கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: September 1, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

நெடுஞ்செழியனும் இரும்பொறையும்

 

 (1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1.வளம் பெருக்கிய மன்னன் பாண்டிநாடு, கிழக்கிலும் மேற்கிலும் தெற்கிலும் கடலையே எல்லையாக உடையது. அக்’ கடலொலியினும் மிக்க ஆரவாரத்துடன் மக்கள் நிறைந்து காணப்படுகின்றனர். ‘நம் மன்னனுக்கு இனிக் கவலை வேண்டியதில்லை. அவனுக்குப் பின் முத்தமிழ் செறிந்த இந்நாட்டினை ஆளுதற்குரிய மகன் பிறந்துவிட்டான்,’ என்று பாண்டி நாட்டினர் களிப்புக்கடலில் ஆழ்ந்தனர். எங்கும் மகிழ்ச்சி! எவர் முகத்திலும் மகிழ்ச்சியின் விளக்கம் நன்றாக விளங்கிக் கொண்டிருந்தது. பிறந்த


காதலே மௌனமானால்…

 

 (2002 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தலைநகரிலிருந்து இருநூறு கிலோமீற்றர்களுக்கு சற்று அதிகமாக உள்ள தனது இலக்கை நோக்கிப் புறப்பட இருந்த அந்த அதிகாலை கடுகதி ‘இரயிலில்’ மூலை ஆசனம் ஒன்றினைப் பிடித்து வசதியாக அமர்ந்துகொண்டேன். சனநெரிசல் இல்லை. எதிரிலே என்னைக் காட்டிலும் ஓரிரு வயது அதிகம் மதிக்கத் தக்க இளைஞன் ஒருவன் சிறிது பதட்டத்துடன் ‘பிளாட்பாரத்தையும்’ தனது கை கடிகாரத்தையும் மாறிமாறிப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தான். சாதாரண ஆடையில் அவன்


கென்னியா

 

 கிறிஸ்தீனா, வீட்டின் கதவைத் திறக்கிற சத்தத்தைக் கேட்வுடனேயே ,தனது இருப்பிடத்திலிருந்து தன் கழுத்தில் கட்டப்பட்ட மணி இசைக்க பெருமகிழ்ச்சியில் ஒருவகையாகக் குலைத்தபடி ஒடி வருகிறாள் கென்னியா.தன் கையில் இருந்த பைகளை வைத்துவிட்டு அவளது நீண்ட காதுகளிடையே தனது கைகளை கோர்த்துத் தடவியபடி அவள் நெற்றிப்பகுதியில் முத்தமிட்டபோது மனதில் ஒருவகையான குளிர்ச்சி பரவுவதை உணருகிறாள் கிறிஸ்தீனா. கென்னியா சலுக்கி வகையைச் சேர்ந்த பெண் நாய். கிறிஸ்தீனாவின் சுற்றுலாத்தளம் எப்பொழுதும் ஆபிரிக்காவாகவே இருக்கும். அப்படி லிபியாவுக்குப்போன போதே இந்த வகை


இறுக்கம்

 

 “இன்னைக்கு எங்க ஆபிஸ்ல” உற்சாகமாய் ஆரம்பித்த மைதிலி தன் கணவன் முகத்தை பார்த்தாள். அவன் செல்போனில் ஏதோ கவனமாக படித்து கொண்டிருந்தான். தன் வாயை இறுக்கி கொண்டாள். அந்த நிகழ்வு கொஞ்சம் வேடிக்கையானது, ஆனால் அதை இவனிடம் சொல்ல நினைத்தாலும் அவன் அதை கவனிக்காமல் இருந்ததால் இந்த முடிவுடன் தன்னை சமையலில் ஈடுபடுத்தி கொள்ள சமையல் அறைக்குள் நுழைந்து விட்டாள். அங்கே போனாலும் இராத்திரி என்ன செய்யறது? இந்த கேள்வி..! மீண்டும் அவனிடமே சென்று கேட்பதற்கும் தயக்கமாக


இன்று போய் நாளை வாராய்..!

 

 நடுராத்திரி ஒரு மணி இருக்கும்..தடதடவென்ற சத்தம்.. “அம்மா..பயம்மா இருக்கு..!” கிரி அம்மாவின் இடுப்பை இறுக்கிக் கட்டிக் கொண்டான்.. “என்னடா பயம்..?? மேல பரண்ல எலிதான்! எதையோ போட்டு உருட்றதாயிருக்கும்…! இதுக்கு போய் பயப்படுவாளா…?? பேசாம கண்ண மூடிட்டு தூங்கு..” “அம்மா..! அம்ம்மா.! எலி எப்பிடி மேல ஏறித்து..? அதான் சாத்தியிருக்கே…!” “எலிக்கு எல்லாம் தெரியும்…” அதற்குள் பக்கத்தில் படுத்திருந்த பாரு ‘ப்ச்ச்..ச்ச்ச்.’ என்று அதட்டினாள்.. “கிரி..வளவளன்னு பேசாத.. எல்லாரும் முழிச்சுக்கறா பாரு..காலம்பற பேசிக்கலாம்.இப்போ பயப்படாம அம்மாவ கட்டிண்டு


