கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: September 4, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

மாடு பெற்ற புலவர்

 

 சோழ நாட்டில் உறையூரில் கிள்ளிவள்வன் என்ற சோழ அரசன் செங்கோல் ஒச்சி வந்தான். அவனுக்குத் தமிழ்ப் புலவரிடம் மிக்க அன்பு. எந்தக் காரியம் இருந்தாலும் அதை விட்டு விட்டுத் தமிழ்ப் புலவர்களுக்கு உபசாரம் செய்வான். அவனைச் சார்ந்தவர்களும் அரண்மனைக்கு எந்தத் தமிழ்ப் புலவர் வந்தாலும் வரவேற்று, உபசரித்து, அரசனிடம் அழைத்துச் செல்வார்கள். ஐயூர் என்பது சிறிய ஊர். அங்கே ஒரு புலவர் இருந்தார். அவர் பெரிய புலவர் பெருங் கவிஞர். ஆனால் காலில்லா முடவர். அவர் தம்


உயிர்காக்கும் உதவிகள்…

 

 ”குருவே எனக்கு ஒரு பிரச்சனை” என்று தன் முன் வந்து நின்ற பெண்ணைப் பார்த்தார் குரு. “என்ன பிரச்சனை?” “என் கணவருக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. எல்லோரிடமும் இரக்கப்பட்டு உதவிகள் செய்கிறார். அதனால் என்ன பலன் என்று எனக்குப் புரியவில்லை” என்றாள். குருவுக்கு அவளின் பிரச்சனை புரிந்தது. அவளுக்கு ஒரு சம்பவத்தை சொல்ல துவங்கினார். ‘இது ஒரு பனி மலையில் நடந்த சம்பவம். இரண்டு நண்பர்கள் பனி மலையில் ஒரு கிராமத்தில் இருந்து மற்றொரு கிராமத்துக்கு


ஒண்டுக் குடித்தனம்

 

 (1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வாசகர்களுக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் நான் எழுத் துலகில் ஈடுபட்ட காலத்தில் எழுதிய கதைகள் சில மெளனப் பிள்ளையார் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது. இப்போது அதையே திரு.கோபுலுவின் அற்புதமான சித்திரங்களுடன் இரண்டாம் பதிப்பாக மங்கள நூலகத்தார் கொண்டு வந்துள்ளார்கள். திரு. கோபுலுவுக்கும் மங்கள நூலகத்தாருக்கும் என் நன்றி. இந்தப் புத்தகத்தில் அடங்கியுள்ள கதைகளைச் சமீபத்தில் ஒரு முறை படித்துப் பார்த்தேன். சில இடங்களில்


மறுபடியும்

 

 “என்னங்க?” என்றாள் அரைகுறை தூக்கத்தில் இருந்தவனிடம். “என்ன?” என்றான். “இப்பொழுதைக்கு குழந்தை நமக்கு வேண்டாம், கலைச்சுடலாம்…” என்றாள்.அவள் சொல்லி முடிக்கவில்லை. திடுக்கிட்டு தூக்கம் முற்றிலும் கலைந்தவனாய் எழுந்து உட்கார்ந்தான்.அவள் தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியை. நல்ல சம்பளம். மாதம் இருபத்தைந்தாயிரம் தாண்டும்.அவனுக்கு கெமிக்கல் பிசினஸ். நல்ல வருமானம். “ஏன் வேண்டாம்? என் தம்பிங்க எல்லாருக்கும் குழந்தை பிறந்து மூணாவது நாலாவதுன்னு கிளாசுக்கு போயிட்டிருக்கு. அம்மா வேற கேட்டுட்டே இருக்கா ஏதாவது விசேஷம் இருக்காடான்னு. உனக்கு என்ன புத்தி


புது பொண்டாட்டி

 

 மாரியப்பனுக்கு தன் மனைவியை புரிந்து கொள்ளவே முடியவில்லை. என்ன சொன்னாலும் சண்டைக்கு வருகிறாள். அவன் அம்மாவையே எதிர்த்து பேசுகிறாள். அம்மாவின் வாய்க்கு அந்த தெருவே பயப்படும், அப்படிப்பட்ட அம்மா மருமகளை கண்டு விட்டாள் அமைதியாகி விடுவாள். அப்பன் அந்த பக்கமே வருவதில்லை. ஆட்டோ ஓட்டுவது இராத்திரி தள்ளாடி தள்ளாடி வந்து சத்தமில்லாமல் நல்ல பிள்ளையாய் வந்து படுத்து தூங்கி விடுவது. காலை ஏழு மணிக்குள் ஆட்டோவை எடுத்து பறந்து விடுவது இப்படி தப்பித்து கொள்கிறார். இவன்தான் ருக்மிணியிடம்


கல்லறை ஜன்னல்

 

