கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: September 16, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

திருவிளக்கும் தெருவிளக்கும்

 

 (1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) விடியலில் எழுந்துவிடும் வழக்கமுடைய டாக்டர் நல்லசிவம் தனது வீட்டின் மொட்டை மாடியில் நின்று உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அதிகாலை ஆறுமணி ஆகியிருக்கக் கூடும். பொழுது “பொல்”லெனப் புலர்ந்து கொண்டிருந்தது. மக்கள் நடமாட்டம் சன்னம் சன்னமாகப் பெருகிக் கொண்டிருந்தது. டாக்டர் நல்லசிவம் தான் ஏறக்குறைய முப்பது நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்திருக்கக்கூடும் என்பதை மனக் கணக்கால் ஊகித்து உணர்ந்து கொண்டார். உடற்பயிற்சியை நிறுத்திவிட்டு


கடிதமும் கவலையும்

 

 (1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வாசகர்களுக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் நான் எழுத்துலகில் ஈடுபட்ட காலத்தில் எழுதிய கதைகள் சில மெளனப் பிள்ளையார் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது. இப்போது அதையே திரு.கோபுலுவின் அற்புதமான சித்திரங்களுடன் இரண்டாம் பதிப்பாக மங்கள நூலகத்தார் கொண்டு வந்துள்ளார்கள். திரு. கோபுலுவுக்கும் மங்கள நூலகத்தாருக்கும் என் நன்றி. இந்தப் புத்தகத்தில் அடங்கியுள்ள கதைகளைச் சமீபத்தில் ஒரு முறை படித்துப் பார்த்தேன். சில இடங்களில் இவ்வளவு


சிவப்புச்சட்டை…

 

 சென்னையின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றாக காணப்படுவது ‘கூவம் ஆறு – .’இது பிரதான பல சாலைகளை கடந்தாலும், ரயில் நிலையம் அருகில் ஒடும் ஒரு பகுதி இடத்தின் தெரு பெயர் “முல்லை நகர்.”கூவம் ஆற்றின் அதன் இருகரையிலும் , வரிசைப்பட்டு அமைந்திருப்பது குடிசைகள் தான். இது பெரும்பாலும் ஆக்கிரமிக்கப்பட்ட இடமே, ஆட்டோ, ரிக்க்ஷா, ஓட்டுநர்கள், தினகூலிகள், இப்படி பலக்குடும்பத்தினர் வாழ்ந்திருக்க, ரயில் நிலையத்தில் தின கூலியாக இருப்பவர் “போர்டர் குப்பன்”இவரும், இரயில்வே அதிகாரி ஒருவரது வீட்டில் வீட்டுவேலை,


சின்னு முதல் சின்னு வரை

 

 (1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பாகம் ஒன்று | பாகம் இரண்டு இது போல் இன்னும் எவ்வளவோ நீண்ட ஞாபகங்களின் ஆதாரமாய் இருக்கிற இந்த அத்தை வீட்டில் நுழையும்போது கிட்டத்தட்ட இருட்டிவிட்டது. இருட்டைவிட இப்படிக் கிட்டத்தட்ட இருட்டுகிற நேரத்துக்கு எப்போதுமே உரிய அழகுடன் எல்லாமே இருந்தது. மிகச் சிக்கனமாக ஏற்றப்பட்ட விளக்குடன் இருந்த அந்த வீட்டுக்குள்ளேயே சின்னுவும் இருக்கலாகாதா என்று எனக்குத் தோன்றியது. இப்படி ஒரு இருட்டில், இப்படி


கெளரவம்

 

 எப்படி இருக்கிறாய் பார்வதி? கேட்டவளின் முகம் பார்த்த பார்வதி நல்லா இருக்கேன், புன்னகையுடன் சொன்னாள். நீங்க? எனக்கென்ன, ம்..புன்னகையை முயற்சி செய்து முகத்தில் வரவழைத்து, நல்லாத்தான் இருக்கேன், சமாளித்தாள் கமலா வாங்க, வெயிலுக்கு குளிர்பானம் ஏதாவது சாப்பிடலாம் அழைத்தாள் பார்வதி. வேண்டாம், வேண்டாம் எனக்கு சளி பிடிக்கும் உனக்கு தெரியுமே. பரவாயில்லை, சூடா காப்பியாவது குடிக்கலாம் மீண்டும் வற்புறுத்தினாள் பார்வதி. இல்லை பார்வதி பத்து நிமிசம்தான் நடந்தா வீடு வந்திடும், உன்னை எப்பவாவது பார்க்க முடியுமான்னு நினைச்சுக்குவேன்,


மனதோடுதான் நான் பேசுவேன்..!

