கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: June 3, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

ஊட்டி வரை உளவு!

 

 ‘காயமே இது பொய்யடா’ என்ற சித்தர் வாக்குக்கு ஒரு சிறு மாற்றம் தேவை. ‘காயமே இது பச்சோந்தியடா!’ நீங்க பாட்டுக்கு, காயம் என்றவுடன் படை, சொறி, சிரங்கு , பர்னால், ஜெர்மெக்ஸ் என்று போய்விடாதீர்கள். நான் கூறுவது செந்தமிழ் காயம். அதாவது, உடம்பு! விஷயத்துக்கு வருவோம்… ஏதோ போனால் போகிறது. எங்கு போனாலும் நன்றி விசுவாசத்தோடு நம் கூடவே வருகிறதே என்று பச்சாத்தாபப்பட்டு…. பாவம்! மதறாஸ் வெப்பத்துக்குப் பயந்து சதா வியர்வைக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்தக்


எங்கும் அவன்

 

 (1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “சோளக் கொல்லைதானேடா! முக்கா ஏக்கரு. உங்க அப்பனுக்கு.” ‘ஆமாங்க! மூணு ஏக்கர் இருந்ததுங்க முன்னாடி அம்மாவுக்கு சீக்கு வந்தப்ப போயிடுச்சி…” “உங்க ஆத்தாளும்தானே போயிட்டா…” “வருஷம் மூணு ஆகுதுங்க. அம்மா காலமாயி. அப்பாரு அப்ப இருந்து பித்துப் பிடிச்சவர்போலக் கிடக்கறாரு…” “சரி, சரி! இப்ப முக்கா ஏக்கர் பேர்லே, ‘மூணு நூறு கேக்கறியே கடன் – எப்படிடா கொடுக்கறது.” “பாடுபட்டு வயத்தைக் கட்டி,


நாரை அரசு

 

 (1953ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பல நூறு ஆண்டுகளுக்குமுன் பாரசீக நாட்டில் மசூக் என்ற அரசன் ஆண்டுவந்தான். அவன் இன்ப விருப்பினன். இரக்க நெஞ்சுடையவன். ஆனால் முன் கோபி. சிறிது அடம்பிடிப்பவன். ஆயினும் அவன் தீய குணங்களுக்கு அவன் குடிகள் ஆளாகவில்லை. அவர் களுக்கு அவன் நல்லரசனாகவே இருந்தான். தீயகுணங் கள் யாவும் அவனிடம் மாறாப் பற்றுடைய நல்லமைச்ச னிடமே காட்டப்பட்டன. மசூக்கின் நல்லமைச்சன் மன்சூர் வயது சென்ற


டொக்டர்..

 

 அந்த வாட் பெண் நோயாளர்களால் நிரம்பி வழிந்து கிடந்தது.ஒவ்வொரு கட்டிலிலும் ஒரு நோயாளி.. ஆச்சி, அம்மா, அக்கா தங்கச்சி வரைக்கும்.. சில கட்டில்களுக்கு அருகே அவங்கல பாத்துக்க வந்தவங்க சில பேர் உக்காந்திருக்காங்க.. இன்னும் சிலர் ஏதாச்சம் எடுக்க வைக்க நடந்துகிட்டு இருக்காங்க.. இந்த பக்கம் நர்ஸ்.. நாளைக்கி பரீட்சை எழுத இன்னைக்கி நோட் எடுத்து படிச்சே ஆகனும்னு நோட் எழுதுறது போல எழுதுறாங்க எழுதுறாங்க எழுதிகிட்டே இருக்காங்க.. இதெல்லாத்தையும் பாத்துகிட்டு ரொம்ப கடுப்புல நிக்கிறாரு நம்ம


மைண்ட்ஃபுல்னஸ் – ஒரு பக்க கதை

 

 அமிர்தா ஆவி பறக்கும் ஸ்நாக்ஸ மற்றும் தேநீரோடு வரும்போது எல்லாம் மானேஜர் கரிகாலம் முகம் சுழிப்பார். அமிர்தா அலுவலக துப்புறவுப் பணியாளர். அவள் கணவன் அலுவலகத்துக்கு டீ, ஸ்நாக்ஸ் சப்ளை செய்பவன். இவள் வருகைக்குப் பின் அலுவலக ரெஸ்ட் ரூம் அனைத்தும் ஆபரேசன் தியேட்டர் அளவிற்கு அவ்வளவு சுத்தம். கை, கால், முகம் அனைத்தையும் அதற்குரிய உறைகளால் கவசமிட்டுக் கொண்டு ‘மைண்ட்ஃபுல்னஸு’டன் கடமையைச் செய்யும் துப்புறவு தேவதை. சமோசாவின் வாசனை அமிர்தாவின் வருகையைச் சொல்லாமல் சொல்லியது. கணவன்


