கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: September 7, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

மண்ணில் விழாத வானங்கள்

 

 (1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “என்னப்பா… ‘ஜுயிவில் சிப்போர்ட், எல்லாம் கொடுத்தாச்சா?” பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த கணித ஆசிரியர் கந்தசாமியின் குரல் கணீரென்று சுப்பையாவை வரவேற்கிறது. “ஆமாம் சார்! காலையிலேயே ‘ரிப்போர்ட்’ பண்ணிட்டேன். இப்ப ஆஃபீஸ்ல சர்ட்டிஃபிகேட்ஸ் எல்லாம் சரி பார்த்துக்கிட்டு இருக்காங்க. அது தான் கொஞ்சம் தாமதமாயிடுச்சு” என்றவன், சற்றுத் தயங்கியபடி அவரிடம் கேட்கிறான்: – “இன்னிக்கு ஷாருக்குக் கொஞ்சம் லேட்டாயிடுச்சு போலிருக்கே? ஸ்கூல்விட்டு நாலரை மணிக்கே


பணவெறி

 

 தொழில் நஷ்டத்தால் ஏற்பட்ட கடனை அடைக்க வழியின்றி திணறினான் பகின்.பகினுக்கு திருமண வயது வந்தும் படிப்பும்,அழகும் இருந்தும் தொழில் அமையாததால் யாரும் பெண் கொடுக்க முன் வரவில்லை.வேலையும் அமையவில்லை என்பதை விட வேலைக்கு செல்ல மனமில்லை.விரக்தியில் நண்பர்களுடன் குடிக்கும் அடிமையாகி விட்டான். ஒரு நாள் திடீரென யோசனை வந்தவனாக உள்ளூரில் ஏலத்துக்கு வந்த மில் ஒன்றை இருக்கும் ஒரே வீட்டை அடமானம் வைத்து பாக்கி கடனுடன் வாங்கியவன் அடுத்தநாளே காரும் வாங்கிவிட்டான்.இவனுடைய திடீர் உயர்வு சிலருக்கு திகைப்பை


திருப்பம்…

 

 தெருவில் வீடுகள் வரிசையாக இருந்த மய்ய பகுதியில் சின்னதாக ஒரு காலனி, இதை ராவ் காலனி என்பர், இங்கு கீழ்தளம், மேல்தளமாக 10 வீடுகளும், நடுவில் சந்தும் எதிர்புறமாக கீழ்தளம், மேல்தளமாக 10 வீடுகளும் இருக்கும். இந்த காலனியின் ஒருபக்க மேல் தளத்தில் ஒரு குடும்பம் நம் கதையின் நாயகன் பிரபுடையது.. அம்மா, அப்பா, தங்கை இவன்.–என நாண்கு பேர். இங்கிருந்து… டேய் பிரபு…. இன்னிக்கு கடைசி பரிட்சைன்னு சொன்ன, காலேஜ் கிளம்ப வேண்டாமா? எவ்வளவு நேரம்


ஒரு நாள் ஒரு பொழுது

 

 எனது விடுமுறையில் ஒரு காலைப்பொழுது அமைதியாக கடந்துகொண்டிருந்தது ஜன்னல்களை விரித்துவிட்டு வெளியே பார்த்துக்கொண்டிருக்கிறேன் வீட்டின் முன்னால்… இரவெல்லாம் உறங்கிக்கொண்டிருந்த அந்தப்பாதை விழித்துவிட்டதுபோல் ஒரு பிரமை எனக்கு, பாடசாலைகளை நோக்கி படையெடுக்கும் மாணவமாணவிகளின் நடமாட்டம் ஒருபுறம், தனது பிள்ளைகளை பாடசாலையில் விட்டு விட்டு தனது காரியாலத்திற்கு வேளைக்குசென்றுவிடவேண்டும் என்ற அவசரத்தோடு மோட்டார்சைக்கிளில் பறந்து செல்லும் பெற்றோர்கள், ஒருபுறம், இதனிடையே உறுமிக்கொண்டும் போட்டிபோட்டுக்கொண்டும் பறந்து செல்லும் அரச தனியார்பேருந்துகளின்அட்டகாசங்கள், அமைதியாக என் உடலை வருடிச் செல்லும் குளிர்காற்று..இனி…பத்திரிகை கண்ணோட்டத்தை பார்ப்பதற்காக


பணக்கட்டு

 

 மேசை ட்ராயரில் போட்டு வைத்த பணம் இவள் மனதை இம்சை படுத்தி கொண்டிருக்கிறது. ஒரு இலட்சம் ரூபாய் ஒரே கட்டாக இரண்டாயிரம் ரூபாய் தாளாக சுகமாய் படுத்து உறங்கி கொண்டிருக்கிறது. காலை பத்து மணி இருக்கலாம், இவள் அலுவலகத்தில் “கணிப்பொறியின்” முன்னால் உட்கார்ந்து எப்பொழுதோ வாங்கி போட்ட நிலத்தின் பழைய சரித்திரங்களை எடுத்து தொகுத்து வைத்து கொண்டிருந்தாள். இந்த நிலத்தின் உரிமையாளர் எங்கோ அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டு இவர்கள் அலுவலகத்தில் அதை பார்த்து எவனாவது மறு விற்பனை


