுடன் விரிந்தெழுந்துகொண்டு இருந்தது. போலவே, சரங்களைத் தம் தொண்டைக் குழிகளிலும் பழுவிலும் வயிற்றிலும் தாங்கிய யானை குதிரை ஆதியாம் படை மிருகங்களின் பெருந்தொனி அவனால் தாங்கமுடியாததாய் இருந்தது. அர்ச்சுனனுக்கான சாரதியத்தைச் செலுத்தியபொழுதிலும் கிருஷ்ணன் கவனம் கள நிகழ்வுகளில் பிசகாதேயிருந்தது. அந்த