கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: June 1, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

ஆதாமின் பாஷை

 

 கிழக்கே இருந்த தோட்டத்துக்குள் கிளைபிரிந்து ஓடும் நான்கு ஆறுகளுக்கும் பெயரிட வேண்டிய யோசனையில் இருந்தான் ஆதாம். தினசரி தான் காணும் பொருள்கள் ஒவ்வொன்றுக்குமாகப் பெயர் வைப்பது மட்டுமே அவனது அன்றாட வேலையாக இருந்தது. அவன் இருந்த அதே தோட்டத்தில் ஒரு ஸ்திரி இருந்தாள். அவளை எப்போதாவது விருட்சங்கள் அடர்ந்த பாதையின் உதிர்ந்த சருகுக்குள் சுற்றியலைவதையும், பனியின் திரள்களைச் சேகரித்தபடி, அவிழ்ந்த கூந்தலும் குளிர்ச்சியோடிய கண்களுமாக குனிந்து நிற்பதையும் கண்டிருக்கிறான். அவள் என்ன செய்கிறாள் என்பதை அறிந்துகொள்ள முடியவேயில்லை.


புத்திசாலி முத்து

 

 (1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மணி இரண்டு ! பள்ளிக்கூடத்து பெரிய மணி, ‘டாண். டாண்’ என்று முதல் மணி’ அடித்தது ; ஓய்ந்தது. முதுகிலே புத்தகப் பை ; கையிலே குடை இந்தக் கோலத்தோடு, பள்ளிக்கூடத்தை நோக்கி வெகு வேகமாக நடந்து கொண்டிருந்தான் முத்து. “தம்பி….!” – அந்த சமயத்தில் இப்படி ஒரு குரல் எழும்பியது. அந்தக் குரலில் தான் எத்தனை அன்பு! பரிவு! முத்து திரும்பிப்


மண்ணில் வீழ்ந்த சோற்றுப் பருக்கைகள்

 

 (1998 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவன் அவனே தான். ஆனால் அவனை யார் அடையாளம் காணப் போகிறார்கள்? அடையாளம் காண அல்லது கவனிக்க அவன் ஒரு சாதாரண மனிதனின் தராதரத்தில் கூட இல்லையே! அவன் இப்போது ஒரு பிச்சைக்காரன். பரதேசி. போதும் போதாதற்கு ஒரு கண்ணும் இல்லை. ஒரு கையில் முழங்கைக்கு கீழே இல்லை. கறுப்பு மயிரை எண்ணிவிடலாம் என்பது போல் நரைத்துவிட்டதலை. முகத்தில் காலதேவன் இரக்கமின்றி வரைந்துவிட்ட


மூக்குத்தி

 

 (1966 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்தக் கலையை வாழ்விப்பதற்கான யோக்கிய தாம்சங்கள் சகலமும் அவளிடம் சம்பூரணமாக இருக்கின்றன. பரம்பரை வழியில் பசையற்ற கணவனைக் கட்டிக் கொண்டவள். பிதுர் சம்பத்தென்னும் காந்தசக்தியின்மை யால் பசையுள்ள கணவன் என்ற இரும்பைக் கவர அவ ளால் முடியாது போய்விட்டது. கணவனோ, தட்டிச்சுருட்ட வக்கற்ற கோழைத்தனத் தாலும் ஏய்த்துப் பிழைக்க லாயக்கற்ற மந்தமதியாலும், குறுக்குவழிகளைக் கைக்கொள்ளும் சாதுர்ய சூனியத்தாலும் வார்க்கப்பட்ட தூய்மைவாதி. கிராமத்தவர் பாஷையில்,


உடைவுகள்

 

 (1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இந்த முறையும் பொருந்துவது போல வந்து பொருந் தாமல் அது நழுவிவிட்டது. அவன் மீண்டும் பழைய படி முயலத் தொடங்கினான். பழைய துணியைக் கிழித்து, இயந்திரத்தில் நீர் வரும் குழாயைப் பொருத்து மிடத்தில் சுற்றிவிட்டு, மிக மிக மெதுவாக மீண்டும் குழாயை இயந்திரத்தோடு பொருத்தத் தொடங்கினான். பொருந்து வதுபோல் அது இறுகி வந்தது. அசட்டுத் துணிச்சலில் அசைத்துப் பார்த்தான். இறுகியதாகவே பட்டது. மேலும்