விஷக்கடி

 

 அது மேல் நோக்கி செலுத்திய குரலாகத்தான் வந்தது. கீழ்வீட்டில் யாரும் இல்லை. வெகு நேரமாகக் கூப்பிட்டுக் கொண்டிருப்பது போல் தெரிந்தது. “ஸாரி ஸார்” என்ற அழைப்புக் குரல் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து சுருண்டது. காலை முதல் சுறுசுறுப்பாய் இயங்கிய வீதி விறைப்பு அடங்குகிற மதியப் பொழுது, சத்தமில்லாமல் அடங்கி விட்ட வீடுகளும், மௌனத்தின் குகை போல் நீண்டு கிடக்கும் வீதியும், கொஞ்சம் தலைசாய்க்க அனுமதித்தன. இமைகள் வலுக்கட்டாயமாகப் பிரித்து, எதிரேயும், சுற்று முற்றும் பார்த்தாள். எவரும் இல்லை.


மோனோ ஆக்டிங்

 

 (1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மியூஸிக் அகாடமி திரை கீழே விழுந்த போது, அதுவரை அமைதியாய் இருந்த ஆடியன்ஸ் கூட்டம் பலமாய்க் கைதட்டியது. கௌரி மேடையை வீட்டுக் கீழே இறங்காமல் பணிவான கைகூப்பலுடன் தன் ‘குளோஸ்-அப்’ பற்களைக் காட்டிச் சிரித்தாள். அவளை தலுங்காமல் காருக்குக் கூட்டிப் போகக் காத்திருந்தான் ஸ்ரீநாத். அவசரம் அவசரமாகத் தன் பிளிமௌத்தில் ஏறியபோது… ‘டிங் டிங்…’ என்று அலறியது அலாரம் கடிகாரம். கௌரி சட்டென்று


பெருந்தேவிக்கு பி.ஜி.உடௌஸ் வேண்டாம்

 

 அப்பாவும் நானும் நண்பர்கள் போல்தான் பழகியிருக்கிறோம். இருந்தாலும், ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன் என்று அவரிடம் சொல்லும்போது ஏதோ வந்து தடுக்கிறமாதிரி இருந்தது. நானும் அவரும் சொந்த விஷயங்களைப்பற்றிப் பற்றிப் பேசும்போது அநேகமாக எப்போதும் தமிழில்தான் பேசிக்கொள்வோம். ஆனால், ஏனோ தெரியவில்லை, இந்த விஷயத்தை இங்கிலீஷில் சொன்னேன். சொல்லும்போது எனக்கே அது ஓர் அந்நிய விஷயம் மாதிரி கேட்டது. என்னுடைய சங்கடம் அப்பாவுக்குப் புரிந்திருக்க வேண்டும். அவர் புன்னகைத்தார். ‘என்ன பெயர்?’ என்று தமிழில் கேட்டார். ‘பெருந்தேவிப்பா. எல்லாரும்


தாதியின் தியாகம்

 

 (1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஜோதிப்பூரை ஆண்டுவந்த ராஜபுத்திர அரசனுக்கு ஒரு ஆண் மகவு பிறந்தது. மிக வும் குதூகலத்துடன் எல்லோரும் அந்த நாளைக் கொண்டாடினார்கள். ஆனால் மூன்று நாட்களுக்குப் பின் நடந்த ஒரு சம்பவம் மக்கள் அடைந்த சந்தோஷத்தைத் துக்கமாக மாற்றியது. மகவை ஈன்றெடுத்த இராணி இறந்துபோனாள். தாயில்லாப் பிள்ளையை எப்படி வளர்ப் பது என்பது தான் அரசனின் கவலை. தகுந்த தாதியைத் தேடிக்கொண்டு வரும்படியாக அவர்


ஞானப்பிரவேசம்

 

 (1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவள் கதையைக் கேட்டதும் கருநாகம் தீண்டியது போல் அவன் உடலெல்லாம் விஷம் ஏறியது… அந்த அப்பாவித் தந்தை துடித்தான். குமுறினான். சித்தம் கலங்கினான். அவனுள் கொந்தளித்த உணர்வுகள் குமிழியிட்டுச் சிதறின. அந்தச் சூழ் நிலையில், வெறும் தேயிலைச் செடியைத் தவிர வேறு உலகமே தெரியாத ஒரு தோட்டத் தொழிலாளி நூறு மைல்களுக்கப்பால் வெளியே வந்து பாஷை புரியாத ஒரு சிங்கள நாட்டுக்குள் அகப்பட்டுக்