ஆவி காயின்

 

 “டே நண்பா” “சொல்லுடா” “நேத்து நான் ஒரு யூடியூப் வீடியோ பார்த்தேன்டா.. அது ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருந்துச்சு…” “அப்படியா!” “ஆமான்டா” “அப்படி என்ன வீடியோ அது?” “ஆவிகளோடு பேசுவது எப்படி?” “டே..” “ஆமான்டா.. ஒரு போர்டு இருக்கு.. அதுக்கு பேரு ஓஜா போர்டாம்.. அத யூஸ் பண்ணி நம்ம முன்னோர்கள கூப்பிடலாமாம்.. நமக்கு எதாவது தீர்க்க முடியாத பிரச்சனைனா… அதுக்கும் தீர்வு கேட்கலாமாம்…” “ஓ..” “என்ன.. நாமும் அப்படி ட்ரை பண்ணிப் பார்க்கலாமா?” “டே.. வேணான்டா.. எனக்கு


தெளிவு

 

 (1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பள்ளி வளாகத்தில் மாணவர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆரவாரம் மகிழ்ச்சி குதூகலம் கொண்டாட்டம் கூடவே சோகம், சோர்வு கவலை ஏமாற்றம் என்றெல்லாம் முகத்திற்கு முகம் மாறுபட்ட உணர்ச்சிக் கவலையின் வெளிப்பாடு. ஒவ்வொருவரின் கையிலும் தேர்வு முடிவுத்தாள் காற் றில் பறக்கத் துடித்துக் கொண்டிருந்தது. வென்றவர் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி தன் வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வதும், தோற்றவர்களுக்கும் ஆறுதல் சொல்லிக் கொள்வதுமாய் நேரம்


ஜக்கம்மா சொல்றா…

 

 (நந்து சுந்து நடத்தி விட்டலாச்சாரியா கதைப் போட்டியில் பரிசு பெற்ற கதை.) வழக்கம்போல வீட்டுக்கு வெளியே புளிய மரத்தடியில் அமர்ந்து மாலை நாளிதழ் படித்துக் கொண்டிருந்தார் அப்பாசாமி. “ஷ்ஹ்ஹ்க்க்யூவ்வ்வ்…!!!” விகாரமான அப்பாசாமியின் கத்தலால் ஓடோடி வந்தாள் மனைவி . பதறிய அம்மாமணி கணவர் நெற்றியில் புறங்கையை வைத்தாள். காய்ச்சல் இல்லை. ‘குப்’பென வேற்காததால் ஹார்ட் -அட்டாக்குமில்லை. கை கால்கள் நடுங்க கண்கள் செருக வாய் குழறிய அப்பா சாமியை “என்னங்க” என்று உலுக்கினாள் அம்மாமணி. “ஷ்..ஷ்..ஷ்..ஷ்…..ஊ…ஊ..ஆ..ஆ..ஆ…….. ”


என் தவற்றோ

 

 அமிர்தாவை அவசரமாக மருத்துவமனையில் அட்மிட் பன்னிவிட்டு குறுக்கும் நெடுக்கமாக நடந்துக் கொண்டு இருந்தார் முத்துலிங்கம்,மனைவிக்கு பிரசவவலி வீட்டில் இருக்கும் போதே வந்துவிட்டது,அவசர அவசரமாக வண்டியைப் பிடித்து கொண்டு வந்து சேர்த்து விட்டார்,திகதி கொடுத்திருந்தது என்னமோ இரண்டு வாரங்கள் கழித்து தான்,அதற்கு முன்பே அமிர்தாவிற்கு வலி வந்ததில் கொஞ்சம் பதட்டம் ஆகிவிட்டார் அவர்,வந்து அட்மிட் பன்னியதுமே,மருத்துவமனையில் நீங்கள் போய் பிறகு வாருங்கள்,தற்போது பார்வையாளர் நேரமும் முடிந்து விட்டது என்று அவரை வெளியில் அனுப்பி விட்டார்கள்,வீட்டிற்கு போவதற்கு மனமில்லை அவருக்கு,வெளிப்பக்கம்


ரசவாதம்

 

 ஊருக்குச் சற்றுத் தொலைவில், தனித்து இருப்பது போல் தோன்றும் முருகக்கோட்டத்தை ஒட்டி இருந்த அந்தக் குடிசை வீட்டின் கதவுகள் மூடப்பட்டருந்தாலும், உள்ளே விளக்கு எரிந்து கொண்டிருப்பது வெளியே வெளிச்சமாகத் தெரிந்தது. ஊரில் வயதுப் பெண்களை வைத்திருக்கும் பெற்றோர்களால் ஜோஸ்யர்’ என்றும், டாக்டர்களால் கைவிடப்பட்ட நோயாளிகளால் வைத்தியர் என்றும், உள்ளுர்ச்சாமியாடிகளால் ‘சாமியார் என்றும், பணக்காரப் பண்ணையார்களால் பரதேசிப் பயல் என்றும், படித்த இளைஞர்களால் லூஸ்’ என்றும் நினைக்கப்படுபவரான சம்பூர்ணம் – மாடத்தில் இருந்த ஒரு ஊதாப் பொருளை எடுத்துத்