 

 இருவருக்கும் இடையில் பேச ஒன்றுமே இல்லையா? மௌனமே பேசிக்கொண்டிருக்கிறது. இருவருக்கும் அதன் மொழி நன்றாகப் புரிந்துவிட்டது போல ஒரு அன்னியோன்யம்.. காலையிலிருந்து இரவு படுக்கும் வரை இது தொடர்கிறது….! ஒருவருடத்துக்கும் மேலாகிவிட்டது.. வார்த்தைகளே இல்லாமல்..எப்படி முடிகிறது…? சபரிக்கு இது பழகிப்போன ஒன்று…! ஆனால் பத்மினிக்கோ? *** நான்கு படுக்கை அறைகள் கொண்ட பெரிய வீடு.. நந்தினிக்கு ஒன்று… ஒன்று நகுலுக்கு… பத்மினிக்கும், சபரிக்கும் மாஸ்டர் பெட்ரூம்… விருந்தினருக்காக சிறப்பு அறைகள் இரண்டு… இப்போது இருவர் மட்டுமே..அவர்களுடைய செல்ல


பரதநாடு!

 

 ஆற்றுப்படுகையிலிருந்த குடிசையிலிருந்து வெளிவந்த பேரழகி சகுந்தலைக்கு இளஞ்சிவப்பு நிற சூரியனிலிருந்து வெளிவந்த ஒளிக்கதிர்கள் வதனத்தில் பட்டதால் மேலும் அழகு கூடியிருந்தது! வீரச்சக்கரவர்த்தி விஸ்வாமித்திரருக்கும், தேவலோக அப்ஸரஸ் மேனகைக்கும் பிறந்த தேவலோக இளவரசி என்பதை சற்றும் அறியாதவளாய் ,வெகுளியாய் புள்ளிமான் போல் துள்ளி விளையாட வனத்துக்குள் பிரவேசித்தவளை பறவை ஒன்று வந்து தடுத்தது.கிளியைப்போன்ற வளைந்த அலகுடைய ,அதே சமயம் கருடனைப்போன்ற பெரிய இறகுடைய அபூர்வப்பறவை அது.பறவைகளின் மொழி தெரிந்தவளாதலால் புதியவர் யாரோ வரப்போகிறார் என்பதை அறிந்து ஓடிச்சென்று குடிசைக்குள்


பிரமனின் குரு

 

 (1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆபாசக் கதைகள் பற்றி எழுத்தாளர்களிடையேயும், வாசகர்களிடையேயும் நீண்ட நாட்களாகப் பெரும் சர்ச்சைகள் நடக்கின்றன. இது ஒரு ஆபாசக் கனாவின் மேல் கட்டப்பட்ட கதை. படியுங்கள். உங்கள் மனசில் நிலைத்து நிற்பதைப் பயமின்றி எழுதுங்கள் – கே.டானியல். *** கடைசியாக அவன் சொல்லி விட்டுப் போனானே ஒருவழி, அந்த வழியைத் தவிர வேறெந்தப் பாதையும் செல்லம்மாளுக்குத் தெரியவில்லை. மனதுக்குள் எழுந்து நிற்பதெல்லாம் இது சரியோ


வருகை

 

 (1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பிரதமர் வருகை பற்றிக் கிராமத்தில் பத்து நாட்களாய்ப் பேச்சு. செல்லத்தாயிக்கு ஆச்சர்யமாக இருந்தது. மாரியம்மன் பூச்சாட்டு மறுபடியும் வந்துவிட்டது போலிருந்தது, மாரியம்மன் சாட்டுன்னா தலைக்குத் தலை வரி கொடுக்கணும். வரி கொடுக்காத திருவிழா மாதிரி இது, செலவு பண்ண யார் யாரோ.பத்து நாட்கள் வேடிக்கை இன்னமும் தீரவில்லை… பொழுது போகக் கொஞ்சம் வேடிக்கை பார்க்கலாம் என்றிருந்தது. பிரதமரைச் செல்லத்தாயி பஞ்சாயத்து போர்டு ஆபீஸ்


நாகலக்ஷ்மி

 

 (1922ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) I சந்திரசேகரன் தனது நிலைமையைப்பற்றி மிகவும் கவலைப் பட்டான். அவன் பள்ளிக்கூட லீவுக்காக ஊருக்கு வந்திருந்தான். தந்தை பணம் அனுப்புவார் என்ற தைரியத்தில், பள்ளிக் கூடத்தில், பணம் கடன் வாங்கிச் செலவழித்திருக்கான். அடிக்கடி கடிதம் போட்டும், அவன் தந்தை பணம் அனுப்பவேயில்லை. கடன் கொடுத்த அவன் சினேகிதர்களும் பிறரும் கடனுக்குத் தொந்தரை செய்தார்கள். அதனால் எவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் லீவு விட இரண்டு