விருந்தாளிகள்

 

 (1940ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மாலைப் பொழுது நீண்டுகொண்டே வந் தது. சுவர்க் கடிகாரம் ராகம் போட்டுப் பாடி நான்கு அடித்து ஒய்ந்தது. சமையற்கார ராமன் ஒவல் கரைத்துக் கொண்டு வைத்தவன், “இரவுச் சாப்பாட்டுக்கு…” என்று தலையைச் சொறிந்தவாறு கேட்டான். “ஒன்றும் வேண்டாம் போ. அண்ணாவோ ஊரில் இல்லை. சூடாக ஒரு டம்ளர் பால் கொடு, போதும். உனக்குத் தேவையானால் சமைத்துக் கொள்” என்றேன். இதே சமயம் போன்


சுசீலை

 

 (1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சுசீலை தன் தந்தையின் தூரபந்துவாகிய அம்மணியம்மாள் கூட வசிக்கத் தொடங்கி ஒரு வருஷத் திற்குப் பிற்பாடு தான் இராமநாதனை முதன்முறை சந்தித்தாள். இராமநர் தன் அம்மணியம்மாளுடைய தங்கையின் குமாரன். சுசீலை சிறு குழந்தையா யிருக்கையிலேயே அவள் தாய் இறந்துவிட்டாள். அவள் தகப்பனார் பெருஞ் செல்வவானாயிருந்தார். அவருடைய பண முழுவதையும் போட்டிருந்த அர்ப்பத்நட் பாங்கு திடீரென்று முறிந்து விட்டது. தமது ஏக் புத்திரியை வறுமை


எரிச்சல் – ஒரு பக்க கதை

 

 சின்ன வயதிலிருந்தே கேசவனுக்கு குறட்டை விடுபவர்களைக் கண்டால் எரிச்சலும் கோபமும் வரும். அதற்குக் காரணம், அவனது அப்பா. இரவில் பக்கத்தில் அடிக்கடி மோட்டார் ஓடுகிற மாதிரி கர்..புர்….. என சப்தமிட்டுக் கொண்டே இருப்பார். எப்போதாவது கண் விழித்துவிட்டால் அப்பாவின் குறட்டை சப்தம் தூக்கத்தைக் கெடுத்துவிடும் என்பதால் அப்பா படுக்கும் அறையைத் தவிர்த்து தனியாகச் சென்று ஹாலில் படுப்பதை வழக்கமாக்கிக் கொண்டான். அங்கேயும் அம்மாவின் குறட்டை சப்தம் காதிற்குள் நுழைந்து கடுப்பேற்றும். அதனால், அங்கிருந்து வாசலுக்குப் படுக்கையை மாற்றினான்.


நீயேவா வரைந்தே?

 

 (1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அன்று திங்கள் கிழமை. ஆறாம் வகுப்பு மாணவியர் குதூகலமாய் இருந்தனர். ஒவ்வொருவரும் தங்களுடைய அறிவியல் நோட்டைப் பிரித்து அதில் தாங்கள் வரைந்து கொண்டு வந்திருந்த படத்தினை மற்றவரிடம் காண்பித்தனர். “என் படம்தான் நல்லா இருக்கு. மிஸ் ‘குட்’ போடுவாங்க” என்றாள் கீதா. “என் படத்துக்கு’வெரிகுட்’ போடு வாங்க” என்று கூறி மகிழ்ந்தாள் ப்ரியா. ஐந்தாம் வகுப்பு வரை அவர்சுளுக்கு அறிவியல் பாடத்தில் படம்


இவர்கள் குற்றவாளிகளா?

 

 (1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இரவு 11 மணி இருக்கும். காய்ச்சிய இனிய பாலைக் கரத்தேந்திய வெள்ளிப் பாத்திரத்திற் கொண்டு, பள்ளியறை நோக்கி மெள்ள மெள்ள நடந்து வந்தாள் கோகிலம். அவள் வரவைக் கண்ட அமுதன், அயர்ந்து நித்திரை செய்பவன் போல் தூக்கங் கொண்டிருந்தான். “இதோ பால் பருகுங்கள்!” என்று நீட்டினாள், அவள். அச்சொல் அவன் காதில் ஏறுமா? உண்மையில் தூங்குபவனை எழுப்பி விடலாம். வேண்டு மென்றே தூங்குபவனை