மணிமுடி மாளிகை

 

 (1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘ரங்கா ! சங்கர்! எனக்கு வேண்டும் உடுப்புகளெல்லாம் எடுத்தாச்சேர்? போகும் இடங்களில் திண்டாடக் கூடாது. ஜாக்கிரதையாய் எடுத்துவை’ என்றார் என் அப்பா.. எனக்கு அப்பாவும் அப்பாவுக்கு நானுந்தான் உண்டு. இன ஜன பந்துக்களாக யாரும் இருப்பதாக்த் தெரியாது. நாங்கள் இருப்பது திருவனந்தபுரம், தைக்காடு. என் அப்பா ராமநாதபிள்ளை ஒரு டாக்டர். வைத்தியத் தில் பேர் பெற்றவர். ஏராளமான வரும்படி. திருவனந்தபுரத்திலுள்ள செல்வமுள்ள பெருங்குடும்பங்களில்


தேவனே… தேவனே…

 

 (1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) திருத்தி மதிப்பெண் போடப்பட்ட விடைத்தாள்களை ஆசிரியர் கொடுத்து முடித்தார். “இந்தக் காலாண்டுத் தேர்வைப் பொறுத்தவரை நமது வகுப்பின் முதல் மாணவன் என்ற தகுதியை பால்ராஜ் பெறுகிறாள். இரண்டாவது இடத்தைப் பெறுபவள் பரிசுத்தம். எங்கே, இருவருக்கும் உங்கள் வாழ்த்துகளைத் தெரிவியுங்கள்” என்று ஆசிரியர் கூறியது தான் தாமதம், மாணவர்கள் கைதட்டித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். “பால்ராஜ், எனது வாழ்த்துக்கள்” என்று கைகொடுத்தான் பரிசுத்தம். “நன்றி


வேலை..!

 

 செய்தித்தாளைப் புரட்டியதுமே அந்த விளம்பரம்தான் சேகர் கண்களில் பளிச்சென்று பட்டது. சின்ன கட்டம் போட்ட விளம்பரம். பாஸ்போர்ட் அளவு படத்தில் ஒரு இளம் பெண். அதன் கீழே…. ‘பெயர் கிரிஜாராணி. வயது 25. படிப்பு பி.ஏ. தட்டச்சு, சுருக்கெழுத்துத் தெரியும். கணனியில் எல்லா வேலைகளும் தெரியும். எந்த வேலை செய்யவும் தயார். வேலை கொடுக்க விருப்பமுள்ளோர் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி…121, மேல் கரை வீதி. கோட்டுச்சேரி, காரைக்கால். 609 608. கை பேசி எண். 54456 78899.


நரகம்

 

 செல்லத்திற்கு வயது 83 அவளது கணவன் ராஜூவிற்கு வயது 88. இரண்டு மகள்களுக்கும் கல்யாணம் செய்து கொடுத்தாகி விட்டது. ஆயிற்று, இரண்டு மகள்களும் பேரன் பேத்தி எடுத்தாகி விட்டது. ராஜூவிற்கு சொந்தமாக சென்னையில் ஒரு வீடு இருக்கிறது. தேவையான அளவிற்கு மேலேயே வருமானம், வங்கியில் போட்டு வைத்திருக்கும் வைப்பு நிதியிலிருந்து வட்டியாக வருகிறது . தனியாகத்தான் வாழ்க்கை. நிம்மதியாக காலத்தை “ஹரே ராமா ஹரே கிருஷ்ணா” என்று ஓட்டலாம், காலம் முடியும் வரை. ஆனால், விதி யாரை


ஹலோ, போலீஸ் ஸ்டேஷனா?

 

 (1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 7 | அத்தியாயம் 8 | அத்தியாயம் 9 மறு நாள் காலை முதல் வண்டி வருவதற்கு முன்பே எழும் பூர் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்து விட்டார் துளசிங்கம். ஏற் கனவே தான் விசாரித்தறிந்த அங்க அடையாளங்களை நன்றாக நினைவுபடுத்திக்கொண்டு வண்டியிலிருந்து இறங்கும் ஒவ்வொரு ஆசாமியையும் கவனித்துக் கொண்டிருந்தார். நீல நிற சர்ட்டு அணிந்த வண்ணம் அந்த வண்டியிலிருந்து இறங்கும் ஒரு