 சேதுராமன் தன் மூத்த மகனைப் பற்றி அடுக்கடுக்காய் சொன்னதும் என்னால் நம்ப முடிய வில்லை. கண்ணபிரான் சிசுபாலன் பேரில் சொல்லும் குற்றச்சாட்டுகள் போல ஒவ்வொன்றாய் வரிசைப் படுத்திச் சொல்லவும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. கவலையை விடுங்கள் நான் வந்து பேசுறேன் நான் சொன்னால் அவன் ஓரளவுக்கு கட்டுப்படுவான் என்றேன் நான் முந்திரிக் கொட்டையாக. வேண்டாம் உங்களை எடுத்தெறிஞ்சு பேசுவான், வீணா மனக்கஷ்டம் வரும். நீங்க கேட்க வேண்டும் என்பதற்காக நான் சொல்லலை, மனுஷாலை புரிந்து கொள்ள வேண்டும்


மாட்டுப் பிரச்சனை

 

 சலீம்மைத் தேடி சிற்ரரஞ்சன்,பாபு,இன்னும் இருவர் வந்திருந்தார்கள்.” தோழர் இவர்கள் மாட்டுப் பிரச்சனையைக் கொண்டு வாரார்கள். “எங்களை வந்து தீர்க்கட்டாம்” என்ற ரஞ்சஜனைப் பார்த்து “பிரச்சனையைக் கூறு” என்றவன், யோசித்து விட்டு “கேட்டடியிலே நின்று கதைக்க வேண்டாம், உள்ளே வாருங்கள்” கூட்டிச் சென்றான். வாடகையில் ‘ராஜ’ களையுடன் இருக்கிற அந்த பெரிய பழைய வீடு வந்தாரை வாழ வைக்கும். வெளியிலுள்ள பூச்சுக்கள் கழன்று பெரிதாக விழுந்திருக்கவில்லை. உள்ளுக்க தான் அங்காங்கே விழுந்து கொஞ்சம் அலங்கோலமாக இருக்கிறது. அந்த காலத்தில்,


சீதுரு

 

 ‘டேய், உம் பேர் என்ன?’ வழிந்து விழுந்த மூக்குக் கண்ணாடிக்கு வெளியே கண்ணை வைத்துப் பார்த்துக் கேட்டார் தலைமையாசிரியர் துரைசாமி அய்யங்கார். ‘சீதுரு.’ சொல்லிவிட்டுப் பையன் தன் அப்பனைத் திரும்பிப் பார்த்தான். கண்ணாடியைச் சரி செய்துகொண்டு பையனின் தகப்பனாரைப் பார்த்தார் தலைமையாசிரியர். ‘சீதுரு, சாமி,’ வாயெல்லாம் பல்லாகச் சொன்னான் கோதண்டம். ‘சீதுருவா? அப்படியெல்லாம் பேர் இருக்காதுடா. சரியாச் சொல்லு.’ ‘சீதுருதான், சாமி. பெரியய்யிரு பேரனுக்குக்கூட அதாம் பேரு. அதைப் பாத்துதான் வெச்சேன். அது தாம்பரம் கிஷ்டங்காலேஜிலே படிக்குது.


கடமை

 

 (2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) எப்படியும் இந்த வேலையில் சேர்ந்துவிட வேண்டும் என்ற மன உறு தியுடனும், தன் னம் பிக்கையுடனும் புறப்பட்டாள் புனிதா. நேர்முகத்தேர்வுக்காக அவள் வரவேண்டிய அந்த தனியார் நிறுவனத்துக்குள் புனிதா நுழையும் போது பிற்பகல் மணி ஒன்று. நவீன கைத்தொலைபேசிகள் விற்கும் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அது. சற்று எடுப்பாகத் தெரியும் வெள்ளை நிற லாங் ஸ்கர்ட்டும்,நீல நிற சட்டையும் அணிந்திருந்தாள். புனிதா இயற்கையான


கல்யாணியின் கணவன்

 

 (1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அம்மா கல்யாணி! நீ சின்னக் குழந்தையாக இருக்கும் போதே உனது தாய் மறைந்துவிட்டாள். அப்போது கசந்து போன என் வாழ் வுக்கு நீ தான் ஆறுதல் கொடுத்தாய். உன்னை வளர்த்ததில் ஏற்பட்ட திருப்தியே இத்தனை காலத்தையுங்கடத்த எனக்கு உதவி செய்தது. என்னைப் பார்; அனுபவித்த துன்பங்களின் சின்னங்களாகத்தோலில் எத்தனை மடிப்புக்கள் விழுந்துவிட்டன. மயிரும் பஞ்சாகி நரைத்து விட்டது. இவ்வளவுக்கும் நான் நம்பிக்கையை இழந்துவிடவில்லை.